25/06/2025
செட்டிகுள மகாவித்தியாலய உயர்தர மாணவர்களிற்கான (வர்த்தகம், கணக்கியல், உயிரியல், விவசாயம் மற்றும் தொழில்நுட்பவியல் பாடங்களிற்கான) பயிற்சி புத்தகங்கள் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுடன் அதிபர் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களிற்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் திரு. பழனி பிரபா தலைமையிலான குழுவினர் இந்த அன்பளிப்பினை வழங்கியிருந்தனர். இவர்களுக்கு மிகுந்த நன்றியினை தெரிவிப்பதுடன், பாடசாலையில் திட்டமிடப்பட்ட எமது செயற்திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.