சட்ட பஞ்சாயத்து இயக்கம் விழுப்புரம் SPI Vilupuram

  • Home
  • India
  • Villupuram
  • சட்ட பஞ்சாயத்து இயக்கம் விழுப்புரம் SPI Vilupuram

சட்ட பஞ்சாயத்து இயக்கம் விழுப்புரம் SPI Vilupuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சட்ட பஞ்சாயத்து இயக்கம் விழுப்புரம் SPI Vilupuram, Non-Governmental Organization (NGO), Villupuram.

 #கிராம_சபை  "தெரு விளக்கு வேண்டுமா?சாக்கடை வசதி வேண்டுமா?தரமான குடிநீர் வேண்டுமா?அனைத்திற்கும் வழி தேடுவோம்...வாருங்கள்...
25/01/2026

#கிராம_சபை

"தெரு விளக்கு வேண்டுமா?
சாக்கடை வசதி வேண்டுமா?
தரமான குடிநீர் வேண்டுமா?
அனைத்திற்கும் வழி தேடுவோம்...
வாருங்கள் கிராம சபைக்கு!
நம் கிராமத்தின் தலைவிதியை நாமே எழுதுவோம்!"

வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும்
கிராம சபையில்.....

"ஊர் கூடித் தேர் இழுப்போம்! கிராம சபையில் குரல் கொடுப்போம்!"
"உங்கள் ஊர், உங்கள் வளர்ச்சி, உங்கள் முடிவு!
கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்."

"கேள்வி கேட்கும் இடத்தில் நீ இருந்தால் மட்டுமே, தேவையான மாற்றங்கள் உன் தெருவிற்கு வரும்."
"மக்களாட்சியின் வேர் கிராம சபை! அதில் நீயும் ஒரு அங்கமாக இரு."

"ஊர் நலம் காக்க ஓர் இடம் - அதுவே உங்கள் கிராம சபை கூடம்!"
"யாரோ வருவார் என்று காத்திருக்காதே... உன் ஊருக்காக நீ முன்வா!"

அனைவரும் கிராமசபையில் கலந்து கொண்டு ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.

மேலும் தொடர்புக்கு
7667100100 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00am to 5.00pm அழைக்கலாம்.


#கிராமசபை_பிரிவு,
#சட்ட_பஞ்சாயத்து_இயக்கம்

🌾 தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள் 🌾உழைப்பின் மகத்துவத்தைப் போற்றும் பொங்கல் திருநாள்,நேர்மை, நியாயம், பொறுப்பு ஆகிய ...
14/01/2026

🌾 தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள் 🌾

உழைப்பின் மகத்துவத்தைப் போற்றும் பொங்கல் திருநாள்,
நேர்மை, நியாயம், பொறுப்பு ஆகிய மதிப்புகளையும்
நமக்குள் புதுப்பிக்கும் நாளாக இருக்கட்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை திருநாளில், நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் இலஞ்ச ஊழல் எனும் இருள் நீங்கி, நேர்மை எனும் ஒளி பரவ நாம் அனைவரும் உறுதியேற்போம்.

ஊழல் இல்லாத சமூகம்,
சட்டத்தின் முன் அனைவருக்கும் சமநீதி,
அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் பண்பாடு –
இவை எல்லாம் ஒரு ஆரோக்கியமான தேசத்தின் அடையாளங்கள்.

“சட்ட பஞ்சாயத்து இயக்கம்”
அநீதிக்கும் ஊழலுக்கும் எதிரான போராட்டத்தில்
மக்களுடன் மக்களாக தொடர்ந்து பயணித்து வருகிறது.
இந்த பொங்கல்,
நேர்மையின் பொங்கலாக,
நியாயத்தின் பொங்கலாக,
மாற்றத்தின் பொங்கலாக பொங்கட்டும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

14/01/2026

"ஜனவரி 26" கிராம சபையை, கிராமசபை விதிப்படி முறையாக அறிவிப்பு கொடுத்து , குறைவெண் வரம்பில், பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்மானம் இயற்றி மக்கள் பங்கேற்புடன் நடத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களிலும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக 29-12-2025 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் 15 நாட்களுக்கு முன்னதாக இயக்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் மீண்டும் ஒரு நினைவூட்டல் மனு கொடுத்து வருகிற ஜனவரி 26 கிராம சபையை சிறப்பாக நடத்துவதற்கு 13-01-2026 அன்று கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்.
எனவே பொதுமக்கள் அனைவரும் கிராம சபையில் தவறாது கலந்து கொண்டு ஜனவரி 26 கிராம சபையை பங்கேற்பு ஜனநாயகத்தின் அடிப்படையில் சிறப்பிக்க வேண்டுகிறோம் நன்றி.
#சட்ட_பஞ்சாயத்து_இயக்கம்
#கிராமசபை

