Inspiring Youths

Inspiring Youths To render the quintessential services in order to consolidate the poverty communities into prosperous

-05.01.2026-அக்கரைப்பற்று தைக்காநகர் பொது மையவாடி – பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு நடவடிக்கைகள்Inspiring Youths அமைப்பினர...
05/01/2026

-05.01.2026-
அக்கரைப்பற்று தைக்காநகர் பொது மையவாடி – பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு நடவடிக்கைகள்

Inspiring Youths அமைப்பினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில், கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அக்கரைப்பற்று தைக்காநகர் பொது மையவாடி பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக அக்கரைப்பற்று மாநகரசபை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கனமழையால் மழைநீர் அதிக அளவில் ஓடியதன் காரணமாக மண் சரிந்து, அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைந்திருந்த கபூர் சேதமடைந்திருந்தது. மேலும், ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்திருந்ததோடு, மையவாடியில் அமைந்திருந்த Street Post Lights களும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தற்போது அந்த விளக்குகள் செயல்படாத நிலையில் காணப்பட்டது.

இந்த விடயங்களை தொடர்ந்து, அக்கரைப்பற்று மாநகர சபையின் Development Committee தலைவர் Mr. Mohamed Riyal மற்றும் Technical Officer Mr. Babu ஆகியோர் Field Visit மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் அடிப்படையில்,

📌செயலிழந்த street light-ஐ ஒரு வாரத்திற்குள் பழுது நீக்கி மீண்டும் செயல்படுத்த,

📌முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றி,

📌மழைநீர் ஓடியதனால் சேதமடைந்த கபூர் அடிப்பகுதிக்கு தற்காலிக தீர்வாக Sand Bags பயன்படுத்தி சுவர் போன்ற அமைப்பு உருவாக்க,

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகர சபை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மண் சரிவு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், நிரந்தர தீர்வாக Retaining Wall ஒன்றை அமைக்க அக்கரைப்பற்று மாநகரசபை முதல்வர் அவர்களிடம் Inspiring Youths அமைப்பின் மூலம் வேண்டுகோள் ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக எமது வேண்டுகோளுக்கு விரைந்து செவிமடுத்து, உடனடியாக Feild Visit மேற்கொள்ள மாநகர சபை குழுவை அனுப்பிய அக்கரைப்பற்று மாநகரசபை முதல்வர் அவர்களுக்கும், எமது அழைப்பை ஏற்று வருகை தந்த காதிரியா ஜனாஸா சங்கம் உறுப்பினர்களுக்கும் எமது Inspiring Youths அமைப்பின் சார்பில் எமது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Inspiring Youths
Akkaraipattu.

05/01/2026

கடந்த மாதங்களில், Elpitiya – Weligalla பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அக்கரைப்பற்றிலிருந்து எமது Inspiring Youths அமைப்பினரால் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிக்காக, Elpitiya – Weligalla Darga Jumma Mosque-இன் Advisor Mr. Ashkar Ansar (Attorney at Law), Inspiring Youths அமைப்பினரின் சேவை மற்றும் களப்பணிகளுக்கான நன்றிகளை வெளிப்படுத்தினார்.

அந்த களப்பணியில் ஈடுபட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும், சிரமமில்லா வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறோம் ஆமீன்.

Inspiring Youths
Akkaraipattu.

-07.12.2025-மத்திய மாகாண வெள்ள நிவாரண துப்பரவு பணி – Day 2 Updateமத்திய மாகாண வெள்ள நிவாரண பணிகளின் தொடர்ச்சியாக, அக்கரை...
05/01/2026

-07.12.2025-
மத்திய மாகாண வெள்ள நிவாரண துப்பரவு பணி – Day 2 Update

மத்திய மாகாண வெள்ள நிவாரண பணிகளின் தொடர்ச்சியாக, அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம்–பைத்துல்மால், ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள், அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேசசபை, Free Walk மற்றும் பல சமூக அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட களப்பணிகளின் Day 2 (07.12.2025) அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றிருந்தன.

