Anuradhapura District Federations of Muslim League Youth Fronts

Anuradhapura District Federations of Muslim League Youth Fronts "Take the opportunity to help the community"

16/06/2025

Join us for innovation and diversity for an immersive 2-day experience featuring interactive workshops, policy discussions, and strategic sessions led by experts.

Calling young digital innovators and changemakers looking to take their digital development project to the next level…⁣ ...
02/06/2025

Calling young digital innovators and changemakers looking to take their digital development project to the next level…⁣

📢 Stay tuned …

📢 Stay tuned for more opportunities!
30/05/2025

📢 Stay tuned for more opportunities!

Get ready to join us in this July.Age Limit- 18-35
28/05/2025

Get ready to join us in this July.

Age Limit- 18-35

அநுராதபுரம் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான அரியதோர் வாய்ப்பு…
21/05/2025

அநுராதபுரம் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான அரியதோர் வாய்ப்பு…

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு இன்று (20) பிற்பகல் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜே. ஆர...
20/05/2025

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு இன்று (20) பிற்பகல் கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜே. ஆர். ஜயவர்தன நிலையத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்வின் இலங்கை பாராளுமன்றத்தின் முன்னைய நாள் சபாநாயகர் தேசமான்ய கரு ஜயசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியான தயான் ஜயதிலக “Unveiling Justice: How the Palestine Context Highlights Global Challenges for Institutions and Smaller Nations’ “ எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வின் சிறப்புரையை நிகழ்த்தினார்.

முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம்.ஏ.பாக்கீர் மாக்கார் அவர்கள் மீதான அனுதாப பிரேரணைகளின் தொகுப்பு இதன்போது நூலாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

வெளிநாட்டு இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஸ்தாபகர்களின் மறுமை ஈடேற்றத்துக்காக இதன்போது துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு-2025      #2025
15/05/2025

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு-2025

#2025

சர்வதேச பாடசாலைகள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஆய்வு.சர்வதேசப் பாடசாலைகளின் தரங்கள் குறித்து அக...
16/02/2025

சர்வதேச பாடசாலைகள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஆய்வு.

சர்வதேசப் பாடசாலைகளின் தரங்கள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

பெப்ரவரி 01 2025 ஆம் திகதி நடைபெற்ற முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் விசேடக் கூட்டத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டது. இதில் கல்விமான்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி முனீர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடைக்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு துறைசார் நிபுனர்களை உள்ளடக்கி ஆய்வுக்குழு தாபிக்கப்படவுள்ளது.

சர்வதேச பாடசாலைகளின் தோற்றம் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் அவற்றின் தரம் குறித்து எந்த அமைப்புக்களோ, நிறுவனங்களோ ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. இதன்காரணமாக அதிகமான சர்வதேசப் பாடசாலைகள் தரம் குறைந்தே காணப்படுகின்றது. அதுபோல் தகுதி குறைவான ஆசிரியர்கள், வளப்பற்றாக்குறை, நெருக்கீடு, பாதுகாப்பின்மை, வழுவற்ற கட்டிடங்கள், கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் குறைபாடு, வணிக நோக்கம், பயிற்சிகள் குறைபாடு, ஒழுக்க குறைபாடு போன்ற பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

வெகு விரைவில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, இது சம்பந்தமான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கல்வி அமைச்சின் ஆலோசனையோடு சரியான பொறிமுறையொன்றினை உருவாக்குவதே எமது நோக்கம் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் திரு. ஷாம் நவாஸ் அவர்கள் தெரிவித்தார்கள்.

இத்திட்டத்துடன் இணைய ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திட்க்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பினை மேற்கொள்ளவும். 0777359678 அல்லது [email protected]

முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான பிரதிநிதியொருவர் அமைச்சரவையில் இல்லாதிருப்பது கவலை தருகிறது – முஸ்லீம...
18/11/2024

முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான பிரதிநிதியொருவர் அமைச்சரவையில் இல்லாதிருப்பது கவலை தருகிறது – முஸ்லீம் லீக் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.

