Salama Cultural Development Forum

Salama Cultural Development Forum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salama Cultural Development Forum, Community Organization, Kadduppalli Road, Eravur.

03/02/2021
01/10/2020
02/08/2020

#அஷ்பால் அல் குர்ஆன் அகடமி # # #தினம்_ஓர்_உபதேசம் #

ஆபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் ஆளுநராக நியமிக்கக் கூடாதா? எனக் கேட்டேன்.
உடனே அவர்கள் தங்களது கரங்களால் எனது தோள்புயத்தில் தட்டி விட்டு பின்னர், அபூதர்ரே! நீங்கள் பலவீனமானவராக இருக்கின்றீர்கள்.
இப்பதவி என்பது ஓர் அமானிதம்.
இப்பதவி வேண்டி நிற்கின்ற உரிமைகள், கடமைகளோடு சேர்த்து இதனைப் பெற்று யார் அவற்றை முழுமையாக நிறைவேற்றினாரோ அவரைத் தவிர மற்றவர்களுக்கு அது ஓர் இழிவாகவும் கைசேதமாகவும் அமையும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

31/05/2020

பள்ளிவாசல்கள் மீள்திறப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள்

தழுவல்: முஹம்மத் பகீஹுத்தீன்

கொரோனா தொற்று நோய் காரணமாக உலகமே முடக்கப்பட்ட நிலையில் இருந்தமை யாவரும் அறிந்ததே. வழிபாட்டுத் தளங்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. தற்போது சில நாடுகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதை அவதானிக்க முடிகிறது. மூடப்பட்ட பள்ளிவாசல்களும் மீண்டும் திறக்கப்படுகின்றன. இடைநிறுத்தப்பட்ட கூட்டுத் தொழுகைகள் மற்றும் ஜும்மா தொழுகைகள் மீண்டும் வழமைக்கு வருகிறது. பள்ளிவாசல் மீள்திறப்பு என்பது மனக் கஷ்டத்துடன் பொறுமை காத்த முஸ்லிம்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும். இது ஏங்கித் தவித்த உள்ளங்களை குளிரச் செய்யும் சுபசோபனமாகும்.

பள்ளிவாசல்கள் மீள்திறப்பின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் குறித்த வழிகாட்டல்களை அரசாங்கம் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள் தந்துள்ளன. அவற்றை கண்டிப்பாக முஸ்லிம்கள் கவனத்திற் கொண்டு செயற்படுவது அவசியம் என்பதை கலாநிதி அக்ரம் கஸ்ஸாப்b அவர்கள் ஷரீஆவின் நிழலில் விளக்கிக் கூறியுள்ளார்கள். அவருடைய வாசிப்பில் இருந்து முக்கியமான சில பகுதிகளை வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.

1) வணக்க வழிபாட்டுத் தளங்கள் மீள்திறப்பின் போது அரசாங்கம் வழங்கும் வழிகாட்டல்களையும், சட்ட ஒழுங்குகளையும், விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக பின்பற்றுவது அவசியமாகும்.

2) கோவிட் 19 வைரஸ் வயோதிபர்களை விரைவாக தொற்றும் என்றும் அவர்களுக்கு உயிராபத்தும் அதிகம் என்பதையும் துறை சார்ந்த வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். எனவே முதியோர்கள் சனத்திரள் உள்ள இடங்களை தவிர்ப்பதில் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும். சமூகத் தரப்பில் இருந்தும் இது குறித்து மிகுந்த கரிசனை எடுக்கப்பட வேண்டும். இஸ்லாமிய சட்டப் பரப்பில் நோயாளிகளுக்கும் வயோதிபர்களுக்கும் விதிவிலக்கான சட்டங்களும் சலுகைகளும் உள்ளன.