இந்த நாளில், எமது இளைஞர்கள் குழு Elpitiya – Weligalla பகுதிகளுக்கு பயணித்து அங்குள்ள கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பொதுப்பிரதேசங்களில் விரிவான துப்பரவு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அந்த நாளின் முக்கிய பணிகள்:

📍வெள்ளநீர் இறங்கிய பின்னர் வீடுகளுக்குள் தேங்கிய சேறும் மாசும் அகற்றப்பட்டது,

📍பாதிக்கப்பட்ட வீடுகளின் சுற்றுவட்டாரத்தில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டன,

📍பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் குடியிருக்கத் தகுந்த சூழல் உருவாக்கும் வகையில் வீட்டுப்பரப்புகள் துடைத்து சுத்தம் செய்யப்பட்டது.

“யா அல்லாஹ்! உன் பாதையில் மனிதர்களுக்கு உதவி செய்யத் தன்னலமின்றி களமிறங்கிய இத்தகைய இளைஞர்களை நீ பாதுகாத்து, அவர்களின் மன உறுதியையும் நற்சிந்தனைகளையும் மேலும் உயர்த்திவிடு.
சிலர் பேசும் மனச்சோர்வூட்டும் வார்த்தைகளிலிருந்து இவர்களை காக்கவும்; நற்செயலில் உறுதியாக நிற்கும் தகுதியையும் பொறுமையையும் அருள்வாயாக.
இவர்கள் செய்த ஒவ்வொரு நற்கிரியையும் பெரும் நன்மைகளாக மாற்றி, இவர்களை எதிர்காலத்தில் சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாற்றுவாயாக ஆமீன்.”

Inspiring Youths
Akkaraipattu.

-11.12.2025-அக்கரைப்பற்று Inspiring Youths ஸகாத் நிதியம்-பைத்துல்மால், அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள், அ...
11/12/2025

-11.12.2025-
அக்கரைப்பற்று Inspiring Youths ஸகாத் நிதியம்-பைத்துல்மால், அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள், அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேசசபை, ஊரிலுள்ள சமூக நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வெள்ள நிவாரண உதவிகள் இறைவன் உதவியுடன் இன்று காலை வியாழக்கிழமை சிலாபம் சிங்கபுர முஸ்லிம் ஜனாஸா சங்க கட்டிடத்தில் வைத்து "சிலாபம் முஸ்லிம் எய்ட்" நிறுவன நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

-06.12.2025-மத்திய மாகாண வெள்ள நிவாரண துப்பரவு பணி – Day 1 Updateஅக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம்–பைத்துல்ம...
10/12/2025

-06.12.2025-
மத்திய மாகாண வெள்ள நிவாரண துப்பரவு பணி – Day 1 Update

அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம்–பைத்துல்மால், அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள், அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேசசபை, Free Walk மற்றும் பல உள்ளூர் சமூக அமைப்புகள் இணைந்து, மத்திய மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவு பணிகளைக் முன்னெடுத்து வந்தன.

அந்த முயற்சியின் பிரகாரம் எமது இளைஞர்கள் படையணி Kalugamuwa பிரதேசத்திற்கு சென்று தங்களின் களப்பணிகளை மேற்கொண்டிருந்தது.

அந்த நாளில்:

📍பாதிக்கப்பட்ட வீடுகளின் சுற்றுவட்டாரத்தில் தேங்கிய குப்பைகள் அகற்றப்பட்டன,

📍சேறும் சாக்கடையும் நிரம்பிய வழித்தடங்கள் சுத்தம் செய்யப்பட்டது,

📍வீடுகளில் சேதமடைந்த, சேறும் தூசியும் படிந்த பொருட்கள் கழுவி ஒழுங்குபடுத்தப்பட்டது,

📍பொதுமக்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Kalugamuwa மக்களிடமிருந்து எமது இளைஞர்கள் பெற்ற நன்றி, மகிழ்ச்சி மற்றும் பிரார்த்தனைகள் அவர்களின் உழைப்பிற்கு பெரும் ஊக்கமாக இருந்தன. அல்ஹம்துலில்லாஹ்.

“யா அல்லாஹ்! தங்கள் நேரம், ஆற்றல் மற்றும் கரங்களை சமூக நலனுக்காக அர்ப்பணித்த இந்த இளைஞர்களின் அனைத்து நற்செயல்களையும் நீ உன் தர்மத்தால் ஏற்றுக் கொண்டிருப்பாயாக.
அவர்கள் சந்தித்த ஒவ்வொரு சிரமத்தையும் நீ எளிதாக்கி, அவர்கள் மனங்களில் நற்சிந்தனையும், கருணையும் மேலும் அதிகரித்திருப்பாயாக.
இவர்கள் போன்று தன்னலமின்றி உழைக்கும் இளைஞர்கள் எங்கள் சமூகத்தில் பெருகி வளர உன்னை வேண்டி கொள்கிறோம் ஆமீன்.”

