09/03/2026
அனைவருக்கும் வணக்கம்.
இன்று (09.03.26) கல்யாணம்பூண்டி மற்றும் நங்காத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் படித்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 38 மாணவர்கள் தேர்வு எழுவதற்கு தேவையான சுமார் ரூ5000 மதிப்புள்ள எழுது பொருட்கள் நமது ஈகை நண்பர்கள் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையும் வாழ்த்துரையும் வழங்கினார்கள்..
தொடர்ந்து நமது அறக்கட்டளைக்கு நிதியுதவியும், ஆதரவும் வழங்கி வரும் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.. அறக்கட்டளையின் சேவையில் பங்கெடுத்து சேவை செய்ய உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
ஈகை நண்பர்கள் அறக்கட்டளை கல்யாணம்பூண்டி