KMMV நலன் விரும்பிகள்

KMMV நலன் விரும்பிகள் கைதடி முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயத்தை நாம் எல்லோரும் இணைந்து முன்னேற்றுவோம்.

1. உலகெங்குமுள்ள பாடசாலை நலன்விரும்பிகளையும், பழைய மாணவர்களையும் மற்றும் பெற்றோரையும், அதிபரையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஒன்றிணைத்து பாடசாலையின் வளர்ச்சிக்காக செயல்படல்.

2. கற்றலுக்கு சாதகமான அக , புற சூழலை உருவாக்குவதன் மூலம், மாணவர்களின் சாதனை நிலைகளை மேம்படுத்துதல் / அடைவு மட்டத்தை உயர்த்துதல்.

3. கல்விச் செயற்த்திட்டங்களை உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்சியளித்தல்.

4. பாரம்பரிய கலை பண

்பாட்டு நிகழ்ச்சிகள், விழாக்களை நடாத்தி, மாணவர்களுக்கு பாரம்பரிய கலை பண்பாடு, விழாக்கள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல். அந் நிகழ்ச்சியினுடாக சமூகத்தையும் பாடசாலையையும் இணைத்தல்.

5. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவனூடாக, கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தி அடைவு மட்டத்தை அதிகரித்தல், தொழில்நுட்பக்கல்வியை ஊக்கிவித்தல்.

6. சங்கீதம், நடனம் போன்ற கலைகளையும், இசைக்கருவிகளையும் பயில்வதற்கும் மாணவர்களை ஊக்குவித்தல்..

7. மாணவர்களை உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவித்தல். அதற்கான முறையான பயிற்சிகளை பயிற்சியாளர்கள்மூலம் வழங்குதல். அவர்களின் திறமைகளை பாடசாலை, வலய, மாவட்ட, தேசிய மட்டங்களுக்கு உயர்த்துதல்.

8. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நேர முகாமைத்துவம், (மன) அழுத்த முகாமைத்துவம், தலைத்துவம், ஊக்கிவிப்பு, ஆளுமை வளர்ச்சி பயிற்சிகளையும், கருத்தரங்குகளையும் வைத்தல்.

9. நகரிலுள்ள பெரிய பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடி, அப்பாடசாலைகளின் வகுப்புகளிலும், கருத்தரங்குகளிலும் மற்றைய நிகழ்வுகளிலும் மாணவர்களை கலந்து கொள்ள வைத்து அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்தல்.

10. நகரிலுள்ள பெரிய பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடி, அப்பாடசாலைகளில் நடைபெறும் கருத்தரங்குகள், பயிற்சிகளை எங்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றுக்கொடுத்தல்.

11. இயற்கை விவசாயம், மரம் நடுகை; பொலித்தின், பிளாஸ்டிக் பாவனைக்குறைப்பு என்பவனவற்றை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி, சமூக அக்கறையுள்ள மாணவர்களை உருவாக்குதல்.

12. இதனை முன்னோடியாக கொண்டு மற்றைய பாடசாலைகளையும், ஆரம்பப் பாடசாலைகளையும், சனசமூக நிலையங்களையும் முன்னேற்றி எமது கிராமத்தை ஒரு முன் மாதிரிக்கிராமமாக உருவாக்குதல்.

13. மற்றைய பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள் என்பனவும் எங்கள் வழிமுறைகளை பின்பற்றி முன்னேறுவதற்கு உதவுதல்.

14. மேற்படி வேலைத்திட்டங்களினூடாக ஒன்றிணைந்த கிராமத்தை உருவாக்கி, கிராமத்தை முன்னேற்றுதல்.

15. நூல்நிலையம், மைதானம், விஞ்ஞான ஆய்வு கூடம், வணக்க அறைகள், சிறந்த வகுப்பறைகள், கணினியறை, கணினிகள், பாடசாலைக்கென வாகனங்கள் போன்ற பௌதீக வளங்களுடன் சேர்த்து சிறந்த அதிபர், தரமான ஆசிரியர் குழாம், பிள்ளைகளின் கல்வியில் அக்கறையுள்ள பெற்றோர், பாடசாலையில் அக்கறையுள்ள சமூகம், கல்வியார்வம் உடைய மாணவர்கள், மாணவர்களின் அடைவு மட்ட உயர்வு, பாடசாலையில் சேர்வதற்கு ஆர்வம் காட்டும் புதிய மாணவர்கள், தமது பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க விரும்பும் பெற்றோர், ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு உழைக்கும் கிராமம் என்பன எங்கள் வேலைத்திட்டத்தின் அளவுகோலாக / சிறந்த பெறுபேறாக பார்க்கப்படும்..

எல்லோரும் இணைந்து ஒரு புதிய பண்பாட்டை உருவாக்குவோம்.

16/01/2022 ஞாயிற்றுக்கிழமை =======================கைதடி மேற்கு சனசமூக நிலைய மற்றும் குமரன் விளையாட்டு கழக தொண்டர்களால் ப...
05/04/2022

16/01/2022 ஞாயிற்றுக்கிழமை
=======================

கைதடி மேற்கு சனசமூக நிலைய மற்றும் குமரன் விளையாட்டு கழக தொண்டர்களால் பாடசாலைக் குப்பைக் கிடங்கு JCB Backhoe பயன்படுத்தி, துப்பரவு செய்யப்பட்டு நான்கு உழவுயந்திர சுமை ( Four Tractor Loads) கழிவுகள் அகற்றப்பட்டது.

