Batticaloa HRFAC

Batticaloa HRFAC வளர்ச்சி, உரிமைகளைப் பாதுகாத்தல்
| අයිතිවාසිකම් සපිරි සංවර්ධනයක් | Development protecting rights

18/06/2026

වාකරේ ප්‍රදේශයේ පදිංචිව සිටින මානසික ආබාධයකින් පෙළෙන පුද්ගලයකුගෙන් මේ වනවිට එම ප්‍රදේශයේ පදිංචිව සිටින ජනතාවට කරදකාරී තත්වයක් උද්ගත වී තිබේ.

මෙම පුද්ගලයා එම ප්‍රදේශයේ ජීවත්වන පුද්ගලයන් කිහිපදෙනෙකුට පහර දීමක් ද සිදුකර ඇත. මේ සම්බන්ධව පොලීසිය වෙත පැමිණිළි කළද පොලීසිය විසින් එම පැමිණිල්ල බාර ගැනීම ප්‍රතික්ෂේප කරන බව වාර්තා වේ. ඔවුන් ඒ සඳහා පවසා සිටින්නේ බරපතල පහර දීමක් නොවී ඇති බැවින් එම පැමිණිල්ල බාර ගැනීමට නොහැකි බවයි.

මේ සම්බන්ධව සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරීන් වෙත පැමිණිළි කල විට ඔවුන් ද පවසා ඇත්තේ එම පුද්ගලයාට ප්‍රතිකාර කිරීම සඳහා පොලීසියේ පැමිණිල්ලක් කර පැමිණෙන ලෙසයි.

එහෙත් පොලීසිය විසින් පැමිණිල්ල බාර ගැනීමේ කටයුත්ත සිදු නොකීරීම මත මෙම පුද්ගලයන් අපහසුතාවයකට පත් ව ඇත.

#මානසිකආබාධ #ආරක්ෂාව #පොලීසිය #නීතිය #මානවහිමිකම් #වගවීම Batticaloa HRFAC

16/06/2026

🖐️ Hand Touch Handicraft Products – Batticaloa 🖐️

Beautify your home and surprise your loved ones with wonderful gifts! Beautiful handicraft products are now available in Batticaloa.

✨ At Hand Touch Handicraft Products, you can find high-quality, attractive, and unique handmade crafts.

📍 Address: No. 06, Batticaloa Public Market, Vegetable Row Shop, Batticaloa.
📧 E-mail: [email protected]
📞 Contact: 077 446 2195

🌿 The beauty of handicrafts… the decoration of your home… 🌿












“கண்டிப்பா? கொடூரமா?” — மட்டக்களப்பில் மாணவர் தாக்குதல் சம்பவம் எழுப்பும் கேள்விகள்மட்டக்களப்பில் இடம்பெற்றதாக கூறப்படும...
03/06/2026

“கண்டிப்பா? கொடூரமா?” — மட்டக்களப்பில் மாணவர் தாக்குதல் சம்பவம் எழுப்பும் கேள்விகள்

மட்டக்களப்பில் இடம்பெற்றதாக கூறப்படும் மாணவர் தாக்குதல் சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் தகவல்களும் வெளியாகியதைத் தொடர்ந்து, மாணவர் ஒழுக்கம், ஆசிரியர் அதிகாரம், உடல் தண்டனை மற்றும் கல்விச் சூழலின் மனிதாபிமானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

“இக்காலத்து மாணவர்கள் ஒழுக்கமற்றவர்கள்”, “ஆசிரியர் காரணமில்லாமல் அடித்திருக்க மாட்டார்”, “அடியாத மாடு படியாது” போன்ற கருத்துக்கள் ஒரு புறம் முன்வைக்கப்பட்டாலும், மற்றொரு புறம் மாணவர்களின் உடல் மற்றும் உளநல பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகளும் எழுந்துள்ளன.

நடந்தது என்ன?

