National Shoora Council

National Shoora Council National Shoora Council Official Page

அனுதாபச் செய்திஇலங்கை தேசிய ஷூரா சபை (NSC) கத்தார் நாட்டின் அமீர் உயர்மதிப்பிற்குரிய ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்க...
14/07/2026

அனுதாபச் செய்தி

இலங்கை தேசிய ஷூரா சபை (NSC) கத்தார் நாட்டின் அமீர் உயர்மதிப்பிற்குரிய ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய அரச குடும்பத்தினருக்கும், கத்தார் அரசாங்கத்திற்கும், கத்தார் மக்களுக்கும், கத்தார் நாட்டின் தந்தை அமீர் உயர்மதிப்பிற்குரிய ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

மறைந்த உயர்மதிப்பிற்குரிய ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி அவர்கள், கத்தாரின் அபாரமான முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்ட ஒரு தொலைநோக்கு அரசியல் தலைவராக என்றும் நினைவு கூரப்படுவார். அவரது விதிவிலக்கான தலைமைத்துவம் காரணமாகவே கத்தார் உலகின் மிகவும் முற்போக்கான மற்றும் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்றாக மாறியது. நாட்டின் வளர்ச்சி, கல்வி, மனிதாபிமான சேவை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, வருங்கால சந்ததியினருக்கும் ஊக்கமளிக்கும் ஒரு நிலையான மரபை விட்டுச் சென்றுள்ளது.

மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் அமைதி, உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் கத்தார் வகிக்கும் தனித்துவமான பங்கை இலங்கை தேசிய ஷூரா சபை ஆழ்ந்த பாராட்டுடன் ஏற்றுக்கொள்கின்றது.

கத்தாரின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகள் மற்றும் மத்தியஸ்த பணிகள் மூலம், பிராந்திய மோதல்களுக்கு அமைதியான தீர்வை நோக்கி உரையாடலை எளிதாக்குவதில் கத்தார் முன்னணியில் உள்ளது. இந்த முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் மரியாதையும் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளன.

சர்வதேச நிகழ்வுகள் குறித்த சுயாதீனமான, நம்பகமான மற்றும் உடனுக்குடன் செய்திகளை வழங்கும் அல்ஜஸீரா ஊடக வலையமைப்பை நிறுவிய கத்தாரின் தொலைநோக்குப் பார்வையையும் சபை பாராட்டுகின்றது. சரியான நேரத்தில் செய்திகளை வழங்குவதிலும் பல்வேறு கண்ணோட்டங்களை உலகிற்கு எடுத்துச் செல்வதிலும் அது கொண்டுள்ள அர்பணிப்பு, அதனை இன்றைய உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க சர்வதேச செய்தி வலையமைப்புகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

இலங்கைக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவு, பரஸ்பர மரியாதை, நட்பு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் நீண்ட காலமாக அமைந்துள்ளது. கத்தார் நாடு பெரும் எண்ணிக்கையிலான இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், தங்கள் அனுப்பீடுகள் மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மனிதாபிமான, கல்வி மற்றும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு கத்தார் அரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு, எமது இரு நாடுகளுக்கிடையிலான நீடித்த நட்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த ஆழ்ந்த துக்கத்தின் வேளையில், கத்தாரின் தலைமைத்துவத்துடனும் மக்களுடனும் இலங்கை தேசிய ஷூரா சபை தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. சர்வவல்லமையுள்ள அல்லாஹ் (SWT) மறைந்த உயர்மதிப்பிற்குரிய ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி அவர்களுக்கு தனது எல்லையற்ற கருணையையும் மன்னிப்பையும் வழங்கி, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சொர்கத்தை அருள்வானாக என பிரார்திக்கின்றோம். அத்துடன், அமீர் அவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் கத்தார் மக்கள் அனைவருக்கும் இந்த கடினமான நேரத்தில் பொறுமையையும், பலத்தையும், ஆறுதலையும் அல்லாஹ் வழங்குவானாக என வேண்டுகிறோம்.

"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்." (அல்-குர்ஆன் 2:156)

உண்மையுள்ள,

M.M. சுஹைர் PC
தலைவர்

ரஷீட் M. இம்தியாஸ் AAL
பொதுச் செயலாளர்

இலங்கை தேசிய ஷூரா சபை

Message of CondolenceThe National Shoora Council of Sri Lanka (NSC) extends its deepest condolences and heartfelt sympat...
14/07/2026

Message of Condolence

The National Shoora Council of Sri Lanka (NSC) extends its deepest condolences and heartfelt sympathies to His Highness Sheikh Tamim bin Hamad Al Thani, Amir of the State of Qatar, the esteemed members of the Royal Family, the Government, and the people of the State of Qatar on the passing of His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, the Father Amir of the State of Qatar.

The late His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani will be remembered as a visionary statesman whose exceptional leadership laid the foundation for Qatar's remarkable transformation into one of the world's most progressive and influential nations. His unwavering commitment to national development, education, humanitarian service, and international cooperation has left a lasting legacy that will continue to inspire generations to come.

The National Shoora Council acknowledges with profound appreciation Qatar's distinguished role in promoting peace, dialogue, and reconciliation in the Middle East and beyond. Through its consistent diplomatic initiatives and mediation efforts, Qatar has been at the forefront of facilitating dialogue and working with dedication towards the peaceful resolution of regional conflicts. These efforts have earned the respect and admiration of the international community.

The Council also recognizes Qatar's vision in establishing Al Jazeera, which has gained global recognition for providing independent, credible, and real-time coverage of international events. Its commitment to informing the world through timely reporting and diverse perspectives has made it one of the most influential international news networks of our time.

Sri Lanka and Qatar enjoy longstanding relations founded on mutual respect, friendship, and cooperation. Qatar has provided employment opportunities to a large number of Sri Lankan expatriate workers, enabling thousands of families to improve their livelihoods while making a significant contribution to the Sri Lankan economy through their remittances. The continued support extended by the State of Qatar towards humanitarian, educational, and development initiatives has further strengthened the enduring friendship between our two countries.

At this moment of profound sorrow, the National Shoora Council stands in solidarity with the leadership and people of Qatar. We pray that Almighty Allah (SWT) showers His infinite mercy and forgiveness upon the late His Highness Sheikh Hamad bin Khalifa Al Thani, grants him the highest place in Jannatul Firdaus, and blesses His Highness the Amir, the Royal Family, and the people of Qatar with patience, strength, and solace during this difficult time.

