Jaffna KKP Youth Club யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகம்

  • Home
  • Jaffna KKP Youth Club யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகம்

Jaffna KKP Youth Club யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna KKP Youth Club யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகம், Non-Governmental Organization (NGO), .

08/04/2026

நாவந்துறை சென்.மேரிஸ் விளையாட்டு கழகம் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

தொடரட்டும் உங்கள் வெற்றிகள்

09/01/2026

🌱 “கண்டல் தாவரம் – கடலின் காவலன்”

29/12/2025

“ஒரு நாட்டின் முன்னேற்றம்…
அமைதியிலிருந்து தொடங்குகிறது.
அந்த அமைதியை உலகிற்கு அழைத்து வரும்
ஒரு முக்கியமான வழி – சுற்றுலா.”

“2025 ஆம் ஆண்டு மட்டும்…
இலங்கை நாட்டிற்கு
22 லட்சத்திற்கும் மேற்பட்ட
சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.”
“இது நாட்டின் பொருளாதார மீட்புக்கும்
எதிர்கால வளர்ச்சிக்கும்
ஒரு உறுதியான அடையாளமாகும்.”

“இந்த வருகையில் அதிக பங்கு வகித்த நாடுகள்…
இந்தியா,
ஐக்கிய இராச்சியம்,
ரஷ்யா,
ஜெர்மனி,
சீனா.”
“உலகம் மீண்டும்
இலங்கையை நோக்கி
பயணிக்கத் தொடங்கியுள்ளது.”

“பேரிடர் அபாயங்கள், மழைக்கால சவால்கள் இருந்தபோதும்…
கார்த்திகை – மார்கழி காலப்பகுதிகளிலும்
2025 ஆம் ஆண்டில்
சுற்றுலா பயணிகளின் வருகை
குறையவில்லை.”
“இது சுற்றுலாத்துறையின்
உறுதியையும் வலிமையையும்
தெளிவாகக் காட்டுகிறது.”

“30 ஆண்டுகளுக்கும் மேலான
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட
வடக்கு மாகாணம்…
இன்றும் சுற்றுலாத்துறையில்
பின்னடைவான பகுதியாகவே உள்ளது.”
“ஆனால்…
வடக்கின் இயற்கை அழகு,
பாரம்பரியம்,
பண்பாடு –
உலகிற்கு காட்டப்பட வேண்டிய
அரிய செல்வங்கள்.”

பாரம்பரியமும் பண்பாடும்
ஒன்றிணைந்த ஒரு நகரம்.”
“உலகளவில் வெளியான தகவல்களின்படி,
யாழ்ப்பாணம்
தலைசிறந்த பாரம்பரிய கலாச்சார நகரங்களில்
ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.”

“சுற்றுலாத்துறை வளர்ந்தால்…
தனி நபர் வருமானம் உயரும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
புதிய தொழில்கள், புதிய யோசனைகள் பிறக்கும்.”
“விருந்தினரை அன்புடன் வரவேற்கும்
விருந்தோம்பல் பண்பு
எமது சமூகத்தில் மேலும் வலுப்பெறும்.”

“எதிர்காலத்தில்…
பிரதேச செயலகங்கள்,
மாவட்ட செயலகங்கள்,
சுற்றுலாத்துறையை சார்ந்த நிறுவனங்கள் –
ஒன்றிணைந்து
விழிப்புணர்வு, பயிற்சி,
உள்ளூர் மக்களுக்கு வழிகாட்டுதல்
வழங்க வேண்டும்.”

“சுற்றுலா அபிவிருத்தி…
ஒரு துறையின் வளர்ச்சி மட்டுமல்ல.
ஒரு குடும்பத்தின் முன்னேற்றம்.
ஒரு மாகாணத்தின் எதிர்காலம்.
ஒரு நாட்டின் வலிமை.
ஆகவே…

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வோம்,
நாட்டை வளப்படுத்துவோம்.”

14/12/2025

#ஆயிரம்_புன்னகை –

"டிட்வா புயல் மற்றும் இயற்கை பேரிடர்கள் காரணமாக, நாடு முழுவதும் சிறுவர்கள் மனஅழுத்தத்தில் இருக்கின்றனர்… வடக்கு மாகாணங்கள், மத்திய மலைப்பிரதேசங்கள், தென்மாகாணங்கள் – எங்கு பார்த்தாலும் துயரமும் கவலையும் நிலவுகிறது."

"முழு கிராமங்களும் சற்றுமுன் சிரித்த குழந்தைகள், இன்று அமைதியில்லாமல் கவலையில் மூழ்கியிருக்கின்றனர்… சின்ன சிரிப்பும், ஒரு சிறு மகிழ்ச்சியும் இப்போது அரிதாகவே."

"ஆனால் ஒரு நாள், எங்கள் குழுவின் 10 திறமையான வளவாளர்கள் அந்த கிராமங்களில் வந்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் நேரத்தை செலவழிக்கின்றனர். ஒரு புன்னகை மீண்டும் வீசும் தருணம் உருவாகிறது."

"ஒரே நாளில் முழு கிராமம் மகிழ்ச்சியை அனுபவிக்கும் தருணம்… பாடல், ஆடல், கார்ட்டூன் பொம்மை நிகழ்ச்சி, அறிவு விளையாட்டுகள், சிறுகதை நிகழ்ச்சி, வாழ்வியல் கலந்துரையாடல் – குழந்தைகளின் மனதில் மீண்டும் ஒளி மலர்கிறது."