3) சேர்த்து தொழுவதற்காக உள்ள சலுகையை கடைப்பிடித்தல்:

இறை தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் பயணங்கள் மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் மழை, கடும் குளிர், தேவை போன்ற காரணங்களுக்காக தொழுகைகளை அவர்கள் முகாமிட்ட இடங்களிலேயே தொழுது கொள்ளுமாறு வழிகாட்டியுள்ளார்கள். மேற்படி காரணங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பயணங்களில் சேர்த்து தொழுத சம்பவத்தை இப்னு உமர் ரழி அவர்கள் அறிவித்துள்ளர்கள். (புகாரி 632, முஸ்லிம் 697)

எனவே நோய் தொற்றும் என்ற அச்சம் நிலவும் போது ளுஹரையும் அஸரையும் சேர்த்து தொழலாம். அவ்வாறே மஃரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுலாம். இது நோய் தொற்றும் என்ற பயம் உள்ள பகுதிகளில் தேவை நிமித்தம் கடைப்பிடிக்க முடியுமான ஒழுங்காகும். ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மினாவில் தரிப்பது வாஜிபாகும். மினாவில் தரிக்கும் அந்த நாட்களில் ஹஜ்ஜாஜிகளுக்கு நீர்புகட்டும் பணிக்காக மக்காவில் தங்குவதற்கு அப்பாஸ் ரழி அவர்கள் அனுமதி கேட்டார்கள். அந்த தேவையை கருத்திற் கொண்டு நபிகளார் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

4) தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது பாதிக்கப்பட்டிருக்காலாம் என்ற சந்தேகம் உள்ள ஒருவர் அல்லது தன்னால் அடுத்தவருக்கு தீங்குவரலாம் எனக் கண்டால் அவர் ஜமாஅத் தொழுகைக்கோ அல்லது ஜும்மா தொழுகைக்கோ பள்ளிவாசலுக்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அடுத்த வருக்கு ஒரு தீங்கு ஏற்படும் செயலை தெரிந்து கொண்டே செய்வது பாவமான காரியமாகும். வெள்ளைப்பூண்டு, வெங்காயம் சாப்பிட்ட ஒருவர் பள்ளிவாசலுக்கு வருவதையே நபிகாளார் தடுத்துள்ளார்கள். அடுத்த மனிதனுக்கு துர்நாற்றம் தீங்காக அமையும் என்று கருதியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. (புகாரி)

5) கொரோனா ஆபத்து முற்றாக நீங்கும் வரை உள்ள காலம் சலுகைகளுக்கான காலமாகவே கருதப்படுகிறது. எனவே ஒரு பள்ளிவாசலில் பல ஜும்மா தொழுகைகள் நடாத்தப்பட முடியும் அல்லது ஒரு ஊரில் உள்ள பல பள்ளிவாசல்களில் ஜும்மா நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட முடியும். இது பாரியளவில் சனத்திரள் கூடுவதை தவிர்க்க உதவும். இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால் இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் அதற்கு இடம் கொடுக்கிறது.

மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஊர்களிலும், ஒரு இடத்தில் அனைவரும் ஒன்று கூடுவது கஷ்டம் என்ற நிலையிலும் ஒன்றுக் மேற்பட்ட ஜும்மா நடைபெறுவது ஆகுமாகும் எனவும் அதுவே சரியான சிந்தனையாகும் எனவும் இமாம் நவவி அவர்கள் தனது மஜ்மூஃ என்ற கிரந்தத்தில் பதிவு செய்துள்ளர்கள்.(4:585)

6) தொழுகைக்காக வரிசையில் இருக்கும் போது நெருக்கமாகவும் தோளோடுதோள் சேர்த்து நிற்பதே சுன்னாவாகும். அவ்வாறே வரிசையில் தனித்து நிற்பது மக்ரூஹ் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் அபிப்பிராயமாகும். ஆனால் நியாயமான காரணம் இருக்கும் போது தனித்து நிற்பது தவறாகாது என்பதே அறிஞர்களின் கருத்தாகும். இந்நிலையில் கொரோனா காரணமாக வரிசையில் இடைவெளி பேணுவது துறை சார் வைத்தியர்களின் வழிகாட்டலாக இருப்பதால் தொழுகையின் போது இருவருக்கிடையில் தூரமாகி இருப்பது தவறல்ல.

பொதுவான சில வழிகாட்டல்கள்

1) வீட்டில் வுழுசெய்து கொண்டு பள்ளிவாசல்களுக்கு செல்வதை வழக்கமாக்குதல்.