"Indeed, we belong to Allah, and indeed to Him we shall return." (Qur'an 2:156)

Yours faithfully,

M.M.Zuhair PC
President

Rasheed M Imthiyaz AAL
General Secretary

National Shoora Council of Sri Lanka

14/07/2026 م29 محرّم 1448هـ                      رسالة تعزيةيتقدم مجلس الشورى الوطني في سريلانكا (NSC) بأحرِّ التعازي وص...
14/07/2026

14/07/2026 م
29 محرّم 1448هـ

رسالة تعزية

يتقدم مجلس الشورى الوطني في سريلانكا (NSC) بأحرِّ التعازي وصادق المواساة إلى حضرة صاحب السمو الشيخ تميم بن حمد آل ثاني، أمير دولة قطر، وإلى أفراد الأسرة الحاكمة الكرام، وحكومة دولة قطر، وشعبها العزيز، في وفاة حضرة صاحب السمو الشيخ حمد بن خليفة آل ثاني، الأمير الوالد لدولة قطر.

وسيظل الفقيد، صاحب السمو الشيخ حمد بن خليفة آل ثاني، راسخًا في الذاكرة بوصفه رجل دولة صاحب رؤية ثاقبة، إذ أرست قيادته الاستثنائية الأسس التي قامت عليها النهضة الشاملة لدولة قطر، حتى أصبحت واحدة من أكثر دول العالم تقدمًا وتأثيرًا. وقد ترك التزامه الراسخ بالتنمية الوطنية، والتعليم، والعمل الإنساني، والتعاون الدولي إرثًا خالدًا سيبقى مصدر إلهام للأجيال القادمة.

ويعرب مجلس الشورى الوطني عن بالغ تقديره للدور الريادي الذي اضطلعت به دولة قطر في تعزيز السلام والحوار والمصالحة في منطقة الشرق الأوسط وخارجها. فمن خلال مبادراتها الدبلوماسية المتواصلة وجهودها الحثيثة في الوساطة، كانت دولة قطر في طليعة الدول الساعية إلى تيسير الحوار والعمل بإخلاص من أجل التوصل إلى حلول سلمية للنزاعات الإقليمية، وهو ما أكسبها احترام وتقدير
المجتمع الدولي.

كما يثمّن المجلس رؤية دولة قطر في تأسيس شبكة الجزيرة،
التي حظيت باعتراف عالمي لما تقدمه من تغطية إخبارية مستقلة وموثوقة وفورية للأحداث الدولية. وقد جعلها التزامها بنقل الأخبار في الوقت المناسب، وتقديم وجهات نظر متنوعة، واحدةً من أكثر الشبكات الإخبارية الدولية تأثيرًا في عصرنا.

وترتبط سريلانكا ودولة قطر بعلاقات تاريخية راسخة تقوم
على الاحترام المتبادل والصداقة والتعاون. وقد وفرت دولة قطر فرص عمل لعدد كبير من العمالة السريلانكية المغتربة، مما مكّن آلاف الأسر من تحسين مستوى معيشتها، وأسهم بصورة ملموسة في دعم الاقتصاد السريلانكي من خلال تحويلاتهم المالية. كما أسهم الدعم المتواصل الذي تقدمه دولة قطر للمبادرات الإنسانية والتعليمية والتنموية في تعزيز أواصر الصداقة المتينة بين بلدينا.

وفي هذا المصاب الجلل، يقف مجلس الشورى الوطني متضامنًا مع قيادة دولة قطر وشعبها. ونسأل الله سبحانه وتعالى أن يتغمد الفقيد، صاحب السمو الشيخ حمد بن خليفة آل ثاني، بواسع رحمته ومغفرته، وأن يسكنه أعلى درجات جنات الفردوس، وأن يمنّ على حضرة صاحب السمو الأمير، والأسرة الحاكمة، وشعب دولة قطر بالصبر والسلوان والقوة في هذا الظرف الأليم.

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

وتفضلوا بقبول فائق الاحترام والتقدير

التوقيع

الرئيس - محمد زهير
الأمين العام- رشيد محمد امتياز

مجلس الشورى الوطني

Sri Lankan Muslims deserve to be nationally recognised for resisting the division of Sri Lanka! - National Shoora Counci...
04/06/2026

Sri Lankan Muslims deserve to be nationally recognised for resisting the division of Sri Lanka!

- National Shoora Council

Muslims became the first major obstacle for the LTTE creating a racial entity!

The National Shoora Council (NSC) welcomes the pledges made by President Anura Kumara Dissanayake that Sri Lanka will not be allowed to suffer another war, that there will not be any space for racist extremism in the country and that the nation belongs equally to all communities!

President Dissanayake made these promises to the nation at the 17th National War Heroes’ Day commemoration held on May 19th at Battaramulla.

The NSC notes that Sri Lanka’s armed forces successfully led the war and defeated at tremendous cost and sacrifice, the LTTE’s thirty-year attempt to divide Sri Lanka.

However, remembrance of this significant event cannot be limited only to the country’s armed forces. It is vital that the State must in addition, make a full frontal recognition of the contributions of the then President, as well as the citizens of this country, particularly the Muslims of Sri Lanka, not forgetting the invaluable support of Iran and Pakistan!

It is timely to recall at these anniversaries that the majority of Sri Lankan Tamils sought sharing of power based on a federal structure but did not support the division of the country.

The Sri Lankan Muslims however, were very much unhappy with the then Tamil political leadership, following the 1976 Vaddukoddai resolution of 14th May 1976, which also, among other reasons, laid the foundation for the separatist struggle.

Muslims of Sri Lanka by 1989 firmly resisted the LTTE led attempt to set up a separate State. It is well known that the Tamil speaking Muslims paid a very heavy price for not falling in line with the LTTE’s Eelam project!

President Dissanayake will remember that in October 1990, the LTTE drove out the entire 90,000 Northern Muslims, women, children and the elderly, giving them only two hours to quit with nothing in hand for their next meal!

The President will also recall that in 1989 and 1990, in the East, LTTE killed over a thousand Muslims in several attacks and grabbed significant extent of agricultural lands owned by Muslim farmers.

During this time, one of the worst massacre of Muslims in South Asia occurred with the LTTE killing 147 Muslims while performing night prayers in several Mosques in Kattankudy, followed by killing another 121 Muslims in Eravur.

Furthermore, Haj pilgrims returning home were diverted at Kurukkalmadam killing nearly 35 of them! Later 69 Muslim farmers in Alanchipothana were mercilessly executed!

