05/08/2026
Not every voice shaping Sri Lanka's election conversation belongs to a political party, or a newsroom.
Our new study examines who these voices actually are. We reviewed 4,219 pieces of Facebook and YouTube content from Sri Lanka's 2024 presidential election, examining posting volume, platform distribution, and how candidates were discussed.
The findings point to several clear patterns.
Facebook accounted for more than 93% of all monitored content, confirming its position as the primary platform for election-related discussion. Ten influencers were responsible for 81.3% of all election-related content, indicating a high degree of concentration among a small number of accounts. Election-related content remained prominent even during the legally mandated silence period. Two accounts alone accounted for close to a third of all election posts published during that period.
Candidates Anura Kumara Dissanayake, Ranil Wickremesinghe, Sajith Premadasa and Namal Rajapaksa were mentioned consistently throughout the monitoring period, through a combination of promotion, criticism and commentary.
Together, these findings indicate that a relatively small group of influencers holds considerable sway over which candidates and messages reach voters online.
Full study is available here. https://tinyurl.com/yz7bfh4p
🤝 Co-funded by the European Commission and implemented together with our partner Factum
ශ්රී ලංකාවේ මැතිවරණ කතිකාව හැඩගස්වන සෑම හඬක්ම දේශපාලන පක්ෂයකට හෝ ප්රවෘත්ති මැදිරියකට අයත් නොවේ.
අපගේ නවතම අධ්යයනය මගින් මෙම හඬවල් සැබවින්ම කාගේද යන්න විමර්ශනය කෙරේ. මෙහිදී 2024 ශ්රී ලංකා ජනාධිපතිවරණයට අදාළව Facebook) සහ YouTube ඔස්සේ පළ වූ අන්තර්ගතයන් 4,219 ක් අපගේ සමාලෝචනයට ලක් වූ අතර, එහිදී පළ කිරීම් ප්රමාණය, වේදිකා හරහා ඒවායේ ව්යාප්තිය සහ අපේක්ෂකයින් පිළිබඳව සාකච්ඡා වී ඇති ආකාරය පරීක්ෂා කෙරිණි.
මෙම සොයාගැනීම් මගින් පැහැදිලි රටා කිහිපයක් පෙන්වා දෙයි.
නිරීක්ෂණය කරන ලද සමස්ත අන්තර්ගතයෙන් 93% කට වඩා වැඩි ප්රමාණයක් Facebook හි පළ වී තිබූ අතර, මැතිවරණයට අදාළ සාකච්ඡා සඳහා වන ප්රධානතම වේදිකාව ලෙස එහි ස්ථානය මින් තහවුරු වේ. මැතිවරණයට අදාළ සියලුම අන්තර්ගතයන්ගෙන් 81.3% ක් සඳහාම සමාජ මාධ්ය බලපෑම්කරුවන් (influencers) දස දෙනෙකු වගකිව යුතු වූ අතර, මින් පෙන්නුම් කරන්නේ සුළු ගිණුම් සංඛ්යාවක් අත මෙම අන්තර්ගතයන් ඉහළ මට්ටමකින් සංකේන්ද්රණය වී ඇති බවයි. නීතියෙන් නියම කර ඇති මැතිවරණ නිහඬ කාලසීමාව තුළදී පවා මැතිවරණයට අදාළ අන්තර්ගතයන් කැපී පෙනෙන ලෙස පළ වී තිබුණි. එම කාලසීමාව තුළ පළ වූ මුළු මැතිවරණ පෝස්ටු වලින් තුනෙන් එකකට ආසන්න ප්රමාණයක් ගිණුම් දෙකකට පමණක් අයත් විය.
එවකට අපේක්ෂකයින් වූ අනුර කුමාර දිසානායක, රනිල් වික්රමසිංහ, සජිත් ප්රේමදාස සහ නාමල් රාජපක්ෂ යන අයව ප්රවර්ධනය කිරීම්, විවේචන සහ අදහස් දැක්වීම් හරහා නිරීක්ෂණ කාලසීමාව පුරාවටම අඛණ්ඩව සාකච්ඡාවට බඳුන් වී තිබුණි.
