பொதிகை தமிழ் ஒன்றியம்

Directions Website

பொதிகை தமிழ் ஒன்றியம் மலையகத்திற்காக நாம்..!

தாளும் மையும் இணைந்து படைக்கும் காரிகை புதுப்பிக்க முயலும் தொடக்க பயணம்....வசனங்களால் வண்ணம் பூசி கதைகளால் கவிதை எழுதி.....
18/08/2026

தாளும் மையும் இணைந்து படைக்கும் காரிகை புதுப்பிக்க முயலும் தொடக்க பயணம்....

வசனங்களால் வண்ணம் பூசி கதைகளால் கவிதை எழுதி....
வரலாற்றுக்கு விளக்கம் கூற கரம் கோர்த்த வெளிச்சம் பாதையின் தொடக்க பயணம்...🫴🏻

சாவி இன்றி திறந்த கதவு.. புத்தகங்கள் எனும் முடிவிலி அற்ற பெறுமானம்...✍🏻

*மலையகத்துக்காக நாம்*...

#சாரல்மொழி நூல் வெளியீடு #பொதிகைதமிழ்ஒன்றியம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்

மண்ணில் பதிந்த தடங்கள்...மனதில் பதிந்த நினைவுகள்...மொழியில் மலரும் கதைகள்... 🌿சாரல் தொட்ட மலைகளின் வாசத்திலும்,தேயிலை மண...
16/08/2026

மண்ணில் பதிந்த தடங்கள்...
மனதில் பதிந்த நினைவுகள்...
மொழியில் மலரும் கதைகள்... 🌿
சாரல் தொட்ட மலைகளின் வாசத்திலும்,
தேயிலை மணம் கலந்த காற்றிலும்,
எண்ணற்ற கனவுகள் அமைதியாகப் பயணிக்கின்றன...

அவற்றில் சில,
சொல்லப்பட வேண்டிய கதைகளாகின்றன.
சில, எழுதப்பட வேண்டிய வரிகளாகின்றன.
சில, தலைமுறைகள் கடந்து செல்ல வேண்டிய குரல்களாகின்றன.

அத்தகைய ஒரு குரலுக்கு
எழுத்தின் வடிவம் கொடுக்கும் புதிய பயணத்தில்...

பொதிகை தமிழ் ஒன்றியம்
பெருமையுடன் வழங்குகிறத

📖 *சாரல் மொழி*

ஒரு புத்தகம் மட்டும் அல்ல...
ஒரு மண்ணின் வாசம்.
ஒரு மக்களின் குரல்.
ஒரு தலைமுறையின் சிந்தனை.
ஒரு புதிய வரலாற்றின் சிறு பதிவு.

பக்கங்கள் திறக்கட்டும்...
சொற்கள் பேசட்டும்...
நம் மண்ணின் கதை தொடரட்டும். ✨

மலையகத்துக்காக நாம்...

#பொதிகைதமிழ்ஒன்றியம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்

மாற்றம் என்பது முடிவல்ல...புதிய அத்தியாயத்தின் முதல் வரி.🌿சில பயணங்கள் இலக்கை அடைவதற்காக மட்டுமல்ல,புதிய தடங்களைப் பதிப்...
01/08/2026

மாற்றம் என்பது முடிவல்ல...
புதிய அத்தியாயத்தின் முதல் வரி.🌿

சில பயணங்கள் இலக்கை அடைவதற்காக மட்டுமல்ல,
புதிய தடங்களைப் பதிப்பதற்காகவும் பிறக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு புதிய பாதையை நோக்கி,
தன் கனவுகளையும், குரலையும், அடையாளத்தையும் மேலும் உயர்த்திக் கொண்டு
பொதிகை தமிழ் ஒன்றியம் தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறது.

இது இதுவரை நாம் நடந்த பாதையல்ல...
இது இதுவரை நாம் கண்ட காட்சியல்ல...
இது இதுவரை நாம் அனுபவித்த தருணமல்ல...

ஒவ்வொரு இதயத்தையும் தொட்டுச் செல்ல,
ஒவ்வொரு கனவையும் உயிர்ப்பிக்க,
ஒரு புதிய விடியல் பிறக்கிறது...

காத்திருங்கள்...
பொதிகையின் புதிய பரிமாணம் மிக விரைவில் உங்கள் முன் மலர இருக்கிறது. ✨

பயணம் தொடர்கிறது...
ஆனால் இம்முறை, வரலாறு பேசும்.