The confirmed number of innocent Muslims killed by the LTTE by 1990 coincidentally equalled the number killed in the horrific Easter attack of 21st April 2019!

Everyone knows that the LTTE drove away the Northern Muslims and killed the Eastern Muslims because they did not support the LTTE but stood with the armed forces who fought against separatism!

All patriotic Sri Lankans will remember that several Malay Muslims served in key positions in the armed forces, a number of whom were killed by LTTE, mostly while in action.

Their dedicated services in the Army, Navy and the Air Force and in the deep penetrating units of the forces, during the war, were also widely believed to have angered the LTTE into massacring Muslims in the East and driving them out of the North!

In addition, Iran and Pakistan were two Muslim majority countries which helped Sri Lanka in its struggle to protect the territorial integrity of the country.

In 1999, during the tenure of President Chandrika Bandaranaike Kumaratunga, Iran positively responded to the President’s call for urgent assistance by providing vital supplies to the armed forces in the war front!

In November 2007, President Mahinda Rajapakse, visited the Islamic Republic of Iran, arranged by then Ambassador of Sri Lanka in Iran M M Zuhair PC, presently President of NSC and secured US $ 525 million for the Uma Oya, generating 120 MW of electricity cm Water project, diverting Uma Oya water eastwards to feed 5,000 hectares of fresh agricultural land in the Uva Province. In addition Iran provided US $ 105 million for Sri Lanka’s Rural Electrification Project.

Most importantly commencing January 2008, the critical period of the war, Iran provided a rolling facility valued at nearly US $ 650 million to Sri Lanka to purchase Iranian crude oil on four months’ interest free deferred payment terms. These were vital contributions that helped Sri Lanka during the key stages of the war, that must ungrudgingly be recognized by President Dissanayake!

During this unforgettable period of the war, when Sri Lanka was struggling for funds to purchase arms and ammunition, those who were in the war front valued the invaluable assistance of the Islamic Republics of Iran and Pakistan to Sri Lanka immensely. The NPP government must extend recognition where recognition is due!

Can history suppress that by 1990, Muslims became the first major obstacle against the LTTE’s attempts to divide Sri Lanka on ethnic lines? This community of 2.1 million, truly deserves to be duly recognized and honoured, perhaps next in line to the country’s armed forces!

(Media release by the National Shoora Council (NSC) (issued on 27/05/2026)

Please contact NSC Gen Sec Rasheed M Imthiyaz (AAL)
Mobile 0777 314 207 if required

ශ්‍රී ලංකාව බෙදීමට එරෙහිවූ ලාංකික මුස්ලිම්වරුන්ට ජාතික ඇගයීමක් හිමි විය යුතුය!" - ජාතික ශූරා සභාව(ජාතික ශූරා සභාව (NSC) ...
04/06/2026

ශ්‍රී ලංකාව බෙදීමට එරෙහිවූ ලාංකික මුස්ලිම්වරුන්ට ජාතික ඇගයීමක් හිමි විය යුතුය!" - ජාතික ශූරා සභාව

(ජාතික ශූරා සභාව (NSC) විසින් 26/05/2026 දින නිකුත් කරන ලද මාධ්‍ය නිවේදනය)

ශ්‍රී ලංකාවට තවත් යුද්ධයකට මුහුණ දීමට ඉඩ නොතබන බවටත්, රට තුළ ජාතිවාදී අන්තවාදයට කිසිදු ඉඩක් නොතබන බවටත්, මෙම දේශය සියලු ප්‍රජාවන්ට එක හා සමානව අයිති බවටත් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ලබා දුන් පොරොන්දු ජාතික ශූරා සභාව (NSC) අගය කරයි .

ජනාධිපති දිසානායක මහතා මෙම පොරොන්දු ජාතිය හමුවේ ප්‍රකාශ කළේ මැයි 19 වන දින බත්තරමුල්ලේ පැවැත්වුණු 17 වන ජාතික රණවිරු දින සැමරුම් උත්සවයේදීය.

ශ්‍රී ලංකාව බෙදීමට එල්.ටී.ටී.ඊ. (LTTE) සංවිධානය වසර තිහක් තිස්සේ ගත් උත්සාහය, අතිමහත් පිරිවැයක් සහ කැපකිරීම් මධ්‍යයේ පරාජය කරමින් රටේ සන්නද්ධ හමුදාවන් යුද්ධය සාර්ථකව මෙහෙයවූ බව ජාතික ශූරා සභාව පිළිගනී.

කෙසේ වෙතත්, මෙම වැදගත් සිදුවීම සැමරීම රටේ සන්නද්ධ හමුදාවන්ට පමණක් සීමා කළ නොහැක. එවකට සිටි ජනාධිපතිවරයාගේ මෙන්ම මේ රටේ පුරවැසියන්ගේ, විශේෂයෙන්ම ශ්‍රී ලාංකික මුස්ලිම්වරුන්ගේ දායකත්වය සහ ඉරානය හා පාකිස්තානය ලබා දුන් මිල කළ නොහැකි සහයෝගය ද රජය විසින් පූර්ණ වශයෙන් ඇගයීමට ලක් කිරීම අත්‍යවශ්‍ය වේ.

මෙවැනි සංවත්සරයන්හිදී, ශ්‍රී ලාංකික දෙමළ ජනතාවගෙන් බහුතරයක් ෆෙඩරල් ව්‍යුහයක් මත පදනම් වූ බලය බෙදා හැරීමක් අපේක්ෂා කළද, රට බෙදීමට සහය නොදැක්වූ බව සිහිපත් කිරීම කාලෝචිතය.

කෙසේ වෙතත්, බෙදුම්වාදී අරගලයට මූලික පදනම දැමූ 1976 මැයි 14 වන දින සම්මත කරන ලද වඩ්ඩුකොඩෙයි යෝජනාවෙන් පසුව, ශ්‍රී ලාංකික මුස්ලිම්වරු එවකට සිටි දෙමළ දේශපාලන නායකත්වය පිළිබඳව දැඩි කලකිරීමකින් පසු වූහ.

