Vivekananda College of Technology

Vivekananda College of Technology Community accepted college of technology for socio-economic development of deprived of opportunity.
(3)

நம் தேசத்தின் தூண்களான இளைஞர், யுவதிகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக தொழில்நுட்பத் திறன் விருத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்கும் தலைசிறந்த ஒரு தொழில்நுட்ப தொழில்பயிற்சி தொழில்க்கல்வி நிறுவனமாக திகழல். Becoming a prominent institution which paving path for socio-economic development of youth of both sex, through vocational and technical education, as they are the pillars of the nation.

🎂 எமது நிறுவனருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎉விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி (VCOT) மற்றும் சமூக நலன்புரி  அமைப...
16/05/2026

🎂 எமது நிறுவனருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎉

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி (VCOT) மற்றும் சமூக நலன்புரி அமைப்பின் (SWO) தொலைநோக்கு சிந்தனையாளரும், எம்மைக் காக்கும் வழிகாட்டியுமாகிய எமது அன்பு நிறுவனர் திரு. K. சற்குணேஸ்வரன் அவர்களுக்கு எமது அகமகிழ்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்திற்காகவும், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் இரு தசாப்தங்களுக்கும் மேலாகத் தங்களை அர்ப்பணித்துச் செயலாற்றி வரும் தங்களின் உன்னத சேவை என்றும் போற்றத்தக்கது.

தாங்கள் நீடூடி, ஆரோக்கியத்துடனும் சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழ்ந்து, எம்மையும் இந்தச் சமூகத்தையும் தொடர்ந்து நல்வழிப்படுத்த இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

✨ Happy Birthday Dear Founder! ✨

16/05/2026

காலையில் ஒரு தியானம் - நாள் முழுவதும் உற்சாகம்! ⚡💪

"சாதாரண மூச்சுப் பயிற்சிக்கும், தியானத்தின் போது செய்யும் மூச்சுப் பயிற்சிக்கும் உள்ள வித்தியாசத்தை இன்று உணர்ந்தோம். இது வெறும் பயிற்சி அல்ல, உடலுக்கு ஆற்றலைச் சேமிக்கும் ஒரு வழி!" - எமது மாணவர்களின் அனுபவம்.

மனதில் உள்ள பதட்டத்தை போக்கி, கவனத் திறனை அதிகரிக்க யோகா ஒரு சிறந்த கருவி. 🧠✨

15/05/2026

மாணவர் வெற்றிப் பயணம் - வினோதனின் நேர்காணல்
"தொலைவு ஒரு தடையல்ல... முன்னேற துடிக்கும் மாணவர்களுக்கு VCOT ஒரு வரப்பிரசாதம்!"

Build Your Future with Vibe Coding! 💻✨Coding தெரியாதா? கவலையே வேண்டாம்! AI உதவியுடன் நீங்களும் ஒரு AI Builder ஆகலாம்!  ந...
11/05/2026

Build Your Future with Vibe Coding! 💻✨

Coding தெரியாதா? கவலையே வேண்டாம்! AI உதவியுடன் நீங்களும் ஒரு AI Builder ஆகலாம்!

நீங்கள் ஒரு School Leaver-ஆ? அல்லது புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கத் துடிக்கும் ஆரம்பநிலை மாணவரா? வெறும் தியரியை மட்டும் படிக்காமல், நேரடியாகச் செயலில் இறங்குங்கள்!

எமது Vibe Coding Portfolio Accelerator பாடநெறியில் இணைந்து, 0 வில் இருந்து 30 நிஜ உலக புராஜெக்ட்களை (Real-World Projects) நீங்களே உருவாக்கி அசத்துங்கள்!

🌟 இந்த பாடநெறியின் சிறப்பம்சங்கள் (Course Highlights):
✅ Beginner Focused: கோடிங் அனுபவம் இல்லாதவர்களும் சுலபமாகப் படிக்கலாம்.
✅ 30 Portfolio Projects: உங்கள் திறமையை நிரூபிக்க 30 விதமான செயலிகளை உருவாக்குவீர்கள்.
✅ AI-Powered Building: AI கருவிகளைப் பயன்படுத்தி புராஜெக்ட்களைத் திட்டமிடவும் உருவாக்கவும் கற்றுக்கொள்வீர்கள்.
✅ English for AI: AI-உடன் திறம்பட உரையாடி வேலை வாங்கத் தேவையான ஆங்கிலப் பயிற்சி.
✅ Critical Thinking: AI தரும் விடைகளைச் சரியாக மதிப்பீடு செய்யும் திறன்.

🛠 நீங்கள் எவற்றையெல்லாம் உருவாக்குவீர்கள்?

(Become an AI Creator)Smart Study Planners AI Chatbots for Learning Personal Portfolio Websites Interactive Apps and Tools 30 Projects. One Portfolio. Infinite Opportunities.

பாடநெறியின் இறுதியில் வெறும் சான்றிதழ் மட்டுமல்ல, உங்களின் சொந்த 30 புராஜெக்ட்கள் அடங்கிய போர்ட்ஃபோலியோ உங்கள் கையில் இருக்கும்!

