Movement for equal rights

Movement for equal rights we are a organization to talking about human rights in Sri lanka

சீருடை தொடர்பில் இனவாத மோதல்கள் வேண்டாம்! மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர...
25/08/2026

சீருடை தொடர்பில் இனவாத மோதல்கள் வேண்டாம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஊழியர் குழாமிற்கும் வைத்தியசாலைப் பணிப்பாளர்களுக்கும் இடையே எழுந்துள்ள நெருக்கடி நிலை தொடர்பில் சம உரிமை இயக்கம் ஊடகங்களுக்கு வெளியிடும் அறிக்கை

சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையை மையமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மந்தமான தலையீடு தொடர்பாக முதலில் எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பிட்ட இந்த நெருக்கடியானது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஊழியர் குழாமின் சீருடை தொடர்பாகவே எழுந்துள்ளது. சுகாதார உதவியாளர் ஊழியர் குழாத்திற்காக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் கடந்த வாரம் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு இணைக்கப்பட்டிருந்தனர். அந்தத் தரப்பினர் மத்தியில் முஸ்லிம் இளம் பெண்களும் உள்ளடங்கியிருந்ததுடன், அவர்கள் பொதுவாக உடுத்தும் போது பயன்படுத்தும் ஹிஜாப் உடன் சாதாரண சீருடைக்குக் கீழ் வெள்ளை நிற நீளக் காற்சட்டையையும் அணிந்து கொண்டு சேவைக்குச் சமூகமளித்திருந்தனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார உதவியாளர் ஊழியர் குழாமின் சீருடையில் மாற்றங்களை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலைப் பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். ஏனையவர்கள் பயன்படுத்துவது போன்றே சீருடையை மாத்திரம் அணிய வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும்.

வைத்தியசாலைப் பணிப்பாளரின் இந்தத் தீர்மானம் தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன. அதாவது நீண்ட காலமாக வைத்தியசாலை சுகாதார உதவியாளர் ஊழியர் குழாம் மாத்திரம் அல்லாது முஸ்லிம் தேசிய மக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தாதிய உத்தியோகத்தர்கள் கூட தமது சீருடையான வெள்ளை ஆடைக்குக் கீழ் நீளக் கால்சட்டை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை எமது அனுபவத்திலிருந்து அறிவோம். தற்பொழுதும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, ஒட்டமாவடி, ஏறாவூர், அக்கரைப்பற்று, நிந்தவூர், பொத்துவில் போன்ற அனைத்து ஆதார வைத்தியசாலைகளிலும், அனைத்துப் பிரதேச வைத்தியசாலைகளிலும் சேவையாற்றும் முஸ்லிம் சுகாதார உதவியாளர் ஊழியர் குழாமும், அவ் வைத்தியசாலைகளின் தாதிய உத்தியோகத்தர்களும் கடமை நேரங்களில் தமது சீருடையாக மேலே குறிப்பிட்ட வகையிலான சீருடையையே அணிகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமின்றி நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் இந்த நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் இது நீண்ட காலமாக நிலவி வரும் முறையாகும்.

விதிவிலக்குகளுடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட சீருடை பற்றிய இறுதித் தீர்மானம் தேசிய மட்டத்திலேயே எடுக்கப்பட வேண்டுமென்பதுடன் அதற்கான வழிமுறையும் காணப்படுகிறது. அவ்வாறிருக்கையில் வைத்தியசாலைப் பணிப்பாளரால் எடுக்கப்பட்ட மேற்கூறிப்பிட்ட தீர்மானத்தை எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது என்பதுடன் இவ்விடயத்தில் வைத்தியசாலைப் பணிப்பாளர் தன்னிச்சையான முறையிலேயே செயற்பட்டுள்ளார் என்பது புலனாகிறது.