1989 වන විට, වෙනම රාජ්‍යයක් පිහිටුවීම සඳහා එල්.ටී.ටී.ඊ. සංවිධානය ගත් උත්සාහයට ශ්‍රී ලංකාවේ මුස්ලිම්වරු දැඩි ලෙස ප්‍රතිරෝධය දැක්වූහ. එල්.ටී.ටී.ඊ. සංවිධානයේ ඊළාම් ව්‍යාපෘතියට එකඟ නොවීම හේතුවෙන් දෙමළ කතා කරන මුස්ලිම්වරුන්ට විශාල වන්දියක් ගෙවීමට සිදු වූ බව කවුරුත් දන්නා කරුණකි. 1990 ඔක්තෝබර් මාසයේදී එල්.ටී.ටී.ඊ. සංවිධානය විසින් උතුරු පළාතේ පදිංචිව සිටි සමස්ත මුස්ලිම්වරුන් 90,000 ක් (කාන්තාවන්, ළමුන් සහ වැඩිහිටියන් ඇතුළුව) ඔවුන්ගේ ඊළඟ වේල සඳහා කිසිවක් නොමැතිව, පැය දෙකක් ඇතුළත වහාම පිටව යන ලෙස නියෝග කරමින් පළවා හැරි අයුරු ජනාධිපති දිසානායක මහතාට මතක ඇති බව නිසැකය.

එමෙන්ම, 1989 සහ 1990 වසරවලදී නැගෙනහිර පළාතේදී එල්.ටී.ටී.ඊ. සංවිධානය විසින් එල්ල කරන ලද ප්‍රහාර කිහිපයකින් මුස්ලිම්වරුන් දහසකට අධික පිරිසක් ඝාතනය කර, මුස්ලිම් ගොවීන්ට අයත් සැලකිය යුතු කෘෂිකාර්මික ඉඩම් ප්‍රමාණයක් බලහත්කාරයෙන් අත්පත් කර ගත් අයුරුද ජනාධිපතිවරයාට මතක ඇති බව ස්ථිරය.

මේ කාලය තුළ දකුණු ආසියාවේ සිදු වූ දරුණුතම මුස්ලිම් සංහාරයක් වාර්තා වූ අතර, එහිදී කාත්තන්කුඩි හි මුස්ලිම් පල්ලි කිහිපයක රාත්‍රී යාඥාවන්හි නිරත වෙමින් සිටි මුස්ලිම්වරුන් 147 දෙනෙකු එල්.ටී.ටී.ඊ.ය විසින් ඝාතනය කරන ලද අතර, ඉන් පසුව එරාවුර් හිදී තවත් මුස්ලිම්වරුන් 121 දෙනෙකු ඝාතනය කෙරිණි. මීට අමතරව, හජ් වන්දනාව නිමවා ආපසු නිවෙස් බලා පැමිණෙමින් සිටි වන්දනාකරුවන් කුරුක්කල්මඩම් ප්‍රදේශයේදී වෙනත් දෙසකට හරවා යවා ඔවුන්ගෙන් 35 දෙනෙකුට ආසන්න පිරිසක් ඝාතනය කරන ලදී! පසුව අලංචිපොතාන ප්‍රදේශයේදී මුස්ලිම් ගොවීන් 69 දෙනෙකු අමානුෂික ලෙස ඝාතනය කෙරිණි.

1990 වන විට එල්.ටී.ටී.ඊ.ය විසින් ඝාතනය කරන ලද අහිංසක මුස්ලිම්වරුන්ගේ තහවුරු වූ සංඛ්‍යාව, දෛවෝපගත ලෙස 2019 අප්‍රේල් 21 වන දින සිදු වූ බිහිසුණු පාස්කු ඉරිදා ප්‍රහාරයෙන් මියගිය සංඛ්‍යාවට සමාන විය!

එල්.ටී.ටී.ඊ. සංවිධානය උතුරේ මුස්ලිම්වරුන් පළවා හැරීමටත්, නැගෙනහිර මුස්ලිම්වරුන් ඝාතනය කිරීමටත් හේතුව වූයේ, ඔවුන් එල්.ටී.ටී.ඊ.යට සහය නොදක්වා, බෙදුම්වාදයට එරෙහිව සටන් වැදුණු සන්නද්ධ හමුදාවන් සමඟ පෙනී සිටීම නිසා බව කවුරුත් දන්නා කරුණකි.

මැලේ මුස්ලිම්වරුන් කිහිපදෙනෙකු සන්නද්ධ හමුදාවල ප්‍රධාන තනතුරු හෙබවූ බවත්, ඔවුන්ගෙන් පිරිසක් එල්.ටී.ටී.ඊ.ය විසින් (බොහෝ විට ක්‍රියාන්විතයේදී) ඝාතනයට ලක් වූ බවත් සියලු දේශප්‍රේමී ශ්‍රී ලාංකිකයන්ට මතකය.

යුධ සමයේදී යුධ, නාවික සහ ගුවන් හමුදාවල මෙන්ම හමුදාවේ මූලෝපායික විනිවිදුම් බලකායන්හි (Deep Penetrating Units) ඔවුන් ඉටුකළ කැපී පෙනෙන සේවය, එල්.ටී.ටී.ඊ.ය කුපිත කිරීමට හේතු වූ බවත්, එහි ප්‍රතිඵලයක් ලෙස නැගෙනහිර මුස්ලිම්වරුන් ඝාතනය කිරීමට සහ උතුරේ මුස්ලිම්වරුන් පළවා හැරීමට ඔවුන් පෙළඹුණු බවත් පුළුල් ලෙස විශ්වාස කෙරේ.

මීට අමතරව, ශ්‍රී ලංකාවේ භූමියේ අඛණ්ඩතාව ආරක්ෂා කිරීම සඳහා වූ අරගලයේදී ශ්‍රී ලංකාවට උපකාර කළ මුස්ලිම් බහුතරයක් වෙසෙන රටවල් දෙකක් වූයේ ඉරානය සහ පාකිස්තානයයි.

1999 වසරේදී, ජනාධිපති චන්ද්‍රිකා බණ්ඩාරනායක කුමාරතුංග මහත්මියගේ පාලන සමයේදී, හදිසි ආධාර ඉල්ලා ජනාධිපතිනිය කළ ඉල්ලීමට ඉරානය සාධනීය ලෙස ප්‍රතිචාර දක්වමින් යුධ පෙරමුණේ සිටි සන්නද්ධ හමුදාවන්ට අත්‍යවශ්‍ය ද්‍රව්‍ය සැපයීය!

