16/04/2026
ஊர்கூடி ஊடல் மறந்து உரையாடிக்கிடக்க,
இனம் தாண்டி மதம் இணைந்து இன்னலும் பறக்க,
கதிரவனின் கதிரொளியும் கூவிடும் குயிலொலியும்,
மனமயங்க வீசிடும் மலர்களின் மணங்களும்,
நிருத்தியமாய் நின்றிடும் தும்முல்லை மாநகரில்! 🌸✨
மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கும் இப்புத்தாண்டு வேளையில், சகோதரத்துவத்துடன் நாம் அனைவரும் இணைந்து கொண்டாடும் இப்பெருவிழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!🤝✨
பண்டிகைக் காலத்தின் புதுத்தென்றலாய், சித்திரை மாதம் 25ஆம் திகதி (ஏப்ரல் 25) சனிக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கு கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ள எம் பாரிய கலாசார கொண்டாட்டத்திற்கு, உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி இனிய நினைவுகளைத் திரட்டிக்கொள்ள வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்! 🥥☀️🎊
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒன்றியம்,
விஞ்ஞான பீட மாணவர் சங்கம்,
கொழும்பு பல்கலைக்கழகம்.