All Ceylon Jamiyyathul Ulama - ACJU

All Ceylon Jamiyyathul Ulama - ACJU The Official page of All Ceylon Jamiyyathul Ulama At present ACJU has 163 Branches in 24 districts and over 8000 Scholars as subscribed Members.

ABOUT ALL CEYLON JAMIYYATHUL ULAMA

All Ceylon Jamiyyathul Ulama (ACJU) has been in existence since 1924 and was incorporated by Parliament Act No. 51 of 2000 of the Democratic Socialist Republic of Sri Lanka. The objectives of the ACJU are farsighted, long-run, and designed to serve the Muslim Community and the nation. The ACJU has organized itself into Sub-Committees (Divisions) to serve its sta

keholders, in which most of the veteran members are involved as volunteers, along with professional staff members in the forefront serving the community and the country together, focusing on the aspects of Ulama (Religious Scholars) Affairs, Muslim Community Affairs, Citizens Affairs and engagement with authorities. Vision

To build an exemplary and complying Muslim community enriched with the Islamic values and teachings and contribute towards the upliftment of Deenul Islam and the betterment of the community and the nation. Mission

Providing spiritual, ethical, and moral guidance to all levels of the Muslim community based on Islamic teachings, and contributing towards the development of educational, economic, social, and cultural aspects of the community and nation, whilst building unity among community and coexistence with all ethnicities. Objectives

To provide spiritual guidance to all levels of the Muslim community based on Islamic Teachings
To work towards building individuals and families enriched with ethical and moral values
To work towards the welfare of the Ulama and enhancement of the Islamic Religious Education
To contribute towards the development of educational, economic, social, and cultural aspects of the community and nation
To work towards upholding unity among community
To develop peaceful coexistence with all ethnicities
To instigate all necessary efforts and activities to attain the objectives and goals of ACJU. Values

Islamic
Sri Lankan Identity
Moderation
Accommodative
Diversity & Pluralism

எகிப்தின் தாருல் இஃப்தா மற்றும் உலகளாவிய ஃபத்வா நிறுவனங்களின் பொதுச் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 11ஆவது சர்வதேச ...
05/09/2026

எகிப்தின் தாருல் இஃப்தா மற்றும் உலகளாவிய ஃபத்வா நிறுவனங்களின் பொதுச் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 11ஆவது சர்வதேச மாநாடு, சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த முஃப்திகள், இஸ்லாமிய அறிஞர்கள், அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்களின் பங்கேற்புடன், 2026 செப்டம்பர் 02ஆம் திகதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமானது.

● உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் குடும்பச் சவால்கள்:

‘உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் குடும்பச் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில், டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு, தனிமனிதவாதம், குடும்ப ஒற்றுமை, குழந்தை வளர்ப்பு மற்றும் இஸ்லாமிய அடையாளத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சமகால முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பான சவால்கள் விரிவாக ஆராயப்பட்டன.

● 80 நாடுகளின் மத்தியில் இலங்கையின் பிரதிநிதித்துவம்:

இம்முக்கிய சர்வதேச மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் கௌரவத் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களும், உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் அவர்களும் பங்கேற்றனர்.

சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், ஃபத்வா நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாடு, உலகளாவிய ரீதியில் குடும்பம் எதிர்கொள்ளும் சமகால சவால்கள் குறித்து கருத்துப் பரிமாற்றத்திற்கான முக்கிய சர்வதேச அரங்காக அமைந்தது.

● எகிப்தின் தலைமை முஃப்தியுடன் முக்கிய சந்திப்பு:

மாநாட்டில் பங்கேற்பதற்காக 2026 செப்டம்பர் 01ஆம் திகதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜம்இய்யாவின் பிரதிநிதிகள், எகிப்தின் தலைமை முஃப்தி கலாநிதி நஸீர் முஹம்மத் அய்யாத் அவர்களைச் சந்தித்து பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது, ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட முக்கிய வெளியீடுகள், குறிப்பாக மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளையும் வழிகாட்டல்களையும் உள்ளடக்கிய ‘மன்ஹஜ்’ கையேடு, எகிப்தின் தலைமை முஃப்தியிடம் கையளிக்கப்பட்டது.

