சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி- Towards Clean & Greener Eravur

  • Home
  • Sri Lanka
  • Eravur
  • சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி- Towards Clean & Greener Eravur

சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி- Towards Clean & Greener Eravur Working for Clean & Greener Environment

14/04/2026
சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி..Effort-962002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 23 வருடங்களாக சிறப்பாக இயங்கி வரும் ஏறா...
19/01/2026

சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி..

Effort-96

2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 23 வருடங்களாக சிறப்பாக இயங்கி வரும் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லம்.

இன்று அவ்வில்லத்தில் 15 ஆண் பிள்ளைகளும்,25 பெண் பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்கள் அத்தனை பேரும் தாய் தந்தையின் பாசத்தோடும் அரவணைப்போடும் பெற்றோரோடு வாழவேண்டியவர்கள்.
அந்த ஏக்கம் அங்கிருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இருந்தேயாகும்.
இருந்தாலும் சிறுவர் பராமரிப்பு இல்லம் அப்பிள்ளைகளை அரவணைத்து வளர்த்து பராமரித்து வருவது என்பது சாதாரனமான காரியம் இல்ல.

இன்று அப்பிள்ளைகளோடு கனத்த மனதோடு கதைக்கும்,பழகும் வாய்ப்பு எங்கள் குழுவினருக்கு கிடைத்தது.அப்பிள்ளைகள் அத்தனைபேரும் அற்புதமான செல்வங்கள்.
இந்தச் செல்வங்களை படிப்பிக்க வைத்து,தங்கவைத்து,சாப்பாடும் கொடுத்து அன்பாக பராமரித்து வரும் அவ்வில்லத்தின் நிர்வாகத்தினருக்கு கோடான கோடி நன்றிகள்.

//நிர்வாகத்தினரின் அயராத முயற்சியால் கட்டடங்கள் போதியளவு இருக்கிறது.ஆனால்
மிகக் குறைந்த வருமான மூலங்களோடுதான் முடியுமானவரை அப்பிள்ளைகளை அந்நிருவாகம் பராமரித்து வருகிறது.
நிரந்தர வருமான மூலங்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஊஊக்கத்தையும் ஒத்துழைப்புக்களையும் ஏற்கனவே கிழக்கிலங்கை புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு கொடுத்தது போன்று நாம் எல்லோரும் இணைந்து கொடுத்தால்..

கல்வி,விளையாட்டு,போசாக்கான உணவு,ஒழுக்கம் மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் அப்பிள்ளைகளை மேலோங்கச் செய்து மிகத்தரமான சிறுவர் பராமரிப்பு இல்லமாக இவ்வில்லத்தை மாற்றி பெற்றோரோரின் அன்பை இழந்த இந்தச் செல்வங்களை சந்தோசப்படுத்தி இன்பம் காணலாம்.//

இன்று சிறுவர் பராமரிப்பு இல்ல வளாகத்தில் பலன் தரும் பலா,சிகப்புப் பலா,காமரங்கா,புளி,ஜம்போ,மா,முந்திரி போன்ற பல்வகை பலன் தரு மரங்களை நட்டுவித்தோம்.

எங்களோடு இணைந்து அப்பிள்ளைகளும் உற்சாகமாக மரங்களை நட்டு,பாத்தி பிடித்து,நீரூற்றி வேலை செய்தார்கள்.
அவர்களது முகத்தில் அவ்வளவு சந்தோசம் தெரிந்தது.
இம்மரங்களில் இருந்து பயன் பெறுவதற்காக தினமும் நீரூற்றி பராமரிப்போம் என்ற நம்பிக்கையை நம்பிக்கையோடு சொன்னார்கள்.

இதற்கான நிதி உதவியை கட்டார்வாழ் ஓரிரு ஏறாவூர் சகோதரர்கள் இணைந்து வழங்கி இருந்தார்கள்.

Towards clean & greenery Eravur.

சுத்தமானதும்்பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி..EFFORT-92சென்ற வருடம் இதே நாள் ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தின் நுழ...
29/04/2025

சுத்தமானதும்்பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி..

EFFORT-92

சென்ற வருடம் இதே நாள் ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலின் இருமருங்கிலும் சகோதரர் ரனீஸ் அவர்களின் இறையடி எய்திய பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக இரண்டு பெரிய மரங்களை நட்டுவித்தோம்.
இன்று அதில் ஒன்று சிறப்பான வளர்ச்சியை காட்டி நிற்க மற்றயது செத்துவிட்டது.
ஆகவே மீண்டும் அதே இடத்தில் இன்னுமொரு மரத்தை நட்டுவித்தோம்.

