ஆதிரை Aathirai

ஆதிரை Aathirai ‘ஆதிரை அமையம் AATHIRAI Foundation’

🪔 இருளை வெல்லும் ஆதிரையின் ஒளிக்கீற்று!  யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில், போதிய வசதிகளின்றி ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் மங்கல...
08/03/2026

🪔 இருளை வெல்லும் ஆதிரையின் ஒளிக்கீற்று!

யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில், போதிய வசதிகளின்றி ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் மங்கலான ஒளியில் தன் எதிர்காலக் கனவுகளைத் தேடிக்கொண்டிருந்த ஒரு மாணவியின் நிலை எங்களைக் கலங்கச் செய்தது.

அவரது கல்வித்தாகம் அந்த இருளை விட வலிமையானது என்பதை உணர்ந்து, "ஆதிரை அறப்பணி" ஊடாக இரண்டு வாரத்திற்கு முன் எமது முதல் உதவியைச் செய்திருந்தோம். இன்று அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கட்டக் கொடுப்பனவை வழங்கினோம். 🤝

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இன்னும் ஒரே வாரத்தில் அந்த மாணவியின் இல்லம் மின் ஒளியால் பிரகாசிக்கப் போகிறது! 💡 💡 💡

ஒரு மாணவியின் கல்விப் பயணத்திற்குத் தடையாக இருந்த இருளை விரட்டுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
உதவும் உள்ளங்களுக்கு நன்றிகள். அன்பே அறம்! 🪔

#ஆதிரைஅறப்பணி #யாழ்ப்பாணம் #உதவும்மனப்பான்மை #கல்விசேவை #ஒளிமயமானஎதிர்காலம்

ஈகையோடு இணைந்த பொங்கல் வாழ்த்துகள்! பயனை எதிர்பார்க்காமல் இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே உண்மையான அறம் என்கிறது தமிழ்மறை. ...
12/01/2026

ஈகையோடு இணைந்த பொங்கல் வாழ்த்துகள்!

பயனை எதிர்பார்க்காமல் இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே உண்மையான அறம் என்கிறது தமிழ்மறை. வறியவர்களின் இல்லங்களிலும் பொங்கல் பொங்கி, மகிழ்ச்சி நிறையட்டும்! இல்லாதவர்களுக்கு உதவுவதே உண்மையான ஈகை.

இந்த பொங்கல் திருநாளில், நாம் மட்டும் மகிழாமல், நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாட வழிவகை செய்வோம்.

ஆதிரை நிறுவனத்தின் இந்த அன்பான அரவணைப்பில், அனைவரும் பொங்கலிட்டு மகிழத் தேவையானப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மகிழ்ச்சி என்பது பகிர்ந்து கொள்வதில் தான் இருக்கிறது! இது வெறும் பண்டிகை அல்ல, பிறர் பசி தீர்க்கும் பகிர்தல்!

மகிழ்ச்சியை விதைப்போம் ... பொங்கலைச் கொண்டாடுவோம்! 🤲🔥😇

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
#தமிழர்திருநாள் #ஆதிரை
#பொங்கல்வாழ்த்து #ஈகை

🌱 மரணத்தை விடக் கொடியது பசி! 🌱"பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்" என்பார்கள். ஆனால், அந்தப் பசி ஒரு மனிதனின் மானத்தையும...
30/12/2025

🌱 மரணத்தை விடக் கொடியது பசி! 🌱

"பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்" என்பார்கள். ஆனால், அந்தப் பசி ஒரு மனிதனின் மானத்தையும், வாழ்வாதாரத்தையும், ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தையுமே சிதைத்துவிடும்.

மரணத்தை விடக் கொடியது இந்தப் பூமியில் வேறொன்றுமில்லை என்று நாம் நினைக்கிறோம். ஆனால், தன் கண் முன்னே தன் பிள்ளைகள் பசியால் துடிப்பதைப் பார்க்கும் ஒரு தாய்க்கும், ஒரு வேளை உணவிற்காக கையேந்தும் முதியவருக்கும் மரணத்தை விடக் கொடியது பசி!