2007 නොවැම්බර් මාසයේදී ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා ඉරාන ඉස්ලාමීය ජනරජයේ සංචාරයක නිරත වූ අතර, එය සංවිධානය කරන ලද්දේ එවකට ඉරානයේ ශ්‍රී ලංකා තානාපතිවරයා ලෙස කටයුතු කළ සහ වත්මන් ජාතික ශූරා සභාවේ (NSC) සභාපති ජනාධිපති නීතිඥ එම්. එම්. සුහයිර් මහතා විසිනි. එහිදී ඌව පළාතේ හෙක්ටයාර 5,000 ක නව කෘෂිකාර්මික ඉඩම් සඳහා ජලය සැපයීම පිණිස උමා ඔය ජලය නැගෙනහිරට හැරවීමේ සහ මෙගාවොට් 120 ක විදුලි බලයක් උත්පාදනය කිරීමේ ව්‍යාපෘතිය වෙනුවෙන් ඇමරිකානු ඩොලර් මිලියන 525 ක් ලබා ගැනීමට හැකි විය. මීට අමතරව ඉරානය ශ්‍රී ලංකාවේ ග්‍රාමීය විදුලිබල ව්‍යාපෘති සඳහා ඇමරිකානු ඩොලර් මිලියන 105 ක් ලබා දුන්නේය.

වඩාත්ම වැදගත් කරුණ නම්, යුද්ධයේ තීරණාත්මක කාලවකවානුව වූ 2008 ජනවාරි මාසයේ සිට, ඉරාන බොරතෙල් මාස හතරක පොලී රහිත පමා වූ ගෙවීම් කොන්දේසි ක්‍රමයට මිලදී ගැනීම සඳහා ඇමරිකානු ඩොලර් මිලියන 650 කට ආසන්න වටිනාකමකින් යුත් ණය පහසුකමක් ඉරානය විසින් ශ්‍රී ලංකාවට ලබා දීමයි.

මේවා යුද්ධයේ ප්‍රධාන අවධීන්හිදී ශ්‍රී ලංකාවට උපකාර වූ වැදගත් දායකත්වයන් වන අතර ජනාධිපති දිසානායක මහතා විසින් ඒවා නොපැකිළිව ඇගයීමට ලක් කළ යුතුය!

ශ්‍රී ලංකාව ආයුධ සහ පතොරම් මිලදී ගැනීමට අරමුදල් සෙවීමට දැඩි ලෙස වෙහෙසුණු යුද්ධයේ මෙම අමතක නොවන කාල පරිච්ඡේදයේදී, යුධ පෙරමුණේ සිටි අය ඉරාන සහ පාකිස්ථාන ඉස්ලාමීය ජනරජයන් ශ්‍රී ලංකාවට ලබා දුන් මිල කළ නොහැකි සහයෝගය බෙහෙවින් අගය කළහ. ජාතික ජන බලවේග (NPP) රජය, ඇගයිය යුතු තැනැත්තන්ට සහ ඇගයිය යුතු දේට නිසි ඇගයීම ලබා දිය යුතුය!

1990 වන විට, ජාතිකත්ව පදනම මත ශ්‍රී ලංකාව බෙදීමට එල්.ටී.ටී.ඊ.ය දැරූ උත්සාහයට එරෙහිව නැගී සිටි පළමු ප්‍රධාන බාධකය මුස්ලිම්වරුන් වූ බව ඉතිහාසයට යටපත් කළ හැකිද? මිලියන 2.1 කින් යුත් මෙම ප්‍රජාව, රටේ සන්නද්ධ හමුදාවන්ට පමණක් දෙවැනි වන අයුරින් නිසි ලෙස ඇගයීමට හා ගෞරවයට පාත්‍ර වීමට සැබවින්ම සුදුසුය! (අවසානය)

සම්බන්ධීකරණය: NSC ප්‍රධාන ලේකම් රෂීඩ් එම්. ඉම්තියාස් (නීතිඥ), ජංගම දුරකථන අංකය: 0777 314 207

04/06/2026
උල්හිය්යා සම්බන්ධයෙන් ජාතික ෂූරා සභාවේ විශේෂ මාර්ගෝපදේශ - 2026කුරානය සහ සුන්නාවේ මාර්ගෝපදේශ අනුව, ශ්‍රී ලංකාවේ නීති රාමු...
25/05/2026

උල්හිය්යා සම්බන්ධයෙන් ජාතික ෂූරා සභාවේ විශේෂ මාර්ගෝපදේශ - 2026

කුරානය සහ සුන්නාවේ මාර්ගෝපදේශ අනුව, ශ්‍රී ලංකාවේ නීති රාමුවට යටත්ව ජාතික ෂූරා සභාව (NSC) ක්‍රියාත්මක වේ. ආගමික ඉවසීම, සමාජ සහජීවනය සහ සාමකාමී සහජීවනය ප්‍රවර්ධනය කිරීම එහි ප්‍රධාන අරමුණු වලින් එකකි.

ඉස්ලාමයේ සියලුම යුතුකම් පිළිවෙලට හා නිසි ලෙස ඉටු කළ යුතුය. එලෙසම උල්හිය්යා නිසි පිළිවෙත් අනුව ඉටු කළ විට පමණක් එහි සැබෑ අරමුණු ඉටු වන අතර සමාජයට අපේක්ෂිත ප්‍රතිලාභ ලැබේ.

නබි ﷺ තුමාණෝ මෙසේ පැවසූහ: "සැබැවින්ම අල්ලාහ්, ඔබ කරන කාර්යයක් පිළිවෙලට කිරීම ප්‍රිය කරයි." (තබ්රානි)

එබැවින් එළඹෙන ඊදුල් අදා (හජ් උත්සව) සමයේදී උල්හිය්යා යුතුකම ඉටු කරන මුස්ලිම්වරුන් වගකීමෙන් හා සැලකිල්ලෙන් කටයුතු කරන ලෙසත්, වත්මන් තත්ත්වයට අනුව පහත දැක්වෙන වැදගත් මාර්ගෝපදේශ අනුගමනය කරන ලෙසත් ජාතික ෂූරා සභාව ඉල්ලා සිටී.

ප්‍රධාන මාර්ගෝපදේශ

1. අවසර ලත් දින කෙරෙහි අවධානය යොමු කිරීම:

රජයේ චක්‍රලේඛ සහ මාර්ගෝපදේශ අනුව, උල්හිය්යා යුතුකම මැයි 28 සහ 29 යන දින දෙකේදී පමණක් ඉටු කළ යුතුය. මැයි 30 පොහෝ දිනයක් වන බැවින්, එදින සහ ඊට පසු මැයි 31 වන දින සතුන් මැරීම හෝ මස් බෙදා හැරීම සම්පූර්ණයෙන්ම වැළැක්විය යුතුය.

