Kirkoswald Estate Middle Division Bogawantalawa

Kirkoswald Estate Middle Division Bogawantalawa லெட்சுமி தோட்டம், மத்திய பிரிவு, பொகவந்தலாவ, இலங்கை

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 18  #சுந்தரமூர்த்தி"சுந்தர்" என அழைக்கப்படும் திரு .P. சுந்தரமூர்த்தி அவர்கள் 1978.06.13 அன்று பெ...
17/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 18 #சுந்தரமூர்த்தி

"சுந்தர்" என அழைக்கப்படும் திரு .P. சுந்தரமூர்த்தி அவர்கள் 1978.06.13 அன்று பெருமாள் - சாரதா தம்பதிகளின் புதல்வனாகப் பிறந்தார். தரம் 1 - 5 வரை கெர்க்கஸ்வோல்ட் இல . 1 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் பொகவந்தலாவ சென்.மேரிஸ் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைக் கற்றுள்ளார். தற்போது கியூ தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக (Senior Assistant Field officer) பணியாற்றும் இவர் 2002 ஆம் ஆண்டு முதல் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் தற்போது கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவிலேயே வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 17  #மோசஸ்திரு .S. மோசஸ் அவர்கள் 1982.09.27 அன்று சந்தனமுத்து - மேரி தம்பதிகளின் புதல்வனாகப் பிறந...
14/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 17 #மோசஸ்

திரு .S. மோசஸ் அவர்கள் 1982.09.27 அன்று சந்தனமுத்து - மேரி தம்பதிகளின் புதல்வனாகப் பிறந்தார். தரம் 1 - 3 வரை கெர்க்கஸ்வோல்ட் இல . 1 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் கெர்க்கஸ்வோல்ட் இல . 2 தமிழ் வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியைக் கற்றுள்ளார். தற்போது டயகம தோட்ட வைத்தியசாலையில் மருந்து விநியோகத்தராக பணியாற்றும் இவர் 2012 ஆம் ஆண்டு முதல் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றார். தொழில் நிமித்தம் தற்போது டயகம பபகுதியில் வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 16  #தனராஜ்"தனா" என அழைக்கப்படும் திரு .M. தனராஜ் (Thanaraj Thanaraj) அவர்கள் 1979.11.19 அன்று மு...
11/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 16 #தனராஜ்

"தனா" என அழைக்கப்படும் திரு .M. தனராஜ் (Thanaraj Thanaraj) அவர்கள் 1979.11.19 அன்று முத்து - கிட்ணம்மாள் தம்பதிகளின் புதல்வனாகப் பிறந்தார். தரம் 1 - 5 வரை கெர்க்கஸ்வோல்ட் இல . 1 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் பொகவந்தலாவ ஹோலிறோசரி மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியைக் கற்றுள்ளார். தற்போது மஸ்கெலிய புரோன்ஸ்விக் தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக (Field Officer - FO) பணியாற்றும் இவர் 2004 ஆம் ஆண்டு முதல் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் தற்போது மஸ்கெலிய புரோன்ஸ்விக் பகுதியில் வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 15  #நவனீதன்"பெரியவன்" என அழைக்கப்படும் திரு .M. நவனீதன் அவர்கள் 1984.03.08 அன்று முத்துசாமி - கன...
10/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 15 #நவனீதன்

"பெரியவன்" என அழைக்கப்படும் திரு .M. நவனீதன் அவர்கள் 1984.03.08 அன்று முத்துசாமி - கனகேஸ்வரி தம்பதிகளின் புதல்வனாகப் பிறந்தார். தரம் 1 - 4 வரை கெர்க்கஸ்வோல்ட் இல .1 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் கெர்கஸ்வோல்ட் இல . 2 தமிழ் வித்தியாலயத்தில் இடைநிலை கல்வியையும் பொகவந்தலாவ சென்.மேரிஸ் கல்லூரியில் வணிகப்பிரிவில் உயர்தரத்தினையும் கற்றுள்ளார். தற்போது நோர்வூட் அஞ்சல் அலுவலகத்தில் தபால் ஊழியராக (Post man) பணியாற்றும் இவர் 2016 ஆம் ஆண்டு முதல் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் தற்போது கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவிலேயே வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 14  #வாமதேவன்"வாமு" என அழைக்கப்படும் திரு J. வாமதேவன் (Vamu Devan) அவர்கள் 1983.05.10 அன்று ஜெகநா...
09/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 14 #வாமதேவன்