● எகிப்தின் மத விவகாரங்கள் மற்றும் வக்ஃப் அமைச்சருடன் சந்திப்பு:

தொடர்ந்து, ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோர் எகிப்தின் மத விவகாரங்கள் மற்றும் வக்ஃப் துறை அமைச்சர் கலாநிதி உஸாமா அல்-அஸ்ஹரி அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் சமகால மார்க்க மற்றும் சமூக நிலைமைகள், இலங்கை முஸ்லிம் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதில் சமய நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

● சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கில் முஃப்தி ரிஸ்வி அவர்களின் ஆய்வுரை:

மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்குகளில், டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் குடும்பச் சவால்களின் பின்னணியில் ஃபத்வா நிறுவனங்கள், உளவியல் வழிகாட்டல் நிறுவனங்கள் மற்றும் தனியார் சட்ட நீதிமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ஆய்வுரைகளை நிகழ்த்தினார். எகிப்து ஃபத்வா மையத்தின் செயலாளர் ஷெய்க் ஹாஸிம் தாவூத் அவர்களின் முன்னிலையில் இவ்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இவ்வாய்வரங்குகளில் எகிப்தில் கற்கும் இலங்கையை சேர்ந்த இளமானி, முதுமானி மற்றும் கலாநிதி கற்கைகளைகளை தொடரும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

● அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் குடும்ப ஆலோசனை:

தமது உரையில் முஃப்தி ரிஸ்வி அவர்கள் பின்வரும் முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

1. அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் குடும்ப ஆலோசனையின் முக்கியத்துவம்.

2. சமகால குடும்பங்கள் எதிர்நோக்கும் உளவியல் மற்றும் சமூக ரீதியிலான சவால்கள்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே உரிய முறையில் அணுகுவதன் அவசியத்தையும், குடும்ப உறுப்பினர்களிடையே புரிந்துணர்வு, பொறுமை, பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதில் மார்க்க வழிகாட்டலின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

● குடும்ப நலனுக்காக ஒருங்கிணைந்த செயற்பாடு:

இலங்கையில் குடும்ப நலனையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்காக மார்க்க அறிஞர்கள், ஃபத்வா நிறுவனங்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய சமூக நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் முஃப்தி ரிஸ்வி அவர்கள் தமது உரையில் வலியுறுத்தினார்.

● சர்வதேச அரங்கில் இலங்கையின் குரல்:

பல நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், ஃபத்வா நிறுவனங்களின் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் பங்கேற்ற இவ்வாய்வுக் கருத்தரங்குகளில், இலங்கையின் சமகால மார்க்க, குடும்ப மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பில் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் முன்வைத்த கருத்துகளும் அனுபவப் பகிர்வுகளும் முக்கியத்துவம் பெற்றன.

80 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்முக்கிய சர்வதேச மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதித்துவமும், முஃப்தி ரிஸ்வி அவர்களின் ஆய்வுரையும், சர்வதேச மட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைமைகள் மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துரைப்பதற்கான முக்கியமான வாய்ப்பாக அமைந்தது.

04/09/2026

✅ அகிலத்தாருக்கு அருட்கொடை | RA-16

🎙️ அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். பழீல்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் - ACJU

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

'பஹன' ஊடக வலையமைப்பின் பிரமுகர்கள் 2026 செப்டம்பர் 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வருகை தந்து நிறைவேற...
04/09/2026

'பஹன' ஊடக வலையமைப்பின் பிரமுகர்கள் 2026 செப்டம்பர் 03ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, பஹன ஊடக அமைப்பினர் தமது நிறுவனத்தின் இலக்கு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுகளை வழங்கியதுடன் பல்லின சமூக சமூகங்களிடையே நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினர்.

அத்தோடு, கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களினால் சிங்கள மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை பேசும் 'අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ' எனும் நூலின் பிரதியும் இதன்போது ஜம்இய்யா தரப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது, சமூக நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எகிப்தில் நடைபெற்றுவரும் 11 ஆவது தாருல் இஃப்தா சர்வதேச மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் பங்கேற்பதற்காக...
03/09/2026

எகிப்தில் நடைபெற்றுவரும் 11 ஆவது தாருல் இஃப்தா சர்வதேச மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் பங்கேற்பதற்காக அதன் கௌரவ தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோர், 2026 செப்டம்பர் 01ஆம் திகதி எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

'உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் குடும்பச் சவால்கள்' எனும் தொனிப்பொருளில், சர்வதேச ஃபத்வா அமைப்புகளின் பொதுச் செயலகம் மற்றும் எகிப்திய ஃபத்வா மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இம்மாநாடு நடைபெற்று வருகிறது.

எகிப்து ஃபத்வா மையத்தின் ஃபத்வா செயலாளர் ஷெய்க் கலாநிதி முஹம்மத் விஸாம் அப்பாஸ் ஹிழ்ர் அவர்கள் ஜம்இய்யாவின் பிரதிநிதிகளை வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, ஜம்இய்யா பிரதிநிதிகள் எகிப்திய ஃபத்வா மையத்திற்கு விஜயம் செய்து அதன் செயலாளர் ஷெய்க் ஹாஸிம் தாவூத் அவர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடலில், எகிப்தில் முதுமானி (MA) பட்டப்படிப்பைத் தொடரும் இலங்கை மாணவர் ஸுஹைர் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, இலங்கை ஆலிம்களை ஃபத்வா துறையில் வலுவூட்டுவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

---------

The Hon. President of the All Ceylon Jamiyyathul Ulama (ACJU), Mufti M.I.M. Rizwe, and the Asst. Treasurer, Ash-Shaikh Dr. A.A. Ahmad Aswar, travelled to Cairo, Egypt, on 1 September 2026 to represent the ACJU at the 11th International Conference of Dar al-Ifta, currently being held in Egypt.