2. අනෙකුත් සමාජවල හැඟීම්වලට ගරු කිරීම:

සමාජ අතර සහ ආගම් අතර සබඳතා වර්ධනය කිරීම සහ ජාතික සහජීවනය සහතික කිරීම මුස්ලිම් සමාජයේ වගකීමකි.

කුර්බාන් සඳහා සතුන් මිලදී ගන්නා විට සහ ඒවා ප්‍රවාහනය කරන විට ඉතා සැලකිලිමත්ව කටයුතු කිරීම අත්‍යවශ්‍ය වේ. ඒවා පොදු ස්ථානවල හෝ මාර්ග අයිනේ රංචු වශයෙන් බැඳ තැබීමෙන් වැළකී, අනෙකුත් ආගමිකයන්ගේ ආගමික හැඟීම් රිදවන ලෙස කටයුතු නොකිරීමට වගබලා ගත යුතුය.

3. සෞඛ්‍ය පිළිවෙත් සහ නිසි අපද්‍රව්‍ය බැහැර කිරීම:

උල්හිය්යා ඉටු කරන ස්ථානවල සෞඛ්‍ය පිළිවෙත් ඉහළින්ම පවත්වා ගැනීම අත්‍යවශ්‍ය වේ. උල්හිය්යා වලින් පසු අපද්‍රව්‍ය පොදු ස්ථානවල නොදමා, ඒවා ඉතා පරිස්සමින් ආරක්ෂිතව ඉවත් කිරීමට හෝ ගැඹුරට වළ දැමීමට වගබලා ගත යුතුය.

4. සමාජ මාධ්‍යවල බෙදා නොගැනීම:

උල්හිය්යා සම්බන්ධ ඡායාරූප, වීඩියෝ සහ පුවත් පොදු වේදිකාවල හෝ සමාජ මාධ්‍යවල බෙදා ගැනීම දැඩිවෙන්ම වැළැක්විය යුතුය.

අපගේ මාතෘ භූමියේ සමගිය සහ ස්වෛරීත්වය ආරක්ෂා කරන ආකාරයටත්, ඉස්ලාමයේ සැබෑ වටිනාකම් ප්‍රකාශ කරන ආකාරයටත් ඉහත මාර්ගෝපදේශ අපි අනුගමනය කරමු.

එළඹෙන හජ් උත්සවය සියල්ලන්ටම සතුට, අවබෝධය සහ ප්‍රගතිය ගෙන දෙන සුබ දිනයක් වේවා යැයි අපි දෙවියන්ගෙන් ප්‍රාර්ථනා කරමු!

මාධ්‍ය අංශය,
ජාතික ෂූරා සභාව

2026 මැයි 24

Special Guidelines on Udhiyyah from the National Shoora Council – 2026The National Shoora Council (NSC) operates in acco...
25/05/2026

Special Guidelines on Udhiyyah from the National Shoora Council – 2026

The National Shoora Council (NSC) operates in accordance with the guidance of the Qur’an and Sunnah, and within the legal framework of Sri Lanka. Promoting religious tolerance, social harmony, and peaceful coexistence is one of its main objectives.

All obligations in Islam must be fulfilled in an orderly and proper manner. Similarly, Udhiyyah only fulfills its true purpose and delivers its intended benefits to society when it is carried out with the correct procedures and ethics.

The Prophet ﷺ said: _“Indeed, Allah loves that when one of you does a job, he does it well.”_ (Tabarani)

Therefore, for the upcoming Eid al-Adha festival, the National Shoora Council requests that Muslims performing the Udhiyyah act responsibly and carefully, and follow the key guidelines below in line with the current situation.

Key Guidelines

1. Observe the permitted days:
In accordance with government circulars and directives, the Udhiyyah obligation should be performed only on May 28 and 29. Since May 30 is a Poya day, slaughtering animals or distributing meat must be completely avoided on that day and on May 31 as well.

2. Respect the sentiments of other communities:
Fostering inter-community and inter-religious relations and ensuring ethnic harmony is the responsibility of the Muslim community.

When purchasing and transporting animals for Qurbani, utmost care must be taken. Avoid gathering and tethering them in public places or along roadsides, and act sensitively so as not to hurt the religious sentiments of people of other faiths.

3. Maintain hygiene and proper waste disposal:
It is essential to maintain the highest standards of hygiene at places where Udhiyyah is performed. Waste after Udhiyyah must not be thrown in public places. It should be disposed of safely and carefully, or buried deep in the ground.

4. Do not share on social media:
Strictly avoid sharing photos, videos, and news related to Udhiyyah on public platforms or social media.

May we follow the above guidelines to protect the unity and sovereignty of our motherland and to uphold the true values of Islam.

We pray that the upcoming Eid al-Adha will be a blessed day that brings happiness, understanding, and progress to everyone!

Yours sincerely,

Media Division,
National Shoora Council

May 24, 2026

உழ்ஹிய்யா தொடர்பில் தேசிய ஷூரா சபையின் விசேட வழிகாட்டல்கள் – 2026குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டல்களுக்கு இணங்க,இலங்...
25/05/2026

உழ்ஹிய்யா தொடர்பில் தேசிய ஷூரா சபையின் விசேட வழிகாட்டல்கள் – 2026

குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டல்களுக்கு இணங்க,இலங்கை நாட்டின் சட்ட வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் தேசிய ஷூரா சபை (NSC) இயங்கி வருகிறது. மத சகிப்புத்தன்மை,சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வை ஊக்குவிப்பது அதனது பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

இஸ்லாத்தின் அனைத்து கடமைகளும் ஒழுங்காகவும் முறையாகவும் நிறைவேற்றப்பட வேண்டும். அதுபோலவே உழ்ஹிய்யாவும் சரியான நெறிமுறைகளுடன் நிறைவேற்றப்படும் போது தான் அதன் உண்மையான நோக்கங்கள் நிறைவேறுவதுடன் எதிர்பார்க்கப்படும் பயன்களை சமூகம் அனுபவிக்கும்.

நபி(ஸல்) அவர்கள் : "நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்யும் ஒரு வேலையை நேர்த்தியாகச் செய்வதை விரும்புகின்றான்." எனக் கூறியுள்ளார்கள்.(தபறானி)

எனவே எதிர்வரும் ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) பண்டிகைக் காலத்தில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும் முஸ்லிம்கள் பொறுப்புணர்வுடனும் கவனத்துடனும் நடந்து கொள்வதுடன் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பின்வரும் முக்கிய வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் தேசிய ஷூரா சபை வேண்டிக் கொள்கிறது.

