12/09/2025
02.09.2025.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில்
உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின், "வைத்தியசாலை குழு 2022-2025" குழுவினர் தங்களிடமுள்ள ஆவணங்களை
புதிய வைத்தியசாலை குழுவிடம் ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில்
முன்னாள் வைத்தியசாலை குழுவால் பெறப்பட்ட காணியில் அமைந்துள்ள கட்டிடங்களை வைத்தியசாலையின் தேவைகளுக்காக பயன்படுத்த அதன் திறப்புக்களும் புதிய குழுவிடம் உதவி பிரதேச செயலாளர் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் புதிய வைத்தியசாலை குழுவின் செயலாளர்,
கடந்த சில வருடங்களாக செயற்பட்ட வைத்தியசாலை குழுவின் செயற்பாடுகளை ஒரு வைத்தியராக இருந்து அவதானித்ததாகவும்,
அர்பணிப்பான சேவைகளை பாராட்டியதோடு
விட்ட இடத்தில் இருந்து புதிய வைத்தியசாலை குழு இயங்க எதிர் பார்ப்பதாகவும் பாராட்டி கூறினார்!
முன்னாள் வைத்தியசாலை குழுவின் தலைவர் பொறியியலாளர் YB.சமட் அவர்கள் புதிய குழுவின் அவசியமான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்க உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக கூறி ,
எம்மால் நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்களை தொடரவும் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட
அனைவருக்கும்
"வைத்தியசாலை குழு 2022-2025" நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது!!
HOSPITAL COMMITTEE 2022-2025
BASE HOSPITAL
AKKARAIPATTU.