Aram Palaku Arakkattalai "அறம் பழகு" அறக்கட்டளை.

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • Aram Palaku Arakkattalai "அறம் பழகு" அறக்கட்டளை.

Aram Palaku Arakkattalai  "அறம் பழகு" அறக்கட்டளை. "அறம் பழகு" அறக்கட்டளை.

நாவற்குழி 5 வீட்டுதிட்ட பிரதேசத்தில் தற்போதைய மழை வெள்ளம் காரணமாக 21 குடும்பத்தை சேர்ந்த 66 அங்கத்தவர்கள் அன்னை முன்பள்ள...
19/12/2023

நாவற்குழி 5 வீட்டுதிட்ட பிரதேசத்தில் தற்போதைய மழை வெள்ளம் காரணமாக 21 குடும்பத்தை சேர்ந்த 66 அங்கத்தவர்கள் அன்னை முன்பள்ளியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உணவு கிராம அலுவலர்கள் மற்றும் அறம் பழகு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் வழங்கப்பட்டது.

இன்றையதினம் லயன்ஸ் கழகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகத்தாலும் உணவு வழங்கப்பட்டதுடன் அத்தியவசிய பொருட்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இச்சீரற்ற காலநிலை தொடருமானால் இவர்களுக்கான உணவு, தங்குமிடம் என்பனவற்றிக்கு பாரிய நெருக்கடி ஏற்படவுள்ளதால் இவர்களுக்கான உதவியை சமூக ஆர்வலர்களிடமிருந்து எதிர்பார்கின்றோம்.

-அறம் பழகு அறக்கட்டளை-

27/12/2022
26/12/2022
எமது "அறம் பழகு" அறக்கட்டளை ஊடாக  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.திருகோணமலை மூதூர் பள்ளிகுடியிருப்...
26/12/2022

எமது "அறம் பழகு" அறக்கட்டளை ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

திருகோணமலை மூதூர் பள்ளிகுடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் 112 மாணவர்களுக்கு 500 அப்பியாச புத்தகங்கள் மற்றும் எழுதுகருவிகள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.

பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் சோதிலிங்கம் சஜுவன் அவர்களின் நிதிப்பங்களிப்பில்
கடந்த 03.12.2022 அன்று வழங்கப்பட்டது.

இணைந்து செயற்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

-"அறம் பழகு" அறக்கட்டளை-

19/04/2022

யா நாவற்குழி மகாவித்தியாலயம் மணிவிழா - 2022 நேரலை

எமது "அறம் பழகு" அறக்கட்டளை மற்றும் தென்மராட்சி சமூக மேம்பாட்டு அமையம் இணைந்து முன்பள்ளி மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கிவ...
29/03/2022

எமது "அறம் பழகு" அறக்கட்டளை மற்றும் தென்மராட்சி சமூக மேம்பாட்டு அமையம் இணைந்து முன்பள்ளி மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டது.

நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் இயங்கும் அரும்புகள் முன்பள்ளியில் கல்வி கற்கும் 35 சிறுவர்களுக்கு பெறுமதியான பாதணிகளை வழங்கி வைத்துள்ளோம். இதற்கான நிதிப்பங்களிப்பினை திரு. ஜெ. டினேஸ் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அத்தியடியை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. சபாநாதன் அவர்களினூடாக கனடா வாழ் திரு. சுரேன் அவர்களினால் கடந்த 10.02.2022 அன்று வழங்கப்பட்டது.

இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
-"அறம் பழகு" அறக்கட்டளை-

எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது.கொடிகாமம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 07 ஆம் தர...
24/03/2022

எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது.

கொடிகாமம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் 07 ஆம் தரத்தில் கல்விகற்றுவரும் மாணவண் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி மேம்பாட்டுச் செயல்திட்டத்தின்கீழ்
டென்மார்க்கில் வசிக்கும் பூமிகா தேனுகா என்னும் சகோதரிகளின் நிதி பங்களிப்பில் தமது தாயாரது பிறந்ததினத்தை முன்னிட்டு 27500 ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி கடந்த 28.01.2022 அன்று வழங்கிவைக்கப்பட்டது.

இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
-"அறம் பழகு" அறக்கட்டளை-

எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது. வடமராட்சி அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் 11...
09/02/2022

எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது.

வடமராட்சி அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்விகற்றுவரும் அல்வாய் குஞ்சாவோடையை சேர்ந்த மாணவி ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி மேம்பாட்டுச் செயல்திட்டத்தின்கீழ்
டென்மார்க்கில் வசிக்கும் பூமிகா தேனுகா என்னும் சகோதரிகளின் நிதி பங்களிப்பால் தமது தாயாரது பிறந்ததினத்தை முன்னிட்டு 27000 ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி கடந்த 28.01.2022 அன்று வழங்கிவைக்கப்பட்டது.

இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
-"அறம் பழகு" அறக்கட்டளை-

எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக உணவு வழங்கிவைக்கப்பட்டது. யாழ் விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் கைதடி தொழில் பூங்காவில் ...
12/01/2022

எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக உணவு வழங்கிவைக்கப்பட்டது.

யாழ் விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் கைதடி தொழில் பூங்காவில் வசிப்போருக்கு இலண்டன் நாட்டைச்சேர்ந்த தயாளன் தங்கா தம்பதியினர் தமது மகன் அபூர்வனது 11 ஆவது (30.12.2021) பிறந்ததினத்தை முன்னிட்டு எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக கடந்த 03.01.2022 அன்று மூன்று வேளை உணவு வழங்கிவைக்கப்பட்டது.

இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- அறம் பழகு அறக்கட்டளை -

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முற்றிலும்  #இலவசமான விசேட இறுதிக்கருத்தரங்கு.https://puthujugam.com/20...
04/01/2022

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முற்றிலும் #இலவசமான விசேட இறுதிக்கருத்தரங்கு.

https://puthujugam.com/2022/01/04/6-9/

 #புதுயுகம் இணையத்தளமும்,  #அறம்  #பழகு அறக்கட்டளையும் இணைந்து உயர்தர  மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சமூக கொடையாளர்க...
01/01/2022

#புதுயுகம் இணையத்தளமும், #அறம் #பழகு அறக்கட்டளையும் இணைந்து உயர்தர மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சமூக கொடையாளர்களின் அணுசரனையுடன் விசேட கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்தரங்கு

எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக சக்கரநாற்காலி வழங்கிவைக்கப்பட்டது. கிளிநொச்சி வட்டக்கச்சியில் வசித்துவரும் மாற்றுத்தி...
31/12/2021

எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக சக்கரநாற்காலி வழங்கிவைக்கப்பட்டது.

கிளிநொச்சி வட்டக்கச்சியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சுவிஸ் நாட்டைச்சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நலன்விரும்பி தமது மகனுடைய (15.11.2021) 17ஆவது பிறந்ததினத்தைமுன்னிட்டு சக்கரநாற்காலி ஒன்று எமது "அறம் பழகு" அறக்கட்டளையினூடாக கடந்த 18.12.2021 அன்று வழங்கிவைக்கப்பட்டது.

இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
- அறம் பழகு அறக்கட்டளை -

Address

Jaffna

Telephone

+94777042528

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aram Palaku Arakkattalai "அறம் பழகு" அறக்கட்டளை. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aram Palaku Arakkattalai "அறம் பழகு" அறக்கட்டளை.:

Share