Zakath Fund Akkaraipattu

Zakath Fund Akkaraipattu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zakath Fund Akkaraipattu, Nonprofit Organization, Town Mosque Road, Akkaraipattu.

Zakat, or almsgiving, is one of the five pillars of Islam, along with prayer, fasting, pilgrimage (Hajj) and belief in Allah (SWT) and His Messenger, Prophet Muhammad (SAW).

 #வெளிநாட்டு_வாழ்_மற்றும்_அக்கரைப்பற்றுசகோதர_சகோதரிகளே...!ரமழான் வந்தடைந்துவிட்டது. ஸகாத்தை கணக்கிட்டு கொடுத்து அல்லாஹ்வ...
17/02/2026

#வெளிநாட்டு_வாழ்_மற்றும்_அக்கரைப்பற்றுசகோதர_சகோதரிகளே...!

ரமழான் வந்தடைந்துவிட்டது. ஸகாத்தை கணக்கிட்டு கொடுத்து அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்வோம்..
அதிகமாக ஸதகாக்கள் செய்தும் நன்மைகளை அதிகமாக்கிக் கொள்வோம்..

அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு- 2026 செயற்றிட்டத்தில் 100 வறிய குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்க 50 மில்லியன் நிதியை சேகரித்து வருவதை அறிவோம்.

அதிகமான ஸகாத் பெறுநர்கள் பயன்பெறுவதோடு அதிகமானோர் ஸகாத் வழங்க தகைமை பெறுவார்கள் என்ற நோக்கில் தங்கத்தை விட வெள்ளி நிஸாப் பெறுமதியை கணக்கிட்டு ஸகாத் வழங்குவது சிறந்ததாகும்.

அந்தவகையில், 595g வெள்ளி நிஸாப் பெறுமதியின் அடிப்படையில், மத்திய கிழக்கில் வாழ்வோர் ஒரு வருடத்தில் அண்ணளவாக 450,000.00 சேமிப்பு பணத்தை கொண்டிருப்பின் அவர்கள் 2.5% ஸகாத் வழங்குவது கடமையாகும்.
இலங்கையில் அவற்றின் தற்போதைய பெறுமதி அண்ணளவாக 550,000.00 ஆகும்.

நாட்டுக்கு நாடு வெள்ளியின் சந்தைப் பெறுமதிக்கு ஏற்ப நிஸாப் பெறுமதி வேறுபடும் என்பதை கருத்தில் கொண்டு உங்களுடைய ஸகாத்தினை கணக்கிட்டு கொடுக்கலாம்.

உங்களுடைய ஸகாத்தினை அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்து WhatsApp ஊடாக ஸகாத் மற்றும் ஸதகாவிற்கான பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்.

இப்பணியில் பங்காளர்களாகி அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்வோம்.

Zakath Fund Akkaraipattu Guarantee Limited
17.02.2026

17/02/2026
16/02/2026

அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் கடந்து வந்த பாதை...
ஸகாத் நிதியத்தின் பணிகளில் பங்காளர்களாக இணைந்து செயற்படுவோம்...

அதிகம் Share செய்யவும்..

 #வெளிநாட்டு_வாழ்_அக்கரைப்பற்று_சகோதரர்களுக்கு…… அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் விடுக்கும் பணிவானதொரு வேண்டுகோள்..அக்கரைப்ப...
15/02/2026

#வெளிநாட்டு_வாழ்_அக்கரைப்பற்று_சகோதரர்களுக்கு……
அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் விடுக்கும் பணிவானதொரு வேண்டுகோள்..

அக்கரைப்பற்று ஸகாத் நிதியம், உள்நாட்டு வெளிநாட்டு வாழ் சகோதரர்களின் ஸகாத் ஸதகா பங்களிப்புகளின் ஊடாக எமதூரின் வறுமையொழிப்பு பணியில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருவதை அனைவரும் அறிவோம்.

அந்தவகையில், இவ்வருடம் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு- 2026 எனும் செயற்றிட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம். இச்செயற்றிட்டத்தினூடாக 100 வறிய குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் மற்றவர்களின் மீது தொடர்ச்சியாக தங்கிவாழும் நிலையிலிருந்து மீண்டு, அக்குடும்பங்களின் ஆன்மீக, கல்வி, சுகாதார நிலையை மேம்படுத்துவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

இச்செயற்றிட்டத்திற்காக இந்த ரமழானிலிருந்து 50 மில்லியன் நிதியை உள்நாட்டு வெளிநாட்டு தனவந்தகர்களிடமிருந்து திரட்ட திட்டமிட்டுள்ளோம்.