"வாமு" என அழைக்கப்படும் திரு J. வாமதேவன் (Vamu Devan) அவர்கள் 1983.05.10 அன்று ஜெகநாதன் - வெரோனிக்கா தம்பதிகளின் புதல்வனாகப் பிறந்தார். தரம் 1 - 4 வரை கெர்க்கஸ்வோல்ட் இல . 1 தமிழ் வித்தியாலயத்தல் கல்வி கற்ற இவர் கெர்கஸ்வோல்ட் இல . 2 தமிழ் வித்தியாலயத்தில் இடைநிலை கல்வியை கற்றுள்ளார். தற்போது பேருந்து நடத்துனராக (The Bus conductor) பணியாற்றும் இவர் 2017 ஆம் ஆண்டு முதல் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவர் தற்போது கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவிலேயே வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 13  #லீலாவதி"லீலா" என அழைக்கப்படும் திருமதி . S. லீலாவதி (Selvaraj Leela) அவர்கள் 1984.12.06 அன்ற...
07/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 13 #லீலாவதி

"லீலா" என அழைக்கப்படும் திருமதி . S. லீலாவதி (Selvaraj Leela) அவர்கள் 1984.12.06 அன்று செல்வராஜ் - மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வியாகப் பிறந்தார். தரம் 1 - 3 வரை கெர்க்கஸ்வோல்ட் இல . 1 தமிழ் வித்தியாலயத்தல் கல்வி கற்ற இவர் கெர்கஸ்வோல்ட் இல . 2 தமிழ் வித்தியாலயத்தில் இடைநிலை கல்வியையும் பொகவந்தலாவ சென்.மேரிஸ் கல்லூரியில் கலைத்துறையில் தனது உயர் கல்வியையும் கற்றுள்ளார். தற்போது தொழில்முறை நாடகக் கலைஞராக பணியாற்றும் இவர் 2006 ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் செயற்பட்டு வருகின்றார். இவர் தற்போது கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவிலேயே வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 12  #சதீஸ்குமார்"சதீஸ்" என அழைக்கப்படும் திரு .S. சதீஸ்குமார் (Sathis Sk) அவர்கள் 1983.08.23 அன்ற...
06/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 12 #சதீஸ்குமார்

"சதீஸ்" என அழைக்கப்படும் திரு .S. சதீஸ்குமார் (Sathis Sk) அவர்கள் 1983.08.23 அன்று சாம்பசிவம் - ஆராய் தம்பதிகளின் புதல்வனாகப் பிறந்தார். தரம் 1 - 4 வரை கெர்க்கஸ்வோல்ட் இல . 1 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் கெர்கஸ்வோல்ட் இல . 2 தமிழ் வித்தியாலயத்தில் இடைநிலை கல்வியை கற்றுள்ளார். தற்போது ஊடகவியலாளராக பணியாற்றும் இவர் 2012 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் கடமையாற்றுகின்றார். இவர் தற்போது கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவிலேயே வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 11  #திருச்செல்வம்"கண்ணா" என செல்லமாக அழைக்கப்படும் திரு . P . திருச்செல்வம் (Thiru Thiruchelvam)...
05/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 11 #திருச்செல்வம்

"கண்ணா" என செல்லமாக அழைக்கப்படும் திரு . P . திருச்செல்வம் (Thiru Thiruchelvam) அவர்கள் 1983.08.08 அன்று பழனியாண்டி - ராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வனாகப் பிறந்தார். தரம் 1 - 4 வரை டியன்சின் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் கெர்கஸ்வோல்ட் இல . 2 தமிழ் வித்தியாலயத்தில் இடைநிலை கல்வியை கற்றதோடு பொகவந்தலாவ ஹோலிறோசரி மகா வித்தியாலயத்தில் கலைத்துறையில் தனது உயர் கல்வியை கற்றுள்ளார். தற்போது மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக (SLTS - 2 II) பணியாற்றும் இவர் 2007 ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக கடமையாற்றுகின்றார். இவர் தற்போது கொட்டகலையில் வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 10  #சிவனேசன்திரு .T. சிவனேசன் (Sivanesan Thiyagaraja) அவர்கள் 1982.08.09 அன்று தியாகராஜா - சேவாய...
03/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 10 #சிவனேசன்

