HIYWA

HIYWA ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்

🇮🇳 80வது சுதந்திர தின விழா 🇮🇳நம் இந்திய தேசத்தின் 80வது சுதந்திர தின விழா, தம்பிபட்டி முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசலில...
15/08/2026

🇮🇳 80வது சுதந்திர தின விழா 🇮🇳

நம் இந்திய தேசத்தின் 80வது சுதந்திர தின விழா, தம்பிபட்டி முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு MTK புரம் ஜமாஅத் செயலாளர் A. அகமது காசிம் அவர்கள் தலைமை தாங்கினார். MTK புரம் ஜமாஅத் தலைவர் M. பாதுஷா அவர்கள் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழாவை சிறப்பித்தார். ஜமாஅத் துணைத் தலைவர் சிராஜுதீன் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற சுதந்திர தின வரலாற்றுச் சிறப்புரையில், மஹாராஜபுரம் இமாம் ஹாஜா முஹ்யித்தீன் ரப்பானி ஹஜ்ரத் அவர்களும், தம்பிபட்டி இமாம் தாவூது சுலைமான் நிஜாமி ஹஜ்ரத் அவர்களும் சுதந்திரப் போராட்ட வரலாறு, நமது முன்னோர்களின் தியாகம், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர்.

இந்நாளில், “ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்! நம் முன்னோர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாப்போம்! தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டுவோம்!” என்ற உறுதிமொழியுடன், அனைவரும் நாட்டின் நலனுக்காகவும், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையைப் பேணவும் உறுதியேற்றனர்.

🇮🇳 அனைவருக்கும் இனிய 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳

அன்புடன்,
MTK புரம் ஜமாஅத் நிர்வாகம்

அஸ்ஸலாமு அலைக்கும் நமது ஊரில் மீண்டும் ஒருவர் அரசுத் துறையில்..!கடந்த பிப்ரவரி (2026) மாதம், ​மகாராஜபுரத்தைச் சார்ந்த மு...
13/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊரில் மீண்டும் ஒருவர் அரசுத் துறையில்..!

கடந்த பிப்ரவரி (2026) மாதம், ​மகாராஜபுரத்தைச் சார்ந்த முஸ்தபா ஹஜ்ரத் அவர்களின் மருமகன் சகோதரர் அப்துல் மாலிக் அவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய உதவி தோட்டக்கலை அலுவலர் (Assistant Horticulture Officer) பதவிக்கான தேர்வில், மாநில அளவில் (Overall Rank) 168-வது இடத்தையும், வகுப்புவாரியான தரவரிசையில் (Communal Rank) முதலிடத்தையும் பிடித்திருந்தார்.

தற்போது அந்தப் பணிக்கான அரசாணையைப் பெற்றிருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்!

அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் கடந்த வாரம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில், அவருக்குப் பதிலாக நமதூரின் முதல் அக்ரி அலுவலர் சகோ. பாதுஷா கலந்து கொண்டு அவருக்கான பணி ஆணையை பெற்றுக்கொண்டார்.

​விரைவில் அவர் குணமடந்து பணியைத் தொடர, அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

​இவண்,
ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்

மரியாதைக்குரிய அன்பு அண்ணன் ஜனாப் M. பாதுஷா அவர்கள், எம்.டி.கே.புரம் மூன்றூர் ஜமாஅத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கபபட்டுள்ள...
19/07/2026

மரியாதைக்குரிய அன்பு அண்ணன் ஜனாப் M. பாதுஷா அவர்கள், எம்.டி.கே.புரம் மூன்றூர் ஜமாஅத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கபபட்டுள்ளார். அதற்கு ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் (HIYWA) சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் தங்களுக்கு நேர்மை, நீதி, பொறுமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் சிறந்த நிர்வாகத் திறனை வழங்கி, ஜமாஅத்திற்கும் ஊர் மக்களுக்கும் சிறப்பான சேவை செய்யும் பாக்கியத்தை அருள்வானாக! ஆமீன்!

எம்.டி.கே.புரத்தில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கும், ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் (HIYWA) சமூகநலப் பணிகளுக்கும் தாங்கள் எப்போதும் உறுதுணையாக இருந்து ஊக்கமளித்து வருவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தங்களின் அன்பும், ஆதரவும், வழிகாட்டுதலும் இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்பதே எங்களின் மனமார்ந்த விருப்பமாகும்.

மேலும், எம்.டி.கே.புரம் ஜமாஅத்தின் வளர்ச்சிக்கும், நமது ஊர் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் அனைத்து நற்பணிகளிலும், தங்களின் வழிகாட்டுதலின்படி எங்களின் முழு உழைப்பையும் அர்ப்பணிக்க HIYWA மன்றம் என்றும் தயாராக உள்ளது. தங்களின் மேலான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

அல்லாஹ் தங்களின் தலைமையை மக்களுக்கு ரஹ்மத்தாக ஆக்கி, ஜமாஅத்தில் ஒற்றுமை, அமைதி, முன்னேற்றம் மற்றும் பரக்கத்தை நிலைநாட்டி, தங்களின் அனைத்து நற்சேவைகளையும் கபூல் செய்வானாக! ஆமீன்!

