Darul Jannah Association Hapugastalawa

Call Directions Website Contact the organization

Darul Jannah Association Hapugastalawa Serve the Hapugastalawa Community trough unity & Strengths

18/06/2026
அன்பிற்கினிய அதிபர் ஹசனுல் பசரி அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.அல்மின்ஹாஜ் தேசியப் பாடசாலையில் த...
26/04/2026

அன்பிற்கினிய அதிபர் ஹசனுல் பசரி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
அல்மின்ஹாஜ் தேசியப் பாடசாலையில் தாங்கள் பணியாற்றிய காலப்பகுதியில் காட்டிய அர்ப்பணிப்பு, பொறுப்பு உணர்வு மற்றும் விடாமுயற்சி ஆகியவை எங்களால் உயர்ந்த முறையில் மதிக்கப்படுகின்றன.

பாடசாலையின் முன்னேற்றத்திற்காக தாங்கள் எடுத்த தீர்மானங்கள், மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் செலுத்திய உழைப்புகள் எங்கள் சமூகத்தில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கல்வி மட்டுமின்றி ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் சமூக உணர்வை வளர்க்க தாங்கள் செய்த சேவைகள் என்றும் நினைவில் நிற்கும்.

நிர்வாக நடவடிக்கைகளில் தாங்கள் எடுத்துக் கொண்ட நேர்மையான அணுகுமுறை, தங்களின் உயர்ந்த மனிதநேயத்தைக் காட்டுகிறது.
தாங்கள் இன்னும் ஒரு பயணத்தை நோக்கி செல்கின்ற இந்த நேரத்தில், எங்கள் தாருல் ஜன்னாஹ் சங்கம் (Darul Jannah Association), ஹப்புகஸ்தலாவை சார்பாக இதயம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமையவும், தாங்கள் எங்கு சென்றாலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்றும் தங்களின் சேவைகள் சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.
நன்றியுடன்,

Darul Jannah Association
Hapugastalawa

الحمدلله ஹபுகஸ்தலாவையில் 14/4/2026 அன்று நடைபெற்ற கிரிகட் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி, இரண்டாம் இடமா...
14/04/2026

الحمدلله

ஹபுகஸ்தலாவையில் 14/4/2026 அன்று நடைபெற்ற கிரிகட் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி, இரண்டாம் இடமான பட்டத்தை கைப்பற்றிய தாருல் ஜன்னா உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்

அல்ஹம்துலில்லாஹ் இந்த அருள்மிகு ரமழான் மாதம்( 20/02/2026) அன்று  தாருல் ஜன்னாஹ் அமைப்பினூடாக 770,000 (ஏழு இலட்சத்து எழுப...
21/02/2026

அல்ஹம்துலில்லாஹ் இந்த அருள்மிகு ரமழான் மாதம்( 20/02/2026) அன்று தாருல் ஜன்னாஹ் அமைப்பினூடாக 770,000 (ஏழு இலட்சத்து எழுபதாயிரம்) ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் ஹபுகஸ்தலாவை வாழ் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது
அடுத்த வருடம் இன்ஷா அல்லாஹ் இதை விட இப்பணியை சிறப்பாக செய்ய பணம்,மற்றும் உடல் ரீதியாக உதவிய நல்லுள்ளங்களை உங்களுடைய பிரார்த்தனைகளில் இணைத்துக்கொள்ளுங்கள்

Address

Hapugastalawa
20668

Alerts

Be the first to know and let us send you an email when Darul Jannah Association Hapugastalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Darul Jannah Association Hapugastalawa:

Shortcuts

Share