2) நிலைமை சீராகும் வரை நிர்வாகிகள் பள்ளிவாசல் கழிவறைப் பகுதியை மூடிவைக்க நடவடிக்கை எடுத்தல்.

3) பள்ளிவாசலுக்கு நுழையும் போதும் வெளியேரும் போதும் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகளை செய்தல்.

4) பள்ளிவாசல்களில் தரிக்கும் நேரங்களில் முகமூடிகளை அணிந்த நிலையிலேயே இருத்தல்.

5) பள்ளிவாசலுக்கு வரும்போது முடியுமாக இருந்தால் தனக்கென ஒரு முஸல்லாவை கொண்டு வருதல்.

6) கைலாகு செய்வதையும் கட்டித்தழுவதையம் தவிர்த்தல்.

7) முன்பின் சுன்னத் தொழுகைகளை வீட்டில் தொழுதல்.

8) பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வெப்பமாணிகள் மூலம் உஷ்னத்தை அளவிட ஏற்பாடு செய்தல்.

9) மஸ்ஜித் நிர்வாக பொறுப்புதாரிகள் தேவையான அரச திணைக்ககளங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதை பேணி வருதல்

அல்ஹம்துலில்லாஹ்!Omsed srilanka வின் றமழான் விடுமுறை கால பயிற்சி நெறி(RVC,YTR) ஏறாவூரில்,பெற்றோர்களின் அங்கீகாரத்துடன் ஆ...
27/04/2020

அல்ஹம்துலில்லாஹ்!
Omsed srilanka வின் றமழான் விடுமுறை கால பயிற்சி நெறி(RVC,YTR) ஏறாவூரில்,
பெற்றோர்களின் அங்கீகாரத்துடன் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் வாட்சப்குழுமம் ஆரம்பித்து
PDF வடிவில் புத்தகங்களும்,குரல்வடிவில் பாடங்களின் சுருக்க விரிவுரைகளும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இவ் அசாதாரண சூழ்நிலையில் வெளியே செல்லாமல் வீட்டிலே தரித்து இருந்து அல்குர்ஆன் ஓதுவதிலும்,இபாதத்களில் ஈடுபடுவதிலும்,மரங்கள் நடுவதிலும்,குடும்பமாக இருந்து பாடத்தை கலந்துரையாடி நடைமுறைப்படுத்துவதிலும் உங்களது நேரத்தை செலவளியுங்கள்.

உங்களை ஊக்குவிப்பதற்காக சிறந்த கருத்துக்களுக்கும்,நடைமுறைகளுக்கும் பரிசில்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முற்றிலும் இலவசமாக நடாத்தப்படும் இப்பணியில் சரீஆத்துறை மாணவர்களும் மற்றும் மருத்துவ பீட,பொறியியல் பீட,முகாமைத்துவ பீட,டெக்னாலஜி பீட மாணவர்களும்,ஓய்வு பெற்ற அதிபர் மற்றும் ஆசிரியர்களும்,மௌலவிமார்களும் உள்ளனர்.
அல்லாஹுதாஆலா இவர்கள் அனைவரதும் முயற்சியை பொருந்தி கொள்வானாக!

(வெளி ஊர் மாணவர்களும் அதிகமாக இப்பாடநெறியில் இணைந்துள்ளதால் உங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.)