அந்தவகையில், வெளிநாட்டு வாழ் அக்கரைப்பற்று சகோதர சகோதரிகள் உங்களது ஸகாத், ஸதகா போன்ற உதவிகளை அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்திற்கு வழங்கி இச்செயற்றிட்டத்தின் பங்காளர்களாக இணைந்து செயற்படுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

இதுதொடர்பில் அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் வெளிநாட்டு இணைப்பாளர்களாக செயற்படும் சகோதரர்கள் உங்களை தொடர்புகொள்வார்கள் அல்லது நீங்களும் அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

வறுமையில் வாடும் மக்களின் கஷ்டங்களை போக்கி அல்லாஹ்வின் திருப்தியையும் அவனது சுவனத்தையும் பெற்றுக் கொள்வோம்.

அல்லாஹுத்தஆலா எம்மனைவரது முயற்சிகளையும் பொருந்திக் கொள்வானாக!

Akkaraipattu Zakath Fund Guarantee Limited
15.02.2026

அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் நடைமுறைப்படுத்தும் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு செயற்றிட்டம் -2026 தொடர்பான விழி...
12/02/2026

அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் நடைமுறைப்படுத்தும் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு செயற்றிட்டம் -2026 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பாடசாலை மட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இச்செயற்றிட்டத்தின் பங்காளர்களில் பாடசாலைகளும் ஒன்றாகும். அல்ஹம்துலில்லாஹ்.

வறுமையின் தாக்கத்தை உணரக்கூடிய இடங்களில் பாடசாலைகள் பிரதானமானதென்ற வகையில், இஸ்லாம் அறிமுகப்படுத்திய ஸகாத் எனும் வறுமையொழிப்பு திட்டம் சரியான முறையில் பிரயோகப்படுத்தப்படும் போதுதான் சமனிலை சமூகமொன்றை உருவாக்க முடியும் என்ற செய்தி பாடசாலைகளில் அழுத்தி சொல்லப்பட வேண்டியுள்ளது.

அந்தவகையில், பொருத்தமான மற்றும் தொழில் செய்ய ஆர்வமுடைய பயனாளர்களை இச்செயற்றிட்டத்தில் உள்வாங்குதல் மற்றும் மாணவர்களும் இச்செயற்றிட்டத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி உதவி செய்யும் மனோபாங்கை கட்டியெழுப்புதல் இவ்விழிப்புணர்வு நிகழ்வுகளின் பிரதான நோக்கமாகும்.

அந்தவகையில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்வதற்கு அனுமதியளித்த பாடசாலை நிருவாகம் மற்றும் வளவாளர்களுக்கு நன்றிகள் ஜஸாக்கமுல்லாஹு ஹைரா.

இப்பணியில் பார்வையாளராக அன்றி பங்காளர்களாக செயற்பட்டு அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்வோம்.
அல்லாஹுத்தஆலா எம்மனைவரது முயற்சிகளையும் பொருந்திக் கொள்வானாக!

 #சுயதொழில்_வாய்ப்புக்கான_விண்ணப்பம்_கோரல்_அக்கரைப்பற்று_ஸகாத்_நிதியம்அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தினால் "ஸகாத் பயனாளர்கள...
07/02/2026

#சுயதொழில்_வாய்ப்புக்கான_விண்ணப்பம்_கோரல்_அக்கரைப்பற்று_ஸகாத்_நிதியம்

அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தினால் "ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு 2026 செயற்றிட்டம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அறிவோம்.

இச்செயற்றிட்டத்தில் ஸகாத் பயனாளர்களில் 100 குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்ஷா அல்லாஹ்.
அந்தவகையில், ஸகாத் பெறத் தகுதியானவர்களில் தொழில் செய்ய ஆர்வமுடையோர் மாத்திரம் இச்சுயதொழில் வாய்ப்பிற்கு விண்ணப்பிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் நோன்புப் பெருநாளைக்கு முன்னர் அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தில் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
விண்ணப்பப்படிவங்களை ஸகாத் நிதிய அலுவலகத்தில் பெப்ரவரி 7 ஆம் திகதியிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

இச்செய்தியை அதிகம் பகிர்ந்து ஸகாத் பயனாளர்கள் பயன்பெற ஒத்துழைக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

Zakath Fund Akkaraipattu Guarantee Limited.

அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் நடைமுறைப்படுத்தும் "ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு - 2026" செயற்றிட்டத்தின் வணிக ஆ...
05/02/2026

அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் நடைமுறைப்படுத்தும் "ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு - 2026" செயற்றிட்டத்தின் வணிக ஆலோசகர்களுடனான கலந்துரையாடல் நேற்றிரவு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஸகாத் பயனாளர்களில் தொழில் செய்யக்கூடிய ஆர்வமுள்ளவர்களை இச்செயற்றிட்டத்திற்கு விண்ணப்பிக்கச் செய்தல் மற்றும் இச்செயற்றிட்டத்திற்கான ஸகாத் மற்றும் ஸதகா நன்கொடைகளை திரட்டுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட வணிக ஆலோசகர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு இப்பணியில் தொடர்ச்சியாக பங்காளராக செயற்படுவதற்கும் உறுதியளித்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹுத்தஆலா அனைவரது பணிகளையும் பொருந்திக் கொண்டு இச்செயற்றிட்டத்தினூடாக சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துவானாக!

ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு -2026 செயற்றிட்டத்தின் வணிக ஆலோசகர்களாக முதற்கட்டமாக பல்வேறுபட்ட வணிக பின்னணியை...
30/01/2026

ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு -2026 செயற்றிட்டத்தின் வணிக ஆலோசகர்களாக முதற்கட்டமாக பல்வேறுபட்ட வணிக பின்னணியைக் கொண்ட வர்த்தகர்கள் அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இச்செயற்றிட்டத்தில் பலரும் இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 #ஞாயிற்றுக்கிழமை (25) அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் 25 ஆவது வருட பூர்த்தி மற்றும் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய...
26/01/2026

#ஞாயிற்றுக்கிழமை (25) அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் 25 ஆவது வருட பூர்த்தி மற்றும் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பான ஆவணங்கள்....

 #அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் 25 ஆவது வருட பூர்த்தி மற்றும் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு அங்குரார்ப்பண ந...
24/01/2026

#அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் 25 ஆவது வருட பூர்த்தி மற்றும் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு அங்குரார்ப்பண நிகழ்வு.....

அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் 25 ஆவது வருட பூர்த்தி மற்றும் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு அங்குரார்ப்பண நிகழ்வு இன்ஷா அல்லாஹ் நாளை ஞாயிற்றுக்கிழமை (25) மாலை 6.30 மணிக்கு அக்கரைப்பற்று மாநகரசபை ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது, எமது பிராந்தியத்தில் உள்ள ஸகாத் பெறும் குடும்பங்களில் இருந்து சுயதொழில் செய்வதற்கு ஆர்வமாகவுள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வின் அங்குரார்ப்பணமும் இடம்பெறவுள்ளது.

இத்திட்டத்திற்கு எமதூரைச் சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் மற்றும் ஊரில் உள்ள தனவந்தகர்கள் ஆகியோர்களின் நிதியுதவியே இதற்கு பங்களிப்பு செய்கின்றது. இத்திட்டத்திற்கு விசேடமாக வணிக நிபுணத்துவ குழுவினர் நியமனம் செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்வும் இத்திட்டமும் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் 25 வது வருட பூர்த்தியும் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு அங்குரார்ப்பண நிகழ்வும...
18/01/2026

அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் 25 வது வருட பூர்த்தியும் ஸகாத் பயனாளர்களுக்கான சுயதொழில் வாய்ப்பு அங்குரார்ப்பண நிகழ்வும்....

பார்வையாளராக அன்றி பங்காளர்களாக இப்பணியில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்...

13/01/2026

#அண்மையில் எமது நாட்டில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்த காலங்களில் அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றிலிலுள்ள பொது அமைப்புக்களின் ஆதரவோடு இடம்பெற்ற நிவாரண உதவிகள் வழங்கிய செயற்றிட்டத்தின் ஆவணப்படுத்தலுக்கான வீடியோ...

Address

Town Mosque Road
Akkaraipattu
32400

Telephone

+94761245559

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakath Fund Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Zakath Fund Akkaraipattu:

Share