புதிய அமைச்சரவையில் எமது முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான எமது பிரதிநிதியொருவர் இல்லாதிருப்பதனால் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உங்களது அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு உள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது என்பதனை கவலையுடன் உங்களிடம் முன்வைக்கிறோம் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு வரைந்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸ்ஸநாயக இன்று (18) நியமித்த அமைச்சரவையில் முஸ்லீம் சமூகத்தில் இருந்து எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நிகழ்ந்துள்ள இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2024.11.14 ஆம் திகதி நடைபெற்ற 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நீங்கள் தலைமை வகிக்கும் அணி அனைத்து மக்களினதும் ஆதரவுடன் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உங்களால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் எதிர்காலச் செயற்பாடுகள் சகல வழிகளிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காகப் பணியாற்றத் கூடிய அமைச்சரவையாக மாற வேண்டும் என நாங்கள் மனதாரப் பிரார்த்திக்கிறோம் எனவும்

இந்த அமைச்சரவையில் எமது முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான எமது பிரதிநிதியொருவர் இல்லாதிருப்பதனால் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உங்களது அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு உள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது என்பதனை கவலையுடன் உங்களிடம் முன்வைக்கிறோம் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர்,

கௌரவ ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்டி துரிதமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக எமது சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

முஸ்லீம் லீக் வாலிப முன்னணி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு விஜயம்.அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன...
04/08/2024

முஸ்லீம் லீக் வாலிப முன்னணி உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு விஜயம்.

அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் அண்மையில் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர்.
அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் ஏற்பாட்டில் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் ஷாம் நவாஸினால் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

முஸ்லிம் இளைஞர்களை சமூக மற்றும் தேசிய விவகாரங்களில் பங்கெடுக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்கும் சம்மேளனத்தின் பணிகளில் ஒரு பகுதியாகவும், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களில் இளையோர் செயலாற்றுதலை வினைதிறனாக்கும் முகமாகவும் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த விஜயத்தின் போது பாராளுமன்றத்தைச் சுற்றி பார்வையிட்ட அங்கத்தவர்கள் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றனர்.

நாட்டை வளப்படுத்தும் செயற்பாடுகளிலும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பிலும் இளைஞர்களைப் பயிற்றுவிப்பது தொடர்பான விடயங்களும் இந்த நிகழ்வின் போது கலந்துரையாடப்பட்டன. அடுத்தடுத்த விஜயங்களில் ஏனைய நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களும் மாவட்ட மட்ட இளைஞர் அங்கத்தவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அஹமதாபாத் கைதானோர் விவகாரம் முஸ்லிம் லீக் வெளிவிவகார இராஜாங்க அமைச்சரை சந்திப்பு.
03/06/2024

அஹமதாபாத் கைதானோர் விவகாரம் முஸ்லிம் லீக் வெளிவிவகார இராஜாங்க அமைச்சரை சந்திப்பு.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு  "Artificial Intelligence, Deepfake Tech...
11/05/2024

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு "Artificial Intelligence, Deepfake Technology, Disinformation and Democracy" (செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல், திரிபுபடுத்தல், மற்றும் ஜனநாயகம்) எனும் தொனிப்பொருளில் கொழும்பு 07 இல் அமைந்துள்ள சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவக கேட்போர் கூடத்தில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தேசிய தலைவர் எம்.என். ஷாம் நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பண்ணிப்பாளரும், சர்வதேச ஊடக ஒத்துழைப்பு ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய ஆலோசகருமான கலாநிதி ரங்க கலன்சூரிய ஆகியோர் இந்நிகழ்வில் விசேட பேச்சாளர்களாக கலந்து கொண்டு சிறப்புக்கருத்துரைகளை நிகழ்த்தினர்.

சம்மேளனத்தின் இலக்கு மற்றும் கடந்த கால செயற்பாடுகள் குறித்த விளக்கத்தினை முன்னாள் தலைவர்களில் ஒருவரும், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான சிரேஷ்ட சட்டத்தரணி என். எம்.சஹீட் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், அரசியல் காட்சிகளின் பிரதிநிதிகள், பல் துறையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Address

Anuradhapura

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+94776214141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anuradhapura District Federations of Muslim League Youth Fronts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Anuradhapura District Federations of Muslim League Youth Fronts:

Share