திரு .T. சிவனேசன் (Sivanesan Thiyagaraja) அவர்கள் 1982.08.09 அன்று தியாகராஜா - சேவாய் தம்பதிகளின் புதல்வனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கெர்க்கஸ்வோல்ட் இல .1 தமிழ் வித்தியாலத்திலும் இடைநிலை கல்வியை டியன்சின் தமிழ் வித்தியாலயம் மற்றும் கெர்கஸ்வோல்ட் இல . 2 தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் உயர்தரத்தை பொகவந்தலாவ சென்.மேரிஸ் கல்லூரியிலும் கற்றுள்ள இவர் உயர்தரத்தில் வணிகப்பிரிவில் கற்றுள்ளார். தற்போது தொழில்முறை நாடகக்கலைஞராக பணியாற்றும் இவர் 2004 ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் செயற்பட்டு வருகின்றார். இவர் தற்போது கொட்டகலையில் வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 09  #முத்துகுமார்"முத்து" என ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திரு . S . முத்துகுமார் (Muthuku...
02/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 09 #முத்துகுமார்

"முத்து" என ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திரு . S . முத்துகுமார் (Muthukumar Kumar)அவர்கள் 1982.01.17 அன்று சின்னதம்பி - வீரம்மா தம்பதிகளின் புதல்வனாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை கெர்க்கஸ்வோல்ட் இல .1 தமிழ் வித்தியாலத்திலும் இடைநிலை மற்றும் உயர்கல்வியை பொகவந்தலாவ ஹோலிறோசரி மகா வித்தியாலயத்திலும் கற்றுள்ள இவர் உயர்தரத்தில் வணிகப்பிரிவில் பயின்றுள்ளார். தற்போது அட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சாஜனாக கடமையாற்றும் இவர் 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கை பொலிஸ் சேவையில் பணியாற்றிவருகின்றார். இவர் தற்போது அட்டனில் வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 08  #வசந்தகுமாரி"வசந்தா" என ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திருமதி .M.I. வசந்தகுமாரி (Vasant...
01/02/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 08 #வசந்தகுமாரி

"வசந்தா" என ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திருமதி .M.I. வசந்தகுமாரி (Vasantha Vasanthakumary)அவர்கள் 1974.08.12 அன்று முத்தையா - கருப்பாயி தம்பதிகளின் புதல்வியாகப் பிறந்தார். தரம் 1 முதல் உயர்தரம் வரை பொகவந்தலாவ ஹோலிறோசரி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ள இவர் உயர்தரத்தில் கலைப்பிரிவில் கற்றுள்ளார். தற்போது பொகவந்தலாவ ஹோலிறோசரி தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக (SLTS - I) கடமையாற்றும் இவர் 2001 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுவருகின்றார். திருமணத்தின் பின்னர் இவர் பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தில் வசித்துவருகின்றார்.


#மலையகம்200

 #எங்கள்_ஆளுமைகள்ஆளுமை 07  #இந்திராணி"இந்திரா" என ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திருமதி .V. இந்திராணி (Karunagaran...
29/01/2024

#எங்கள்_ஆளுமைகள்
ஆளுமை 07 #இந்திராணி

"இந்திரா" என ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திருமதி .V. இந்திராணி (Karunagaran Indrani Indra) அவர்கள் 1975.02.20 அன்று வடிவேல் - மாரியாய் தம்பதிகளின் புதல்வியாகப் பிறந்தார். கெர்க்கஸ்வோல்ட் இல . 1 தமிழ் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்ற இவர் இடைநிலைக் கல்வியையும் உயர்தரத்தில் கலைத்துறையும் பொகவந்தலாவ ஹோலிறோசரி மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளார். தற்போது எட்டியாந்தோட்டை பூணுகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக (SLTS - I) கடமையாற்றும் இவர் 2003 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுவருகின்றார். திருமணத்தின் பின்னர் இவர் எட்டியாந்தோட்டையிலேயே வசித்துவருகின்றார்.


#மலையகம்200

Address

Kirkoswald
Bogawantalawa
22060

Alerts

Be the first to know and let us send you an email when Kirkoswald Estate Middle Division Bogawantalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kirkoswald Estate Middle Division Bogawantalawa:

Share