APEC International

APEC International EDUCATION ,YOUTHS DEVELOPMENT & SOCIAL DEVELOPMENT IN OUR REGION

அக்கரைப்பற்று, இலுக்குச்சேனை  அல்-ஹுதா வித்தியாலயம்.அக்கரைப்பற்று கல்வி வலய ஆளுகைக்குட்பட்ட இப் பாடசாலையானது மிகவும் பின...
29/10/2025

அக்கரைப்பற்று, இலுக்குச்சேனை அல்-ஹுதா வித்தியாலயம்.

அக்கரைப்பற்று கல்வி வலய ஆளுகைக்குட்பட்ட இப் பாடசாலையானது மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பாரிய சவால்களை எதிர்நோக்கியும், பலதரப்பட்ட விமர்சனங்களுக்குள் உள்ளாகியும் இயங்கிக்கொண்டு உள்ளது.

இப் பாடசாலை 1986 ம் ஆண்டு APEC international ஆலோசகர்களான மூத்த ஆசிரியர் எம்.எம்.ஹாஷிம் மற்றும் மூத்த ஆசிரியர் மர்ஹும் கே.எம்.நஜுமுத்தின் அவர்களால்
PEOPLE CONGRESS நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அரச பாடசாலையாக இயங்கியது.

இப் பாடசாலையானது தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்றால்,
இப் பாடசாலை விடயத்தில் சமூகத்தில் உள்ள எல்லா தரப்பினர்களின் ஆலோசனைகளும், பங்களிப்பும் அவசியமாகிறது!

இதற்காக,
முழுமையான ஒரு நிகழ்ச்சி திட்டத்தை முன்னெடுக்க APEC international இன்று 29/10/2025 ல் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு செயற்படுத்த முன்வந்துள்ளது.!

அதிபர் தலைமையில்,
வலய கல்வி பணிப்பாளர், பிரதேச சபை தவிசாளர், வட்டார உறுப்பினர், பிரதேச கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பள்ளிவாசல் தலைவர் மற்றும் பெற்றோர்கள் இதில் பங்குதாரர்களாக இயங்க ஆலோசிக்கப்பட்டது!

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் பாடசாலையின் பலதரப்பட்ட தேவைகள் நிறைவேற்றி ஒரு முன்னோடி பாடசாலையாக திகழ
APEC international பாடுபடும்.!!

Address

Main Street
Akkaraipattu

Telephone

+94771524740

Website

Alerts

Be the first to know and let us send you an email when APEC International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share