எவ்வாறாயினும் வைத்தியசாலைப் பணிப்பாளரின் உத்தரவு காரணமாக அங்கு தோன்றிய அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார அமைச்சர் தலையிட்டுச் செய்துள்ள காரியமானது சுகாதார உதவியாளர் ஊழியர் குழாத்தைச் சார்ந்த குறித்த முஸ்லிம் இளம்பெண்கள் ஒன்பது பேரையும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்தமையாகும். அமைச்சரின் இத்தீர்மானம் காரணமாக இனவாத அமைதியின்மை ஒன்று தற்போது அப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் சில கடமைகளுக்காகச் சீருடைகளைப் பயன்படுத்துவது சாதாரண நிலையாகும். அதில் சில மாற்றங்களைச் செய்வது சீருடை தொடர்பான குழுவொன்றின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது. பொலிஸ் சீருடை தொடக்கம் பல சீருடைகள் காலப்போக்கில் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது அவ்வாறே ஆகும். இங்கு ஏதேனும் ஒரு தேசிய மக்கள் பிரிவு தமது கலாச்சார அடையாளம் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சீருடையைப் பயன்படுத்துவதற்காக எத்தகைய கோரிக்கையையும் முன்வைப்பதற்கான ஜனநாயக உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் இத்தகைய கோரிக்கைகளுக்கு மத்தியில் தீர்வுகள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போதும் அனைத்து தேசிய மக்கள் பிரிவுகளின் ஜனநாயக மற்றும் கலாச்சார சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் அது எடுக்கப்பட வேண்டும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழர் உள்ளிட்ட இந்நாட்டில் வாழும் அனைத்து தேசிய மக்கள் பிரிவினரும் ஒன்றிணைந்து ஐக்கிய இலங்கைக் தேசத்தைக் கட்டியெழுப்பும் திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்பதை சம உரிமை இயக்கம் எப்போதும் எதிர்பார்க்கிறது. எனினும் அது பலவந்தமாகவோ அல்லது தன்னிச்சையான முறையிலோ மேற்கொள்ளப்படக் கூடாது. மேலும் அது ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் அனைவரதும் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏதேனும் ஒரு மக்கள் சமூகத்தின் மத மற்றும் கலாச்சார நாட்டங்கள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய அமைச்சரொருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்பதை நாம் புதிதாகக் கூறத் தேவையில்லை. எனினும் குறிப்பிட்ட விடயத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் எத்தகைய பொறுப்புணர்வுமற்ற வகையிலேயே செயற்பட்டுள்ளார்.

வைத்தியசாலை ஊழியர்கள் ஒன்பது பேரையும் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாக அவர்கள் கருதினால் அது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதும் பொறுப்பற்றதுமான செயற்பாடாகும் என்பதை வலியுறுத்தும் சம உரிமை இயக்கம், இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மாத்திரமின்றி சுகாதார அமைச்சுடன் இணைந்து முறையான மீளாய்வு ஒன்றை மேற்கொண்டு எந்தவொரு ஊழியருக்கும் துன்புறுத்தல்களோ மன உளைச்சல்களோ ஏற்படாத வகையில் செயற்படுமாறு மீளவும் வலியுறுத்தி நிற்கின்றது.

அத்துடன் இன்னும் தீர்க்கப்படாது நிலவிவரும் தேசிய (இனப்) பிரச்சினை எனும் சிக்கலான அரசியல் பிரச்சனைக்குள் வைத்து இத்தீவிர நிலைகளைப் பார்ப்பதுடன், யுத்தம் நிலவிய காலப்பகுதியிலிருந்து விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற சனத்தொகை அமைப்பும் முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையே நிலவும் விரிசலுடனான நட்புறவின் சிக்கலான தன்மைகள் தொடர்பிலும் விசேடமாக கவனம் செலுத்தி இச்சமூகப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்திரானந்த டி சில்வா,
ஏற்பாட்டாளர்,
சம உரிமை இயக்கம்
2026.08.25

නිල ඇඳුමට  ජාතිවාදී ගැටුම් එපා!මඩකලපුව  දිස්ත්‍රික්කයේ කල්මුණේ උතුර මහ රෝහලේ රෝහල් සහායක කාර්ය  මණ්ඩලය හා රෝහල් අධ්‍යක්ෂ...
25/08/2026

නිල ඇඳුමට ජාතිවාදී ගැටුම් එපා!

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ කල්මුණේ උතුර මහ රෝහලේ රෝහල් සහායක කාර්ය මණ්ඩලය හා රෝහල් අධ්‍යක්ෂකවරයා අතර මතුවී ඇති අර්බුදකාරී තත්ත්වය පිළිබඳව සම අයිතිය ව්‍යාපාරය මාධ්‍ය වෙත නිකුත් කරනු ලබන නිවේදනයයි

මීට දින කිහිපයකට පෙර මඩකලපුව දිස්ත්‍රික්කයේ කල්මුණේ උතුර මහ රෝහල මූලික කරගෙන පැන නැගී ඇති අර්බුදකාරී තත්වය සම්බන්ධයෙන් ජාතික ජන බලවේග ආණ්ඩුවේ දියාරූ මැදිහත්වීම පිළිබඳව පළමුව අපි අපගේ විරෝධය දන්වා සිටින්නෙමු.

