சிவாய நம
இந்த உலகத்தை படைத்தும்,காத்தும் இறுதியில் ஒடுக்கி கொண்டு இருக்கும் பேரறிவு பரம்பொருளின் திருவருளால் தமிழர் நெறி காக்கவும், தமிழ் வழிபாட்டின் பெருமையை வளர்க்கவும் உருவாக்கப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பட்டய படிப்பில் தமிழரின் உண்மை வரலாறு, தமிழ் ஆகமம் மற்றும் கோவில் கலை, தமிழ் மந்திரங்கள் மற்றும் மறை ஒழுகலாறு, சிவதீக்கை சடங்குகள் மற்றும் தமிழ் முறையில் வாழ்வியல் சடங்குகள் செய்யும் முறைகளும்
அதற்கு தக்க பயிற்சியும் அளிக்கபடுகிறது.
'எற்றைக்கும் திருவருளுடயேம்' என அனைவரும் மகிழ்ந்து இறை அருள் பெற இந்த பட்டய படிப்பின் ஆசிரியராக 'சித்தாந்தகவிமணி','சகலாகம பண்டிதர்','செந்தமிழ் வேள்வி சதுரர்' மு.பெ. சத்தியவேல் முருகனார் ஐயா அவர்கள் கற்பித்து தமிழ் தொண்டு ஆற்றிவருகிறார்.
இன்றைய அவசர உலகில் எதையும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அறியும் இன்றைய இளைஞர்களுக்கும், பெரியோர்களுக்கும் நூல்களை ஆய்ந்து அதன் உண்மை பொருளை அறிய நேரம் இல்லை. ஊடகங்களில் தலைசிறந்ததாக இப்போது திகழும் முக நூலில் சராசரியாக 2 முதல் 3 மணி நேரத்தை அனைவரும் செலவிடுகின்றனர். எனவே அனைவரும் பயன்பெறும் வகையில் முக நூல் வழியாக,தமிழ் அருட்சுனைஞர் பட்டய படிப்பை பற்றிய தகவல்களை பரப்பவும், தமிழ் அருட்சுனைஞர்களாக திகழும் மாணவர்களை இணைக்கவும் இந்த முக நூல் பக்கம் உதவும் என நம்புகிறேன்.
'ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்' என்ற அப்பர் வாக்கின்படி, அவரவர் உள்ளத்தில் தோன்றும் இறைவனை, தெய்வ தமிழில் வழிபாடு செய்ய, சைவ உலகில் தெளிவான பாதையையும்,அறிவும் பெற்று அனைவரும் 'தமிழ் அருட்சுனைஞர்'களாக தமிழ் வளர்க்க வேண்டி எம் திருவருளையும், குருவருளையும் பிராத்திக்கிறேன்..!!....
சிவாய நம
அடியேன்,
ச. மறைமலைநாயகன்
தமிழ் அருட்சுனைஞர் மாணவன் (2012-2013)