Towards Clean & Greener Eravur

EFFORT-91ஏறாவூரின் அழகிய ஆற்றோரம் நெடுகிலும் ஏற்கனவே எங்களூரைச் சேர்ந்த சகோதரர் முஹைதீன் மௌலவி இனாயத்துல்லாஹ் அவர்களின் ...
24/04/2025

EFFORT-91

ஏறாவூரின் அழகிய ஆற்றோரம் நெடுகிலும் ஏற்கனவே எங்களூரைச் சேர்ந்த சகோதரர் முஹைதீன் மௌலவி இனாயத்துல்லாஹ் அவர்களின் நிதிப் பங்களிப்போடு 20 கிண்ணை மரங்களை நாட்டி இருந்தோம்.அம்மரங்களில் பல இன்று நல்ல வளர்ச்சியோடு பூக்கவும் காய்க்கவும் தொடங்கி இருக்கின்றன.

அதனை அவதானித்த ஏறாவூரைச் சேர்ந்த சகோதரர் லண்டனில் வசிக்கும் தனது உறவினருக்கு தெரியப்படுத்த இன்னும் 10 மரங்களை ஆற்றோரத்தில் நடுவதற்கான நிதிப்பங்களிப்பை செய்வதாக உறுதியளித்து முதல் கட்டமாக 2 கிண்ணை மரங்களை ஆற்றின் கரையில் பரல் புதைத்து நட்டுவித்தோம்.விரைவில் ஏனைய மரங்களையும் நட இருக்கிறோம்.

மிகவும் கடிணமான இந்த பணிக்கு எங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர் ரிபாஸ் அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகளும் பிரார்த்தனைகளும்.

இம்மரங்கள் ஏனைய மரங்களை போல் வளர்ந்து மண்ணுக்கும் மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் ஊருக்கும் பயன்தரட்டும்.

Towards Clean & Greener Eravur.

ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மதிலில் எங்களது சின்னத்தை பாடசாலை நிர்வாகம் பொறித்திருக்கிறது.எங்களது இல...
14/03/2025

ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மதிலில் எங்களது சின்னத்தை பாடசாலை நிர்வாகம் பொறித்திருக்கிறது.

எங்களது இலக்கு நோக்கிய பயணத்திற்கு இது இன்னும் உந்துசக்தியாக இருக்கிறது.

அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை நிர்வகத்திற்கு உளப்பூர்வமான நன்றிகள்!!

Towards Clean & Greener Eravur.

சுத்தமானதும்்பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி..EFFORT-88வெறும் வார்த்தைக்காக இந்த பெயரை வைத்து 2019இல் இந்த வேலைத்திட்டத்தை ...
14/02/2025

சுத்தமானதும்்பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி..

EFFORT-88

வெறும் வார்த்தைக்காக இந்த பெயரை வைத்து 2019இல் இந்த வேலைத்திட்டத்தை தொடங்கி வேலை செய்யவில்லை.
மனதில் பெரும் இலக்கொன்றை உண்மைக்குண்மையாகச் சுமந்து கொண்டுதான் அன்று தொடக்கம் இன்று வரை மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் இஸ்டப்பட்டு வேலை செய்து கொண்டு வருகிறோம்.

FBல் போட்டோ போடுவதற்காகத்தான் இந்த வேலை என்றும்,பெருமைக்கு மாவு இடிக்கும் வேலை என்றும்,யாரோ செய்ய வேண்டியதை இந்த பைத்தியக்காரனுகள் செஞ்சுக்கிட்டு திரிகிறானுகள் என்றும்..(இன்னும் பல)
அன்றில் இருந்து இன்று வரை படித்த சில பல சகோதரர்களால் நிறையவே நக்கல் நையாண்டிகளையும்,கேலி கிண்டல்களையும் சந்தித்திருக்கிறோம்.
அது எதையும் தலைக்கு ஏற்றாமல் எங்கள் பணியை தொடர்ச்சியாக செய்து வருகிறோம்.

அவர்களுக்கெல்லாம் வார்த்தைகளால் நாங்கள் எப்போதுமே பதில் சொன்னது கிடையாது.
செயற்பாடுகளால் மட்டுமே பதில் சொல்லி வந்திருக்கிறோம்.

