Kalawewa United Organization - KUO

Kalawewa United Organization - KUO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalawewa United Organization - KUO, Non-Governmental Organization (NGO), Kalawewa.

17/11/2025

🌊 ஒரு நாள் – நூற்றாண்டு நினைவுகள்! 🌄

எங்களது குழுவின் ஒரு நாள் பயணம் இன்று மறக்க முடியாத இனிய அனுபவங்களின் பொக்கிஷமாக மாறியது. பஸ்ஸில் ஆரம்பித்த பயணம் உறுப்பினர்களுக்குள் புதிய புரிந்துணர்வுகளையும் நட்புகளையும் உருவாக்கியது. இன்று எங்களது அணிக்குள் புதிய முகங்களும் சேர்ந்தனர்; அவர்களின் உற்சாகமும் சந்தோஷமும் இந்தப் பயணத்துக்கு ஒரு புதிய உயிரை தந்தது.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர் உள்ளிட்ட பல அழகிய பிரதேசங்களை பார்வையிட்டு, இலங்கையின் இயற்கை துறைமுகம் அமைந்துள்ள கிழக்கின் அற்புதங்களைக் கண்கொண்டோம். இயற்கையின் அமைதியும் கடற்கரையின் அழகும் எங்களது மனதை நிம்மதியால் நிரப்பியது.

அதோடு, திருகோணமலையின் நீலக்கடலில் போட்டி சவாரி செய்த அனுபவம் எங்களை புதிய உற்சாகத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் அழைத்துச் சென்றது. குழுவாக இணைந்து செயல்படும் திறன், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும் மனப்பான்மை மற்றும் மகிழ்ச்சியில் ஒன்றுபடும் உணர்வு—இவை அனைத்தும் இந்தப் பயணத்தில் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளாக அமைந்தன.

இன்றைய நாள் எங்களுக்கு ஒரு சாதாரண பயணமல்ல.
அணியை இணைத்த ஒரு அனுபவம்…
நினைவில் நிலைக்கும் ஒரு நாள்…
மீண்டும் மீண்டும் வாழ வேண்டும் என்று நினைவூட்டும் ஒரு இனிய தவழ்! ✨💙

16/11/2025

கட்டம் 02
🌄 மூதூர் கல்கண்டா – ஒரு மறக்க முடியாத அனுபவம்!

KUO உறுப்பினர்கள் இன்று வரலாறும் இயற்கையும் இணையும் மூதூர் கல்கண்டா மலைக்குச் சென்ற தருணம் உண்மையில் அபூர்வமானது.

அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பழமையான கல்கண்டா ராஜமகா விகாரை,
மலை உச்சியில் தெரியும் திருகோணமலையின் கண்கவர் காட்சிகள்,
மற்றும் வழியாக உயர்ந்த பாதையில் நடந்த உற்சாகமான நடைபயணம்
எல்லாம் எமக்கு பல பாடங்களை கற்றுத்தந்தன.

✊ ஒற்றுமை,
💪 மன உறுதி,
🤝 சகோதரத்துவம்,
🌿 இயற்கையை மதிக்கும் மனம்

— இவையே எங்கள் KUO பயணத்தின் உண்மையான பலன்கள்.

கடினமான குத்துப் பாதையில் ஒருவரை ஒருவர் துணைபுரிந்த அந்த தருணங்கள்
எமது அமைப்பு எவ்வளவு வலிமையோடு, ஒருமைப்பாட்டோடு இருக்கிறது என்பதை மீண்டும் உணர்த்தின.

🌟 "உயரங்களை அடைய ஒற்றுமையே முதல் படி!"
— Kalawewa United Organization

KUO members At Kinniya ⛱️ 🐟🐠🌊 Kalawewa United Organization – சுற்றுலா சிறப்புநிகழ்வு 🌊கின்னியா கடற்கரையில் மறக்க முடியாத...
16/11/2025

KUO members At Kinniya ⛱️ 🐟🐠

🌊 Kalawewa United Organization – சுற்றுலா சிறப்புநிகழ்வு 🌊
கின்னியா கடற்கரையில் மறக்க முடியாத ஒரு அனுபவம்!

