சைவ மகா சபை

சைவ மகா சபை Leading shaivism page
web: www.sivatamil.com
facebook: www.facebook.com/shivaththamil

30/03/2026

கைலாசநாதப் பிள்ளையார் திருக்கோவில் திருக்குட முழுக்கு இறை சிவனுக்கு உவந்த பங்குனி உத்திர நன்னாளில் எதிர்வரும் புதன்கிழமை காலை மணி 9.50ற்கும் 11இற்கும் இடைப்பட்ட சுபநேரத்தில் இடம்பெற திருவருள் பாலித்துள்ளது

நீண்ட காலத்தின் பின் இடம்பெறும் ஈழத்தமிழ் இராசதானித் திருக்கோவிலின் இத்திருமுடமுழுக்கு அயலிலுள்ள நல்லூர் மக்களிற்கு மட்டுமன்றி சைவத்தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தோற்றுவித்துள்ளது

இந்த தருணத்தில் இதற்காக ஒத்துழைத்த வழக்குடன் சம்பந்தப்பட்ட இருதரப்பினருக்கும் முதற்கண் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்

இந்த தருணத்தில் நடுநிலை பிரசன்னதுடன் திருப்பணிகளை பூர்த்தி செய்த சமயப்பெரியவர்களுக்கும் அறக்ககொடை தந்த வள்ளல்களுக்கும் கிரியைகள் ஆற்றும் சிவாச்சாரியார்களுக்கும் பணிகளை இரவு பகலாக முன்னெடுக்கும் சிவனடியார் சிவதொண்டர்கள் சிவமங்கையர்கள் அனைவருக்கும் என்றும் இறை சிவனது பூரண திருவருள் கிடைக்கட்டும்

வேண்டுதல் நிறைவேற்றிய இறையருளைப் போற்றி வணங்கும் வகையில் திருக்குடமுழுக்கு அன்று காலை 8 மணிக்கு நல்லை ஆதீனம் அருகிலுள்ள நல்லூர் சிவன் ஆலயத்திலிருந்து திருமுறைகளை ஒதியவாறு பஞ்ச வில்வங்களையும் பஞ்ச கவ்வியங்கள் உள்ளிட்ட அபிடேக திரவியங்களையும் நந்திகொடிக்ளையும் ஏந்தியவாறு சிவசின்னங்களுடன் சைவத்தமிழ் பண்பாட்டு உடையுடன் நடைபவனியாக கலந்து கொள்ள சிவதொண்டர் சிவமங்கையரை அழைத்து நிற்கின்றோம்

இத்தோடு மகா கும்பாபிசேகத்தை ஒட்டிய எம் சைவ அமைப்புக்கள் சார்பான நடுநிலை விடயதானங்களை முடித்து கொண்டு முன்னரான திருக்கோவிலின் நியம நடைமுறைகள் தொடர நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு பங்கம் வராத வகையில் வழிவிடுகின்றோம்

எதிர்காலத்தில் திருக்கோவில் தொடர்பான வழக்குகள் சுமூகமாக நிறைவுற்று அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக திருக்கோவில் பணிகளை முன்னெடுக்க இந்த மனநிறைவான தருணத்தில் கைலாசநாத பிள்ளையாரையும் கைலாசநாதராகிய சிவனையும் பிராரத்தித்து நிற்கின்றோம்

அகில இலங்கை சைவ மகா சபை

அகில இலங்கை சைவ மகா சபை ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று அறிவிக்கும் அன்பே சிவம் விருது இம்முறை சந்நிதியான் ஆச்சிரம முத...
15/02/2026

அகில இலங்கை சைவ மகா சபை ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று அறிவிக்கும் அன்பே சிவம் விருது இம்முறை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் பேரருட்திரு மோகனதாஸ் சுவாமிகளிற்கு வழங்கப்படுகின்றது என்பதை தெரிவிப்பதில் சைவ மகா சபை அக மகிழ்வடைகின்றது

