07/07/2026
Building Businesses. Building Leaders. Building the Future.
Bringing together nearly 200 young entrepreneurs from across Sri Lanka's Eastern Province, the Young Entrepreneurs Development Program (YEDP) created a dynamic platform for learning, collaboration, and opportunity.
Through expert discussions, networking, and practical sessions on entrepreneurship, financial management, investment, digital innovation, tourism, and sustainable business development, participants explored new pathways to strengthen their enterprises and contribute meaningfully to their communities.
Organized by Zam Zam Foundation in collaboration with Almas Holdings, MyBiz, and the Faculty of Management and Commerce, South Eastern University of Sri Lanka, the initiative reflects a shared commitment to equipping young entrepreneurs with the knowledge, skills, and connections needed to build resilient and inclusive local economies.
At Zam Zam Foundation, we believe entrepreneurship is not measured only by profit, but by purpose. Great businesses are built by people of integrity, vision, and a commitment to creating positive change.
Over the next two to three years, EDP will mentor and support aspiring entrepreneurs as they grow into professional, ethical, and impact-driven business leaders—creating enterprises that generate lasting value for their communities and the nation.
------------------------------------------------------------
கிழக்கு மாகாண இளம் தொழில் முனைவோர்களை ஒரே தளத்தில் இணைத்த ஸம் ஸம் பவுண்டேஷனின் YEDP சிறப்பு செயலமர்வு
ஸம் ஸம் பவுண்டேஷனின் Entrepreneurs Development Program (EDP) இன் கீழ், கிழக்கு மாகாண இளம் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு செயலமர்வு 2026 ஜூலை 05 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஸம் ஸம் பவுண்டேஷனின் முன்னெடுப்பில், Almas Holdings, MyBiz மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவப் பீடம், ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 இளம் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
இளம் தொழில் முனைவோர்களை ஒரே தளத்தில் இணைத்து, தொழில்சார் வலையமைப்பை (Networking) விரிவுபடுத்துதல், புதிய வணிக வாய்ப்புகளை அடையாளம் காணுதல், அனுபவங்களைப் பகிர்ந்து தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் எதிர்கால தொழில் முயற்சிகளுக்கான நடைமுறை வழிகாட்டல்களை வழங்குதல் ஆகியவை இச்செயலமர்வின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தன.
நிகழ்வின் ஆரம்ப அமர்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். எம். ஜுனைதீன் அங்குரார்ப்பண உரையாற்றினார். தொடர்ந்து, ஸம் ஸம் பவுண்டேஷனின் தலைவர் முப்தி யூஸுப் ஹனிபா மற்றும் மூலோபாய ஆலோசகர் நவாஸ் மொஹமட் ஆகியோர் இணைந்து "தற்போதைய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தொழில் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புக் கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.
கிழக்கு மாகாண தொழில்முனைவோருக்கான எதிர்கால வளர்ச்சித் துறைகள் மற்றும் புதிய வாய்ப்புகள் தொடர்பான குழுக் கலந்துரையாடல் அமர்வு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவப் பீடாதிபதி பேராசிரியர் ஏ. எம். எம். முஸ்தபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலை ஸம் ஸம் பவுண்டேஷனின் தொழில்முனைவு மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் ஸுஹைர் ஜே. காரியப்பர் நெறிப்படுத்தினார்.
கலந்துரையாடல் குழு உறுப்பினர்களாக பேராசிரியர். எம். ஐ. எம். ஹிலால், பேராசிரியர். ஏ. ரஸ்மி, பேராசிரியர். எம். ஏ. சி. சல்பியா உம்மா ஆகியோர் பங்கேற்று, கிழக்கு மாகாணத்தின் தொழில்முனைவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், சவால்கள் மற்றும் எதிர்கால திசைகள் குறித்து தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
மேலும், Almas Holdings நிறுவனத்தின் பணிப்பாளர் இம்தியாஸ் புஹார்தீன், அஷ்ஷெய்க் ஹாரிஸ் ரஷாதி பங்குச் சந்தை முதலீட்டின் முக்கியத்துவம் மற்றும் அதனூடாக உருவாகும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சிறப்பு அமர்வை நடத்தினார்கள்.
செயலமர்வின் போது தொழில் ஆரம்பித்தல் மற்றும் வளர்ச்சி, சந்தைப்படுத்தல் உத்திகள், நிதி முகாமைத்துவம், முதலீட்டு வாய்ப்புகள், பங்குச் சந்தை, சுற்றுலாத்துறையில் உருவாகி வரும் வணிகச் சந்தர்ப்பங்கள், டிஜிட்டல் தொழில்முனைவு மற்றும் நிலையான வணிக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் துறைசார் நிபுணர்களால் விரிவான விளக்கங்களும் நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
அத்தோடு பங்குபற்றிய இளம் தொழில்முனைவோருக்கான அடுத்த இரண்டு வருடங்களுக்கான வேலைத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வு, கிழக்கு மாகாண இளம் தொழில்முனைவோர்களின் அறிவு, திறன் மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியதுடன், கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு சூழலை மேலும் வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கான உறுதியான அடித்தளமாகவும் அமைந்தது.