10/12/2025
10.12.2025
மத்திய மாகாண வெள்ள நிவாரண துப்பரவு பணி..
இளைஞர்கள் மத்திய மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவு பணிகளை கடந்த நாட்களாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இன்று மேலும் பல துப்பரவு பணிகள் நிலுவையில் இருப்பதை அறிந்து, எமது இளைஞர்கள் அப்பகுதிக்கு செல்கின்றார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் இவர்களின் வாழ்க்கையில் பரக்கத் வழங்கி, அவர்களின் நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, சந்திக்கும் அனைத்து சிரமங்களையும் எளிதாக்கி, மனங்களில் நற்சிந்தனையும் கருணையும் அதிகரிக்க செய்வானாக.
இவர்கள் போன்ற தன்னலமற்ற இளைஞர்கள் எங்கள் சமூகத்தில் மேலும் பெருக வாழ்த்துகிறோம். ஆமீன். 🤲
மேலும், உங்களால் இயன்ற உதவியையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தகவல்களுக்கு: +94 75 242 3074 என அழைத்து தொடர்பு கொள்ளலாம்.