මෙකී අර්බුදය පැන නැගී තිබුණේ රෝහලේ සහායක කාර්ය මණ්ඩලයේ නිල ඇඳුම අරබයාය. සහායක කාර්යමණ්ඩලය සඳහා අලුතින් බඳවා ගත් පිරිසක් පසුගිය සතියේ රටේ විවිධ රෝහල් වෙත අනුයුක්ත කර තිබුණි. එම පිරිස් අතර මුස්ලිම් තරුණියන් පිරිසක් ද සිටි අතර, ඔවුන් සාමාන්‍යයෙන් අඳින පළඳින විට භාවිතා කරන හිජාබය ද සහිතව එනම් සාමාන්‍ය නිල ඇඳුමට යටින් සුදු පැහැති දිග කලිසමක් ද සහිතව සේවයට වාර්ථා කර තිබේ.

මෙහිදී රෝහල් අධ්‍යක්ෂවරයා නියෝග දී තිබෙනුයේ කිසිදු අයුරකින් සහායක කාර්ය මණ්ඩලයේ නිල ඇඳුම වෙනස්කොට භාවිතා කිරීම තහනම් බවකි. අනෙකුත් අය භාවිතා කරන පරිදිම නිල ඇඳුම පමණක් ඇඳිය යුතු බවකි.

රෝහල් අධ්‍යක්ෂකවරයාගේ මෙම තීරණය සම්බන්ධයෙන් පැන නැගෙන ගැටලු කිහිපයක්ම තිබේ. එනම් දීර්ඝ කාලයක සිට රෝහල් සහායක කාර්ය මණ්ඩලය පමණක් නොව මුස්ලිම් ජාතික ජන ප්‍රජාව නියෝජනය කරන හෙද නිලධාරිනියන් පවා සිය නිලමේ ඇඳුම වන සුදු ගවුමට යටින් දිග කලිසමක් ඇඳීම පුරුද්දක් ලෙස භාවිතා කරමින් තිබෙන බව අප අත්දැකීමෙන් දන්නෙමු. මේ වන විටත් මඩකලපුව දිස්ත්‍රික්කයේ වාලචිචේන, සමන්තුරේ, අක්කරේපත්තු, නින්දවුර්,පොතුවිල්, යනාදි සෑම මූලික රෝහල්වල මත් , සියලු ප්‍රාදේශීය රෝහල් වලත් සේවය කරන මුස්ලිම් ජාතික රෝහල් සහායක කාර්යමණ්ඩලය ත්, ඒවායේ හෙද නිලධාරිනියනුත් රාජකාරී වෙලාවන් හිදී සිය නිල ඇඳුම ලෙස අඳින්නේ ඉහතින් කිවූ ආකාරයේ නිල ඇඳුමකි.. මඩකලපුව දිස්ත්‍රික්කය තුළ පමණක් නොව රටේ බොහෝ දිස්ත්‍රික්කවලත් මෙම තත්ත්වය දැකගත හැකිය. එමෙන්ම එය දීර්ඝ කාලයක් තිස්සේ පවතින්නකි. වියතිරේකයන් ද සහිතව අනුමත නිල ඇඳුම පිළිබඳ අවසන් තීරණ ගැනීම ජාතික මට්ටමින් සිදුවිය යුතු අතර ඒ සඳහා ක්‍රමවේදයක් ද පවතී. එසේ තිබියදී රෝහල් අධ්‍යක්ෂකවරයා විසින් ගනු ලැබූ ඉහත තීරණය කිසිසේත් අනුමත කළ නොහැකි අතර එහිදී රෝහල් අධ්‍යක්ෂවරයා අත්තනෝමතික අයුරින් කටයුතු කර ඇති බව පෙනේ.

කෙසේ වුවත් රෝහල් අධ්‍යක්ෂකවරයාගේ නියෝගය නිසා එහි මතුවු නොසන්සුන්කාරී තත්ත්වය හමුවේ සෞඛ්‍ය අමාත්‍යවරයා මැදිහත්ව සිදු කර ඇත්තේ සහායක කාර්ය මණ්ඩලයේ අදාළ මුස්ලිම් ජාතික තරුණියන් නම දෙනාම කල්මුණේ අෂ්රොෆ් අනුස්මරණ රෝහල වෙත මාරු කර හැරීමය. අමාත්‍යවරයාගේ මෙම තීරණය නිසා ජාතිවාදී නොසන්සුන්තාවය ක් මේ වන විට එම ප්‍රදේශයේ ඇතිවෙමින් පවතී.