தகவல்களின்படி, வகுப்பறையில் White Board இல் எழுதப்பட்டிருந்த இரண்டு பாடங்களுக்கான குறிப்புகள் தவறுதலாக மாணவனால் முழுமையாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அதில் ஒரு பகுதி ஆசிரியர் எழுதிய குறிப்புகள் என்பதை உணர்ந்த மாணவன், அடுத்த வகுப்பறையில் இருந்து Marker ஒன்றை எடுத்து வந்து மீண்டும் எழுதுவதற்காக சென்றுள்ளார்.

இந்த சூழ்நிலையில், அடுத்த வகுப்பில் இருந்த ஆசிரியராலும் பின்னர் குறிப்புகளை எழுதி சென்ற ஆசிரியராலும் மாணவன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவனின் தவறாக சுட்டிக்காட்டப்படுவது — எழுதப்பட்ட குறிப்புகளை அழித்தமை மற்றும் Marker கேட்டமை மட்டுமே.

ஆனால், அந்த தவறுக்கான பதிலடி எந்த அளவிற்கு நியாயமானது என்பது தற்போது பெரும் கேள்வியாக மாறியுள்ளது.

ஒழுக்கம் கற்பிப்பதா? அல்லது வன்முறையா?

கல்வி சூழலில் ஒழுக்கம் அவசியம் என்பது மறுக்க முடியாத ஒன்று. மாணவர்கள் தவறு செய்தால் அவர்களை திருத்துவதும், கண்டிப்பதும் ஆசிரியர்களின் பொறுப்பாகும். ஆனால் அந்த கண்டிப்பு, மாணவரின் உடல் மற்றும் மனநிலையை பாதிக்கும் வன்முறையாக மாறும் போது அது கல்வியின் எல்லையை தாண்டிய செயல் ஆகிறது.

இந்த சம்பவத்தில், ஒரு ஆசிரியர் தனது கோபத்தில் நடந்த தவறை ஏற்றுக்கொண்டு மாணவனிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றொரு ஆசிரியர், கடுமையான தாக்குதலுடன் மட்டுமல்லாமல், “அடித்தே கொன்றிருப்பேன்” என மிரட்டல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான வார்த்தைகள் ஒரு மாணவனின் மனநிலைக்கு ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் மிக தீவிரமானதாக இருக்க முடியும். ஆசிரியர் என்பது மாணவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்க வேண்டிய நிலை; அச்சத்தை உருவாக்க வேண்டிய நிலை அல்ல.

“நாங்களும் அடிவாங்கித்தான் வளர்ந்தோம்” என்ற வாதம்

சிலர், “நாங்களும் அடிவாங்கித்தான் வளர்ந்தோம்” என்ற நிலைப்பாட்டை முன்வைக்கின்றனர். உண்மையில் கடந்த காலங்களில் பல ஆசிரியர்கள் கண்டிப்புடன் மாணவர்களை வழிநடத்தியுள்ளனர். அந்த கண்டிப்பை இன்று வரை மாணவர்கள் மரியாதையுடன் நினைவுகூரும் நிலையும் உள்ளது.

ஆனால் அந்த காலத்தின் தண்டனைகளும், இன்றைய கொடூரமான தாக்குதல்களும் ஒன்றல்ல. மாணவரின் நலனை முன்னிறுத்திய கண்டிப்புக்கும், கோபத்தின் வெளிப்பாடாக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கும் இடையே தெளிவான வேறுபாடு இருக்கிறது.

மாணவர்களை திருத்துவது ஆசிரியரின் கடமை என்றால், அவர்களை பாதுகாப்பதும் அதே அளவுக்கு முக்கியமான கடமையாகும்.

மாணவர்களும் மாறியுள்ளனர்; ஆசிரியர்களும் மாற வேண்டிய நேரம்

தற்கால மாணவர்களின் நடத்தை, கடந்த தலைமுறைகளிலிருந்து மாறுபட்டுள்ளது என்பதை பலரும் ஏற்கின்றனர். இருப்பினும், அதற்கான தீர்வு வன்முறை அல்ல.