கடந்த பல தசாப்தங்களாக ஈழமணித்திருநாட்டின் சிவபூமியின் நாற்புறங்களிலும் அல்லுறும் மக்களிற்கு மனிதநேய ஆன்மீகப் பணிகளை
அளவிறந்த வகையில் ஆற்றி வருவதற்காக இந்த உயரிய விருது வழங்கப்படவுள்ளது

தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆச்சிரம முதல்வராக செல்வ சந்நிதி ஆலய சூழலில் 365நாட்களும் பசிப்பணி தீர்க்கும் ஈழத்தின் நவயுக வள்ளலாராக சுவாமிகள் விளங்குகின்றார் என்றால் அது மிகையில்லை

மலையகதின் மண்சரிவு அனர்த்தங்களில் உதவ பத்தாணடுகளிற்கு முன்பு ஆரம்பித்த பயணம் இன்று வரை பல ஏழை குழந்தைஙளிற்கு தொடர் கல்வி உதவிகளாகவும் பாடசாலைகள் அறநெறிப்பாடசாலைகள் சிறுவர் இல்லங்களிற்கான பல பரிணாம உதவிகளாகவும் தொடர்கின்றன

எம் தமிழ் சொந்தங்கள் தனித்து விடப்பட்ட இடங்களிலெல்லாம் சுவாமிகளின் அன்புக்கரம் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கின்றது அனுராதபுரம் பொலனறுவை அம்பாறையின் பல கிராமங்களில் சுவாமிகளின் உதவியினால் பல கல்விச்சாலைகள் ஆலயங்கள் புத்துயிர் பெற்றிருக்கின்றன

மாதாந்தம் சுவாமிகளின் ஆச்சிரமத்தில் பலருக்கு கல்வி மருத்துவ அறக்கொடைகள் வறிய சிறார்கள் பாடசாலை செல்ல சைக்கிள்கள் என பல மனிதநேய கைங்கரியங்கள் நடைபெற்று வருகின்றன

சுமாமிகளின் வழிநடத்தலில் ஆன்மீக ஆற்றுப்படுத்தலிற்காக சந்நிதியான் ஆச்சிரமம் வாராந்தம் சைவச்சொற்பொழிவுகளையும் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை ஊடாக முன்னெடுப்பதோடு தொடர்ச்சியாக ஞானச்சுடர் இதழையும வெளியிட்டும் வருகின்றது

யாழிலிருந்து கிழக்கிலங்கை ஊடான பக்தி வைராக்கியமிக்க ஆயிரக்கணக்கான அடியவர்கள் பங்குபெறும் கதிர்காம பாதயாத்திரையில் சுவாமிகளின் அருள் வழிகாட்டல் உபசரணைகள் வார்த்தைக்களிற்கு அப்பாற்றப்பட்டது

எத்தனையோ கௌரவிப்புகளை விருதுகளை கண்டுவிட்ட போதும் மிக எளிமையான சிவனடியாராக முருக பக்தராக எல்லாம் அவன் அள்ளி தருகின்றான் நான் வழங்குகின்றேன் என அடக்கமாக தெரிவிக்கும் சுவாமிகள் வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடிகின்ற உன்னதமானவராக
திருமூலர் கூறும் சைவம் காட்டும் உயரிய மானிடநேயச்சிந்தையான அன்பே சிவதிற்கு உயிர்தந்த வள்ளலாக வாழ்ந்து வருவது கண்கூடாக நாம் அனைவரும் காணும் காட்சியாகும்

இத்தகைய முன்னுதாரணமான ஆன்மீகப் பெரியவருக்கு மனிதநேய வள்ளலுக்கு தம் உயரிய விருதான அன்பே சிவத்தை அகில இலங்கை சைவ மகா சபை இந்த சைவர்களின் அதி உன்னத விரத நாளாகிய இறை சிவனை நினைந்துருகும் மகா சிவாராத்தரி நாளில் அறிவிப்பதில் மீளவும் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நிற்கின்றது