ලංකාවේ ඇතැම් රාජකාරී න් සඳහා නිල ඇඳුම් භාවිතා කිරීම සාමාන්‍ය තත්ත්වයකි. එහි යම් යම් වෙනස්කම් සිදුකිරීම නිල ඇඳුම් සම්බන්ධ කමිටුවක් හරහා සිදු කරනු ලබයි. පොලිස් නිල ඇඳුමේ සිට බොහෝ නිල ඇඳුම් කාලයක් සමග බොහෝ වෙනස්කම් වලට භාජනය වී තිබෙනුයේ එලෙසිනි. මෙහිදී කිසියම් ජාතික ජන කොටසකට තම සංස්කෘතික අනන්‍යතාවය ආරක්ෂාවන අයුරින් නිල ඇඳුම භාවිතා කිරීම සඳහා ඕනෑම ඉල්ලීමක් සිදු කිරීමට ඇති ප්‍රජාතාන්තික අයිතිය පිළිගත යුතු අතර එවැනි ඉල්ලීම් හමුවේ තීන්දු තීරණ ගැනීමේ දී ද සියලු ජාතික ජන කොටස්වල ප්‍රජාතාන්තික හා සංස්කෘතික නිදහස ආරක්ෂා වන අයුරින් එය සිදුකළ යුතුය.
සිංහල තමිල්, මුස්ලිම් හා මලෛයහ තම්ල් ඇතුළු මේ රටේ ජීවත් වෙන සියලු ජාතික ජනකොටස් ස්වීකරණය වෙමින් ලාංකීය ජාතිය ගොඩ නැගීමේ දිශාවට ගමන් කළ යුතු බව සම අයිතිය ව්‍යාපාරය හැමවිටම අපේක්ෂා කරයි. නමුත් එය සිදු කළ යුත්තේ බලහත්කාරී ලෙස හෝ අත්තනෝමතික ලෙස නොවේ. එය වඩා ප්‍රජාතාන්තවාදී රාමුවක් තුළ සැමගේම පිළිගැනීම සහිතව සිදු කළ යුතුය.
යම්කිසි ජන ප්‍රජාවකගේ ආගමික හා සංස්කෘතික නැමියාව න් සහ විශ්වාසයන් පිළිබඳ කාරණාවලදී ආණ්ඩුවක් සහ ඊට අදාල අමාත්‍යවරයෙකු කටයුතු කළ යුත්තේ ඉතාමත් ප්‍රවේශම් සහගත ආකාරයකට බව අප අමුතුවෙන් කිව යුතු නොවේ. නමුත් ප්‍රස්තුත කාරණයේදී සෞඛ්‍ය අමාත්‍ය නලින්ද ජයතිස්ස මහතා කටයුතු කර ඇත්තේ කිසිදු වගකීම් සහගත ආකාරයකින් නොවේ..

රෝහල් කාර්ය මණ්ඩලයේ නම දෙනාම වෙනත් රෝහලකට මාරු කර හැරීමෙන් ප්‍රශ්නය විසඳුවා යැයි ඔවුන් කල්පනා කරන්නේ නම් එය අතිශයින්ම බොළඳ හා වගකීම් විරහිත ක්‍රියාවක් බව අවධාරණය කරන සම අයිතිය ව්‍යාපාරය මෙම ප්‍රශ්නය සම්බන්ධයෙන් අදාල පාර්ශවයන් සමග පමණක් නොව, සෞඛ්‍ය අමාත්‍යාංශයම යළි විධිමත් සමාලෝචනයක් සිදුකර කිසිදු සේවකයෙකු ට පීඩාකාරී තත්ත්වයන් සහ සිත් තැවුල් ඇති නොවන ලෙස කටයුතු කරන්නැයි යළි යළිත් අවධාරණය කරනු ලබයි.