Inspiring Youths
Akkaraipattu.

அக்கரைப்பற்றிலிருந்து பதுளை நகருக்கு  நிவாரணப் பொருட்கள் விநியோகம்...அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம்–பைத்த...
07/12/2025

அக்கரைப்பற்றிலிருந்து பதுளை நகருக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்...

அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம்–பைத்துல்மால், ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள், அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேசசபை, Free Walk மற்றும் பல உள்ளூர் சமூக அமைப்புகள் இணைந்து, வெளிமாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன..

அந்தவகையில், இன்று சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சுமார் ஒரு கோடிக்கு மேல் பெறுமதியான உலர்வு உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் பதுளை நகரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு செல்லப்பட்டு நாளை விநியோகிக்கப்படவுள்ளன அல்ஹம்துலில்லாஹ்.

பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் தேவைகள் Need Assessment செய்யப்பட்டு, முன்னுரிமையடிப்படையில் அனர்த்த உதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பணியில் பொருள் உடல் ரீதியாக பங்களிப்புச் செய்த அனைவரையும் அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொள்வானாக!

Inspiring Youths
Akkaraipattu.

மூதூர் பிரதேசத்திற்கு குடிநீர் நிவாரணம் December 4 ஆம் திகதி அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம் – பைத்துல்மால...
06/12/2025

மூதூர் பிரதேசத்திற்கு குடிநீர் நிவாரணம்

December 4 ஆம் திகதி அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம் – பைத்துல்மால் நிறுவனம், அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா, அனைத்துப் பள்ளிவாசல்கள், அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேசசபை, வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களை மூதூர் பிரதேசத்தில் வழங்கும் பணிகள் இடம்பெற்றன.

அந்நிகழ்வில், களப்பணியில் ஈடுபட்ட உறுப்பினர்களின் வேண்டுகோளின் அடிப்படையில், மூதூரில் மிகக் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் முக்கியத் தேவையாக எமக்கு தெரியவந்தது.

அதனை முன்னிட்டு, முதற்கட்டமாக —

1 லீட்டர் கொள்ளளவுள்ள 2000 போத்தல்கள் Inspiring Youths அமைப்பினராலும், மேலும் 5000 லீட்டர் கொள்ளளவுள்ள போத்தல்கள் தனிப்பட்ட தனவந்தர்களின் பங்களிப்பாக

மொத்தம் 7000 லீட்டர் குடிநீர், மூதூர் பிரதேச மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

“யா அல்லாஹ்! இந்த நிவாரணப் பணிகளில் உடல், உழைப்பு, பொருள், நேரம் என எந்த வகையிலும் பங்களித்த சகோதரர்களின் முயற்சிகளை நீ அருளாலும் கருணையாலும் பொருந்திக் கொள்வாயாக. வெள்ளத்தால் சிரமப்படும் எங்கள் சகோதரர்களின் தேவையையும் துயரத்தையும் நீக்கி, விரைவில் நிம்மதியும் பாதுகாப்பும் அருள்வாயாக. ஆமீன்.”

உதவி செய்ய விரும்புவோருக்கு

“இன்னும் தேவைகள் தொடர்ந்து பதிவாகிக் கொண்டிருக்கின்றன. மீதமுள்ள நிவாரணப் பணிகளை நிறைவேற்ற உங்கள் உதவும் கரம் மிகத் தேவையாக உள்ளது. மனம் இருந்தால்—even a small contribution—ஒரு குடும்பத்தின் துயரை துடைக்க உதவும்.”

Inspiring Youths
Akkaraipattu.

அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம்–பைத்துல்மால், ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள், அக்கரைப்பற்று மாநகரசபை, பி...
06/12/2025

அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம்–பைத்துல்மால், ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள், அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேசசபை, Free Walk மற்றும் பல உள்ளூர் சமூக அமைப்புகள் இணைந்து, வெளிமாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளூல் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின்னர்,
Inspiring Youths உறுப்பினர்கள் உட்பட 110 இளைஞர்களைக் கொண்ட தொண்டர் குழு, மத்திய மாகாணத்தின் கெலிஓயா பகுதிக்கு துப்பரவுப் பணிக்காக இரண்டு பஸ்களில் பயணத்தை தொடங்கியது. அல்ஹம்துலில்லாஹ்.

மேலும்,
40 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட துப்பரவுப் பணிக்கான உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள் ஆகியவை மத்திய மாகாணத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தேவைகள் Need Assessment மூலம் அறியப்பட்டு, முன்னுரிமையின் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிவாரண மற்றும் துப்பரவு பணிகளில் உடல், பொருள் மற்றும் நேரத்தை அர்ப்பணித்த Inspiring Youths உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பங்காளிகளையும் அல்லாஹுத்தாஆலா மிகச் சிறந்த வெகுமதியால் அருள்புரிவானாக. ஆமீன்

Inspiring Youths
Akkaraipattu.

-04.12.2025-மூதூர், தோப்பூர், அனுராதபுரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்கரைப்பற்றிலிருந்து உலர்வு உணவுப்...
04/12/2025

-04.12.2025-
மூதூர், தோப்பூர், அனுராதபுரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்கரைப்பற்றிலிருந்து உலர்வு உணவுப் பொருட்கள் விநியோகம்....

அக்கரைப்பற்று Inspiring Youths, ஜம்மியத்துல் உலமா,அக்கரைப்பற்று ஸகாத் நிதியம்-பைத்துல்மால், பள்ளிவாசல்கள், அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேசசபை மற்றும் ஊரிலுள்ள சமூக நிறுவனங்கள் இணைந்து வெளிமாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்க ஆரம்பித்திருக்கின்றன.

அந்தவகையில், இன்று வியாழக்கிழமை காலை தோப்பூர், மூதூர் மற்றும் அனுராதபுரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 மில்லியன் இற்கும் அதிகம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் 2 லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, நிவாரணப் பொதிகளை வழங்கி வைக்க அனர்த்த முகாமைத்துவக்குழு பிரதிநிதிகள் குழுவொன்றும் பயணித்துள்ளனர்.

யா அல்லாஹ்! இந்த நிவாரணப் பணியில் பங்களித்த அனைவரின் முயற்சிகளையும் உன் அருளால் பொருந்திக் கொள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட எங்கள் சகோதர சகோதரிகளின் துயரங்களை நீடித்து அவர்களுக்கு விரைவில் நிம்மதியும் நல்வாழ்வயும் அருள்வாயாக ஆமீன்.

INSPIRING YOUTHS
AKKARAIPATTU.

நான்காவது நாளாக தொடர்ந்து — Inspiring Youths & Akkaraipattu Zakath Baitul Mal நிறுவனமும் இணைந்து வெள்ள நிவாரண பணிகளில் ஈ...
03/12/2025

நான்காவது நாளாக தொடர்ந்து — Inspiring Youths & Akkaraipattu Zakath Baitul Mal நிறுவனமும் இணைந்து வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபாடு...

அக்கரைப்பற்றில் இருந்து வெளிமாவட்ட பகுதிகளில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பாக,

மூதூர்,தோப்பூர்,அனுராதபுரம்

ஆகிய பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்கட்டமாக இந் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்க, இன்னும் பல நிதி உதவிகள் தேவையாக உள்ளதால், நல்லுள்ளம் கொண்ட அனைவரையும் இந்த நன்மை செயலில் பங்காளிகளாக மாற அன்புடன் அழைக்கிறோம்.

இரவு பகலாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்ற, எமது அமைப்பு உறுப்பினர்களினதும் தனவந்தர்களினதும் இந் நற்செயலை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

உங்கள் ஒரு சிறிய உதவி – பல குடும்பங்களின் வாழ்க்கையில் பெரிய ஆதரவாக மாறி மீஸானின் இடையினை பன்மடங்காக்கும் என்பதை நினைவிற் கொண்டு உதவுங்கள்.

📍BANK DETAILS 📍

BAITHUMAL ZAKATH FUND
A/C NO : 063100180001261
PEOPLE'S BANK

Inspiring Youths
AKKARAIPATTU.

