12/04/2026
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
எம்மை விட்டு பிரிந்த எமது முன்னாள் உறுப்பினர், சகோதரன் பஸ்லான் அவர்கள்,
சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த, உயர்ந்த நற்பண்புகளும் நேர்மையும் கொண்ட ஒரு மாமனிதர்.
அவர் Class of 1999(Batch) குழுமத்தைச் சேர்ந்த மாணவராக விளங்கியதுடன்,
எமது பாடசாலையில் மாணவத் தலைவராகப் (Head Prefect) ஆக பணியாற்றி,
தன்னுடைய தலைமைத்துவ திறன், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வின் மூலம்
அனைவரின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்.
அஸ்ஹர் பழைய மாணவர் ஒன்றியம் (OAU) மற்றும் முன்னாள் மாணவத் தலைவர்கள் ஒன்றியத்திலும் (PPG) உறுப்பினராக இருந்து,
தன்னுடைய அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் அடுத்த தலைமுறையினருக்கு பகிர்ந்தவர்.
அவர் எமது பாடசாலையுடன் இணைந்து செயல்பட்ட காலங்களில்,
சமூக நலனுக்காக ஆழ்ந்த அக்கறையுடன் இடைவிடாமல் உழைத்து,
உதவி தேவைப்படும் பலரின் வாழ்க்கையில் ஒளியாக திகழ்ந்தவர்.
அவரது சேவை என்பது வெறும் செயற்பாடாக இல்லாமல்,
மனித நேயத்தின் உண்மையான வெளிப்பாடாக இருந்தது.
அவர் தொடந்த ஒவ்வொரு பணியிலும் நம்பிக்கையையும் நல்வாழ்வையும் விதைத்தவர்.
அவரது பணிவு, அமைதியான நடத்தை, இனிய பேச்சு மற்றும் மனித நேய சிந்தனைகள்
அவரை அறிந்த ஒவ்வொருவரின் இதயத்திலும் அழியாத நினைவாக பதிந்துள்ளது.
அவருடன் சில நிமிடங்கள் பேசினாலே கூட,
அவரின் மனமுள்ள இயல்பும் கருணையும் தெளிவாக உணர முடிந்தது.
அவர் ஒரு மனிதராக மட்டுமல்ல,
ஒரு நல்ல நண்பர், ஒரு உண்மையான சகோதரர்,
ஒரு நம்பிக்கையூட்டும் வழிகாட்டி என பல பரிமாணங்களில் விளங்கியவர்.
இன்று அவரின் இழப்பு எமக்கு ஒரு உறுப்பினரை மட்டுமல்ல,
எப்போதும் எம்முடன் நின்று ஆதரவு அளித்த ஒரு அன்பு உள்ளத்தையும்,
எம்மை வழிநடத்திய ஒரு ஒளி விளக்கையும் இழந்த துயரமாகும்.
இந்த இழப்பு எமது அமைப்பிற்கும் சமூகத்திற்கும்
ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகவே உணரப்படுகிறது.
அவரின் இல்லாமை எமது உள்ளங்களில் நிரப்ப முடியாத வெற்றிடமாகவே இருக்கும்.
இருப்பினும், அவர் செய்த எண்ணற்ற நற்செயல்கள்,
அவரால் உயர்ந்த வாழ்க்கைகள்,
அவர் விட்டுச் சென்ற நல்ல வழிகள் மற்றும் இனிய நினைவுகள்
என்றும் எமக்குள் உயிருடன் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
அவை எம்மை தொடர்ந்து நல்வழியில் நடத்தும் ஒளியாகவும்
அவரின் வாழ்க்கையை நினைவுகூரும் உறுதியான சாட்சியாகவும் இருக்கும்.
அல்லாஹ் அவருடைய அனைத்து குறைகளையும் மன்னித்து,
அவரது கப்ரை விசாலமாக்கி, ஒளியால் நிரப்பி,
அவருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் இடம் வழங்குவானாக.
அவரை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்
அல்லாஹ் அளவற்ற பொறுமையையும் மன வலிமையையும் அருள்வானாக.
இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பானாக.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அஸ்ஹர் பழைய மாணவர் ஒன்றியம்(OAU)
அக்குறணை