📅 காலம்: 3 மாதங்கள் | பகுதிநேரம் (Part-time)

📍 இடம்: விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி (VCOT)

📞 இன்றே பதிவு செய்யுங்கள்: https://forms.gle/c5axfYwerDMiYKGm8r

🌐 மேலதிக விபரங்களுக்கு: 075 0 790 790 / 075 7738872

விவேகானந்தா சமூதாய அறக்கட்டளையினூடாக மற்றும் மனிதநேயம் அறக்கட்டளையின் உதவியுடன், காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியான...
10/05/2026

விவேகானந்தா சமூதாய அறக்கட்டளையினூடாக மற்றும் மனிதநேயம் அறக்கட்டளையின் உதவியுடன், காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியானது பயிலுனர்களுக்கான பயிற்சிகள் மாத்திரமின்றி பல்வேறு செயற்பாடுகளையும் மேற்கொண்டுவருகிறது.

அந்த வகையில், “வாழ்வியலும் வழிகாட்டலும்” என்ற தொனிப்பொருளில் கிராமங்கள் தோறும் சமுதாயக் கல்லூரிகளை அமைக்கும் VCOT இன் ஒரு செயற்பாட்டில், காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியின் CareerFit & IT பாடநெறிக்கான 3ஆவது தொகுதி பயிலுநர்களுக்கான இறுதி மதிப்பீடு 29.04.2026 அன்று இடம்பெற்றது.

இதன்போது, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன், கல்லூரியின் செயற்றிட்ட முகாமையாளர் திருமதி ஹ. கிந்துஜா மற்றும் பயிற்றுவிப்பாளர் பா. நிபுசாலினி ஆகியோர் கலந்துகொண்டு இந்த இறுதிக்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டனர்.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கடந்த 12 ஆண்டுகளாக அரச அங்கீகாரத்துடனான NVQ சான்றிதழ் பயிற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு...
09/05/2026

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கடந்த 12 ஆண்டுகளாக அரச அங்கீகாரத்துடனான NVQ சான்றிதழ் பயிற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு தொழில்திறன்களை வழங்கி வருகின்றது. 2012 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இக்கல்லூரியானது, மூன்றாம் நிலை மற்றும் தொழில் பயிற்சி ஆணையம் (TVEC) இன் கீழ் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சி நிறுவனமாகும்.

பின்தங்கிய மற்றும் வளம் குறைந்த சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை மையமாகக் கொண்டு, தொழில்முறை அறிவு, நடைமுறை அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு NVQ பயிற்சி நெறிகள், திறன் மேம்பாட்டு பாடநெறிகள், மொழிப் பயிற்சிகள் மற்றும் தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தொழில்திறன் பயிற்சிகளுடன் இணைந்து வாழ்க்கைத்திறன் பயிற்சிகள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்படுவதன் மூலம், இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை உறுதியான பாதையில் அமைத்துக்கொள்ளவும், தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் சாதனையாளர்களாக உருவெடுக்கவும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகின்றது.

அந்த வகையில், எதிர்கால சமுதாயமான தற்போதைய இளையோர் மற்றும் யுவதிகள் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு திசைதிருப்பல்களுக்கு உள்ளாகுவதுடன், பலர் மனஅழுத்தங்களினாலும் பாதிக்கப்பட்டு கல்வி மற்றும் தொழில்துறைகளில் சரியான முறையில் முன்னேற முடியாமல் திசைமாறிச் செல்கின்றனர்.

இவ்வாறான நிலையில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் 08.05.2026 அன்று மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கான தியானத்துடன் இணைந்த மூச்சுப் பயிற்சி, கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் செயற்றிட்ட முகாமையாளர் திருமதி ஹ. கிந்துஜா மற்றும் கல்லூரியின் வளவாளர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

தற்போது அனைத்து தொழில்துறைகளிலும் அபார வளர்ச்சியை கண்டுள்ள AI-powered Development தொடர்பான பயிற்சி பட்டறை, 02.05.2026 அன...
03/05/2026

தற்போது அனைத்து தொழில்துறைகளிலும் அபார வளர்ச்சியை கண்டுள்ள AI-powered Development தொடர்பான பயிற்சி பட்டறை, 02.05.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது. அனைத்து தொழில் தேடுநர்களுக்கும் அவசியமான இந்தப் பயிற்சி பட்டறை பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதன்போது தலைமைப் பயிற்சியாளர் (Master Trainer) திரு. R. J. Roshan Joel அவர்கள், ‘White-coding’ (Vibe Coding) நுட்பங்களை மிகவும் எளிமையான முறையில் பங்கேற்பாளர்களுக்கு கற்பித்தார்.

மேலும், இப்பயிற்சி பட்டறையின் மூலம் பங்கேற்பாளர்களுக்கு AI tools பயன்படுத்தி code உருவாக்குவது எப்படி, Prompt Engineering techniques, AI Agents மூலம் Apps மற்றும் Websites உருவாக்குவது போன்ற நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பாக நடைமுறை அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அத்துடன், Hands-on experience அடிப்படையில் பங்கேற்பாளர்கள் தங்களுடைய சொந்த Mini Project-களையும் உருவாக்கி நிறைவு செய்தனர்.