எமது அமைப்பின் சுற்றுலாவின் முதல் கட்டமாக,
கின்னியா கடற்கரையில் உள்ள மீனவர்களுடன் சேர்ந்து ‘வலையெழுத்தல்’ செயற்பாட்டில் பங்கேற்கும் அபூர்வமான வாய்ப்பு கிடைத்தது.

🎣 கடலில் வலை போட்டு, அனைவரும் ஒன்றுபட்டு இழுக்கும் அந்த தருணத்தில்…
எங்களுக்கு ஒரு மிகப்பெரிய உண்மை மீண்டும் புரிந்தது —
“ஒற்றுமையும், ஒருமித்த உழைப்பும் இருந்தால் எந்த கடலும் பிரச்சினை இல்லை.”

மீனவர்கள் காட்டிய அற்புதமான ஒத்துழைப்பு,
அவர்களின் ஒழுங்கு,
அவர்களின் பொறுமை
எமக்கு ஒரு முக்கியமான பாடமாக இருந்தது:

✨ ஒரு வலை பலரின் கைகளால் இழுக்கப்படும் போது மட்டுமே புடுப்பு கிடைக்கும்
அதைப்போல்,
✨ ஒரு சமூகத்தின் முன்னேற்றமும் ஒற்றுமையால் தான் உருவாகும்.

இந்த அனுபவம் எமது அமைப்பினுடைய
🤝 சகோதரத்துவத்தை,
💪 ஒற்றுமை உணர்வை,
🌟 சமூக சேவைக்கான உறுதியை
மிகவும் வலுப்படுத்தியது.

இந்த அழகான அனுபவத்தை பகிர்ந்து கொண்ட
அனைத்து உறுப்பினர்களுக்கும் KUO சார்பில் இதயம் கனிந்த நன்றிகள்.

இன்னும் பல அர்த்தமுள்ள செயல்பாடுகளுக்காக…
எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் Insha Allah.

– Kalawewa United Organization –
🌟 Together Towards Unity & Service 🌟
2025/11/17

கலாவெவ ஐக்கிய அமைப்பின் சிரமதான பணி2025/09/21👍 Like, Share & Support!
21/09/2025

கலாவெவ ஐக்கிய அமைப்பின் சிரமதான பணி
2025/09/21

👍 Like, Share & Support!

22/07/2025
22/07/2025

கலாவெவ ஐக்கிய அமைப்பின் உறுப்பினர் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றது; இயற்கை அழகில் கலாவெவ குளம் அருகே எமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதம்.

#விழையாட்டுவிழா #கலாவெவ_ஐக்கிய_அமைப்பு

15/07/2025

🌟 Kalawewa United Organization

🏏 KUO Cricket Tournament

📍 Venue: KMCC School Ground
📅 Date: July 20th, 2025

All KUO members are warmly invited to the Cricket Tournament featuring 3 competitive teams.

Join us for a day filled with excitement and unity!

WhatsApp Group ; https://chat.whatsapp.com/IUVkpICYLOXA3yTihYYDBq

30/06/2025

நோன்புப் பெருநாள் விழையாட்டு விழா- 2025/04/06

⚽️🥎🚴‍♀️⛹️‍♂️கலாவெவ ஐக்கிய அமைப்பு நடாத்திய நோன்புப் பெருநாள் விழையாட்டு விழா!

📅 தேதி: 06.04.2025 (ஞாயிற்றுக்கிழமை)
🕒 நேரம்: 8.30 காலை
📍 இடம் : கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம்.

Video Grapher | Video Products : Mim Inham (Journalist)

#நோன்புப்பெருநாள் #விழையாட்டுவிழா

10/06/2025

🌙 இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி 🌙

கலாவெவ ஐக்கிய அமைப்பு நடத்திய இரவு நேர சிறப்பு உணவு ஏற்பாடு மற்றும் அங்கத்தவர்களுக்கான நிகழ்ச்சிகள்.

📅 08/06/2025
🕖 நேரம் 6.00
📍இடம் : சகோதரர் மின்ஹாஜ் அவர்களின் கம்மான இல்லத்தில்

கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவையான உணவுடன் ஒரு மறக்கமுடியாத இரவு!

#கலாவெவ_ஐக்கியஅமைப்பு #இரவுநிகழ்ச்சி #சங்கநிகழ்வு #கலாச்சாரம்

Address

Kalawewa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalawewa United Organization - KUO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share