19/08/2026
A significant milestone was marked in the history of Nuraichcholai National School with the successful completion and opening of a two-storey classroom building and a cultural hall, constructed with the support of ISRC Sri Lanka.
The opening ceremony was held under the leadership of Mr. Iqbal Moosin, Principal of Nuraichcholai National School.
The Chief Guest was A.S.M. Rikas, Chairman of the Kalpitiya Pradeshiya Sabha. Special guests included Mr. Ahamed Seyyaf, Chief Executive Officer of ISRC Sri Lanka, Mrs. Kanthilatha, Assistant Director of Education Development, Puttalam Zonal Education Office, Mr. A.W. Jawad, Director of the Nuraichcholai Education Division, and Mr. Samith Warnasooriya, Officer-in-Charge of Nuraichcholai Police Station.
The event was also attended by community leaders, religious representatives, teachers, members of the School Development Executive Committee, Old Boys’ Association representatives, parents, alumni and other distinguished guests.
The new facilities will provide students with an improved learning environment while creating space for cultural and community activities. More than infrastructure, this investment represents a commitment to education, opportunity and the future of the next generation.
The initiative directly contributes to SDG 4 – Quality Education, while also supporting SDG 10 – Reduced Inequalities and SDG 11 – Sustainable Cities and Communities by strengthening access to educational infrastructure and inclusive community facilities.
ISRC Sri Lanka remains committed to investing in education and community infrastructure that creates opportunities, strengthens resilience and enables children and communities to thrive.
Investing in education today. Building a stronger tomorrow.
---
ISRC Sri Lanka நிறுவனத்தின் ஆதரவுடன் நுரைச்சோலை தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடி வகுப்பறைக் கட்டிடமும் கலாச்சார மண்டபமும் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதன் மூலம், பாடசாலை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல் பதிவாகியுள்ளது.
இத்திறப்பு விழா பாடசாலை அதிபர் திரு. இக்பால் மூசீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் A.S.M. ரிகாஸ் அவர்கள் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக ISRC Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஹமட் செய்யாப், புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்தி உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி காந்திலதா, நுரைச்சோலை கல்விக் கோட்டப் பணிப்பாளர் திரு. A.W. ஜவாத் மற்றும் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. Samith Warnasooriya ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், சமூக மற்றும் சமயத் தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
புதிய இருமாடி கட்டிடம் மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் சூழலை வழங்குவதுடன், கலாச்சார மண்டபம் பாடசாலை மற்றும் சமூக நிகழ்வுகளுக்கான முக்கிய வசதியாக அமையும்.
இது ஒரு கட்டிட நிர்மாணத் திட்டம் மட்டுமல்ல. கல்வி, சம வாய்ப்பு மற்றும் எதிர்கால தலைமுறையின் முன்னேற்றத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முதலீடாகும்.
இம்முயற்சி SDG 4 – தரமான கல்வி, SDG 10 – சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் SDG 11 – நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள் ஆகிய நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பங்களிக்கிறது.
கல்வி மற்றும் சமூக உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் வாய்ப்புகளை உருவாக்கி, சமூகங்களின் பின்னடைவு திறனை வலுப்படுத்தும் பணியில் ISRC Sri Lanka தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இன்றைய கல்வியில் முதலீடு. நாளைய வலுவான சமூகத்திற்கான கட்டுமானம்.