Lattrust - எண்ணம் போல் வாழ்க்கை

  • Home
  • India
  • Udumalpet
  • Lattrust - எண்ணம் போல் வாழ்க்கை

Lattrust - எண்ணம் போல் வாழ்க்கை Life as thought

🌍 💙 உலகை காப்பாற்றும் கரங்கள்…அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டு மனித உயிர்களுக்கு நம்பிக்கையாக நிற்கும் அனைத்து செவிலியர்களு...
12/05/2026

🌍 💙 உலகை காப்பாற்றும் கரங்கள்…
அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டு மனித உயிர்களுக்கு நம்பிக்கையாக நிற்கும் அனைத்து செவிலியர்களுக்கும் உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள். 👩‍⚕️✨

✨ “ஒவ்வொரு செவிலியரும் ஒரு நம்பிக்கையின் ஒளி.”✨

🧑‍🔬 Happy International Nursing Day 🌟

🔹 கருணை ♥️
🔹 அக்கறை💙
🔹 அர்ப்பணிப்பு✨

You Nurses

14/04/2026

புதிய ஆண்டான இந்நாளில் உங்கள் வாழ்க்கை
✨ மகிழ்ச்சி
💪 ஆரோக்கியம்
💰 வளம்
🙏 வெற்றி
இவைகளால் நிரம்பியதாக அமைய வாழ்த்துகிறோம்.
நம் பாரம்பரியம், கலாசாரம், மற்றும் முன்னேற்றம் இணைந்து
ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம் 🇮🇳🚀
💫இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ✨
TamilCulture Growth Success

On this World Health Day 🌍💚, let’s take a step towards a healthier lifestyle 🏃‍♂️🥗Small daily habits ✨ can create big ch...
07/04/2026

On this World Health Day 🌍💚, let’s take a step towards a healthier lifestyle 🏃‍♂️🥗

Small daily habits ✨ can create big changes in our well-being 💪
Eat clean 🍎, stay active 🧘‍♀️, and take care of your mind 🧠 and body ❤️

Your health is your true wealth 💎 – start today! 🚀

👉 What healthy habit are you starting today? Comment below! 💬

🌍
💎
💪
🏃‍♂️
🍎
🧘‍♀️
🌿
🧠
❤️

எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் எஸ்.ஏ.ஐ நெல்சன் அவர்கள்  கோயம்புத்தூர்  மாவட்ட ...
27/03/2026

எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் எஸ்.ஏ.ஐ நெல்சன் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு. சங்கெட் பல்வந்த் வகே, இ.ஆ.ப, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தும் ஏழை எளிய மக்களுக்கு செய்து வரும் சமூக சேவைகள் குறிப்பாக கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் மலைவாழ் மக்களுக்கு செய்துவரும் சேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது
@ A INelsonLattrust - எண்ணம் போல் வாழ்க்கை

உடுமலை இந்திய மருத்துவ சங்க ரத்த வங்கியில், 'எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை' சார்பாக அவசரமாக இரத்ததானம் வழங்கி ஒரு உயிர...
25/03/2026

உடுமலை இந்திய மருத்துவ சங்க ரத்த வங்கியில், 'எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை' சார்பாக அவசரமாக இரத்ததானம் வழங்கி ஒரு உயிரைக் காக்கும் உன்னதச் சேவை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமதி. ஜெயப்பிரியா என்பவருக்கு A பாசிட்டிவ்' (A+) வகை இரத்தம் அவசரமாகத் தேவைப்பட்ட நிலையில், அறக்கட்டளை நிறுவனர் திரு. S.A.I. நெல்சன் அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் இதற்கான உதவிப் பணிகள் உடனடியாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதில் உடுமலை ஆண்டனி ரஞ்சித் இரத்ததானத்தை வழங்கி முன்மாதிரியாகத் திகழ்ந்தார். உரிய நேரத்தில் இரத்தம் கிடைக்கப் பெற்றதால், திருமதி. ஜெயப்பிரியா அவர்களுக்குச் சிகிச்சை நல்லபடியாக நடைபெறுவதற்கு தேவையான ரத்தம் வழங்கப்பட்டது . ஆண்டனி ரஞ்சித் அவர்களின் இந்தத் தன்னலமற்ற சேவையைப் பாராட்டிய அறக்கட்டளை நிர்வாகிகள், அவரது இரத்ததான உதவி மென்மேலும் தொடரும் என வாழ்த்திப் பாராட்டினர். தகுந்த நேரத்தில் உதவிய 'எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை' நிர்வாகிகளுக்கும், இரத்ததானம் வழங்கிய ஆண்டனி ரஞ்சித் அவர்களுக்கும் ஜெயப்பிரியா அவர்களின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
A INelson

உடுமலை இந்திய மருத்துவ சங்க ரத்த வங்கியில், 'எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை' சார்பாக அவசரமாக இரத்ததானம் வழங்கி ஒரு உயிர...
23/03/2026

உடுமலை இந்திய மருத்துவ சங்க ரத்த வங்கியில், 'எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை' சார்பாக அவசரமாக இரத்ததானம் வழங்கி ஒரு உயிரைக் காக்கும் உன்னதச் சேவை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமதி. சரஸ்வதி என்பவருக்கு 'O பாசிட்டிவ்' (O+ve) வகை இரத்தம் அவசரமாகத் தேவைப்பட்ட நிலையில், அறக்கட்டளை நிறுவனர் திரு. S.A.I. நெல்சன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இதற்கான உதவிப் பணிகள் உடனடியாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதில் உடுமலை கியோகுஷின் கராத்தே9 இரத்ததானத்தை வழங்கி முன்மாதிரியாகத் திகழ்ந்தார். உரிய நேரத்தில் இரத்தம் கிடைக்கப் பெற்றதால், திருமதி. சரஸ்வதி அவர்களுக்குச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து அவர் தற்போது நலம் பெற்று வருகிறார். செந்தில் ஆறுமுகம் அவர்களின் இந்தத் தன்னலமற்ற சேவையைப் பாராட்டிய அறக்கட்டளை நிர்வாகிகள், அவரது இரத்ததான உதவி மென்மேலும் தொடரும் என வாழ்த்திப் பாராட்டினர். தகுந்த நேரத்தில் உதவிய 'எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை' நிர்வாகிகளுக்கும், இரத்ததானம் வழங்கிய செந்தில் ஆறுமுகம் அவர்களுக்கும் சரஸ்வதி அவர்களின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