එසේම තවමත් නොවිසඳී පවතින ජාතික ගැටලුව නමැති සංකීර්ණ දේශපාලන ප්‍රශ්නය තුළ තබා මෙම තත්වයන් දෙස බලන ලෙසත්, යුද්ධය පැවති සමයේදී පවා විශේෂයෙන් මඩකලපුව දිස්ත්‍රික්කයේ පවතින ජන සංයුතියත් සහ මුස්ලිම්, තමිල් ජනතාවන් අතර පවතින දුරස්ථ මිත්‍රත්වයේ සංකීර්ණ සබඳතා පිළිබඳවත් විශේෂයෙන් අවධානය යොමුකර මෙම ගැටලුවට සාධාරණ විසඳුමක් ලබා දෙන මෙන් ඉල්ලා සිටිමු..

ඉන්ද්‍රානන්ද ද සිල්වා
සම අයිතිය ව්‍යාපාරයේ කැඳවුම්කරු
2026.08.25

18/08/2026

සම අයිතිය ව්‍යාපාරය, අද (17) යාපනයේ පැවති මහජන විරෝධතාවකදී, අතුරුදහන් වූවන්ගේ පවුල්වල සාමාජිකයන්, ක්‍රියාකාරීන් සහ ආගමික නායකයන් ඇතුළු පිරිසක් සමඟ එක්ව චෙම්මනි සමූහ මිනීවල සම්බන්ධයෙන් කඩිනම් පරීක්ෂණ සහ යුක්තිය ඉල්ලා සිටි අතර, ඊට අමතරව හමුදා අත්පත්කරගෙන සිටින ඉඩම් නිදහස් කිරීම, ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත (PTA) වැනි මර්දනකාරී නීති අහෝසි කිරීම, දේශපාලන සිරකරුවන් නිදහස් කිරීම සහ බලහත්කාරයෙන් අතුරුදහන් කිරීම් පිළිබඳව යුක්තිය ඉටු කිරීම වැනි ඉල්ලීම් ද මෙහිදී ඉදිරිපත් විය.
சம உரிமை இயக்கம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் பிற செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் போன்றோருடன் இணைந்து, செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் விரைவான விசாரணைகளையும் நீதியையும் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (17ஆம் திகதி) நடைபெற்ற மக்கள் பெருந்திரள் போராட்டத்தில் கலந்துகொண்டது. இக்கோரிக்கைகளில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்தல் என்பனவும் அடங்கும்.
The Movement for Equal Rights joined families of the disappeared and other activists and clergy etc., to call for speedy investigations and justice for the Chemmani mass grave, and other demands including the release of military occupied lands, the repeal of repressive laws such as the PTA, release Political Prisoners, and investigate into enforced disappearances, at a mass people's protest held in Jaffna today (17th).

සම අයිතිය ව්‍යාපාරය, අද (17) යාපනයේ පැවති මහජන විරෝධතාවකදී, අතුරුදහන් වූවන්ගේ පවුල්වල සාමාජිකයන්, ක්‍රියාකාරීන් සහ ආගමික...
17/08/2026

සම අයිතිය ව්‍යාපාරය, අද (17) යාපනයේ පැවති මහජන විරෝධතාවකදී, අතුරුදහන් වූවන්ගේ පවුල්වල සාමාජිකයන්, ක්‍රියාකාරීන් සහ ආගමික නායකයන් ඇතුළු පිරිසක් සමඟ එක්ව චෙම්මනි සමූහ මිනීවල සම්බන්ධයෙන් කඩිනම් පරීක්ෂණ සහ යුක්තිය ඉල්ලා සිටි අතර, ඊට අමතරව හමුදා අත්පත්කරගෙන සිටින ඉඩම් නිදහස් කිරීම, ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත (PTA) වැනි මර්දනකාරී නීති අහෝසි කිරීම, දේශපාලන සිරකරුවන් නිදහස් කිරීම සහ බලහත්කාරයෙන් අතුරුදහන් කිරීම් පිළිබඳව යුක්තිය ඉටු කිරීම වැනි ඉල්ලීම් ද මෙහිදී ඉදිරිපත් විය.

சம உரிமை இயக்கம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் பிற செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் போன்றோருடன் இணைந்து, செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் விரைவான விசாரணைகளையும் நீதியையும் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (17ஆம் திகதி) நடைபெற்ற மக்கள் பெருந்திரள் போராட்டத்தில் கலந்துகொண்டது. இக்கோரிக்கைகளில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்தல் என்பனவும் அடங்கும்.