FBல் எங்களது இந்த வேலைத்திட்டங்களை பதிவேற்றம் செய்வதன் பின்னால் இருந்த மிகப்
பிரதான காரணம்-மற்றவர்களை இந்த பணியைச் செய்ய தூண்டுவது.அதில் வெற்றியும் கண்டோம்.ஊரில் உள்ள வீதியோரங்களில் நாங்கள் நாட்டியதை விடவும் அதிகமான மல்லிகைகளை மக்கள் தாங்களாகவே நாட்டி வீதிகளை பசுமையாக்கி இருக்கிறார்கள்.
பசுமையாக்கிக் கொண்டு வருகிறார்கள்.

எங்களது இலக்கு நோக்கிய இந்த வேலைத்திட்டத்திற்கு உகந்த ஊடகமாக இருப்பது இந்த FB மட்டுமே.
அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி வருகிறோம்.
யார் எதைச் சொன்னாலும் எங்கள் இலக்கு நோக்கிய பணி இலக்கை எட்டும் வரை தொடரும்.

//முதலில் ஒரு வீதி நெடுகிலும் குறிப்பிட்ட தூர இடைவெளியில் குப்பை பக்கட்டுக்களை வைத்து அவ்வீதியை சுத்தமாகவும் பசுமையாகவும் மாற்றுவதற்காக மாதிரி வீதியாக காட்டுப்பள்ளி வீதியை தெரிவு செய்தோம்.அந்த இலக்கை விரைவில் சாத்தியப்படுத்துவோம்.

அன்று நாட்டிய மல்லிகைகள் காட்டுப்பள்ளி வீதி நெடுகிலும் சிறப்பாக வளர்ந்து நின்று அவ்வீதிக்கு அழகு சேர்க்கின்றன.சில மாத இடைவெளியில் அம்மல்லிகைகளை அழகுற வட்ட வடிவமாக கத்தரித்தும் வருகிறோம்.நேற்று அவ்வீதியின் ஒரு பகுதியை பகல் முழுவதும் வேலை செய்து சிரமதானம் செய்து முடித்தோம்.
இதற்கு ஏறாவூர் நகரசபை விஷேட ஆணையாளர் வருகை தந்து சிரமதானத்தில் பங்கைபற்றியதோடு வாகனங்களை அனுப்பி குப்பைகளையும் அள்ள வைத்தார்.

நாங்கள் செய்யும் இந்த வேலைத்திட்டத்தை செய்ய வேண்டியது நகரசபைதான்.
இருந்தாலும் மிகக் குறைந்த ஆளணியோடு நகரசபை சுத்திகரிப்பு ஊழியர்கள் ஊர் தழுவிய குப்பைகளை அள்ளுவதே பெரிய விசயம்.

ஊரில் தினமும் சேரும் குப்பைகளை அள்ளுவதற்கான ஆளணியும் குறைவு,கருவிகளும் குறைவு,அள்ளுகிற குப்பைகளை கொட்டுவதற்கான இடமும் போதாது.தரம்பிரித்து குப்பைகளை பசளையாக்கி அதனை காசாக்கும்
இலக்கையும் நோக்கியே சுத்தமானதும் பசுமையானதுமான பணி தொடர்கிறது.

தொடரும்.
Towards Clean& Greener Eravur.

பசுமையான மரங்கள் மனிதர்களுக்கு மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் தருகின்றன. அவை மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.மரம் வளர...
07/02/2025

பசுமையான மரங்கள் மனிதர்களுக்கு மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் தருகின்றன. அவை மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.

மரம் வளர்ப்பது என்பது நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு சிறந்த செயல். ஒவ்வொருவரும் மரம் நடுவதன் மூலம் இந்த பூமியை பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

சுத்தமானதும்்பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி..EFFORT-86இன்றைய தினம் ஏறாவூரின் அழகிய ஆற்றோரத்தில் குளிர்ச்சிதரும் 2 மருத மரங...
04/02/2025

சுத்தமானதும்்பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி..

EFFORT-86

இன்றைய தினம் ஏறாவூரின் அழகிய ஆற்றோரத்தில் குளிர்ச்சிதரும் 2 மருத மரங்களையும்,வீதியோரத்தில் அசுத்தமான காற்றை சுத்தமானதாக மாற்றும் திறனும்,ஒட்சிசனை அதிகம் வெளியிடும் வல்லமையும் பொருந்திய 20 புங்கை மரங்களையும் நட்டுவித்தோம்.

இலக்கு நோக்கிய பயணம் தொடரும்.

Towards Clean & Greener Eravur.

 இன்று(04.02.2025) மிகவும் மகிழ்ச்சியான நாளாகும்...எமது தாய்த்திரு நாடு தனது 77 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது...எ...
04/02/2025



இன்று(04.02.2025) மிகவும் மகிழ்ச்சியான நாளாகும்...