💔 அந்த வலி சொல்லொணாதது ...
உடல் காயத்தினால் வரும் வலியை விட, தீராத வறுமையினால் ஏற்படும் மனவலி மிகப்பெரியது. ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், பழைய துணிகளை உடுத்தி, ஒதுங்க நிழலின்றி வாழும் ஏழை எளியவர்களின் துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

🤝 ஆதிரை உதவும் கரங்கள்: நாம் ஏன் இதைக் செய்கிறோம்?
இந்தக் கொடுமையான பசிப் பிணியையும், வறுமையின் பிடியையும் எம்மால் முடிந்தவரை வேரறுக்கவே "ஆதிரை உதவும் கரங்கள்" களமிறங்கியுள்ளது.

• பசி இல்லாத உலகம்: பசியால் எவரும் உறங்கச் செல்லக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.
• வறுமை ஒழிப்பு: அடிப்படைத் தேவைகளுக்காகத் தவிப்போருக்குத் தோள் கொடுப்பதே எங்கள் கடமை.
• மனிதாபிமானம்: நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்குக் கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, வாடும் வயிறுகளுக்கு உணவளிப்போம்!

எம்முடன் இணைந்து வறுமைக்கு எதிரான இந்தப் போரில் கைகோர்க்க அழைக்கிறோம். உங்களின் ஒரு சிறு உதவி, ஒரு உயிரின் பசியைத் தீர்க்கும் மருந்தாக அமையலாம்.

"அன்பே அறம்; அறமே வாழ்வு. பசியை ஒழிப்போம் அன்பை பகிர்வோம்!”

#ஆதிரைஉதவும்கரங்கள் #பசிப்பிணிஅறுப்போம் #மனிதாபிமானம்
#பசியைபோக்குவோம் #ஆதிரைஉதவி #வறுமைஒழிப்பு #உதவும்கரங்கள்

15/12/2025

யாழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கும் கைகள்: ஆதிரை அமைப்பின் அன்பின் அழைப்பு.

இயற்கையின் கொடிய சீற்றம் - வெள்ளத்தின் கொடூரம் - யாழ்ப்பாணத்தின் அன்புச் சொந்தங்கள் இன்று இதயம் பிளக்கும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். வீடுகள் நீரில் மூழ்கி, அன்றாட உணவுக்குக்கூட வழியின்றி, குழந்தைகளின் அழுகையும், பெரியோரின் ஆழ்ந்த ஏக்கமும் நெஞ்சை உருக்கும் காட்சிகள். இந்த வலியைப் பார்த்து யார்தான் அமைதியாக இருக்க முடியும்?

ஆதிரை அமைப்பு என்ற உங்கள் அன்புக் குரலுக்கு செவிசாய்த்து, களத்தில் இறங்கினோம். இன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு அவர்களின் கண்களில் நீர் ததும்ப, நெஞ்சில் நம்பிக்கை மீண்டும் துளிர்க்க – சூடான, சத்தான உணவுப் பொதிகளை அன்போடு வழங்கினோம்.
அந்தத் தாயொருவர் கைகூப்பி சொன்ன “நன்றி”… குழந்தை ஒன்று புன்னகைத்தது … அந்தக் கணங்களில் எங்கள் கண்களும் கலங்கின. ஒரு சிறு உதவி என்றாலும், அது அவர்களுக்கு இன்று உயிர் ஊட்டும் ஆறுதலாக, மீண்டும் எழுந்து நிற்கும் வலிமையாக அமைந்தது.

இந்தத் துயர நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் தோள்கொடுப்போம்! மனிதநேயம் என்றால் இதுதான் – கண்ணீரைத் துடைப்பது, நம்பிக்கையை விதைப்பது.

எமது உதவி இத்துடன் நிற்காது. தொடரும், தொடரும்! நாமெல்லாம் ஒன்றிணைந்து நிற்போம்!

#யாழ்ப்பாணம் #வெள்ளநிவாரணம் #ஆதிரைஅமைப்பு #உதவிக்கரம் #தமிழ் #ஒன்றிணைவோம் #மனிதநேயம்

இலங்கையின் மண்ணெங்கும் கண்ணீரும் கதறலுமாக மாறிப்போன இந்த இருண்ட நேரத்தில் …21 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் தத்தளிக்க...
08/12/2025

இலங்கையின் மண்ணெங்கும் கண்ணீரும் கதறலுமாக மாறிப்போன இந்த இருண்ட நேரத்தில் …

21 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் தத்தளிக்கின்றன. 80 ஆயிரம் குடிசைகள், கனவுகள், நினைவுகள் ஒரே இரவில் தண்ணீருக்குள் மூழ்கிப்போயின. ஆனால் அந்த நீருக்குள் மூழ்கியது மனிதாபிமானம் இல்லை!