அகில இலங்கை சைவ மகா சபை

எங்கள் பேரன்புக்குரிய இந்துவின் பொற்கால அதிபர் பஞ்சலிங்கம் ஐயா  சைவ சமய மேன்மைக்கும் ஏழைச்சிறார்களின் கல்விக்கும் பெருந்...
28/12/2025

எங்கள் பேரன்புக்குரிய
இந்துவின் பொற்கால அதிபர் பஞ்சலிங்கம் ஐயா சைவ சமய மேன்மைக்கும் ஏழைச்சிறார்களின் கல்விக்கும் பெருந்தொண்டாற்றிய செம்மல் ஆயிரம் பிறை கண்டு எம்மை எல்லாம் சமய சமூகப்பணிகளிற்கு இறுதிவரை வழிநடாத்திவிட்டு இறை சிவனின் பாதாரவிந்தங்ஙளை இன்று அதிகாலை சரணாகதி அடைந்தார்.
அந்த உன்னத ஆத்மா அன்பே சிவத்திற்கு உயிர்கொடுத்த மாமனிதம் இறை சிவனின் கழலில் பேரின்ப பெருவாழ்வு பெற்று எங்கள் யாவரையும் வழிநடாத்தட்டும்

சென்று வாருங்கள் எங்களை பள்ளி சிறுவராக இருந்த காலத்திலிருந்து இறை சிவனடி சேரும் வரை வழிகாட்டிய அன்புத்தந்தையே ஓப்பியர்வற்ற ஆசானே சமுதாய சிற்பியே

என்றும் எங்கள் நெஞ்சில் வழிகாட்டியாய் வாழ்வீர் ஐயா

அன்பே சிவம் விருது வழங்கி விருதுக்கு பெருமை சேர்க்கப்ட்ட அமரருக்கு சைவ மகா சபையின் ஆத்ம வணக்கங்கள்..

21/12/2025

இன்று தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதை சைவ மகா சபை வன்மையாக கண்டிக்கின்றது

வணக்கத்துக்குரிய மதத்துறவி மீது மிக மோசமான நடத்தையை காண்பித்தமை மிகவும் பாரதூரமான தவறாகும். இலங்கையில் உள்ள அனைத்து மதத்தலைவரைகளையும் சமனாக மதிக்க வேண்டிய சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் ஒரே தலைபட்சமாக சட்டரீதியற்ற முறையில் தனியார் காணியில் அடாத்தாக நிறுவப்பட்டுள்ள ஒரு மதக்கட்டிடத்திற்காக அதனை எதிர்த்து போராடிய அநத பிரதேசத்து மதத்தலைவரை மிலேச்சுதனமாக தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தமை எமது சமயத்தை அவமதித்த செயலாகவே பார்க்கின்றோம்

இந்த விடயத்தில் அரசு உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னடுத்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

எதிர்காலத்தில் இவ்வாறான எமது சமயத்தலைவர்களை அவமதிக்கும் செயலை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு உறுதி அளிக்க வேண்டும் என்டதை சைவசமய மக்கள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபையினராகிய நாம் ஆழமாக வலியுறுத்தி நிற்கின்றோம்

அகில இலங்கை சைவ மகா சபை

29/11/2025

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அனைத்து சைவ அமைப்புக்களும் திருக்கோவில்களும் உதவ வேண்டும் மீட்பு பணிகளில் சிவதொண்டர்கள் பங்கேற்க வேண்டும் ஆன்மீக தலைவர்களை உறவுகளை இழந்து தவிக்கும் மக்களை ஆற்றுபடுத்த னேண்டும் அனர்த்த முன்னெச்சரிக்கை தகவல்களை தொடரந்து ஊர்மக்களிற்கு அறிவிப்பதிலும் அனர்த்த வலயங்களில் அன்னதான கூடங்களை உடனடிமாக செயற்படுத்தவும் எம் திருக்கோவில்கள் முன்வர வேண்டும்