அக்கரைப்பற்றிலிருந்து மத்திய மாகாணத்திற்கு Cleaning குழு பயணம்...வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்தில் வீடுகளை ...
03/12/2025

அக்கரைப்பற்றிலிருந்து மத்திய மாகாணத்திற்கு Cleaning குழு பயணம்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்தில் வீடுகளை சுத்தம் செய்தல் முதன்மையான பணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாலும் மற்றும் அங்குள்ள நிவாரண ஒழுங்கமைப்பு குழுவினரின் வேண்டுகோளின் பிரகாரமும் அக்கரைப்பற்றிலிருந்து இளைஞர் குழுவொன்று சுத்தப்படுத்தும் பணிகளுக்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஸுபஹுடன் ஜும்ஆ பட்டினபள்ளிவாசலில் இருந்து மத்திய மாகாணத்திற்கு 3 நாள் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. அந்தவகையில் மத்திய மாகாணத்திற்கு வீடுகளை சுத்தப்படுத்தும் குழுவினர் Cleaning equipments உடன் செல்லவுள்ளனர்.

மேற்படி குழுவில் இணைந்து களப்பணிசெய்ய ஆர்வமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் பெற்றோரின் விருப்பத்துடன் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் பின்வரும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

AKM. ASKALANI - INSPIRING YOUTHS
076 600 3447

Group Link ->
https://chat.whatsapp.com/E8WTI760xpSFoeaWfqHydI?mode=hqrt1

அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யும் இப்பணியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைத்து பணியின் பங்காளராகுவோம்.

அல்லாஹுத்தஆலா எம்மனைவரதும் பணிகளை பொருந்திக் கொள்வானாக!

செயலாளர்
வெள்ள அனர்த்த செயற்றிட்டக் குழு-2025
அக்கரைப்பற்று ஸகாத் நிதியம்-பைத்துல்மால் காரியாலயம்
03.12.2025

வெள்ள அனர்த்த உலர் உணவுப் பொருள் மற்றும் நிதி சேகரிப்பு – 2025அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம் – பைத்துல்மா...
02/12/2025

வெள்ள அனர்த்த உலர் உணவுப் பொருள் மற்றும் நிதி சேகரிப்பு – 2025

அக்கரைப்பற்று Inspiring Youths, ஸகாத் நிதியம் – பைத்துல்மால் நிறுவனம், அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா, அனைத்துப் பள்ளிவாசல்கள், அக்கரைப்பற்று மாநகரசபை, பிரதேச சபை, வர்த்தக சங்கம்,மற்றும் ஊரிலுள்ள பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து, வெளி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களையும் நிதியுதவிகளையும் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கபட்டுள்ளன அல்ஹம்துலில்லாஹ்.

தற்போது அக்கரைப்பற்று பகுதியில் Inspiring Youths அமைப்பும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் குழுவும் நேரடியாக இயங்கி, வீடு வீடாக சென்று பொதுமக்களிடமிருந்து நிதி மற்றும் உலர் உணவுப் பொருட்கள் சேகரித்து வருவதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது உறுப்பினர்கள் நேரடியாக வெளியில் சென்று, மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை பகிர்ந்து கொண்டு, இந்த நற்செயலில் அனைவரையும் இணைத்து வருகிறார்கள்.

உங்களால் முடிந்த நிதியுதவிகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை அக்கரைப்பற்று பட்டினப்பள்ளிவாசல் முன்பாக அமைக்கப்பட்டுள்ள விசேட பொருள்–நிதி சேகரிப்பு நிலையத்தில் இன்று இரவு 10.00 மணி வரை ஒப்படைக்களாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பிராந்தியத்தில் இந்த மாதிரியான அனர்த்த இழப்புகளின்றி எம்மை பாதுகாத்துள்ள அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வோம்.
உங்கள் ஒவ்வொரு உதவியும் பசியில் தவிக்கும் ஒரு குடும்பத்துக்கு உயிர் ஆதரமாக இருக்கும்.

📍Bank Details📍

Baithulmal Sakath Fund
Account No: 063100180001261
Bank: People’s Bank

Inspiring Youths
Akkaraipattu.

Address

Akkaraipattu
34200

Telephone

+94778885060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inspiring Youths posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Inspiring Youths:

Share