மேலும், AI-powered Development பயிற்சி பட்டறையில் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் (Executive Director) திரு. K. பிரதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

பயிற்சி பட்டறையை வெற்றிகரமாக நிறைவு செய்த 28 பங்கேற்பாளர்களுக்கு, திரு. K. பிரதீஸ்வரன் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

உலகைத் தாங்கும் உன்னத உழைப்புக்கு தலைவணங்குவோம்!"நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பக் கல்வியே முதுகெலும்பாகும். எமது...
01/05/2026

உலகைத் தாங்கும் உன்னத உழைப்புக்கு தலைவணங்குவோம்!"

நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பக் கல்வியே முதுகெலும்பாகும். எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி (VCOT) சமூகத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் அனைத்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் எதிர்காலத் தூண்களாகத் திகழும் எமது மாணவர்களின் அர்ப்பணிப்பையும் திறமையையும் இன்றைய நாளில் கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

உழைப்பால் உயர்வோம்! எமது தேசத்தைக் கட்டியெழுப்புவோம்!

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தசாப்தம் கடந்த சேவையினை மட்டக்களப்பு மண்ணிற்கு வழங்கி வரும் உன்னத பணியை ஆற்றி வ...
30/04/2026

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தசாப்தம் கடந்த சேவையினை மட்டக்களப்பு மண்ணிற்கு வழங்கி வரும் உன்னத பணியை ஆற்றி வருகின்றது. உயர்தரத்தின் பின்னர் பல்கலைக்கழக வாய்ப்பினை இழந்து அல்லது சாதாரண தரத்தோடு அல்லது அதற்கும் குறைந்த கல்வி மட்டத்தில் எதிர்கால சமூகத்தை எதிர்கொள்வதில் சவால்களை சந்திக்கும் இளைஞர், யுவதிகளுக்கு உயர் கல்வி என்றாலே பல்கலைக்கழகம் மட்டுமல்லாது பல்வேறு வழிகள் தற்போது எமது நாட்டின் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைப்பில் உள்ளன என்பதை தெளிவுபடுத்தி ஒரு பட்டதாரிக்கு நிகரான அல்லது அதைவிட மேலான தொழில்முறைத் தகைமையை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை களத்தினை ஏற்படுத்துவதில் பாரிய பங்காற்றி வருகின்றது.

இதன் அடிப்படையில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் தற்போது க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய காத்திருக்கும் பயிலுனர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, 28.04.2026 அன்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பிலான வழிகாட்டல் செயலமர்வு நடைபெற்றது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களால் இந்த வழிகாட்டல்கள் கல்லூரியில் பயிற்சி பெறும் NVQ L3, CNT L4, Career Fit & IT பயிலுனர்களில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் பயிலுநர்களுக்கு பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும...
26/04/2026

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் பயிலுநர்களுக்கு பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் Gender Equality Workshop சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் பயிற்சியின் மூலம் ஆண்கள், பெண்கள் மற்றும் அனைத்து பாலினத்தவர்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டிய அவசியம் குறித்து இ. சுகந்தியா (MSW, சமூகப் பணியாளர்) அவர்களால் விரிவாக விளக்கப்பட்டது. சமூகத்தில் நிலவும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை குறைக்கும் வழிமுறைகளும் இதில் எடுத்துரைக்கப்பட்டன.

மேலும், பாலின சமத்துவம் தொடர்பான சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் செயல்முறையில் ஈடுபட்டார்.

உங்கள் பெயர்.. பூமியின் மலைகளாலும் ஆறுகளாலும் எழுதப்பட்டால்? 🏔️ நேசா (NASA) உருவாக்கிய இந்த மேஜிக்! உடனே செக் பண்ணி பாரு...
25/04/2026

உங்கள் பெயர்.. பூமியின் மலைகளாலும் ஆறுகளாலும் எழுதப்பட்டால்? 🏔️ நேசா (NASA) உருவாக்கிய இந்த மேஜிக்! உடனே செக் பண்ணி பாருங்க!

50 ஆண்டுகால பூமியின் கண்காணிப்புத் தரவுகளை (Data) மக்கள் எளிதில் அணுகும் வகையில் நாசா மாற்றியிருப்பது வியக்கத்தக்கது. புவியியல் அமைப்புகளைக் கொண்டு எழுத்துக்களை உருவாக்கும் இந்த "Your Name in Landsat" திட்டம் ஒரு சிறந்த படைப்பு.

"உங்கள் பெயரைப் பார்க்க லிங்க் முதல் கமெண்டில் உள்ளது. பார்த்துவிட்டு அந்தப் படத்தை இங்கே பகிருங்கள்! 🖼️👇

Address

Main Road, Puthukkudiyiruppu
Batticaloa
30000

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+94777105569

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda College of Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vivekananda College of Technology:

Share