கைதடி மேற்கு சனசமூக நிலையம்

Directions

கைதடி மேற்கு சனசமூக நிலையம் சமூக நலன் அமைப்பு

🩸துளியென வழங்கும் செந்நீர் பெருங்கடலாம் ஓர் உயிராய் மலரட்டும் மனித நேயம் .... இனிதே நிறைவுபெற்ற எமது நிலையத்தின் இரத்ததா...
11/10/2026

🩸துளியென வழங்கும் செந்நீர் பெருங்கடலாம் ஓர்
உயிராய் மலரட்டும் மனித நேயம் ....

இனிதே நிறைவுபெற்ற எமது நிலையத்தின் இரத்ததான முகாம் சுமார் 30 குருதி கொடையாளர்கள் பங்குபற்றினர்
உங்கள் எல்லோருக்கும் எமது நிலையத்தின் சார்பாக சிரம்தாழ்திய நன்றிகள் உரித்தாகட்டும்•

இரத்ததான முகாமின் போது வில்லையில் கைதாக்கப்பட்ட நிழற்படங்கள்.

10/10/2026

கைதடி மேற்கு சனசமூக நிலையத்தில் நாளை குருதிக்கொடை! 🩸❤️

உயிர்காக்கும் உன்னத பணியில் இணைவோம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் 602 சனசமூக நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவற்றில் குறிப்பிட்ட சில சனசமூக நிலையங்களே இரத்ததான நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து, இரத்த வங்கியின் உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

குறிப்பாக, கைதடி பகுதியில் இயங்கும் சனசமூக நிலையங்கள் இப்பணியில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

ஏற்கனவே எம்முடன் இணைந்து இப்பணியை முன்னெடுத்து வரும் வளர்மதி சனசமூக நிலையம், கைதடி தெற்கு சனசமூக நிலையம் மற்றும் சரஸ்வதி சனசமூக நிலையம் ஆகியவற்றுடன், தற்போது கைதடி மேற்கு சனசமூக நிலையமும் இணைந்து பயணிக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வாறான சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செயற்பாடுகள், இரத்த வங்கியின் இரத்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், அவசர சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் பெரும் துணையாக அமைகின்றன.

💐 இம்மகத்தான பணியில் இணைந்து செயற்பட முன்வந்த கைதடி மேற்கு சனசமூக நிலையத்திற்கும், தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் ஏனைய சனசமூக நிலையங்களுக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

📢 பொதுமக்களுக்கான அன்பான அழைப்பு!

நாளை நடைபெறவுள்ள இக்குருதிக்கொடை நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று, இரத்ததானம் செய்து, உயிர்காக்கும் இப்புனிதப் பணிக்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

🩸நீங்கள் வழங்கும் ஒரு துளி இரத்தம், ஒருவரின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம்!

❤️ குருதிக்கொடை செய்வோம்! உயிர்களைக் காப்போம்!

📍 இடம்: கைதடி மேற்கு சனசமூக நிலையம்

📅 திகதி: 11.10.2026

🩸 இரத்த தானம் – உயிர் காக்கும் உன்னத தானம் 🩸“தானத்தில் சிறந்தது இரத்த தானம்;ஒரு துளி இரத்தம், ஓர் உயிரின் மறுவாழ்வு!”குற...
09/10/2026

🩸 இரத்த தானம் – உயிர் காக்கும் உன்னத தானம் 🩸

“தானத்தில் சிறந்தது இரத்த தானம்;
ஒரு துளி இரத்தம், ஓர் உயிரின் மறுவாழ்வு!”

குறள் 221 – ஒப்புரவறிதல்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பொருள்: வறியவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்வதே உண்மையான ஈகையாகும்.

சமூக அக்கறையுடனும் மனிதநேய உணர்வுடனும் இம்மகத்தான உயிர்காக்கும் சேவையில் தங்களையும் இணைத்துக்கொண்டு, இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நினைவுச் சான்றிதழ் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்,
கைதடி மேற்கு சனசமூக நிலையம் &
குமரன் விளையாட்டுக் கழகம்

🩸துளியென வழங்கும் செந்நீர் பெருங்கடலாம் ஓர் உயிராய் மலரட்டும் மனித நேயம் ....கைதடி மேற்கு சனசமூக நிலையம் மற்றும் மற்றும்...
08/10/2026

🩸துளியென வழங்கும் செந்நீர் பெருங்கடலாம் ஓர்
உயிராய் மலரட்டும் மனித நேயம் ....

கைதடி மேற்கு சனசமூக நிலையம் மற்றும் மற்றும் குமரன் விளையாட்டுக்கழகம் இணைந்து நடாத்தும் இரத்ததான முகாம்

📍 இடம் - கைதடி மேற்கு சனசமூக நிலையம்
🗓️ திகதி - 10.10.2026
🕥 நேரம் - 9.00 AM - 1.00PM
☎️ தொடர்புகளிற்கு - சூ.மயூரன் - 0776506839
க.அபிகிஸ்ணா - 07710487422
சி.சுபாகீனன் - 0775740342

 #ஆழ்ந்த_அனுதாபங்கள்
24/09/2026

#ஆழ்ந்த_அனுதாபங்கள்

இன்றைய தினம் (13.09.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எமது நிலையத்தின் நிலைய உறுப்பினர் ஆகிய இளங்குமரன் மற்றும் லக்ச...
13/09/2026

இன்றைய தினம் (13.09.2026) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எமது நிலையத்தின் நிலைய உறுப்பினர் ஆகிய இளங்குமரன் மற்றும் லக்சிகா தம்பதியினர் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி நிற்கின்றோம்.

கைதடி மேற்கு சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டு கழகத்தினர்.

70வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்தப்பட்ட நடைபவனி நிகழ்வில் கைதடி பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக எமது சனசமூக நிலையத்த...
18/08/2026

70வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்தப்பட்ட நடைபவனி நிகழ்வில் கைதடி பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக எமது சனசமூக நிலையத்தை கௌரவித்தற்க்கு சரஸ்வதி சனசமூகநிலைய நிர்வாகத்தினருக்கும் அங்கத்தவர்களுக்கும் எமது சனசமூக நிலையம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

23/07/2026

கைதடி மேற்கு சனசமூக நிலையத்தின் 69 வது பொதுகூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று இரவு(23.07.2026) நடைபெற்றது இதில் கலந்து கொண்ட சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

அதன் அடிப்படையில்
புதிய நிர்வாக தெரிவுகளாக
தலைவர் - சூ.மயூரன்
செயலாளர் - க.அபிகிஸ்ணா
பொருளாளர் - சி.சுபாகீனன்
உப தலைவர் - து.இராகுலன்
உப செயலாளர் - க.அனோஜன்
போசகர் - செ.ஜெயபாலன்
ஆ.சயந்தன்
கணக்காய்வாளர் - கி.துசாந்தன்
நிர்வாக சபை உறுப்பினர்களாக - சு.பேரின்பலிங்கம்
து.ராகவன்
த.கவனீதன்
வ.வர்ணன்
ம.இளவதனன்
பா.மதுமிதன்
ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

பலத்த எதிர்பார்புடனும் நம்பிக்கையுடனும் பொறுப்பேற்றுள்ள சனசமூக வளர்சியில் அக்கறை கொண்ட இன்று தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளையம் நல் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம். மற்றும் இதுவரை கடமைகள் ஆற்றிய நிர்வாகத்தினருக்கும் எமது நிலையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையம் நல் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம்.

Address

Kaithady West Kaithady
Kaithadi Nunavil
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when கைதடி மேற்கு சனசமூக நிலையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share