*இப்பாடநெறிறிலிருந்து மாணவர்கள் எவ்வாறு பயனடையலாம்?*
✳️ தினமும் இந்நூலிலிருந்து ஒரு ஆக்கத்தை வாசியுங்கள். அல்லது ஆக்கத்தின்
வீடியோவை அல்லது அதன் குரல்வடிவத்தை கேளுங்கள்.
✳️ வாசித்த ஆக்கத்தை மனதிற்குள் மீட்டிப் பாருங்கள்.
✳️ நீங்கள் வாசித்த ஆக்கத்தினை வீட்டிலுள்ள அடுத்தவர்களுடன் பகிர்ந்து
கொள்வதுடன் அது குறித்து கலந்துரையாடுங்கள்.
✳️ நீங்கள் வாசித்த ஆக்கத்திலிருந்து ஒரு நடைமுறையொன்றை எடுத்து
அமுல்படுத்துங்கள்.
✳️ நீங்கள் வாசித்த போது தோன்றிய கருத்துக்களையும் நீங்கள் நடைமுறைப்படுத்திய
விடயங்களையும் ஒரு தாளில் எழுதி, உங்கள் பெயரையும் முகவரி மற்றும்
தொலைபேசி இலக்கங்களுடன் அதனை போட்டோ எடுத்து பின்வரும் எமது பேஸ்புக்
மெஸேன்ஞர் ஊடாக அனுப்புங்கள். https://www.facebook.com/OmsedSriLanka/
✳️ தினமும் ஒன்று என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆக்கங்களுக்குமான கருத்துக்களும்
நடைமுறைகளும் றமழானின் முதற் பதினைந்து நாட்களுக்குள் எமக்குக் கிடைக்கக்
கூடியதாக இருக்க வேண்டும்.
✳️ ஒவ்வொரு ஆக்கத்துக்கும் தனித்தனியே கருத்துக்களும் நடைமுறைகளும் எழுதப்பட
வேண்டும்.
✳️ சிறந்த 10 கருத்துக்களுக்கு OMSED நிறுவனத்தின் பரிசில்கள் அனுப்பி வைக்கப்படும்.

OMSED Sri Lanka

சிறந்த முறையில் றமழானை எமது பிள்ளைகள் பயன்படுத்தி கொள்ளும் பொருட்டு:-தொடர்ந்து ஏறாவூரில் 07 வருடங்களாக நடைபெற்று வரும் இ...
24/04/2020

சிறந்த முறையில் றமழானை எமது பிள்ளைகள் பயன்படுத்தி கொள்ளும் பொருட்டு:-

தொடர்ந்து ஏறாவூரில் 07 வருடங்களாக நடைபெற்று வரும் இக்கற்கை நெறியில் உங்களது பிள்ளைகளையும் இணைத்து கொள்ள 0762069495 என்ற இலக்கத்திற்கு WhatsApp பண்ணுங்கள்.

எங்கள் அனைவரையும் றய்யான் எனும் வாயிலினூடாக சுவனத்தை அடைவதற்கு அல்லாஹுதாஆலா அருள் புரிவானாக!

கடந்த ஏப்ரல் 21 இல் தங்களது உறவுகளை இழந்த அனைத்து நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!!"whoever kills an innocent person ...
21/04/2020

கடந்த ஏப்ரல் 21 இல் தங்களது உறவுகளை இழந்த அனைத்து நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!!

"whoever kills an innocent person it is as if he has killed all of humanity" (Quran 5:32)

19/04/2020

#ஈமானை_உயிரோட்டமாக #வைத்துக்கொள்ள_அவன் #அருளியவற்றிலிருந்து_செலவளிப்போம்.

அபூ பக்கர் (ரழி) தபூக் யுத்தின் போது அல்லாஹ்விடத்தில் நம்பிக்கை வைத்து முழுச் சொத்தையும் செலவளித்தார்கள்.

நபி (ஸல்) கூறினார்கள் داعوا مرضاكم بالصدقة "உங்களுடைய நோயாளிகளை குணப்படுத்துவதற்காக செலவு செய்யுங்கள்.

كل امرأ في ظل صدقة حتي يقضي بين الناس "மறுமையில் எல்லா மனிதர்களும்
விசாரிக்கப்படும் வரை ஸதகா செய்தவர் ஸதகா வின் நிழலில் இருப்பார்.

ஸதகாவினால் ஒரு அடியானின் செல்வம் ஒரு போதும் குறையாது. (நபி மொழி)

அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான்.
لن تنال البر حتي تنفق مما تحبون
"நீர் விரும்பியதை செலவளிக்காத வரை சுவனத்தை அல்லது நன்மையை பெற்றுக்கொள்ளவே மாட்டீர்கள்"

*👉நாம் அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வோம்.

1) வீட்டில் வீண் விரயத்தை கட்டுப்படுத்தி இரத்த உறவினர்கள் நிலையை பார்த்து அவர்களுக்கு அடிப்படைகளை செய்து கொடுப்போம்.

2) பக்கத்து வீட்டவர் அயலவர் நிலையை அறிந்து அவர்களின் அடிப்படையான உணவு வசதிகளை செய்து கொடுப்போம்.

