Oor kuruvi Charitable Trust

Oor kuruvi Charitable Trust Intent to execute environmental protection like tree plantations, activities to increase groundwater.

ஊர்க்குருவி (ஒலிசா) அறக்கட்டளை
OORU KURUVI (OLISA) CHARITABLE TRUST (OCT)

Our Mission:

Aim to contribute to the preservation and rehabilitation of the environment in Thopputhurai and its surrounding areas in Vedaranyam. Through excellence in nature conservation, greenery and recreation. Our Vision:
Lets make our surrounding better for the future

Our Goals:
To provide and manage stimulating, div

erse and valuable greenery
(ஊக்கமளிக்கும், மாறுபட்ட மற்றும் மதிப்புமிக்க பசுமையை வழங்கவும் நிர்வகிக்கவும்)
To promote 'green' recreation as a lifestyle
('பசுமை' பொழுதுபோக்கை ஒரு வாழ்க்கைமுறையாக மேம்படுத்துதல்)
To inspire ownership and care for our greenery and nature
(நமது பசுமை மற்றும் இயற்கையின் உரிமை மற்றும் அக்கறையை ஊக்குவிக்க)

ஈத் அல் அதா எனும் தியாக திருநாள்…
27/05/2026

ஈத் அல் அதா எனும் தியாக திருநாள்…

27/05/2026

அனைவருக்கும் ஈத் அல் அதா எனும் தியாக திருநாள் நல்வாழ்த்துகள்..
Oor kuruvi Charitable Trust

📌 ATTESTATION SERVICES – BEST RATES AVAILABLE🇦🇪 UAE Attestation🇶🇦 Qatar Attestation🇴🇲 Oman Apostille🇰🇼 Kuwait Attestatio...
19/05/2026

📌 ATTESTATION SERVICES – BEST RATES AVAILABLE

🇦🇪 UAE Attestation
🇶🇦 Qatar Attestation
🇴🇲 Oman Apostille
🇰🇼 Kuwait Attestation
🇧🇭 Bahrain Attestation
🇸🇦 Saudi Attestation
🇪🇺 European Apostille

🔰 PCC from GCC Countries
🔰 Stamping & Immigration Services
🔰 GAMCA & Saudi VFS Appointments

⚡ Fast • Reliable • Hassle-Free Processing

📞 Call / WhatsApp: +91 7200390093 - Adam’s
📍 Adams Travels & Tourism Agency - Atta
Thopputhurai, Vedaranyam- Nagapattinam Dist

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).இன்ஷா அல்லாஹ்!22 5 2026 அன்று திறப்பு விழா காண உள்ள நமதூர் மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசல்!அனைவரையும...
16/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்ஷா அல்லாஹ்!

22 5 2026 அன்று திறப்பு விழா காண உள்ள நமதூர் மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசல்!

அனைவரையும் மகிழ்வோடு வரவேற்கிறோம்.

மெளத் அறிவிப்பு.தோப்புத்துறை ஹத்தீப் தெரு, மர்ஹூம் K.M. ஷேக் தாவூத் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹும் M.S.M. முகம்மது ...
18/04/2026

மெளத் அறிவிப்பு.

தோப்புத்துறை ஹத்தீப் தெரு, மர்ஹூம் K.M. ஷேக் தாவூத் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹும் M.S.M. முகம்மது இப்ராகிம் அவர்களின் மருமகனும், PM .சாகுல் ஹமீது அவர்களின் மாமானாரும் , J.செய்யது அபு ஹக்கீம் அவர்களின் தகப்பனார்
முன்னாள் ஜமாஅத் மன்ற செயலாளரும், அந்தமான் வாத்தியார் என்று அன்போடு அழைக்கப்படும் S.ஜெய்னுதீன் அவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்றார்கள்

*இன்னா இலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணிக்கு பெரியப்பள்ளிவாசல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

02/04/2026

கர்மா என்ற ஒன்று உள்ளது அது அவரவர் செய்த செயல்களுக்கான பலனை நிச்சயம் தரும்!!

தோப்புத்துறையில்... நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! ஊர்க் குருவி (ஒலிசா) அறக்கட்டளை சார்பாக குளிர்பானங்கள் வழங்கப்பட்டது!தோ...
21/03/2026

தோப்புத்துறையில்...

நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! ஊர்க் குருவி (ஒலிசா) அறக்கட்டளை சார்பாக குளிர்பானங்கள் வழங்கப்பட்டது!

தோப்புத்துறை படேசாகிப் மைதானத்தில் 2000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பங்கேற்ற, பெருநாள் திடல் தொழுகை எழுச்சியோடு நடைபெற்றது .

ஊர்க் குருவி (ஒலிசா) அறக்கட்டளை, தோப்புத்துறை சார்பில் தொழுகைக்கு வந்தவர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கி உபசரிக்கப்பட்டது.

அனைவருக்கும் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோப்புத்துறையில்... நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! ஊர்க் குருவி (ஒலிசா) அறக்கட்டளை சார்பாக குளிர்பானங்கள் வழங்கப்பட்டது!தோ...
21/03/2026

தோப்புத்துறையில்...

நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! ஊர்க் குருவி (ஒலிசா) அறக்கட்டளை சார்பாக குளிர்பானங்கள் வழங்கப்பட்டது!

தோப்புத்துறை படேசாகிப் மைதானத்தில் 2000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பங்கேற்ற, பெருநாள் திடல் தொழுகை எழுச்சியோடு நடைபெற்றது .

ஊர்க் குருவி (ஒலிசா) அறக்கட்டளை, தோப்புத்துறை சார்பில் தொழுகைக்கு வந்தவர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கி உபசரிக்கப்பட்டது.

