21/12/2024
பிரதம மந்திரி ஹரினி அமரசூரியவின் விஷேட பணிப்பின் பேரில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தொடர்பாகவும்,பொத்துவில்,
உஹன பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சில் விஷேட கூட்டம்
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ், ஆங்கிலம், உடற்கல்வி,
தகவல்தொழில்நுட்பம் மற்றும் இஸ்லாம் பாடங்களுக்கான பயிற்சிகளுக்காக விண்ணப்பித்த ஆசிரியர்கள் வேறு ஆசிரியர் கல்லூரிகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும்
அம்பாறை மவட்டத்தில் பொத்துவில்,உஹன புதிய கல்வி வலயங்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் அனுமதி தொடர்பாகவும் விஷேட கலந்துரையாடல் பிரதம மந்திரி ஹரினி அமரசூரியவின் விஷேட பணிப்புரைக்கமைய கல்வி அமைச்சில் விஷேட கூட்டம் 19ம் திகதி நடைபெற்றது.
கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு கருணாதிலக பண்டார, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கான ஆணையாளர் திருமதி P.G.I.களனி , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ்.உதுமாலெப்பை அவர்கள் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 1949 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு தேசிய ரீதியில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை சிறப்பாக வழங்கி வரும் ஒரு கல்லூரியாகும். இக் கல்லூரியில் மட்டும் தான் தேசிய ரீதியில் இஸ்லாம் பாடத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன .
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கடமை புரிந்த ஐந்து விரிவுரையாளர்கள் தற்காலிகமாக வேறு நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டு அங்கு கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த 5 விரிவுரையாளர்களுக்கான சம்பளத்தை அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையே வழங்கி வருகின்றது. தேசிய மட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சியை வழங்கும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிலுனர் ஆசிரியர்களை இணைக்காமல் வேறு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை அனுமதிப்பதனால் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையை மறைமுகமாக மூடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அம்பாறை மாவட்ட மக்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போதைய கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த அவர்களை கல்வி அமைச்சில் சந்தித்து அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை மூடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினேன்.
உடனடியாக முன்னாள் கல்வி அமைச்சர் திரு சுசில் பிரேமஜயந்த அவர்கள் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை மூடிவிடாது தொடர்ந்தும் இயங்குவதற்கு பணிப்புரை வழங்கினார்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயற்சிக் கலாசாலையில் இருந்து வேறு நிறுவனங்களுக்கு தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட 05 விரிவுரையாளர்களையும் மீண்டும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஓய்வு நிலையில் உள்ள விரிவுரையாளர்களை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் 07 மில்லியன் கல்வி அமைச்சினால் கொடுப்பணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே 08 ஆசிரியர் கலாசாலைகளில் ஏற்பட்டுள்ள 230 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக கல்வி அமைச்சினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு இதுவரையும் விரிவுரையாளர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படாமல் உள்ளது. எனவே விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்,உஹன பிரதேசங்களில் புதிய கல்வி வலயங்களை உருவாக்குவதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியும் கல்வி அமைச்சு இன்னும் பொத்துவில், உஹன வலயங்களுக்கான அனுமதியை வழங்கவில்லை
எனவே பிரதம மந்திரி ஹரினி அமரசூரிய அவர்கள் தற்போது கல்வி அமைச்சராக பதவி வகிக்கும் இக்காலப்பகுதியில் பொத்துவில், உஹன கல்வி வலயங்களை வழங்குவதற்கான அனுமதியினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொன்டார்.
மேலும் இக் கூட்டத்தில்…
1. நாடளாவிய ரீதியில் உள்ள 08 ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் காணப்படும் 230 விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்களுக்கு உரிய நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
2. அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தி பயிற்சிக்கு இணைத்துக்கொள்ளல்
3. அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலிருந்து தற்காலிகமாக வேறு நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள 05 விரிவுரையாளர்களையும் மீண்டும் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு நிரந்தரமாக நியமித்தல்.
போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், உஹன பிரதேசங்களில் புதிய கல்வி வலயங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதால் இது தொடர்பாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சின் திட்டப்பணிப்பாளர்களுடன் விஷேட கூட்டம் ஒன்றை நடாத்தி தீர்மானம் மேற்கொள்ளுதல்.