26/02/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
புனிதம் மிக்க ரமழான் மாதத்தை நாம் கடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தில் வசிக்கும் எமது மூத்த உடன்பிறப்புகளுக்காக இஃப்தார் மற்றும் சஹர் உணவு ஏற்பாடுகளைச் செய்வதற்கான ஒரு நற்காரிய முயற்சியை Royal Youths அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!!
குடும்ப ஆதரவு இன்றி, உடல்நலக் குறைபாடுகளுடன், பராமரிப்பு தேவையுடன் வாழும் இந்த முதியவர்கள் ரமழான் மாதத்தில் அமைதியாகவும் மரியாதையுடனும் நோன்பை நிறைவேற்றிட தேவையான உணவு வசதிகளை ஏற்பாடு செய்வது எமது பொறுப்பாகும்.
இம்முறை உணவுப் பொருட்களின் விலை உயர்வினால், ஒரு நாள் உணவு செலவுகள் பின்வருமாறு மதிப்பிடப்பட்டுள்ளது:
🔹 இஃப்தார் (ஒரு நாள்) – ரூபாய் 8,000/-
🔹 சஹர் (ஒரு நாள்) – ரூபாய் 12,000/-
இந்த புனித மாதத்தில் நோன்பாளிகளுக்கு உணவு வழங்குவது மிக உயர்ந்த நற்காரியம். முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெரியவர்களுக்கு ஒரு நாள் முழுவதற்கோ அல்லது உங்களால் இயன்ற அளவிலோ பங்களித்து இந்த நற்செயலில் பங்கேற்கலாம்.
ஒரு நோன்பாளிக்கு இஃப்தார் வழங்கும் நன்மை, அவர் பெற்ற நன்மைக்கு இணையானது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ரமழானில் அந்த நன்மையைப் பெற நாம் முன்வருவோம்.
இறைவன் எங்களுக்கும் உங்களுக்கும் இந்த நற்காரியத்தை பூரணமாக நிறைவேற்றி, அந்த முதியவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பளிப்பானாக, ஆமீன்!
எம்மைப் போன்று அவர்கள் ஒருகாலத்தில் பலமாக இருந்தவர்கள்…
குடும்பங்களுக்காக உழைத்தவர்கள்…
இன்று பலவீனமுற்று நம்முடைய கருணையையும் ஆதரவையும் எதிர்நோக்கி உள்ளனர்…
உதவி செய்ய விரும்புபவர்கள் Royal Youths அமைப்பை தொடர்பு கொண்டு அல்லது எங்களது வங்கி கணக்கின் மூலம் பங்களிக்கலாம்.
📞தொடர்புகளுக்கு
Mr. Mohamed Suhail
+94 75 682 1078
Mr. Asmath Sakkee
+94 75 565 9169
🏦
Royal Youth
A/C 8172006600
Commercial Bank
Akkaraipattu
📌Please specify in the remark as "Crafting Smiles" while you make the transactions.
Royal Youths
26th February 2026