The Movement for Equal Rights joined families of the disappeared and other activists and clergy etc., to call for speedy investigations and justice for the Chemmani mass grave, and other demands including the release of military occupied lands, the repeal of repressive laws such as the PTA, release Political Prisoners, and investigate into enforced disappearances, at a mass people's protest held in Jaffna today (17th).

15/08/2026

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் 10.08.2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் தோழர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் - தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர், சம உரிமை இயக்கம்

සම අයිතිය ව්‍යාපාරයේ සංවිධානයෙන් 2026.08.10 දින පැවති මාධ්‍ය හමුවේදී අදහස් දක්වන සම අයිතිය ව්‍යාපාරයේ ජාතික විධායක සභික රාජ්කුමාර් රජීව්කාන්ත් සහෝදරයා

14/08/2026

සම අයිතිය ව්‍යාපාරයේ සංවිධානයෙන් 2026.08.10 දින පැවති මාධ්‍ය හමුවේදී අදහස් දක්වන කම්කරු අරගල මධ්‍යස්ථානයේ සංවිධායක ලේකම් දුමින්ද නාගමුව සහෝදරයා

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் 10.08.2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் தோழர் துமிந்த நாகமுவ - அமைப்புச் செயலாளர், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம்

13/08/2026

“தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.”

முருகையா கோமகன், முன்னாள் தமிழ் அரசியல் கைதியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்

"දමිල් දේශපාලන සිරකරුවන්ගේ ආරක්ෂාව තහවුරු කරනු ලබන අතර, ජාතික ජන බලවේගයේ මැතිවරණ පොරොන්දුවට අනුකූලව ඔවුන් නිදහස් කළ යුතුය."

මුරුගයියා කෝමකන්, හිටපු දෙමළ දේශපාලන සිරකරු සහ 'හඬක් නැති අයගේ හඬ' සංවිධානයේ සම්බන්ධීකාරක

13/08/2026

NPP එක බලය ගත්තෙ සියලු දේශපාලන සිර කරුවන් නිදහස් කරනවා කියලා !

තැන්නේ ඤාණානන්ද හිමි,
සම අයිතිය ව්‍යාපාරය

NPP அதிகாரத்தைக் கைப்பற்றியது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வோம் என்று கூறியே!

தென்னே ஞானானந்த ஹிமி,
சம உரிமை இயக்கம்

04/08/2026

ජාතික උත්සව තියලා සංහිඳියාව හදන්න බෑ. ඉඩම් ප්‍රශ්නය වැනි ඇත්ත ප්‍රශ්නවලට උත්තර දෙන්න - ලහිරු වීරසේකර සහෝදරයා

උතුරු නැගෙනහිර යුද්ධයේදී රජයේ හමුදා විසින් අත්පත් කර ගත් ජනතාව ගේ ඉඩම් නැවත ලබා නොදීම ගැටලුවට වහාම විසඳුම් ලබාදෙන ලෙස ඉල්ලා ජනාධිපති ලේකම් කාර්යාලයට සංදේශයක් බාර දීම අගෝස්තු 03 අද දින සිදුකෙරිණි. ඒ සඳහා
කේපාපිලවු සහ පලාලි ඉඩම් අහිමිවූ ජනතාවගේ ඉඩම් අයිතිය ය පිළිබඳව පිහිටුවා ගත් සිවිල්
සංවිධාන සහ සම අයිතිය ව්‍යාපාරය සම්බන්ධ වූ අතර ඒ පිළිබඳ සාකච්ඡාවක් ද අදාල නිලධාරීන් සමග පැවැත්විණි. ඉන් අනතුරුව මේ පිළිබඳ මාධ්‍ය හමුවක් ද කොළඹදී පැවැත්විණි.
வடக்கு கிழக்கு போரின் போது அரச படைகளால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளை மீண்டும் வழங்காத பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்று கையளிக்கும் செயற்பாடு ஓகஸ்ட் 03, இன்றைய தினம் இடம்பெற்றது. அதற்காக கேப்பாப்பிலவு மற்றும் பலாலியில் காணிகளை இழந்த மக்களின் நில உரிமை தொடர்பாக உருவாக்கப்பட்ட சிவில் அமைப்புகள் மற்றும் சம உரிமை இயக்கம் என்பன பங்கெடுத்ததுடன் அது தொடர்பான கலந்துரையாடலொன்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடக சந்திப்பொன்றும் கொழும்பில் நடைபெற்றது

Address

No 14, Independence Avenue
Colombo
00700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Movement for equal rights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share