Indira Charitable Trust

Indira Charitable Trust Indira Charitable Trust is a non-profit, non-government voluntary organization (NGO) based in Chennai
(1)

இந்திரா அறக்கட்டளையின் "பழங்குடி மக்களின் எழுச்சி" என்கின்ற இலவச தையல் கல்வி திட்டத்தின் கீழ் மார்ச்-ஜூலை 2026 வரை படித்...
23/08/2026

இந்திரா அறக்கட்டளையின் "பழங்குடி மக்களின் எழுச்சி" என்கின்ற இலவச தையல் கல்வி திட்டத்தின் கீழ் மார்ச்-ஜூலை 2026 வரை படித்து முடித்த பழங்குடி பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து அவர்கள் சுய தொழில் செய்துகொள்ள முதற்கட்டமாக தையல் மெஷின் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு.அன்புச்செழியன் அவர்கள், திருமதி.மனோகர் அவர்கள் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டு சிறப்பித்து வந்தோம். நன்றி🙏🏼

இந்திரா அறக்கட்டளை, கான்கா நிறுவனம் & நாசரேத் கல்வி குழுமத்தின் "இது நம்ம ஆவடி" இணைந்து "பழங்குடி மக்களின் எழுச்சி" என்க...
11/07/2026

இந்திரா அறக்கட்டளை, கான்கா நிறுவனம் & நாசரேத் கல்வி குழுமத்தின் "இது நம்ம ஆவடி" இணைந்து "பழங்குடி மக்களின் எழுச்சி" என்கின்ற இலவச தையல் கல்வி திட்டத்தின் கீழ் மார்ச்-ஜூலை 2026 வரை படித்து முடித்த பழங்குடி பெண்களுக்கு, சுய தொழில் (அ) "இது நம்ம ஆவடி" என்கின்ற நிறுவனத்தில் இணைந்து பணியாற்றலாம் என்ற வாழ்த்துகள் கூறி, நாசரேத் கல்லுரியில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாசரேத் கல்வி குழுமத்தின் திரு.ஹென்றி அவர்கள், கான்கா நிறுவன திரு.மகேஷ் & திரு.சரவணன் அவர்கள் மற்றும் திரு.அன்புச்செழியன் அவர்கள், திரு.மனோகர் அவர்கள், திரு.அஸ்வின் அவர்கள் & பயிற்சியாளர் திருமதி.விக்டோரியா அவர்களுடன் நானும் கலந்துகொண்டு சிறப்பித்து வந்தோம். நன்றி🙏🏼

பாண்டேஸ்வரம் ஏரி கரை அருகில் வசிக்கும் பழங்குடி குடும்பங்ககளை சந்தித்து, பெண்களுக்கு நாப்கின் வழங்கி, மேலும் 70 புதிய சு...
07/07/2026

பாண்டேஸ்வரம் ஏரி கரை அருகில் வசிக்கும் பழங்குடி குடும்பங்ககளை சந்தித்து, பெண்களுக்கு நாப்கின் வழங்கி, மேலும் 70 புதிய சுடிதார் வழங்கி, "பழங்குடி மக்களின் எழுச்சி" என்கின்ற இலவச டைலரிங் வகுப்பிற்கு சென்று பயனடையும்மாறு கேட்டுக்கொண்டு, பிறந்த குழந்தைக்கு புதிய படுக்கை வாங்கி கொடுத்து, நம்முடைய களப்பணியை திரு மனோகர் மற்றும் திருமதி மனோகர் அவர்களுடன் மேற்கொண்டோம்.

நாப்கின், புதிய சுடிதார் வழங்கிய குடும்பத்திற்கு இந்திரா அறக்கட்டளையின் நன்றி🙏🏼

நிரந்தரம் இல்லா வாழ்க்கை, வலியும் வேதனையுடன்!திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகி குழந்தை இல்லை என்கின்ற வருத்தம் ஒருபுறம் ...
07/07/2026

நிரந்தரம் இல்லா வாழ்க்கை, வலியும் வேதனையுடன்!

திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகி குழந்தை இல்லை என்கின்ற வருத்தம் ஒருபுறம் இருக்கையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் தன் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தான் செய்து வந்த தொழிலும் முற்றிலும் முடங்கியதால், தன் சொந்தங்கள் வீட்டில் வசித்து வருகின்ற நிலையில், எதிர்பாராத விதமாக கிட்னி பாதிக்கப்பட்டு, ஸ்டெட் போர்ட் அறக்கட்டளை ICU வில் சேர்க்கப்பட்டவரை சந்தித்து, அவரது மருத்துவ செலவிற்கான காசோலையை அவரது மனைவியிடம் வழங்கி நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்து வந்தோம். உடன் சகோதரர் திரு.அன்புச்செழியன் அவர்கள். நன்றி🙏🏼

திருமணத்தை தாண்டிய தகாத உறவால் தன் கணவன் பிரிந்து சென்று பல வருடங்களாகா வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வரும் தன் கணவன், தன்...
22/06/2026

திருமணத்தை தாண்டிய தகாத உறவால் தன் கணவன் பிரிந்து சென்று பல வருடங்களாகா வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வரும் தன் கணவன், தன் ஒரே ஒரு மகளுக்காக என்றாவது ஒருநாள் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கை, ஆனால் தன் கணவன் இறந்து விட்டான் என்கின்ற செய்தி, திரும்பி வருவான் என்ற நம்பிக்கையும் நொறுக்கியது.
கணவனின் இழப்பு, தன் உடல்நிலை வேலைக்கு செல்ல ஒத்துழைப்பதில்லை, மாத்திரை மற்றும் மருந்து கையுமாக பல மாத படுக்கை, 10வது படித்து முடித்த தன் மகளின் கல்வி கட்டணம் கட்டஇயலாமல் குடிசை மாற்று வாரிய இல்லத்தில் தவிக்கும் அக்குடும்பத்திற்கு இந்திரா அறக்கட்டளை சார்பாக முழு கல்வி கட்டணம் செலுத்தி நம்பிக்கை தரும் வார்த்தைகளை விதைத்தோம் மிக்க நன்றி. 🙏🏽

நன்றி🙏Chief Minister of Tamil Nadu TVK Vijay
12/05/2026

நன்றி🙏
Chief Minister of Tamil Nadu TVK Vijay

இந்திரா அறக்கட்டளையின் "பழங்குடியினரின் எழுச்சி" இலவச தையற்கலை பயிற்சி மையத்தில் பழங்குடி பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ம...
30/04/2026

இந்திரா அறக்கட்டளையின் "பழங்குடியினரின் எழுச்சி" இலவச தையற்கலை பயிற்சி மையத்தில் பழங்குடி பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள தங்களை இணைத்து கொண்ட, ஒரு சில நாட்களில் உடைகளை தைக்க கற்றுக்கொண்டுள்ளனர் என்கின்ற செய்தி மற்றும் காட்சிகளை காணும் போது, சந்தோசத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆசிரியர் திருமதி.விக்டோரியா அவர்களின் உழைப்பு இன்றி இது சாத்தியமில்லை, மேலும் இந்த ப்ராஜெக்ட்டிற்கு உழைத்த மற்றும் கொடுத்த ஒவ்வொருவருக்கும் தொழிலானர் தின வாழ்த்துக்கள்!

நீங்களும் இந்த ப்ராஜெக்ட்டில் பங்குபெற விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி🙏🏽

29/04/2026
பிளெஸ்ஸிங் சைன் நிறுவனமானது இந்திரா அறக்கட்டளையோடு இணைந்து வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் பின்தங...
08/04/2026

பிளெஸ்ஸிங் சைன் நிறுவனமானது இந்திரா அறக்கட்டளையோடு இணைந்து வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் பின்தங்கியோரை மேம்படுத்துவதிலும், ஆட்சேர்ப்பு குறிப்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த பின்னணியைச் சேர்ந்தவர்கள், இந்த முயற்சியின் மூலம் பணியாளர்களாக மாறுவது மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட பணிச்சூழலை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த உன்னத முயற்சியில் உங்கள் அன்பான ஒத்துழைப்பையும் தொடர்ச்சியான ஆதரவையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

https://forms.gle/YCFxR5AUj2HB4nrx9

குறிப்பு
இந்திரா அறக்கட்டளையானது, பிளெஸ்ஸிங் சைன் நிறுவனத்தையும் வேலை தேடுபவர்களையும் இணைக்கிறது. எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் எந்த ஆட்சேர்ப்பு செயல்முறையிலும் ஈடுபடவில்லை. நிறுவனம் & வேலை தேடுவோரிடம் நாங்கள் பணம் பெறுவது இல்லை. நிறுவனம் & வேலை தேடுவோருக்கு நாங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம். நன்றி🙏🏽

Address

124, O Block, VOC Nagar
Tondiarpet
600081

Alerts

Be the first to know and let us send you an email when Indira Charitable Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Indira Charitable Trust:

Shortcuts

Share