*மலையகத்துக்காக நாம்*...

#அடுத்தகட்டம்
#பொதிகைதமிழ்ஒன்றியம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்

🏃‍♂️✨ சாதனை பயணத்தில் மலையகம் ✨🌿மலைகளின் உயரத்தைப் போலவே, கனவுகளையும் உயர்த்தும் இன்னொரு இளம் சாதனையாளர்! 🌸ஹப்புத்தளை பி...
09/07/2026

🏃‍♂️✨ சாதனை பயணத்தில் மலையகம் ✨🌿

மலைகளின் உயரத்தைப் போலவே, கனவுகளையும் உயர்த்தும் இன்னொரு இளம் சாதனையாளர்! 🌸

ஹப்புத்தளை பிட்டரத்மலை இல.1 தமிழ் வித்தியாலயத்தின் மாணவன்
கே. நிலுக்சன் 🏅

பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக கோட்ட மட்டம், வலய மட்டம் மற்றும் மாகாண மட்ட 1500 மீற்றர், 3000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று, தனது பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். 🌟

இந்த வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக இருந்த அதிபர் திரு. கனகராஜ், தொடர்ந்து பயிற்சியளித்த திரு. ஸ்ரீகாந்த் மற்றும் ஆசிரியர் பிரதாப் அவர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

🌟 எங்கள் இளம் சாதனையாளர்களை பாராட்டுவோம்!

📩 உங்கள் பகுதியில் சாதிக்கும் மாணவர்களின் வெற்றிகளை எங்களுடன் பகிருங்கள்…
📞 77 975 8543
Sagana
Communication Head
Podigai Tamil Ondriyam

சாதனைகள் பேசட்டும்… மலையகம் உயரட்டும்! 💫

#சாதனைபயணத்தில்மலையகம்
#பொதிகைதமிழ்ஒன்றியம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்
#மலையகத்துக்காகநாம்

🥊 சாதனை பயணத்தில்  மலையகம் ✨🌿மலையகத்தின் மகளிர் வீரத்தை உலகறியச் செய்த இன்னொரு பொற்கணம்… 🥇கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தைச் ...
08/07/2026

🥊 சாதனை பயணத்தில் மலையகம் ✨🌿

மலையகத்தின் மகளிர் வீரத்தை உலகறியச் செய்த இன்னொரு பொற்கணம்… 🥇

கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த
*M. நதீஷா* 🌸

நுவரெலியா கல்வி திணைக்களம் ஜூன் மாதம்(22/23) நடத்திய வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டியில், ஜூனியர் (33–36 கிலோ) எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, தனது பாடசாலைக்கும், மேபீல்ட் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். 💪✨

🌟 எங்கள் இளம் சாதனையாளர்களை மனதாரப் பாராட்டுவோம்!

📩 உங்கள் பகுதியில் சாதிக்கும் மாணவர்களின் வெற்றிகளையும் எங்களுடன் பகிருங்கள்…
ஒவ்வொரு சாதனையும், எங்கள் சமூகத்தின் நம்பிக்கையின் ஒளியே. ✨

📞 77 975 8543
Sagana
Communication Head
Podigai Tamil Ondriyam

சாதனைகள் பேசட்டும்… மலையகம் உயரட்டும்! 💫

#சாதனைபயணத்தில்மலையகம்
#பொதிகைதமிழ்ஒன்றியம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்
#மலையகத்துக்காகநாம்

28/06/2026

📚✨ Happening Now at N.W. Silverkandy School! ✨📚

Vidiyalai Nokiya Kalvi Payanam 10.0 proudly presents a Motivational Program for Grade 9, 10 & 11 students. 👨‍🎓

A meaningful initiative to inspire young minds, build confidence, and guide students towards a brighter future through education and motivation.

"The seeds of knowledge sown today will blossom into the successes of tomorrow." 🌱

.0

27/06/2026

ஒரு தலைமுறையின் விடியலை நோக்கிய பயணம்... ✨

கனவுகளுக்கு சிறகுகளும்,
நம்பிக்கைக்கு ஒளியும்,
எதிர்காலத்திற்கு கல்வியும்...