The international conference is being conducted under the theme “Family Challenges Amid Global Changes” and is being organised in coordination with the General Secretariat of International Fatwa Bodies and the Egyptian Fatwa Centre.

During their visit, the ACJU representatives were warmly received by Shaikh Dr. Muhammad Wisam Abbas Khidr, Secretary of Fatwa Affairs at the Egyptian Fatwa Centre.

The ACJU delegation subsequently visited the Egyptian Fatwa Centre, where they held a substantive meeting with its Secretary, Shaikh Hashem Dawood. The discussions focused on matters of mutual interest, particularly the development and strengthening of the Fatwa sector in Sri Lanka.

The meeting was also attended by Mr. Zuhair, a Sri Lankan student currently pursuing his MA studies in Egypt.

During the discussions, particular attention was given to developing programmes and initiatives aimed at enhancing the knowledge, skills and institutional capacity of Sri Lankan Ulama in the field of Fatwa. The participants also explored practical mechanisms and possible avenues for implementing such programmes in Sri Lanka.

The ACJU appreciates the warm reception extended by the Egyptian Fatwa Centre and looks forward to further strengthening cooperation and knowledge-sharing with leading international Fatwa institutions for the benefit of the Muslim community in Sri Lanka.

02/09/2026

✅ நபிகள் நாயகம் ﷺ அவர்களது பகிரங்க அழைப்புப் பணி | RA-15

🎙️ அஷ்-ஷைக் ஜே. ஆதில்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் - ACJU

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளையடுத்து தமது இரங்கலையும் ஆதரவையும் தெரிவிப்பதற்...
02/09/2026

நேபாளத்தில் வெள்ளப் பேரழிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளையடுத்து தமது இரங்கலையும் ஆதரவையும் தெரிவிப்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோர், 2026 செப்டம்பர் 02ஆம் திகதி, கொழும்பிலுள்ள நேபாள தூதரகத்திற்கு விஜயம் செய்தனர்.

இதன்போது, இலங்கைக்கான நேபாள பொறுப்புத் தூதுவர் கௌரவ விஜய்குமார் ராவுத் அவர்களை சந்தித்து ஜம்இய்யாவின் இரங்கல் செய்தியை கையளித்தனர்.

மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

----------

The General Secretary of ACJU, Ash-Shaikh M. Arqam Nooramith, and Asst. General Secretary, Ash-Shaikh M.S.M. Thassim, visited the Embassy of Nepal in Colombo on 2 September 2026 to convey their condolences and solidarity following the loss of lives and devastation caused by the floods in Nepal.

During the visit, they met with H.E. Mr. Vijay Kumar Raut, Chargé d’Affaires of Nepal to Sri Lanka, and handed over the ACJU’s message of condolence.

The ACJU representatives also signed the Condolence Book placed at the Embassy.

31/08/2026

✅ அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் | RA-14

🎙️ அஷ்-ஷைக் என்.எம். சைபுல்லாஹ்
நிறைவேற்றுக் குழு உறுப்பினர் - ACJU

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

◼️ Statement of Condolences and Solidarity with the People of Nepal🌐 https://www.acju.lk/ondolencesnpl/📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖...
28/08/2026

◼️ Statement of Condolences and Solidarity with the People of Nepal
🌐 https://www.acju.lk/ondolencesnpl/

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

The All Ceylon Jamiyyathul Ulama (ACJU) expresses its deepest condolences and heartfelt solidarity with the people of Nepal following the devastating floods

28/08/2026

✅ நபிகள் நாயகம் ﷺ அவர்களின் இரகசிய அழைப்புப் பணி | RA-13

🎙️ அஷ்-ஷைக் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மௌலானா

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

27/08/2026

✅ அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடனான குடும்ப வாழ்வு | RA-12

🎙️ அஷ்-ஷைக் ஆஷிக் அபுல் ஹஸன்
பிரச்சாரக் குழு உறுப்பினர் - ACJU

📌 𝐉𝐨𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐀𝐂𝐉𝐔 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥:
https://whatsapp.com/channel/0029VaDLuVR8fewxPY30pS0J

Address

No. 281, Jayantha Weerasekara Mw, Colombo/10
Colombo
01000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94117490490

Alerts

Be the first to know and let us send you an email when All Ceylon Jamiyyathul Ulama - ACJU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All Ceylon Jamiyyathul Ulama - ACJU:

Shortcuts

Share