அனைவருக்கும் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

அழகு நிலையம், தையல், பேக்கரி..!! பெண்களே தொழில் தொடங்க ரூ10,00,000 வழங்கும் தமிழ்நாடு அரசு..!! உடனே விண்ணப்பிக்கலாம்..!!...
19/12/2025

அழகு நிலையம், தையல், பேக்கரி..!! பெண்களே தொழில் தொடங்க ரூ10,00,000 வழங்கும் தமிழ்நாடு அரசு..!! உடனே விண்ணப்பிக்கலாம்..!!

தமிழ்நாட்டில் பெண்களை வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கில், ‘தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ (TWEES) எனும் புரட்சிகரமான திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இத்திட்டம், இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வழக்கமாக தொழில் தொடங்க வங்கிகளில் கடன் வாங்குவதற்குச் சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால், TWEES திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், ரூ. 10 லட்சம் வரை பெறப்படும் கடனுக்கு எந்தவிதமான சொத்துப் பிணையமும் தேவையில்லை. மொத்த திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதத் தொகையை (அதிகபட்சம் ரூ. 2 லட்சம்) அரசே மானியமாக வழங்கிவிடும். விண்ணப்பதாரர் தனது பங்காக வெறும் 5 சதவீத முதலீடு செய்தால் போதுமானது. மீதமுள்ள தொகையை மட்டும் எளிய தவணைகளில் திருப்பிச் செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

18 முதல் 55 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித குறைந்தபட்சக் கல்வித் தகுதியோ அல்லது வருமான உச்சவரம்போ கிடையாது. சமூகத்தில் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
என்னென்ன தொழில்கள் தொடங்கலாம்..?
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பெரும்பாலான சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக அழகு நிலையம், தையல் கலை, பேக்கரி, கேட்டரிங், பொம்மை தயாரிப்பு, ஜிம் மற்றும் யோகா மையங்கள் போன்றவற்றைத் தொடங்கலாம். இருப்பினும், நேரடி விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளுக்கு இத்திட்டத்தில் அனுமதி இல்லை. வெறும் நிதி உதவி மட்டும் வழங்காமல், அந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான 3 நாட்கள் ஆன்லைன் பயிற்சியையும் அரசே இலவசமாக வழங்குகிறது.

விருப்பமுள்ள பெண்கள் www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் மாவட்ட அளவிலான குழுவால் பரிசீலிக்கப்பட்டு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை (DIC) அணுகலாம்.

 #அதுதான்_உள்ளம்!நம்மை வீழ்த்துவது வெளியில் இருந்து ஏற்படுகின்ற சோதனைகளா? அல்லது நமக்குள்ளே இருக்கின்ற பலகீனங்களா? என்பத...
15/12/2025

#அதுதான்_உள்ளம்!

நம்மை வீழ்த்துவது வெளியில் இருந்து ஏற்படுகின்ற சோதனைகளா? அல்லது நமக்குள்ளே இருக்கின்ற பலகீனங்களா? என்பதை யோசிக்க வேண்டும்.

சாலையில் கற்கள் இருந்தாலும், நல்ல செருப்பு இருந்தால் போதுமானது நிம்மதியாக நடந்து செல்லமுடியும்.

ஆனால் செருப்புக்குள் ஒரேஒரு கல் இருந்தாலும், நல்ல சாலையில் கூட நடப்பது கடினமாகி விடும்.

அதேபோல்தான், உள்ளத்தில் ஈமான் பலகீனமாக இருந்தால், எளிதான பாதையில்கூட தடுமாறி விடுவோம்.

எனவேதான் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்

*ألا وإنَّ في الجَسَدِ مُضْغَةً: إذا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وإذا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، ألا وهي القَلْبُ.*
_எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். புரிந்து கொள்ளுங்கள். அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 52)

ஆகவே உங்களது உள்ளத்தை சீர்படுத்திக் கொள்ளுங்கள். வெளியிலிருந்து எவ்வளவு சிரமங்கள், கஷ்டங்கள் வந்தாலும் நம் உள்ளத்தில் அல்லாஹ்வின் மீதான நமது நம்பிக்கை மட்டும் வலிமையாக இருந்தால் எந்த இன்னல்களும் வாழ்க்கையில் துன்பத்தை தராது.

எனவே உங்களது உள்ளத்தை, அதில் உள்ள ஈமானை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

  Association for Education & Empowerment, ChennaiFEED Super 10 - Chartered Accountancy Programசென்னையில் கல்லூரி பேராசி...
11/12/2025

Association for Education & Empowerment, Chennai

FEED Super 10 - Chartered Accountancy Program

சென்னையில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களால் நடத்தப்படும் பீட் அமைப்பின் சார்பில் ஒவ்வொரு துறையிலும் தலைவர்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக திறன் வாய்ந்த C.A - க்களை உருவாக்கும் முயற்சி

2026 - +2 தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவர்கள் பத்து பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சென்னையில் சிறந்த கல்லூரி ஒன்றில் B.Com படிக்க முழு கல்வி கட்டணத்தை செலுத்துவதுடன் மாலை நேரத்தில் C.A படிக்க பீட் பயிற்சி‌ மையத்தில் இலவச பயிற்சி வழங்கப்படும்.

Registration link

https://tinyurl.com/2ztrcu82

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு சென்னையில் இலவசமாக தங்கி படிக்க ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

மாநிலம் தழுவிய நுழைவு தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த பத்து மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு காத்திருக்கின்றது. ‌ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்.‌

தகுதியான நபர்களிடம் இந்த செய்தியை கொண்டு சென்று உதவுங்கள

Address

Thopputhurai
Vedaranyam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oor kuruvi Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share