"காலை, மதிய, இரவு உணவுகள்; சிற்றுண்டி, தேநீர் விருந்து… இது மட்டும் அல்ல, ஒரு நிமிடம் மனஅழுத்தம் குறையும் அன்பின் பரிமாற்றம்."

"ஒரு குழந்தையின் சிரிப்பு, ஒரு குடும்பத்தின் நம்பிக்கை, ஒரு கிராமத்தின் மகிழ்ச்சி… இன்று ஒரு புன்னகை, நாளை ஒரு சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் கொடுக்கிறது."

"JAFFNA KKP YOUTH CLUB – President: A.f Grace
📞 076 437 4997
📧 [email protected]"

"நமது முயற்சியில் நீங்கள் ஒரு பங்கு வகித்தால், ஒரு குழந்தையின் மனதில் புன்னகை மலரும்."

13/12/2025

டிட்வா போன்ற பேரிடர்கள் எப்போது வந்தாலும்...
முதல் வரிசையில் நிற்பவர்கள் நமது அரச உத்தியோகத்தர்கள்.
பலர் பக்கச்சார்பில்லாமல், அன்புடனும், பொறுப்புடனும் மக்களை காப்பாற்றுகிறார்கள்.
அவர்களுக்கு நமது இதயபூர்வ நன்றி.

ஆனால்…
சில இடங்களில் இன்னும் மக்கள் எதிர்பார்க்கும் சேவை கிடைக்காமல் இருக்கிறது.
பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கவனிக்காமல்,
பக்கச்சார்பாக நடந்து கொள்கிற அரச உத்தியோகத்தர்களும் உள்ளனர்.
இந்த நிலைகள் மக்களின் நம்பிக்கையை உடைக்கிறது…
அதே நேரத்தில் அரசு அமைப்பின் மதிப்பையும் பாதிக்கிறது.

அப்படியான சூழலில்…
மக்களின் குரலை நேரடியாக ஜனாதிபதிவரை கொண்டு செல்லும் ஒரு மிக முக்கிய வாய்ப்பு உள்ளது.

1905 என்ற ஒரே இலக்கம்.
இந்த எண்ணிற்கு நீங்கள் அழைத்தால்,
அரச உத்தியோகத்தர்களின் தவறான செயற்பாடுகள்,
பேரிடர் நிவாரணத்தில் நடக்கும் பக்கச்சார்புகள்,
மக்களின் குறைகளை பொருட்படுத்தாத செயல்கள் —
அனைத்தையும் நேரடியாக ஜனாதிபதி அலுவலகம் அறிந்து கொள்ளும்.
உங்கள் புகார் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படும்,
அது மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரிடர் நேரங்களில்
நியாயமாக செயல்படும் உத்தியோகத்தர்களை பாராட்டுங்கள்…
அதே சமயம்
பக்கச்சார்பாக செயல்படுவோருக்கு உங்கள் அமைதியே ஆதரவு ஆகிவிடாதீர்கள்.
மக்களின் குரல் — 1905.
நம் உரிமை… நம் பொறுப்பு.

12/12/2025
06/12/2025

சேவையை வழங்க சென்ற தன்னார்வ தொண்டர்களுக்கு வேலைகளை பிரித்து வழங்கும் செயற்பாடு

06/12/2025

“முடியா இடரில் மறவா எம் உதவிக்கரம்”

உறவுகளுக்கு உதவி செய்வோம்

அன்புள்ள உறவுகளே,
நீங்கள் அளித்த அன்பான பங்களிப்புகள் மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நண்பர்கள் மற்றும் அறிமுகங்கள் வழங்கிய சிறிய (Rs. 90,000) நிதி சேமிப்பு, அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகுந்த துணையாக அமைந்தது.

இன்று 05.12.2025,
யாழ் KKP கழகம் சார்பில்,
J/88 மரிச்சவெளி – காக்கைதீவு கிராம சேவகர் பிரிவில் உள்ள 45 குடும்பங்களுக்கு,
ஒவ்வொரு குடும்பத்திற்கும் Rs. 2,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

அதேபோல், நீங்கள் வழங்கிய உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்,
மலைப்பகுதிகளில் வெள்ளத்தால் வீடுகளை இழந்து துன்புறும் குடும்பங்களுக்கு
Saho Creations அமைப்பின் மூலமாக கையளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு பொருளும் உரிய நபர்களுக்கு
எங்கள் KKP குழுவின் வழியாகச் சென்று சேர்த்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறோம்.

உதவிகரம் நீட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
இன்னும் பலர் மீண்டும் தங்கள் வாழ்க்கையை எழுப்பிக் கொள்ள உங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறோம்.
உங்கள் உதவி எப்போதும் சரியான இடத்துக்கும், சரியான மக்களுக்கும் சேர்க்கப்படும்.

05/12/2025
05/12/2025

மக்களால் மக்களுக்கு - வவுனியா கந்தசாமி நகர் நோக்கி ஒரு பயணம்

Address


6000

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna KKP Youth Club யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jaffna KKP Youth Club யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகம்:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share