14/08/2025

எமது பாரம்பரிய விளையாட்டும் சிறந்த உடற்பயிற்சி வழங்குவதுமான தாச்சிக்கு (கிளிதட்டு) எமது பாடசாலைகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் கிரிக்கற் மாயையை மேலும் மேலும் வளர்த்து சோம்பேறிதனத்தையும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து நேர விரயம் கவன சிதறலுக்கு வழிகாட்டுவதை தவிர்க்க வேண்டும்
புல்லு வளர்க்க பாரியளவில நிலத்தடி நீர் விரயமாகுவதும் நிலத்தடி நிர உயிர்நாடி எனும் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை மிகப்பாரிய சவாலாகும்
ஐப்பான் ரஸ்யா சீனா போன்ற நாடுகள் கிரிக்கெற்றை ஆதரிப்பதில்லை
அவற்றின் வளர்ச்சியை கல்வி அடைவு மட்டத்தை சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை நாம் எண்ணி பார்க்க வேண்டும்

24/05/2025
🛑 நல்லூர் ஆலய  வளாகத்தின் சுற்றயலில்  உற்சவகால எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்ட...
19/05/2025

🛑 நல்லூர் ஆலய வளாகத்தின் சுற்றயலில் உற்சவகால எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

நல்லூர் என்பது சைவ சமயத்தின் புனிதத் தலமாகும். இத்தகைய தலத்துக்கு அருகிலே அசைவ உணவகம் அமைக்கப்படுவது எமது மதச்சாந்தி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது.

🕉️ அனைத்து நல்லூர் கந்தன் பக்தர்களும் ஒன்றுகூடி, இந்த அசைவ உணவகத்துக்கு எதிரான எமது திடமான எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டுகிறோம்.

🗓️ தேதி: 20.05.2025 (செவ்வாய் கிழமை)
🕓 நேரம்: மாலை 4.30 மணி
📍 இடம்: நல்லூர் ஆலய முன்றல்
📢 ஏற்பாடு: சைவ அமைப்புகள்

#நல்லூர் #சைவஅமைப்புகள் #அசைவஉணவகம்இல்லை #மதச்சாந்திக்காக #நல்லூர்_எங்கள்_பெருமை

சிவபெருமான் திருவடி நிழலை அடைந்த நல்லை ஆதீன குருமகா சந்நிதானத்தினை நினைவுகூர்ந்து இவ்வாரத்தை பிரார்த்தனை வாரமாக அனுட்டிக...
03/05/2025

சிவபெருமான் திருவடி நிழலை அடைந்த நல்லை ஆதீன குருமகா சந்நிதானத்தினை நினைவுகூர்ந்து இவ்வாரத்தை பிரார்த்தனை வாரமாக அனுட்டிக்குமாறு ஈழத்து சைவசமயிகளை அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகின்றது. குறிப்பாக நாளைய ஞாயிறு தினம் அனைத்து அறநெறிப்பாடசாலைகளிலும் சமய நிறுவனங்களிலும் சுவாமிகளின் நினைவுப்பிரார்த்தனைகளை உணர்வுபூர்வமாக அனுட்படிக்குமாறு வேண்டுகின்றோம்
ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலம் ஈழத்து சைவ சமயத்தின் அடையாளமாக உலகளாவிய ரீதியிலும் நாடாளாவிய ரீதியிலும் அனைத்து நிகழ்வுகளையும் பிரதிநிதிப்படுத்திய உயரிய குருமுதல்வருக்கு நாம் செய்யும் கைம்மாறாக அது இருக்கும்

இளமைக்கால வாழ்வை சைவ சமய மேன்மைக்காக துறந்து யுத்த கால நெருக்கடிகளை எல்லாம் தன்னந்தனியாக கடந்து சைவர்களின் அடையாளத்தை பேணிய மகத்தான ஆத்மா அவர்.

