24/08/2026
Strengthening Mine Action Coordination in the Northern Province
TOM Andy, SDS Senthoran, and Livelihood Consultant Harisha Varatharajah represented MAG at a high-level stakeholder meeting held in Jaffna and chaired by the Governor of the Northern Province. The meeting brought together senior representatives from the Government Agent (GA) districts across the North, along with officials from key departments including Tourism Bureau, Wildlife, Forestry, Irrigation dept, coconut cultivation board, UNRCO and ADB.
The primary objective of this consultation is to review progress on remaining landmine contamination across the Northern Province, evaluate ongoing and planned infrastructure, agricultural, and socio-economic development projects, and identify operational overlaps between mine contamination and development priorities to strategically allocate clearance resources.
The meeting provided an important platform to discuss the evolving needs of the mine action sector and strengthen collaboration among stakeholders. NMAC and other mine action operators highlighted the importance of adapting coordination mechanisms and mine risk awareness activities to address the changing needs and current context of communities across the Northern Province.
வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடி நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்
TOM Andy, SDS Senthoran மற்றும் வாழ்வாதார ஆலோசகர் Harisha Varatharajah ஆகியோர், வட மாகாண ஆளுநர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உயர்மட்ட பங்குதாரர் கலந்துரையாடலில் MAG-ஐ பிரதிநிதித்துவப்படுத்தினர். வட மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களின் அரசாங்க அதிபர் (GA) அலுவலகங்களின் மூத்த பிரதிநிதிகளுடன், சுற்றுலா பணியகம், வனவிலங்கு, வனத்துறை, நீர்ப்பாசனத் திணைக்களம், தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை, UNRCO மற்றும் ADB உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையின் பிரதான நோக்கம், வட மாகாணத்தில் எஞ்சியுள்ள கண்ணிவெடி மாசுபாட்டை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல், நடைபெற்று வரும் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சமூக-பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீடு செய்தல், அத்துடன் கண்ணிவெடி மாசுபட்ட பகுதிகளுக்கும் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கும் இடையிலான செயல்பாட்டு முரண்பாடுகள் அல்லது ஒன்றிணையும் பகுதிகளை அடையாளம் கண்டு, கண்ணிவெடி அகற்றும் வளங்களை மூலோபாய ரீதியாக ஒதுக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்வதாகும்.
இந்தக் கூட்டம், கண்ணிவெடி நடவடிக்கைத் துறையின் மாறிவரும் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்கும், பங்குதாரர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் முக்கியமான ஒரு தளமாக அமைந்தது. வட மாகாணத்தின் சமூகங்களின் தற்போதைய சூழல் மற்றும் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைப்பு முறைகள் மற்றும் கண்ணிவெடி அபாய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை NMAC மற்றும் ஏனைய கண்ணிவெடி நடவடிக்கை நிறுவனங்கள் வலியுறுத்தின.
උතුරු පළාතේ බිම් බෝම්බ ක්රියාකාරකම් සම්බන්ධීකරණය ශක්තිමත් කිරීම
TOM Andy, SDS Senthoran සහ ජීවනෝපාය උපදේශක Harisha Varatharajah යන මහත්වරුන් යාපනයේදී උතුරු පළාත් ආණ්ඩුකාරවරයාගේ ප්රධානත්වයෙන් පැවති ඉහළ මට්ටමේ පාර්ශ්වකරුවන්ගේ රැස්වීමකට MAG නියෝජනය කරමින් සහභාගී වූහ. උතුරු පළාතේ විවිධ දිස්ත්රික්කවල රජයේ දිස්ත්රික් ලේකම් (GA) කාර්යාලවල ජ්යෙෂ්ඨ නියෝජිතයන් මෙන්ම සංචාරක කාර්යාංශය, වනජීවී දෙපාර්තමේන්තුව, වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව, වාරිමාර්ග දෙපාර්තමේන්තුව, පොල් වගා මණ්ඩලය, UNRCO සහ ADB ඇතුළු ප්රධාන ආයතනවල නිලධාරීන් ද මෙම රැස්වීමට සහභාගී වූහ.
මෙම උපදේශන සාකච්ඡාවේ ප්රධාන අරමුණ වූයේ උතුරු පළාතේ තවදුරටත් පවතින බිම් බෝම්බ දූෂණය ඉවත් කිරීමේ ප්රගතිය සමාලෝචනය කිරීම, දැනට ක්රියාත්මක සහ සැලසුම් කර ඇති යටිතල පහසුකම්, කෘෂිකාර්මික හා සමාජ-ආර්ථික සංවර්ධන ව්යාපෘති ඇගයීම සහ බිම් බෝම්බ දූෂිත ප්රදේශ හා සංවර්ධන ප්රමුඛතා අතර පවතින මෙහෙයුම්මය අතිච්ඡාදනයන් හඳුනා ගැනීමයි. එමඟින් බිම් බෝම්බ ඉවත් කිරීම සඳහා පවතින සම්පත් උපායමාර්ගිකව වෙන් කිරීමේ හැකියාව වැඩිදියුණු කිරීම ද අරමුණු විය.
මෙම රැස්වීම බිම් බෝම්බ ක්රියාකාරකම් ක්ෂේත්රයේ වෙනස් වෙමින් පවතින අවශ්යතා පිළිබඳව සාකච්ඡා කිරීමටත්, පාර්ශ්වකරුවන් අතර සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීමටත් වැදගත් වේදිකාවක් විය. උතුරු පළාතේ ප්රජාවන්ගේ වර්තමාන තත්ත්වයන් සහ වෙනස් වෙමින් පවතින අවශ්යතාවලට ගැළපෙන පරිදි සම්බන්ධීකරණ යාන්ත්රණ සහ බිම් බෝම්බ අවදානම් පිළිබඳ දැනුවත් කිරීමේ ක්රියාකාරකම් අනුවර්තනය කිරීමේ වැදගත්කම NMAC සහ අනෙකුත් බිම් බෝම්බ ක්රියාකාරී ආයතන විසින් අවධාරණය කරන ලදී.
Photo Credits : Media Division (Governor of Northern Province)