மாணவர்களை புரிந்துகொண்டு, உரையாடலின் மூலம் திருத்தி, உளவியல் ரீதியாக அணுகி, அக்கறையுடன் வழிநடத்துவதே நவீன கல்வி முறையின் அடிப்படை நோக்கம்.

ஒரு Marker கேட்டதற்கும், தெரியாமல் குறிப்புகளை அழித்ததற்கும் இவ்வளவு கடுமையான தாக்குதல் வழங்கப்படுமானால், அதைவிட பெரிய தவறுகளுக்கான தண்டனை என்னவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

சட்டமும் மனித உரிமையும்

தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட மாணவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், வலயக் கல்விப் பணிமனை மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் கல்வி அமைப்பில் ஒழுக்கம் மற்றும் மனிதாபிமானம் ஆகிய இரண்டிற்கும் இடையிலான சமநிலையை மீண்டும் சிந்திக்க வைக்கிறது.

பாடசாலையின் பெயரா? உண்மையின் முக்கியத்துவமா?

ஒரு அல்லது இரண்டு ஆசிரியர்கள் செய்த தவறால் முழு கல்வி நிறுவனத்தின் கௌரவம் பாதிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் தவறுகளை மறைக்கும் முயற்சிகளும், சரியான தீர்வின்றி விடப்படும் நடவடிக்கைகளும் தான் கல்வி நிறுவனங்களின் நற்பெயருக்கு உண்மையான சேதத்தை ஏற்படுத்தும்.

தவறை ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதி கிடைக்கச் செய்வதும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத சூழலை உருவாக்குவதும் தான் கல்வி நிறுவனங்களின் உண்மையான பொறுப்பு.

இறுதியாக…

ஒழுக்கம் அவசியம். கண்டிப்பும் தேவையான தருணங்களில் இருக்கலாம். ஆனால் எந்த நிலையிலும் மாணவரின் உடல் மற்றும் மனநிலையை சேதப்படுத்தும் வன்முறைக்கு இடமில்லை.

கல்வி என்பது பயமூட்டும் இடமாக அல்ல; பாதுகாப்பும் நம்பிக்கையும் வழங்கும் இடமாக இருக்க வேண்டும்.

#මානවහිමිකම්

14/05/2026
Free Legal Camp – BatticaloaLegal consultation records were successfully conducted today through the Human Rights First ...
25/04/2026

Free Legal Camp – Batticaloa

Legal consultation records were successfully conducted today through the Human Rights First Aid Center, marking the 5th consecutive initiative in the Batticaloa District.

This free legal camp was carried out with the valued support of Right to Life Sri Lanka, continuing our commitment to provide accessible legal assistance and promote human rights awareness within the community.

📌 மட்டக்களப்பு மாவட்டத்தில் 5வது முறையாக
மனித உரிமைகள் முதலுதவி மையத்தின் மூலம்
இன்றைய தினம் இலவச சட்ட ஆலோசனை முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இம்முகாம் Right to Life Sri Lanka நிறுவனத்தின் ஆதரவுடன் நடைப்பெற்றது.
பொதுமக்களுக்கு சட்ட உதவிகளை எளிதில் பெற வழிவகை செய்யும் எமது முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

20/04/2026
සුබ අලුත් අවුරුද්දක් වේවා! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Happy Sinhala and Tamil New YearLet's welcome the year which ...
13/04/2026

සුබ අලුත් අවුරුද්දක් වේවා!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Happy Sinhala and Tamil New Year

Let's welcome the year which gives hope, Let's welcome the year which gives happiness, Let's cherish each moment it beholds.

Address

Manin Street, Santhivelli
Batticaloa
30000

Opening Hours

Monday 09:00 - 04:00
Tuesday 09:00 - 04:00
Wednesday 09:00 - 04:00
Thursday 09:00 - 04:00
Friday 09:00 - 04:00

Alerts

Be the first to know and let us send you an email when Batticaloa HRFAC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share