16/03/2026

A special medical camp was organized for the tribal communities living in the hill villages of Kulipatti and Kurumalai in the Udumalpet region of Tiruppur district. The camp was jointly conducted by the Department of Post-Graduate Social Work of Sri Saraswathi Thyagaraja College, Pollachi, and Ennam Pol Vazhkai Foundation, with the support of the Government Primary Health Centre at Erisanampatti. Hundreds of tribal residents participated in the camp and received medical services including general medicine, Siddha treatment, dental care, and eye examinations. The medical team included Dr. T. Sukumaran (MMU Medical Officer) and Dr. T. Sri Varsha (RBSK Medical Officer) from the Government PHC, Siddha physician Dr. B. Karvendhan from the Tribal Mobile Unit, Block Ophthalmic Assistant R. Selvam, and dental specialist Dr. A. M. Arunapriya. The camp was organized under the leadership of Mr. Selvam, Vice President of Thali Panchayat, and Mr. S. A. I. Nelson, Founder of the Ennam Pol Vazhkai Foundation, with the support of the faculty members of the Post-Graduate Social Work Department of Sri Saraswathi Thyagaraja College. The initiative greatly benefited the tribal residents of these remote hill areas, where transport and access to medical facilities are limited.

lattrustudt collage pollachi camp camp

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், கொழுமம் வனச்சரகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்...
14/03/2026

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், கொழுமம் வனச்சரகத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள கூக்கால் சுற்று வனப்பகுதியில் மாணவர்களுக்கான வன விழிப்புணர்வு நடைபயணம் சிறப்பாக நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் திரு. ராஜேஷ் அவர்களின் உத்தரவின் பேரில், கொழுமம் வனச்சரக அலுவலர் திரு. D. செந்தில்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த நிகழ்வில், பூம்பாறை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். கூக்கால் ஏரி முதல் பாப்பலையம்மன் கோவில் மலைச் சரிவு வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைபயணத்தை வனவர் திரு. ப. ராஜன், கூக்கால் மற்றும் சாமிக்கானல் சுற்று வனப்பணியாளர்கள் மற்றும் 'எண்ணம்போல் வாழ்க்கை' அறக்கட்டளை நிறுவனர் திரு. எஸ்.ஏ.ஐ நெல்சன் ஆகியோர் ஒருங்கிணைத்து மாணவர்களை வழிநடத்திச் சென்றனர். இப்பயணத்தின் போது, வனப்பகுதிகளில் உள்ள அரிய வகை தாவரங்கள், மரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் முக்கியத்துவம் குறித்தும், இயற்கைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பங்கேற்ற மாணவர்களுக்குக் காடுகள் மற்றும் வன உயிரினங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய கையேடுகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டதுடன், காலையில் தேநீரும் மதியம் உணவும் வனத்துறையினரால் வழங்கப்பட்டது. எதிர்காலத் தலைமுறையினரிடையே இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி ஆசிரியர்கள், வனத்துறையினர் மற்றும் அறக்கட்டளை பணியாளர் திரு. வி. நவீன்பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

10/03/2026

Nature's Classroom! 👣🌲

We recently teamed up with the Tiruppur Forest Division (Kozhumam Range) to take Poombarai students on an epic forest trail.

✅ The Mission: Connecting the next generation with our natural heritage.
✅ The Experience: Spotting rare species and understanding wildlife conservation firsthand.
✅ The Impact: Empowering students with education kits and a lifelong pledge to protect our forests.Lattrust - எண்ணம் போல் வாழ்க்கை S A INelson Lattrust - எண்ணம் போல் வாழ்க்கை

Big thanks to the Life as Thought Trust team for making this green initiative possible!

திருப்பூர் மாவட்டம் உடுமலை 'எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை' நிறுவனர் S.A.I. நெல்சன் தலைமையில் சர்வதேச மகளிர் தினத்தை மு...
10/03/2026

திருப்பூர் மாவட்டம் உடுமலை 'எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை' நிறுவனர் S.A.I. நெல்சன் தலைமையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு ஒரு சிறப்பு சுய வளர்ச்சி சுற்றுலா ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் உடுமலையில் அமராவதி நகர் அருகில் உள்ள தம்புரான் நகர் பாலமங்கலம் பகுதிகளில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இல்லத்தரசிகளின் அன்றாடப் பணிச்சுமையிலிருந்து விடுபட்டு, அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கில் கோவை குற்றாலம் மற்றும் செம்மொழிப் பூங்கா ஆகிய இடங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிகழ்வின் போது பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு குழு விளையாட்டுகளும் போட்டிகளும் நடத்தப்பட்டன. பெண்களின் சுய வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அமைந்த இந்த சுற்றுலா, மகளிர் தின கொண்டாட்டத்தை மிகவும் அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றியது.

Address

Udumalpet

Alerts

Be the first to know and let us send you an email when Lattrust - எண்ணம் போல் வாழ்க்கை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lattrust - எண்ணம் போல் வாழ்க்கை:

Share