OBA Kalawewa

OBA Kalawewa Official Page of Kalawewa Muslim Central College Old Boys Association.

🏆 வரலாற்றுச் சாதனை படைத்த சிங்கப் பெண்! 🏆கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு சிங்...
23/07/2026

🏆 வரலாற்றுச் சாதனை படைத்த சிங்கப் பெண்! 🏆

கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு சிங்கப் பெண் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்! 🇱🇰✨

எமது பாடசாலையின் மாணவி Sadath Reesha, இன்று நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலை விளையாட்டுப் போட்டியில், 20 வயதிற்குட்பட்ட பெண்கள் குண்டெறிதல் (Under-20 Girls’ Shot Put) போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று, அகில இலங்கை (தேசிய) பாடசாலை விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவாகி, எமது பாடசாலையின் விளையாட்டு வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சாதனைக்காக மாணவி Sadath Reesha அவர்களுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளை, இவ்வெற்றிக்காக மாணவியை அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் பயிற்றுவித்து, தேசிய மட்டத்தை நோக்கி வழிநடத்திய Anaas Ansareen Sir அவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய அர்ப்பணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் tireless முயற்சியே இந்த வரலாற்றுச் சாதனைக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.

இறைவனின் அருளால் தேசிய மட்டப் போட்டியிலும் சிறப்பாக விளங்கி, மேலும் பல வெற்றிகளைப் பெற்று எமது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க மனமார்ந்த வாழ்த்துக்களை பழைய மாணவர் சங்கம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்...

🌟 வாழ்த்துக்கள் Sadath Reesha! 🌟

-பழைய மாணவர் சங்கம்.

எமது இளம் வெற்றியாளருக்கு வாழ்த்துகள்! இது எமது பாடசாலைக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு பெருமைக்குரிய தருணம்.எமது பா...
22/07/2026

எமது இளம் வெற்றியாளருக்கு வாழ்த்துகள்!
இது எமது பாடசாலைக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு பெருமைக்குரிய தருணம்.

எமது பாடசாலையின் தரம் 8 மாணவர் இர்ஃபான் இமாத் (Irfan Imadh) அவர்கள், உயரம் பாய்தல் (High Jump) போட்டியில் மாகாண ரீதியாக முதலாம் இடத்தை பெற்று, அகில இலங்கைப் பாடசாலை ரீதியான விளையாட்டுப் போட்டிக்கு தெரிவாகியிருப்பது எங்கள் அனைவருக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

இந்த அற்புதமான வெற்றியைப் பெற்ற இமாத் அவர்களுக்கு பழைய மாணவர் சங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.🥇🏆💐

இந்த வெற்றிக்குப் பின்னால் அர்ப்பணிப்புடனும் அயராத முயற்சியுடனும் மாணவரை வழிநடத்தி, ஊக்குவித்து, பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர் Anaas Ansareen Sir அவர்களுக்கு எமது இதயப்பூர்வமான நன்றிகளையும் உயர்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்🥇🏆 💐

அதேபோல், அதிபர், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர் குழு, பெற்றோர்கள் மற்றும் இவ்வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

எதிர்வரும் அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டுப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி மேலும் பல வெற்றிகளைப் பெற்று, எமது பாடசாலையின் பெருமையை தேசிய மட்டத்தில் உயர்த்த இறைவனைப் பிரார்த்திக்கிறோம்🤲.

– கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்

கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது!எமது பாடசாலை அதிபரின் தலைமையில், க...
23/06/2026

கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது!

எமது பாடசாலை அதிபரின் தலைமையில், கடந்த 07.06.2026 அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டம் எமது அதிபரின் வரவேற்புரையுடன் முறைப்படி ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து, பின்வரும் முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின:

🔴முன்னாள் செயலாளரின் உரை:
எமது சங்கத்தின் முன்னாள் செயலாளர் அவர்களினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

🔴செயற்பாட்டு அறிக்கை (காணொளி வடிவில்):
கடந்த ஆண்டிற்கான சங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் வரவு-செலவு விபரங்கள் அடங்கிய அறிக்கை, அனைவரையும் கவரும் வகையில் காணொளி (Video) வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது.

🔴விளக்கவுரை:
பாடசாலையின் பிரதி அதிபர் அவர்களினால் பழைய மாணவர் சங்கத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் எதிர்கால நகர்வுகள் தொடர்பான விளக்கவுரை வழங்கப்பட்டது.

🔴புதிய உறுப்பினர் தெரிவு:
கூட்டத்தின் முக்கிய அங்கமாக, 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் முறைப்படி தெரிவு செய்யப்பட்டனர்.

🔴புதிய செயலாளரின் உரை:
புதிய உறுப்பினர்கள் தெரிவைத் தொடர்ந்து, சங்கத்தின் புதிய செயலாளரினால் ஏற்புரையும் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது.

**மனமார்ந்த நன்றிகள்!**
இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தோடு, கடந்த காலங்களில் எமது சங்கத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய முன்னாள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

🎓 பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம்அன்பார்ந்த பழைய மாணவர்களே,Kalawewa Muslim Central College பழைய மாணவர் சங்கத்தின் ப...
04/06/2026

🎓 பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

அன்பார்ந்த பழைய மாணவர்களே,

Kalawewa Muslim Central College பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாக அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதுடன், சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்படவுள்ளன.

🗓 திகதி: 2026.06.07
⏰ நேரம்: மாலை 4.00 மணி
📍 இடம்: பாடசாலை கேட்போர் கூடம்

📌 அனைத்து பழைய மாணவர்களும் தவறாமல் கலந்து கொண்டு, நமது பாடசாலையின் வளர்ச்சிக்கான உங்கள் பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

🤝 “ஒன்றுபட்ட பழைய மாணவர்கள் – வலுவான பாடசாலை”

11/05/2026

📢 பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் தொடர்பான அறிவித்தல் 📢

அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும் 2026.05.14 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள எமது பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு,
செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்.

--------------------------------------------------------------------------

📢 Notice of Old Boys Association General Meeting 📢

The General Meeting and Member Selection of the Old Boys Association of Kalawewa Muslim Central College will be held on Thursday, 14.05.2026 at 4.00 PM at the School Auditorium.

We warmly invite all past pupils who studied at our school to participate in this meeting.

Yours faithfully,
Secretary,
Old Boys Association.

Address

Kalawewa

Alerts

Be the first to know and let us send you an email when OBA Kalawewa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share