04/09/2026
அன்புடன் அழைக்கின்றோம்.......................................................
எமது பிரதேசத்தில் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களின் (Executive Officers - SLAS, SLEAS, SLOS....) தேவை அதிகரித்து வருவதனை நாம் அறிவோம்.
இத்தேவையை நிறைவேற்றும் நோக்கோடு கொழும்பை தலைமையகமாகக்கொண்ட Insight மற்றும் Civil Leadership initiative ஆகிய நிறுவனங்களோடு இணைந்து ஏறாவூரில் உள்ள பட்டதாரிகள், உள்வாரி பட்டதாரிகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
இதுவரை நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர் போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க உள்ளவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.
இக்கருத்தரங்கை நடாத்துவதற்காக கொழும்பை சேர்ந்த தேசிய வளவாளர் முஸ்தபா அன்ஸார் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
முற்றிலும் இலவசமான இக்கருத்தரங்கில் கலந்து பயன்பெற்று எமது ஊரின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற முன்வருமாறு அன்பாக அழைக்கிறோம்.
#இடம்- எறாவூர் நகர சபை மண்டபம்
#காலம்- 06-09-2026 ஞாயிறு பி.ப 4.00 மணி முதல் 6.00 மணி வரை.
இப்படிக்கு
அஷ்ஷெய்க் எம்.எல்.ஏ. வாஜித்
ஏறாவூர்