05/07/2025
மட்/மம/ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்ற PPA CHALLENGE CUP 2025 இன் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதன் போது பாடசாலையில் புதிதாக அமையப் பெறவுள்ள பள்ளிவாயல் கட்டுமானப் பணிகளுக்காக எம்மோடு இருந்து மரணித்த எமது நண்பர்கள் வட்ட உறுப்பினர்களான அஸாம் மற்றும் நுசைக் ஆகியோரின் நினைவாக "ஸதகதுல் ஜாரியா" என்ற முறையில் எமது நண்பர்கள் வட்டம் சார்பாக ரூ.105,700 பணம் பாடசாலை அதிபர் அல்ஹாஜ் MA. ஹலீம் இஸ்ஹாக், பிரதி அதிபர் AB. அஸ்மீர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் MMM. ராஷிக் ஆகியோர் முன்னிலையில் எமது நண்பர்கள் வட்ட நிர்வாக உறுப்பினர் பயாஸ் அவர்களினால் கையளிக்கப்பட்டது.
குறித்த செயற்றிட்டத்தில் எமக்கு பங்களிப்புச் செய்த எமது நண்பர்கள் வட்ட உறுப்பினர்கள் மற்றும் சக நண்பர்களான 2015 பழைய மாணவ உறுப்பினர்களுக்கும் எமது நண்பர்கள் வட்டம் சார்பான நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
------------------------------------------------
🌟 A Heartfelt Tribute Through Giving 🌟
The final day of the PPA Challenge Cup 2025, organized by the Past Pupils' Association - Oddamavadi Central College - National School , was held yesterday at our beloved school ground.
During the event, a generous donation of Rs. 105,700 was handed over by our friends' circle member Mr. FaYas Fwzl Amr on behalf of our friends' circle, in the presence of the Principal Al-Haj MA. Haleem Ishaq, Deputy Principal Mr. AB. Asmeer, and the OBA Secretary Mr. MMM. Razick. This contribution will go toward the construction of a new school mosque, made as a "Sadaqatul Jariyah" in loving memory of our late brothers and fellow circle members, Mohamed Azam and Nusaik Ahamed 💐.
We extend our heartfelt thanks and duas to all the members of our friends' circle and the members of Class Of 2k15 who stood with us and supported this noble initiative. May this act of kindness bring continuous rewards to our departed friends and blessings to everyone who contributed. 🤲