எமது தாய்த்திரு நாடு தனது 77 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது...

எமது அமைப்பின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

தானுண்டு, தன் குடும்பமுண்டு, தனது தொழிலுண்டென்று எல்லாரையும் போல ஒதுங்கிவிடாமல்...தாங்கள் அழகாக வாழ்வதுபோலவே தங்களது ஊரை...
01/02/2025

தானுண்டு, தன் குடும்பமுண்டு, தனது தொழிலுண்டென்று எல்லாரையும் போல ஒதுங்கிவிடாமல்...

தாங்கள் அழகாக வாழ்வதுபோலவே தங்களது ஊரையும் அழகாக மாற்றவேண்டும் என்ற உன்னத நோக்கோடு ஒரு சில இளைஞர்கள் செயற்பட ஆரம்பித்ததன் விளைவு இன்று ஏறாவூரின் அனேகமான பகுதிகள், வீதிகள், பொது இடங்கள்,ஆற்றங்கரையோரம் என பச்சைப் பசேலென்ற மரங்களுடன் மிகவும் அழகாக காட்சியளிக்கின்றன.

வரலாறு காணாத இந்த மாற்றத்துக்கான அடித்தளம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இடப்பட்டது.

"சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கிய செயற்திட்டம்" என்ன குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்படதோ, அதன் இலக்கினை அடைந்துள்ளமை மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.

இங்கு சில படங்கள் பகிரப்படுகின்றன. வெறும் குப்பை குவியும் இடங்களாக காணப்பட்ட ஆற்றங்கரையோரத்தில் எமது அமைப்பினால் நடப்பட்ட கிண்ணம்பழ மரங்களில் கிண்ணம்பழங்கள் காய்க்க ஆரம்பித்துள்ளமை பார்ப்பதற்கு அழகாக கட்சியளிக்கின்றன.

பழம் தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள் என எமது அமைப்பினரால் நடப்பட்ட மரங்கள் வளர்ந்து மக்களுக்கு பயனளிக்க தயாராக இருப்பது எமது அமைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

எதிர்காலத்தில் ஏறாவூரின் ஓவ்வொரு மூலைமுடுக்கும் பச்சைப்பசேலென சோலையாய் மாறும்...அதுவரை எமது அமைப்பானது முழுமூச்சாய் செயற்படும்...

அழகினை விரும்பாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்...?ஒரு நாட்டின் போக்குவரத்துக்கான அழகிய பாதை வசதிகள் அதன் வளர்ச்சியை வெளி...
31/01/2025

அழகினை விரும்பாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்...?

ஒரு நாட்டின் போக்குவரத்துக்கான அழகிய பாதை வசதிகள் அதன் வளர்ச்சியை வெளிப்படுத்தும்...
ஒரு பிரதேசத்தின் அழகானது அப்பிரதேச மக்களின் அழகிய மனநிலையினை வெளிக்காட்டும்.

இங்கே நீங்கள் பார்ப்பது ஏறாவூர் காட்டுப் பள்ளிவாயல் வீதியினைத்தான்...

அவ்வீதியினது எமது அமைப்பினரின் பார்வையில் படுவதற்கு முன்னரான நிலையினையும், பார்வையில் பட்டதன் பின்னரான நிலையினையும் இந்தப் படங்கள் விளக்குகின்றன. இதுபோன்று பல பகுதிகள் , வீதிகள் எமது அமைப்பினரின் பார்வையில் உள்வாங்கப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க எமது மண்ணான ஏறாவூர் முழுவதையும் இவ்வாறான அழகிய மாற்றத்துக்குள் கொண்டுவரவேண்டும் என்பதே எமது குறிக்கோள்.

சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கிய எமது பயணம் தொடரும்...

ஏறாவூர் பொதுச் சுகாதார அதிகாரி பணிமனை மற்றும் அதனை அண்மித்த ஏறாவூர் பொதுச்சந்தைப் பகுதிகளில் எமது அமைப்பினால் நடப்பட்ட ச...
13/01/2025

ஏறாவூர் பொதுச் சுகாதார அதிகாரி பணிமனை மற்றும் அதனை அண்மித்த ஏறாவூர் பொதுச்சந்தைப் பகுதிகளில் எமது அமைப்பினால் நடப்பட்ட சிறிய மரக்கன்றுகள் இன்று மனிதர்களுக்கு நிழல் கொடுக்குமளவுக்கு பெரிதாக வளர்ந்துள்ளன...

Address

Eravur

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுத்தமானதும் பசுமையானதுமான ஏறாவூரை நோக்கி- Towards Clean & Greener Eravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share