எளிமையான எவரும் அணுகக்கூடிய சமயத்தைலைவரான ஆதீனம் மிக எளிமையாகவே தன் விருப்பப்படி இறுதி வணக்க நிகழ்வையும் கண்டார்

அந்த மகத்தான குருமுதல்வருக்கு உயரிய கௌரவத்தையும் வணக்க வழிபாடுகளையும் செய்வது மட்டுமன்றி சுவாமிகள் கட்டிக்காத்த உயரிய ஆதீன பாரம்பரியத்தினை சைவ சமய பீடங்கள் அமைப்புக்களின் தலைவர்கள் கூடி அவர் விட்டுச் சென்ற பணியை தொடர குருமகா சந்நிதானம் ஒருவரை உடனடியாக தெர்ந்தெடுத்து அருளாட்சி பொறுப்பை ஒப்படைத்தல் சைவசமயிகள் யாவர் முன்னும் தற்போது உள்ள கடமை ஆகும்

அகில இலங்கை சைவ மகா சபை

சைவ உலகம் திரண்டு வந்து ஈழத்து சைவர்களை அரை நூற்றாண்டு காலம் தலைமகனாக பிரதிநிதித்துவப்படுத்திய ஆதீனத்திற்கு இன்று மாலை ந...
02/05/2025

சைவ உலகம் திரண்டு வந்து ஈழத்து சைவர்களை அரை நூற்றாண்டு காலம் தலைமகனாக பிரதிநிதித்துவப்படுத்திய ஆதீனத்திற்கு இன்று மாலை நல்லை ஆதீனத்தில் வணக்கம் செலுத்தி விடைகொடுப்போம்

வணக்கத்திற்குரிய நல்லை ஆதீனம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகளுடைய இறுதி ஆத்ம வணக்க நிகழ்வுகள் இன்று மாலை நல்லை ஆதீனத்தில் இடம்பெறவுள்ளது சைவ உலகம் திரண்டு பங்கேற்குமாறு சைவ மகா சபை சார்பாக வேண்டுகின்றோம்.

இறை சிவன் திருவடியில் கலப்புற்ற சுவாமிகள் அரை நூற்றாண்டு காலம் ஈழத்து சைவ சமயத்தின் தலைமகனாக விளங்கிய தம் வாழ்வை மிக இளமை காலத்திலிருந்து சைவத்திற்கு தந்த ஆதீன சுவாமிகளிற்கு ஆத்ம வணக்கங்களை அகில இலங்கை சைவ மகா சபை சார்பாக தெரிவித்து நிற்கின்றோம்

வணக்கத்திற்குரிய நல்லை ஆதீனம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய  சுவாமிகளுடைய இறுதி ஆத்ம வணக்க நிகழ்வ...
02/05/2025

வணக்கத்திற்குரிய நல்லை ஆதீனம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகளுடைய இறுதி ஆத்ம வணக்க நிகழ்வுகள் இன்று மாலை நல்லை ஆதீனத்தில் இடம்பெறவுள்ளது சைவ உலகம் திரண்டு பங்கேற்குமாறு சைவ மகா சபை சார்பாக வேண்டுகின்றோம்.

இறை சிவன் திருவடியில் கலப்புற்ற சுவாமிகள் அரை நூற்றாண்டு காலம் ஈழத்து சைவ சமயத்தின் தலைமகனாக விளங்கிய தம் வாழ்வை மிக இளமை காலத்திலிருந்து சைவத்திற்கு தந்த ஆதீன சுவாமிகளிற்கு ஆத்ம வணக்கங்களை அகில இலங்கை சைவ மகா சபை சார்பாக தெரிவித்து நிற்கின்றோம்

05/03/2025

Address

Jaffna Town
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when சைவ மகா சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share