அதோ பாருங்கள் …

மழையிலும் நனைந்தபடி, சேறு சகதியிலும் நடந்தபடி, இரவு பகலாக உறங்காமல், உணவு உண்ணாமல், ஆதிரை அறப்பணிக்குழு நண்பர்கள் ஒவ்வொரு கையையும் தேடி ஓடுகிறார்கள். பசியோடிருக்கும் குழந்தைக்கு உணவுப்பொட்டலம், நனைந்து நடுங்கும் தாய்க்கு உலர் உடைகள், கண்ணீரோடு நிற்கும் முதியவருக்கு ஒரு ஆதரவான தோள்.

அவர்கள் கொண்டு வந்தது பொருட்கள் மட்டுமல்ல, நம்பிக்கையையும் தான்! இவர்களது கண்களில் தெரிவது சோர்வு இல்லை. தெரிவது ஒரு தாய்நாட்டின் மைந்தர்களுக்காக எரியும் தீ! இவர்களது கால்கள் சேற்றில் புதைந்தாலும், இவர்களது இதயங்கள் ஒவ்வொன்றும் தங்கத்தால் ஆனவை!

ஆதிரை அறப்பணிக்குழு அன்புச் சகோதரர்களே உங்கள் ஒவ்வொரு உதவியும் ஒரு குழந்தையின் புன்னகை, உங்கள் ஒவ்வொரு அரவணைப்பும் ஒரு தாயின் மடி, உங்கள் ஒவ்வொரு உழைப்பும் இலங்கை மண்ணின் உயுதலும் மறக்க முடியாத பெருமை!

உங்களை வணங்குகிறேன்.

இலங்கையின் உண்மையான வீரர்களே,
என்றென்றும் உங்கள் பெயர் எம் இதயங்களில் பொறிக்கப்பட்டிருக்கும்! நன்றி … ஆயிரம் நன்றி… இல்லை, இந்த நன்றி சொல்லுக்குள் அடங்காது! உங்களது மனிதாபிமானப் பணி மென்மேலும் சிறக்கட்டும்! 🙏🏽

#ஆதிரைஅறப்பணி #இலங்கைக்காகஓடும்இதயங்கள் #மனிதாபிமானத்தின்_முகங்கள் #நீங்கள்தான்எங்கள்வீரர்கள்

இலங்கை இப்போது கண்ணீரால் நனைந்து கொண்டிருக்கிறது. புயல் கொண்டு வந்த வெள்ளமும், வானம் கொட்டும் மழையும் வீடுகளை விழுங்கியப...
06/12/2025

இலங்கை இப்போது கண்ணீரால் நனைந்து கொண்டிருக்கிறது. புயல் கொண்டு வந்த வெள்ளமும், வானம் கொட்டும் மழையும் வீடுகளை விழுங்கியபோதும் …

நமது யாழ் அறப்பணி ஆதிரை அமைப்பின் அண்ணன்மார்களும் தம்பிமார்களும் மழையில் நனைந்து, குளுறு நெஞ்சோடு, கால்கள் சேற்றில் புதைந்தபடியே ஒவ்வொரு வீடாகத் தட்டி, ஒவ்வொரு குழந்தையின் வயிறாக நிரப்பினார்கள்.

அந்த உணவுப்பொட்டலத்தில் சோறு மட்டும் இல்லை. அம்மாவின் அன்பு, அப்பாவின் நம்பிக்கை, ஒரு சகோதரனின் கண்ணீரோடு கலந்த பிரார்த்தனை எல்லாம் இருந்தது.

தொப்புள்கொடி உறவுகளே இன்று அவர்கள் நம் குழந்தைகளுக்கு உணவாக மாறினார்கள்.
நாளை நாமும் அவர்களாக மாற வேண்டும்.
ஒரு பகிர்வு மட்டும் போதும். அது ஒரு தாய்க்கு “என் பிள்ளை பசியோடு தூங்காது” என்ற ஆறுதலாக மாறும்.

கொடுப்பது கை ஒன்று துடைப்பது கண்ணீர் ஆயிரம். யாழ் அறப்பணி ஆதிரை இன்னும் தெருவில் நிற்கிறது. உங்கள் அன்பு மட்டுமே அவர்களுக்கு குடை.

