28/12/2025
வேர்கள் பட்டறை - 04
“உள்ளத்தில் இருந்து பிறக்காத எந்தச் சொல்லும், அடுத்தவர் உள்ளத்தைச் சென்றடைவதில்லை. ஒரு சிறந்த பேச்சாளன் என்பவன் மொழியை ஆள்பவன் அல்ல, தனது வார்த்தைகளால் மற்றவர்களின் உணர்வுகளை உயிர்ப்பிப்பவன்.”
வேர்கள் திறன் மேம்பாட்டு மையத்தினால் மாணவர்களிடையே பேச்சாற்றலை மேம்படுத்தும் பொருட்டு, மொனராகலை அல் - இர்ஷாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு “Mastering the art of expressive communication” எனும் தொனிப்பொருளில் Public Speaking தொடர்பான அறிமுகத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்ற நிகழ்வானது சுமார் 90-ற்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்தது.
#வேர்கள்