முக்கிய வழிகாட்டல்கள்

1. அனுமதிக்கப்பட்ட தினங்களைக் கவனத்திற் கொள்வது:

அரசாங்கத்தின் சுற்று நிரூபங்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக, உழ்ஹிய்யா கடமையை மே 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் மாத்திரமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். மே 30 ஆம் திகதி போயா தினமாக அமைவதனால், அன்றைய தினமும் அதற்குப் பின்னரான மே 31 ஆம் திகதியிலும் மிருகங்களை அறுப்பதையோ அல்லது மாமிசங்களைப் பகிர்ந்தளிப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

2. பிற சமூகங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்:-

சமூகங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான உறவுகளை வளர்ப்பதும், இன நல்லிணக்கத்தை உறுதி செய்வதும் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாகும்.

குர்பானுக்கான பிராணிகளைக் கொள்வனவு செய்யும் போதும், அவற்றை எடுத்துச் செல்லும் போதும் மிகவும் அவதானமாகச் செயல்படுவது அவசியமாகும். அவற்றை பொது இடங்களில் அல்லது பாதையோரங்களில் கூட்டமாகக் கட்டிப் பராமரிப்பதைத் தவிர்த்து, பிற மதத்தவர்களின் சமய உணர்வுகளைப் புண்படுத்தாதவாறு மிகவும் சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டும்.

3. சுகாதார ஒழுங்குகளும் முறையான கழிவகற்றலும்:-

உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் இடங்களில் சுகாதார ஒழுங்குகளை உச்சக்கட்டமாகப் பேணுவது அவசியமாகும். உழ்ஹிய்யாவின் பின்னரான கழிவுகளை பொது இடங்களில் வீசாமல், அவற்றை மிகவும் கவனமான முறையில் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் அல்லது பூமியில் ஆழமாகப் புதைக்கவும் வேண்டும்.

4. சமூக ஊடகங்களில் பகிராமை:-

உழ்ஹிய்யா தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் செய்திகளை பொதுவெளியிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பகிர்வதைக் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நமது தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் வகையிலும், இஸ்லாத்தின் உண்மையான விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையிலும் மேற்படி வழிகாட்டல்களை நாம் பின்பற்றுவோமாக.

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், புரிந்துணர்வையும், அபிவிருத்தியையும் தரக்கூடிய ஒரு நன்னாளாக அமைய இறைவனைப் பிரார்த்திப்போமாக!

இவ்வண்ணம்,

ஊடகப் பிரிவு,

தேசிய ஷூரா சபை

24 மே 2026

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) தேசிய சூரா சபை திருத்தங்களை முன்மொழிந்துள்ளது2026 ஜனவரி 13 ஆம் திகதி நீதி...
15/04/2026

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) தேசிய சூரா சபை திருத்தங்களை முன்மொழிந்துள்ளது

2026 ஜனவரி 13 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிலிருந்து தேசிய ஷூரா சபைக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான விதந்துரைகளை முன்வைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க தேசிய ஷூரா சபை அதன் நிறைவேற்று குழு செயலகக் குழு மற்றும் சில முக்கிய சிவில் அமைப்புக்களது ஆலோசனைகளைப் பெற்று இந்த முன்மொழிவுகளைக் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரித்தது. அது தேசிய ஷூரா சபையின் உறுப்பு அமைப்புகள் அனைத்துக்கும் அனுப்பப்பட்டதுடன் அவர்களது அங்கீகாரமும் அதற்காக பெறப்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டதாகும்.

அது மாத்திரமன்றி இலங்கையின் முன்னணி உலமாக்கள் சிலருக்கு இந்த முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு அவர்களது ஆலோசனைகளும் பெறப்பட்டு இறுதி வடிவத்தை அது பெற்றதுடன் அவர்களது அங்கீகாரமும் அந்த அறிக்கைக்கு கிடைத்துள்ளது. மேற்படி அறிக்கை கடந்த 15.04.2026 அன்று நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது.

தேசிய ஷூரா சபையால் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்:

திருமண வயது 18 ஆக நிர்ணயம்:

இலங்கையின் ஏனைய சமூகங்களுக்கு இணையாக, முஸ்லிம் ஆண் மற்றும் பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. விதிவிலக்கான சூழ்நிலைகளில் மாத்திரம், 16-18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு காழி நீதிபதிகள் குழுவின் அனுமதியுடன் திருமணம் செய்ய முடியும்.

மணமகளின் கையொப்பம் கட்டாயமாக்கல்:

திருமணப் பதிவின் போது மணமகனின் கையொப்பத்துடன், மணமகளும் தனது சம்மதத்தை உறுதிப்படுத்தி கையொப்பமிடுவதற்கான இடம் திருமணச் சான்றிதழில் ஒதுக்கப்பட வேண்டும். இது பெண்களின் சுதந்திரமான தெரிவை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகும்.

பலதார மணத்திற்கு முறையான கட்டுப்பாடுகள்:

இஸ்லாத்தில் பலதாரமணம் செய்து கொள்வதற்கான அனுமதி ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் பலதாரமணம் புரிய விரும்பும் ஒருவர், தனது மனைவியர் அனைவரையும் சமமாக நடத்துவார் என்பதற்கான உறுதிப் பிரமாணத்தை(Solemn Declaration) காழி நீதிபதிகள் குழுவிடம் வழங்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் நட்டஈடு கோரும் அதிகாரம் பாதிக்கப்படும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

நவீனமயப்படுத்தப்பட்ட காழி நீதிமன்றங்கள்:

தற்போதைய காழி நீதிமன்ற முறையை மாற்றி, முழு நாடும் ஒன்பது வலயங்களாகப் பிரிக்கப்பட்டு தலா ஒவ்வொரு வலயத்திற்கும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட 'காழி நீதிபதிகள் குழு' அமைக்கப்பட வேண்டும்.இந்த ஐவரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அங்கம் வகிப்பர்.ஆண் ஒருவர் பிரதம காழியாக செயற்படுவதோடு இறுதி தீர்மானத்தையும் எடுப்பார்.இவர்கள் முழுநேர அடிப்படையில் பணியாற்றி, விவாகரத்து மற்றும் பிள்ளைகளின் பராமரிப்பு தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பார்கள்.