பகிருங்கள் … இந்தக் கணம் பகிருங்கள் …
ஒரு உயிர் உங்கள் பெயரால் சிரிக்கட்டும். ❤️

#யாழ்அறப்பணிஆதிரை
#இலங்கைக்குநாம்தான்
#தொப்புள்கொடியைத்துண்டிக்கமுடியாது
#அன்பேஅறம்

முல்லைமண்ணில்  #ஆதிரையின் அறப்பணி!முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை...
29/08/2025

முல்லைமண்ணில் #ஆதிரையின் அறப்பணி!
முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்ற மாணவனுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வும், ஆர்வத்துடன் கல்வியைத்தொடரும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் அண்மையில் வெகு சிறப்பாக, ஆதிரையின் வன்னிப்பிராந்தியத்துக்கான இணைப்பாளர், திரு.க.சுஜாந்த் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், ஆதிரை அமைப்பின் தமிழக இணைப்பாளர், திரு.மணிகண்டன் அவர்களும்,
இலங்கை நிர்வாக குழுவினரும் கலந்துகொண்டனர்.
திரு.சிங்கை மோகன்ராஜ் கோபால் அவர்களின் வழிகாட்டலில் குறித்த நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருவது சிறப்பான விடயமாகும்.

 #ஆதிரையின் அறப்பணி!பொதுக்கிணறுகளே கிராமப்புற மக்களின் முக்கியமான குடிநீர் மூலங்களாக இருந்தன. இது பொதுமக்கள் அனைவரும் பய...
05/06/2025

#ஆதிரையின் அறப்பணி!

பொதுக்கிணறுகளே கிராமப்புற மக்களின் முக்கியமான குடிநீர் மூலங்களாக இருந்தன. இது பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் பொதுச் சொத்து என்பதால், அதன் நிலைத்தன்மையும் பாதுகாப்பும் மிகவும் அவசியமானது! ஆனால் இன்று இயற்கைக்கு சவாலான தனித்தனிக் கிணறுகள் வீடுகள்தோறும் அமைக்கப்பட்டதால் பல பொதுக்கிணறுகள் கைவிடப்பட்டு அசுத்தமடைந்தே காணப்படுகின்றன.

இவ்வாறு அசுத்தமடைந்த நிலையில் #சண்டிலிப்பாய் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில்,
#ஆவுரோஞ்சிக்_கல், #சுமை_தாங்கி, #நீர்த்தொட்டி எனும் தமிழரின் ஜீவகாருண்ய அடையாளங்களோடு, தொல்லியல் சின்னமாக விளங்கிய தொன்மையான பொதுக்கிணறு திரு.சிங்கை மோகன்ராஜ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய, #ஆதிரை அமைப்பினால் மிகுந்த சிரமத்தின் மத்தியில் சுத்தம் செய்யப்பட்டு மீள்பாவனைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது!
😍💧
மேற்படி கிணறு மீண்டும் அசுத்தமடையாவண்ணம் மேற்புற மூடி அமைக்கப்பட வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்பட்டது. கொடையாளர்கள் முன்வருமிடத்து அப்பணியையும் செய்து நிறைவடையலாம் 🤝

“நீர் நிலைகளைப் பாதுகாப்போம்!
எதிர்கால சந்ததி தாகத்துடன் இறக்கப்போவதை இன்றே தடுப்போம்”

அறம்செய்ய கரம் கோர்ப்போம்!
28/04/2025

அறம்செய்ய கரம் கோர்ப்போம்!

Today, the blood donation event organized by the Aadhirai organization in collaboration with the South Western Secretari...
07/04/2025

Today, the blood donation event organized by the Aadhirai organization in collaboration with the South Western Secretariat Welfare Association was held successfully. A large number of officials and public donated blood and did a great job ❣️🩸

இன்றைய தினம் ஆதிரை அமைப்பு வலி தென்மேற்குபிரதேச செயலக நலன்புரிச்சங்கத்துடன் இணைந்து முன்னெடுத்த இரத்ததான நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. அதிகளவிலான உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் குருதிக்கொடை செய்து மகத்தான பணியாற்றினார்கள் ❣️🩸

Address

Jaffna-Manippay Road
Jaffna

Telephone

+94715588737

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆதிரை Aathirai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஆதிரை Aathirai:

Share