25/06/2025
வருடாந்த அங்கத்தவர் ஒன்றுகூடல்- (2025/1446)
மேற்படி ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அங்கத்தவர்களுக்கான வருடாந்த அங்கத்தவர் ஒன்றுகூடல் நாடளாவிய ரீதியில்
ஜூன் மாதம் 14 முதல் 22 வரை நடைபெற்றன.
அந்த வகையில் கொழும்புப் பிராந்தியத்துக்கான அங்கத்தவர் ஒன்று கூடல் கொழும்புப் பிராந்திய அமைப்பாளர் அஷ்ஷெய்க் N.L. சில்மி ஜுமான் இஸ்லாஹி அவர்களின் தலைமையில் கடந்த ஜூன் 22 ஆம் திகதி காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி
தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வில் கொழும்புப் பிராந்திய,
அங்கத்தவர்கள் (Members) மற்றும் இணை அங்கத்தவர்கள் (Candidate Members) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் M.H.M. உஸைர் இஸ்லாஹி, உதவித் தலைவர் அஷ்ஷெய்க் M.T. அப்துர் ரஹ்மான் (நளீமி) மற்றும் அஷ்ஷெய்க் M.R.M. ரிஸ்வான் (இஸ்லாஹி) (தேசிய அமைப்பு மற்றும் இளைஞர் விவகாரப் பகுதிப் பொறுப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டு அங்கத்தவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினார்கள்.
அத்துடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த இரண்டு வருடங்களுக்கான பிரதிநிதிகள் சபைக்கான கொழும்பு பிராந்தியத்துக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற தேர்தலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.