මෙම සොයාගැනීම් වලින් සමස්තයක් ලෙස පෙනී යන්නේ, අන්තර්ජාලය හරහා ඡන්දදායකයින් වෙත ළඟා වන්නේ කුමන අපේක්ෂකයින්ද සහ කුමන පණිවිඩද යන්න තීරණය කිරීමේදී සාපේක්ෂව කුඩා සමාජ මාධ්ය බලපෑම්කරුවන් කණ්ඩායමක් විසින් සැලකිය යුතු බලපෑමක් සිදු කරන බවයි.
සම්පූර්ණ අධ්යයන වාර්තාව මෙතැනින් කියවන්න: https://tinyurl.com/yz7bfh4p
🤝 යුරෝපා සංගමයේ සම-මූල්ය දායකත්වයෙන් සහ අපගේ හවුල්කාර ආයතනය වන Factum සමඟ එක්ව ක්රියාත්මක කරන ලදි.
இலங்கையின் தேர்தல் களம் குறித்த உரையாடல்களை வடிவமைக்கும் ஒவ்வொரு குரலும் ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது செய்திப் பிரிவிற்கோ சொந்தமானதல்ல.
இந்தக் குரல்கள் உண்மையில் யாருடையவை என்பதை எமது புதிய ஆய்வு விபரிக்கின்றது. இலங்கையின் 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது Facebook மற்றும் YouTube தளங்களில் வெளியிடப்பட்ட 4,219 பதிவுகளை நாம் மீளாய்வு செய்தோம். இதில் பதிவுகளின் எண்ணிக்கை, சமூக ஊடக தளங்களில் அவற்றின் பரவல் மற்றும் வேட்பாளர்கள் எவ்வாறு விவாதிக்கப்பட்டார்கள் என்பது ஆராயப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் பல தெளிவான போக்குகளைச் சுட்டிக்காட்டுகின்றன.
கண்காணிக்கப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களிலும் 93% இற்கும் அதிகமானவை Facebook இல் பதிவிடப்பட்டுள்ளன. இது தேர்தல் தொடர்பான விவாதங்களுக்கான முதன்மைத் தளமாக Facebook இருப்பதை உறுதிப்படுத்துகிறது. தேர்தல் தொடர்பான அனைத்து பதிவுகளிலும் 81.3% பதிவுகளுக்கு வெறும் பத்து சமூக வலைத்தள செல்வாக்கு செலுத்துபவர்களே (influencers) பொறுப்பாவார்கள். இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான கணக்குகளுக்கு மத்தியில் இந்த உள்ளடக்கங்கள் அதிக அளவில் குவிந்துள்ளதைக் காட்டுகிறது. சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட தேர்தல் அமைதிக் காலப்பகுதியிலும் (silence period) தேர்தல் தொடர்பான பதிவுகள் தொடர்ச்சியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் காணப்பட்டன. அக்காலப்பகுதியில் வெளியான அனைத்து தேர்தல் பதிவுகளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு வெறும் இரண்டு கணக்குகளுக்கு மட்டுமே சொந்தமானவையாக இருந்தன.
அப்போதைய வேட்பாளர்களான அனுர குமார திஸாநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கண்காணிப்புக் காலப்பகுதி முழுவதும் விளம்பரப்படுத்தல், விமர்சனங்கள் மற்றும் கருத்துரைகள் ஊடாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக இந்த முடிவுகள், இணையவழி ஊடாக வாக்காளர்களை எந்த வேட்பாளர்களும், செய்திகளும் சென்றடைகின்றன என்பதை தீர்மானிப்பதில், ஒப்பீட்டளவில் ஒரு சிறிய குழுவாக இருக்கும் செல்வாக்கு செலுத்துபவர்கள் (influencers) கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.
முழுமையான ஆய்வறிக்கையை இங்கே வாசிக்கவும்: https://tinyurl.com/yz7bfh4p
🤝 இத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை நிதியுதவியுடன் எமது பங்காளர்களான Factum நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.