3) ஸாகாத் கடமையானோர் கடமையான ஸக்காத்தை முன் கூட்டியே கூட்டு ஸகாத் பிரிவினரிடத்தில் ஒப்படைப்போம்.

4)அதிகமதிகம் ஸதகாக்களை இந்த அசாதாரண சூழ்நிலையில் கொடுப்போம். (ரமழானை முன்னோக்கிய இந்த நிலையில் உலர் உணவு கூட்டாக ஏற்பாடு செய்து கொண்டிருப்போரை தைரியமூட்டி ஸதகாக்களை வழங்குவோம்.ان شاء الله 👉அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்போம் அல்லாஹ் போதுமானவன்.

ومن يتوكل علي الله فهو حسبه
(அல்குர்ஆன்)
" நாம் நம்பிக்கையை பலப்படுத்திய நிலையில் இயங்க வேண்டும்."

குறிப்பாக வீட்டுத்தோட்டம்,விவசாயம் போன்ற விடயங்களை விரும்பி ஆசையாக செய்ய வேண்டும்.
" மறுமை இப்போது வரும் என்ற நிலையில் கையில் ஒரு மரச்செடி இருக்கும் என்று இருந்தால் அதனை நட்டிவிடு என்ற வழிகாட்டலைப் பெற்ற நாம் நம்பிக்கையோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

அல்லாஹ் அனைத்தையும் இலகுபடுத்துவான்

அஷ்பால் அல்குர்ஆன் அகடமியின் ஏற்பாட்டில்..அகமட் பரீட் அஹதியா பாடசாலை 6-10 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு  #இலவசமாக ஒவ்வொரு ஞாயி...
09/02/2020

அஷ்பால் அல்குர்ஆன் அகடமியின் ஏற்பாட்டில்..
அகமட் பரீட் அஹதியா பாடசாலை 6-10 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு #இலவசமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஷாதுலி பள்ளிவாயல் மதரஸா கட்டடத்தில் காலை 8-10 மணி வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது மாணவர்களின் ஒழுக்க பிறழ்வுக்கு காரணம் ஆன்மீக வழிகாட்டல் குறைந்து செல்வதே!இதனை நிவர்த்தித்து நடுநிலை சிந்தனையுள்ள சிறந்த நற்பிரஜைகளை உருவாக்கும் முயற்சியில் உங்களது பிள்ளைஙளையும் அனுப்பி வையுங்கள்!
தயவு செய்து இந்த நேரத்தில் எந்தவொரு டியூஷன்களையும் வைக்க வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அஷ்ஷேய்க் SAM நளீம்(கலாசார உத்தியோகத்தர்)
தலைவர்
பணிப்பாளர் சபை,
அஷ்பால் அல்குர்ஆன் அகடமி,ஏறாவூர்.

மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் கிராமத்தில்  #நூலகத்தை திறம்பட இயங்கச் செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று ஏறாவூர்பற்று பிரதேச சபை உறு...
04/02/2020

மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் கிராமத்தில் #நூலகத்தை திறம்பட இயங்கச் செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் அன்வர் அவர்களுடன்,
கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஸலாமா பேரவை உறுப்பினர்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்றது.
இதன்போது
மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கான பணமும் வழங்கப்பட்டது.
பிரயோசனமான புத்தகங்களும்,தளபாடங்களும் வருகின்ற நாட்களில் கையளிக்கப்பட உள்ளன.

பின்தங்கிய இப்பிரதேசத்தை யாரும் கவனிப்பதில்லை,இங்குள்ள இளைஞர்கள் பிழையான வழிநடாத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது.இவர்களுக்கான வழிகாட்டலை செய்யுமாறு கலந்து கொண்ட கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கேட்டு கொண்டனர்.

இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்த ஏறாவூர்பற்று பி.ச.உறுப்பினர் அன்வர் அவர்களின் முயற்சிக்கும்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கும் ஸலாமா பேரவையானது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.

இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தை மையப்படுத்தி மாணவர்களுக்கான கற்றல் வட்டங்களும்,வழிகாட்டல் கருத்தரங்குகளும் இடம்பெற உள்ளன

Address

Kadduppalli Road
Eravur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salama Cultural Development Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share