மேற்படி அறிக்கைக்கு தேசிய ஷூரா சபையின் பின்வரும் முன்னணி முஸ்லிம் சிவில் அமைப்புகள் தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளன.

1. தேசிய ஷூரா சபை

2. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளனம்

3. அகில பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சங்கம்

4. . இலங்கை மலாய் மக்களின் மாநாடு

5. . ஸ்ரீலங்கா ஜமாஅதே இஸ்லாமி

6. . இலங்கை கதீப்கள் மற்றும் முஅத்தின்கள் சங்கம்

7. . ஸலாமா சங்கம்

8. அல்முஸ்லிமாத்

9. இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம்

10. அஹதிய்யா சம்மேளனம்

11. அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்

12. சிலோன் முஸ்லிம் வாலிபர் சங்கம்

13. நாம் இலங்கையர் அமைப்பு

இவ்வறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய உலமாப் பெருமக்களது பெயர்கள்:

அஷ்-ஷேக் கலாநிதி M.L. முபாரக் (PhD) - பணிப்பாளர், தாருல் ஹுதா மகளிர் அரபு மற்றும் இஸ்லாமியக் கல்லூரி, மருதமுனை.

அஷ்-ஷேக் M.M.M. கரீம் (நத்வி) - அதிபர், நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி மற்றும் தலைவர், மஜ்லிஸ் ஷூரா – மூதூர்.

அஷ்-ஷேக் மஃஸூக் ஷஜீர் (உஸ்வி) - அதிபர், தாருல் கிராஅத் அரபுக் கல்லூரி, மாபோலை.

அல்-ஆலிமா டாக்டர் மரீனா தாஹா ரிபாய் - ஸ்தாபகத் தலைவி, அல்-முஸ்லிமாத்.

அஷ்-ஷேக் பேராசிரியர் கலாநிதி S.M.M. மஸாஹிர் - பேராசிரியர் (இஸ்லாமிய கலாசாரம்), இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்.

அஷ்-ஷேக் பேராசிரியர் J.D. கரீம்தீன் - பேராசிரியர் (சமூகவியல் கல்வி), இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

அஷ்-ஷேக் S.H.M. பளீல் (BA, MA, MPhil) - சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமியா, பேருவளை.

அஷ்-ஷேக் அல்-ஹாபிஸ் கலாநிதி A.J.M. மக்தூம் (PhD) - உதவிப் பேராசிரியர் (AOP) மற்றும் வருகைதரு விரிவுரையாளர் (கொழும்பு பல்கலைக்கழகம்), ஃபத்வா குழு உறுப்பினர் (அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா).

அஷ்-ஷேக் கலாநிதி ரவூப் ஸெய்ன் (Ph.D) - சிரேஷ்ட ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் கல்வியியலாளர்,சிரேஷ்ட விரிவுரையாளர் (FIHE).

அஷ்-ஷேக் M.T.M. ரிஸ்வி (மஜீதி) - BA(Hons), PGDE, CTHE, MA, MPhil, PhD (Rd). சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.

அஷ்-ஷேக் M. ஃபகீஹுதீன் (நளீமி) - BA, செயலாளர் (CDASF), பிரதம நிறைவேற்று அதிகாரி (Life Bond Foundation).

அஷ்-ஷேக் A.M.M. ஆஸாத் (நளீமி) - MA (சூடான்), தலைவர், ஸலாமா அமைப்பு (Salamah Society).

அஷ்-ஷேக் முஹம்மத் சாலி முஹம்மத் தாஸிம் (கஃபூரி) - தலைவர், சிலோன் முஸ்லிம் இளைஞர் சங்கம் (AMYS).

அஷ்-ஷேக் அப்துஸ் ஸமத் முஹம்மத் அக்ரம் (நளீமி, MA)

அஷ்-ஷேக் கலாநிதி M.I.M. சித்தீக் (PhD) - சிரேஷ்ட விரிவுரையாளர், உம்மு தர்தா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி, அக்கரைப்பற்று.

அஷ்-ஷேக் கலாநிதி A.P.M. அப்பாஸ் (நளீமி) - PhD (மலேசியா), தலைவர் (தர உறுதிப்படுத்தல் பிரிவு) சிரேஷ்ட விரிவுரையாளர், ஜாமிஆ நளீமிய்யா.

அஷ்-ஷேக் அல்-ஹாபிஸ் கலாநிதி முஹம்மத் இஸ்மத் ரம்ஸி (நளீமி) - சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வி பீடம், மலாயா பல்கலைக்கழகம், மலேசியா.

அஷ்-ஷேக் கலாநிதி L.M. முபீத் - PhD (அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம், எகிப்து). சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் மற்றும் பொருளியலாளர், அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு - கத்தார்.

அஷ்-ஷேக் A.M. ஹிதாயத்துல்லாஹ் (நளீமி) - BA, PGDE, M.Ed., Dip in Couns., சிரேஷ்ட ஆலோசகர்.

அஷ்-ஷேக் M.S. அப்துல் முஜீப் (கஃபூரி)

அஷ்-ஷேக் கலாநிதி M.J.M. அரபாத் கரீம் (நளீமி) - தலைவர் (கல்வி விவகாரங்கள்), ஜாமிஆ நளீமியா.

அஷ்-ஷேக் கலாநிதி M.F. முஹம்மத் ஸகீ - உதவிப் பேராசிரியர், அரசறிவியல் மற்றும் மதனீ கற்கைகள் துறை, சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம், மலேசியா.

அஷ்-ஷேக் M.I. அப்துல் ஜப்பார் (பஹ்ஜி)

அஷ்-ஷேக் முஹம்மத் யூனுஸ் சம்சு தப்ரீஸ் (அஹதி)

அஷ்-ஷேக் நாஹூர் ரஹீம்

இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படை நெறிமுறைகளை மீறாமல் இஸ்லாத்தின் நெகிழ்ச்சித் தன்மைக்கு ஏற்ப நாட்டின் சட்டதிட்டங்களையும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய ஷூரா சபை தெரிவித்துள்ளது.

-ஊடகப் பிரிவு
தேசிய ஷூரா சபை
15.04.2026

Address

77, Dematagoda Road, Colombo 09
Colombo
000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 13:00

Telephone

0114546564

Alerts

Be the first to know and let us send you an email when National Shoora Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Shoora Council:

Shortcuts

Share