தேர்தல் வருடத்தில் 2% அரசு ஊழியர்களை சந்தோஷப்படுத்த 98% மக்கள் மீது மேலும் 13000 கோடி வரிச்சுமையை சுமத்துவது வாக்களித்த ...
06/01/2026

தேர்தல் வருடத்தில் 2% அரசு ஊழியர்களை சந்தோஷப்படுத்த 98% மக்கள் மீது மேலும் 13000 கோடி வரிச்சுமையை சுமத்துவது வாக்களித்த மக்களுக்கு செய்யப்படும் சமூக அநீதி. தங்கள் கட்சியின் அரசியல் லாபத்திற்காக மக்களை முட்டாளாக்கும் இந்த செயலை செய்ததற்கு திமுக அரசு வருத்தப்படும் நாள் விரைவில் வரும் என்பது உறுதி.

TAPS காரணமாக, ஒரு தமிழ்நாட்டு குடிமகன் ஆண்டுக்கு சுமார் ₹1,530, நான்கு பேர் கொண்ட குடும்பம் ஆண்டுக்கு சுமார் ₹6,120 கூடு...
04/01/2026

TAPS காரணமாக, ஒரு தமிழ்நாட்டு குடிமகன் ஆண்டுக்கு சுமார் ₹1,530, நான்கு பேர் கொண்ட குடும்பம் ஆண்டுக்கு சுமார் ₹6,120 கூடுதல் வரிச்சுமையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நாளை விரிவான வெளியீடு.
Chief Minister of Tamil Nadu

 #சட்ட_பஞ்சாயத்து_இயக்கம்  #கிராமசபை            ஜனநாயகத்தின் வேர் 'கிராம சபை' - சட்டப்படி நடத்தக் கோரி மனு!நமது ஊர்.. நம...
30/12/2025

#சட்ட_பஞ்சாயத்து_இயக்கம் #கிராமசபை

ஜனநாயகத்தின் வேர் 'கிராம சபை' - சட்டப்படி நடத்தக் கோரி மனு!

நமது ஊர்.. நமது அதிகாரம்!
கிராம சபைக் கூட்டங்கள் வெறும் சடங்காக மாறிவிடக் கூடாது. சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு, மக்களின் முன்னிலையில் விவாதங்கள் நடைபெற வேண்டும்.
இதை வலியுறுத்தி 29.12.2025 சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மாற்றத்தை நோக்கிய எங்களது பயணம் தொடரும்!

உள்ளாட்சித் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய
சட்ட பஞ்சாயத்து இயக்கம் என்றும் முன்னிற்கும்!

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 26 அன்று நடைபெறவுள்ள கட்டாய கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்த கோரி இன்...
29/12/2025

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 26 அன்று நடைபெறவுள்ள கட்டாய கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்த கோரி இன்று 29.12.2026 திங்கள் தின மனு நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 11.30 மணி அளவில் மாநில அமைப்பு செயலாளர் திரு. கங்காதுரை அவர்கள்,மாநில துணைச் செயலாளர் - கிராம சபை அமைப்பாளர் மற்றும் மரக்காணம் ஒன்றிய செயலாளர் திரு.முருகன், கள ஆய்வு அமைப்பாளர் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் திரு. குமார் மற்றும் உள்ளடக்க வடிவமைப்பாளர் மற்றும் செட்டிக்குப்பம் ஊராட்சி செயலாளர் திரு.சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக 05 கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்...

சு. பா. கங்காதுரை,
மாநில அமைப்புச் செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
செல் - 9943701349.

வாழ்த்துக்கள்💐💐💐
24/12/2025

வாழ்த்துக்கள்💐💐💐

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் 13 ம் ஆண்டு துவக்க விழா கடந்த 21/12/2025 அன்று கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது. இந்த விழாவில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில துணைச் செயலாளராகவும், கிராம சபை அமைப்பாளராகவும் தே .க. முருகன் அவர்கள் பொறுப்புகளை எடுத்துக் கொண்டார்.. அவருடைய மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.💐💐💐

ஆ. ஜெய்கணேஷ்
மாநில பொதுச் செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்

வாழ்த்துக்கள்💐💐💐
24/12/2025

வாழ்த்துக்கள்💐💐💐

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் 13 ம் ஆண்டு துவக்க விழா கடந்த 21/12/2025 அன்று கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது. இந்த விழாவில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பொறுப்பினை
சு.பா. கங்காதுரை ஏற்றுக் கொண்டார். அவருடைய மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.💐💐💐

Address

Villupuram

Alerts

Be the first to know and let us send you an email when சட்ட பஞ்சாயத்து இயக்கம் விழுப்புரம் SPI Vilupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சட்ட பஞ்சாயத்து இயக்கம் விழுப்புரம் SPI Vilupuram:

Share