விடியலை நோக்கிய கல்விப் பயணம் 10.0 🌄

#விடியலைநோக்கியகல்விப்பயணம்10.0
#பொதிகைதமிழ்ஒன்றியம்
#ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
#மலையகத்துக்காகநாம்

இன்னும் 1 நாள்...பனிமூடிய மலையின் இதயத்தில்,விடியலை எதிர்நோக்கும் விழிகள் ஆயிரம்...மௌனமாக மலரும் ஒவ்வொரு கனவும்,அறிவின் ...
27/06/2026

இன்னும் 1 நாள்...

பனிமூடிய மலையின் இதயத்தில்,
விடியலை எதிர்நோக்கும் விழிகள் ஆயிரம்...

மௌனமாக மலரும் ஒவ்வொரு கனவும்,
அறிவின் ஒளியைத் தேடி சிறகடிக்கிறது...

நாளை...
தேயிலை மணம் வீசும் மண்ணில்,
நம்பிக்கையின் விதைகள் மீண்டும் விதைக்கப்படும்...

நாளை...
ஒரு நிகழ்வு அல்ல,
ஒரு தலைமுறையின் எதிர்காலம் பேசப்படும்...

விடியலை நோக்கிய கல்விப் பயணம் 10.0 ✨

இன்னும் 1 நாள் மட்டுமே...
விடியல் கதவைத் தட்டுகிறது;
அதைத் திறக்க நாம் தயாராக இருக்கிறோம்... 🌄

#விடியலைநோக்கியகல்விப்பயணம்10.0
#பொதிகைதமிழ்ஒன்றியம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்
#மலையகத்துக்காகநாம்

இன்னும் 2 நாட்கள்...பனித்துளி நனைக்கும் மலையின் மடியில்,பட்டாம்பூச்சியாய் துடிக்கும் ஆயிரம் கனவுகள்...தேயிலை மணம் சுமக்க...
26/06/2026

இன்னும் 2 நாட்கள்...

பனித்துளி நனைக்கும் மலையின் மடியில்,
பட்டாம்பூச்சியாய் துடிக்கும் ஆயிரம் கனவுகள்...

தேயிலை மணம் சுமக்கும் கரங்கள்,
நாளை வரலாறு எழுதும் கரங்களாகட்டும்...

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும்,
ஒரு புதிய விடியலைப் பிறப்பிக்கட்டும்...

அறிவின் ஒளி,
நம்பிக்கையின் சிறகு,
எதிர்காலத்தின் பாதை...

விடியலை நோக்கிய கல்விப் பயணம் 10.0

📍 நு/வ சில்வர் கண்டி தமிழ் வித்தியாலயம்
🗓️ 28.06.2026
⏰ காலை 8.00 மணி முதல்

விடியல் காத்திருக்கவில்லை;
அதை நோக்கி நாம் நடந்துகொண்டிருக்கிறோம்... 🌄✨

#விடியலைநோக்கியகல்விப்பயணம்10.0
#பொதிகைதமிழ்ஒன்றியம்
#ஸ்ரீஜயவர்தனபுரபல்கலைக்கழகம்
#மலையகத்துக்காகநாம்

தேயிலை இலைகளைப் பறிக்கும் கரங்கள்,நாளை அறிவின் உச்சியைத் தொடட்டும்... ✨கனவுகளுக்கு சிறகுகளும்,வாழ்க்கைக்கு விடியலும் தரு...
25/06/2026

தேயிலை இலைகளைப் பறிக்கும் கரங்கள்,
நாளை அறிவின் உச்சியைத் தொடட்டும்... ✨
கனவுகளுக்கு சிறகுகளும்,
வாழ்க்கைக்கு விடியலும் தரும்
விடியலை நோக்கிய கல்விப் பயணம் 10.0

📍 நு/வ சில்வர் கண்டி தமிழ் வித்தியாலயம்
🗓️ 28.06.2026
⏰ காலை 8.00 மணி முதல்

மலையகத்தின் நம்பிக்கை,
மாணவர்களின் வெற்றிப் பாதை... 🌄

கல்வியால் உயர்வோம்...
விடியலை நோக்கி நகர்வோம்...

வடிவமைப்பு : ந.அஜய் ராக்சன்
வரிகள் : ரா.சகானா

#விடியலைநோக்கியகல்விப்பயணம்10.0
#பொதிகைதமிழ்ஒன்றியம்
#மலையகத்துக்காகநாம்

Address

Boralesgomuwa

Alerts

Be the first to know and let us send you an email when பொதிகை தமிழ் ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share