பாடசாலை மீதான அவர்களின் அக்கறைக்கும், அவர்களது உழைப்புக்கும் எமது நன்றிகளும், பாராட்டுக்களும்.

அதற்கான செலவுகள் பின்வருமாறு.
JCB Backhoe ரூபா. 2000.00
4 உழவுயந்திர சுமை (1100 x 4) ரூபா. 4400.00
மொத்தம் ரூபா. 6400.00

11/01/2022- செவ்வாய்க்கிழமை ========================இன்று எமது பாடசாலையில் KMMV நலன் விரும்பிகள் அனுசரணையில்,மாலை நேர ஆங...
04/04/2022

11/01/2022- செவ்வாய்க்கிழமை
========================

இன்று எமது பாடசாலையில் KMMV நலன் விரும்பிகள் அனுசரணையில்,மாலை நேர ஆங்கில வகுப்புகள் ஆரம்பமாகின. அத்துடன் மாணவர்களுக்கு மேலதிக பயிற்சி கோப்புகள் வழங்கப்பட்டன. கடந்த வருட G. C. E (O/L) எமது பாடசாலையில் 55 5% மாணவர்கள் ஆங்கில பாடத்தில் சித்தி அடைத்துள்ளனர். எமது முயற்சி இம்முறை சித்தி விகிதத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எங்களது முதலாவது திட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது ஒரு நல்ல தொடக்கமாக பார்க்கின்றோம். இத்திட்டப் பணிக்கு உழைத்தவர்களுக்கும், நிதி பங்களிப்பு செய்தவர்களுக்கும், பாட ஆசிரியருக்கும், அதிபருக்கும், சமூகமளித்த மாணவர்களுக்கும், வழிநடத்தும் KMMV நலன் விரும்பிகள் குழுவினர்களுக்கும், நன்றி.

KMMV நலன் விரும்பிகள் - நோக்கம்
31/03/2022

KMMV நலன் விரும்பிகள் - நோக்கம்

10/01/2022 திங்கட்கிழமை KMMV நலன் விரும்பிகள்வாட்ஸாப் (WhatsApp) குழுவில் இணைந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை நூற்றியம்பதை (1...
31/03/2022

10/01/2022 திங்கட்கிழமை

KMMV நலன் விரும்பிகள்வாட்ஸாப் (WhatsApp) குழுவில் இணைந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை நூற்றியம்பதை (150) எட்டியது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!.
இணைத்த, இணைந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றிகள்.

01/01/2022 சனிக்கிழமை =======================இன்று, KMMV நலன் விரும்பிகளுக்கான வாட்ஸாப்  (WhatsApp) குழு இன்று உருவாக்கப...
31/03/2022

01/01/2022 சனிக்கிழமை
=======================
இன்று, KMMV நலன் விரும்பிகளுக்கான வாட்ஸாப் (WhatsApp) குழு இன்று உருவாக்கப்பட்டது. கீழுள்ள இணைப்பினூடாக நீங்களும் (பாடசாலை நலன்விரும்பிகள்) இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/BOmENOy48STIPE0hEfMR5x

23/12/2021 வியாழக்கிழமைஎமது பாடசாலை ஆங்கில தேர்ச்சி மட்டம் 55% மாக அதிகரித்ததையிட்டு, தென்மராட்சி கல்வி வலயத்தால், எமது ...
31/03/2022

23/12/2021 வியாழக்கிழமை
எமது பாடசாலை ஆங்கில தேர்ச்சி மட்டம் 55% மாக அதிகரித்ததையிட்டு, தென்மராட்சி கல்வி வலயத்தால், எமது ஆங்கில ஆசிரியர் திரு. S. பகீரதன் அவர்கள் விருது வழங்கி பாராட்டப்பட்டார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

02/12/2021 வியாழக்கிழமை சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்நிலை பரீட்சையில் முத்துக்குமாரசாமி மகாவித்தியால...
31/03/2022

02/12/2021 வியாழக்கிழமை

சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்நிலை பரீட்சையில் முத்துக்குமாரசாமி மகாவித்தியாலய மாணவன் மோகனதாஸ் ருஷாந் வலயமட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார். முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த அவருக்கு எமது பாராட்டுக்கள்.

14/11/2021 ஞாயிற்றுக்கிழமை ============================இன்று பாடசாலை பழையமாணவர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள்  தெரிவு ...
11/02/2022

14/11/2021 ஞாயிற்றுக்கிழமை
============================
இன்று பாடசாலை பழையமாணவர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு பொதுக்கூட்டம், எமது பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்ற்றது. பின்வருவோர் 2021-2022 ஆண்டுக்கான நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

தலைவர் அதிபர்
=================
திரு ஐ.தேவேஸ்வரன்
செயலாளர்
===========
கு.சுரேஷ்குமார்
உபசெயலாளர்
===============
திருமதி சு.தணபாலசிங்கம்
பொருளாளர்
=============
திருமதி கே.செல்வநாயகம்

நிர்வாக உறுப்பினர்கள்
=======================
திரு வே.மோகேந்திரன்
திரு சி.மதீசன்
திரு மு.கயோதரன்
திருமதி க.ஞானராசா
திருமதி ம.ராதிகா
திரு க. விக்னேஸ்வரன்
திரு த.சுதர்சன்
திரு சி.பற்குலேந்திரன்
திரு க.கஜீபன்

Address

Chavakachcheri

Telephone

+94777360168

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMMV நலன் விரும்பிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KMMV நலன் விரும்பிகள்:

Share