இவண், ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நல மன்றம் (HIYWA) மாகாரஜபுரம் – தம்பிபட்டி – கிருஷ்ணாபுரம் (MTK புரம்)

தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மௌலவி அப்துஸ்ஸமத் ஃபைஜி அவர்களின் மகனார் அஜ்வத் நிஜாம் அவர்கள் கடையநல்லூர் அஸ்லமிய்யா அரப...
27/06/2026

தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மௌலவி அப்துஸ்ஸமத் ஃபைஜி அவர்களின் மகனார் அஜ்வத் நிஜாம் அவர்கள் கடையநல்லூர் அஸ்லமிய்யா அரபிக் கல்லூரியில் பயின்று, குர்ஆனை தனது 11 வயதில் மனனம் செய்து ஹாஃபிழாக ஸனது பட்டம் பெற்றுளளார்!

மாஷாஅல்லாஹ்!

வாழ்த்துகள்💐

HIYWA

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் 1995-ல் ஆரம்பிக்கப்பட்டு, வெள்ளி விழா கண்ட இந்த மன்றம் முப்பது ஆண்டுகளை நிறைவு ...
18/06/2026

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் 1995-ல் ஆரம்பிக்கப்பட்டு, வெள்ளி விழா கண்ட இந்த மன்றம் முப்பது ஆண்டுகளை நிறைவு செய்து 31 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

அல்ஹம்துலில்லாஹ்💐

HIYWA

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
16/06/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருவில்லிபுத்தூர் தொகுதி,
#மகாராஜபுரம் ஊராட்சி, முஸ்லிம் தெரு பழத்தோட்டம் பகுதியில் மக்களின் அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய பிரச்சனைகளை சுட்டிகாட்டி விருதுநகர் மாவட்டம் ஆட்சியரிடம் தொகுதி பொறுப்பாளர் Mahavai Oli. கோரிக்கை மனுவை வழங்கினார்.மக்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகள் பின்வருமாறு.

1)கடந்த ஆண்டுகளாக ஆழ்துளை கிணற்றுப் பணி முடிக்கப்படாமல் பாதியில் கிடைக்கிறது.இந்த ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் உள்ளதால், குழந்தைகளுக்குப் பெரிய ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

2)போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மக்களின் பாதுகாப்பும், அடிப்படை வசதிகளும் மக்களின் உரிமை .
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை அதிகாரிகளிடம் மனு அளித்து ,
இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
ஆனால் எவ்வித பலனும் இல்லை
எனவே, மாவட்ட ஆட்சியர்
District Collector, Virudhunagar
அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகவை அ.ஒலியுல்லா.
தொகுதி பொறுப்பாளர்,
கட்சி, #திருவில்லிபுத்தூர் தொகுதி
#விருதுநகர்மாவட்டம் .

30/05/2026

HIYWA & Dr. மாதவன் ஹார்ட் சென்டர் இணைந்து, தம்பிபட்டி பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (30-05-2026) இருதய மருத்துவ முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கலந்துகொண்டு பயனடையுங்கள்!

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் அறக்கட்டளை மற்றும் Dr. மாதவன் ஹார்ட் சென்டர் (மதுரை) இணைந்து நடத்தும், ுதய_மருத்துவ_முகாம்இன்...
29/05/2026

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் அறக்கட்டளை மற்றும் Dr. மாதவன் ஹார்ட் சென்டர் (மதுரை) இணைந்து நடத்தும்,

ுதய_மருத்துவ_முகாம்

இன்ஷா அல்லாஹ் நாளை (30-05-2026 சனிக்கிழமை) தம்பிபட்டி ஜும்ஆ பள்ளி வளாகத்தில்..

அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

ஹைவா இளைஞர் மன்றம் - MTK புரம்

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு,   நடத்தும் மாபெரும் மின்னொளி கபடிப் போட்டி #ஹிதாயத்_கபடி_லீக் (HKL) - சீஸன் 11இன்ஷா அல்லாஹ்...
28/05/2026

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு, நடத்தும் மாபெரும் மின்னொளி கபடிப் போட்டி

#ஹிதாயத்_கபடி_லீக் (HKL) - சீஸன் 11

இன்ஷா அல்லாஹ், இன்றும் நாளையும்

குடுபத்தோடு கண்டு களிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

#இவண்,
ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் அறக்கட்டளை

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் மன்றம் சார்பாக மத்ரஸா தாருஸ் ஸலாமில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வில் மகாராஜபுரம், தம்...
21/05/2026

ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் மன்றம் சார்பாக மத்ரஸா தாருஸ் ஸலாமில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வில் மகாராஜபுரம், தம்பிபட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் மூன்றூரைச் சேர்ந்த 10, +1, +2 மாணவ மாணவியர்கள் பெற்றோர்களுடன் திரளாகக் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

Address

Jumma Masjid, Thambipatti, Srivilliputhur Taluk
Virudhunagar
626149

Alerts

Be the first to know and let us send you an email when HIYWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to HIYWA:

Shortcuts

Share