Visai

Call Directions Website Contact the organization

Visai Visai,a registered Civil Society Organization, involved in advocating Water conservation, Natural Farming, Millet Consumption and a Curious Education.

காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள அல்லது மட்டுப்படுத்த பல்வேறு மட்டங்களில் political will இல்லாமல் ஒரு துரும்பை கூட கிள்ளி ...
29/08/2026

காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள அல்லது மட்டுப்படுத்த பல்வேறு மட்டங்களில் political will இல்லாமல் ஒரு துரும்பை கூட கிள்ளி போடமுடியாது.

சமீபத்தில், பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதை அடுத்து எழுந்திருக்கும் விவாதங்களை பார்க்கும்போது, சுற்றுசூழல் தொடர்பான "Political Will" உருவாக்க நாம் செல்ல வேண்டிய தூரத்தை நினைத்தால் அயற்சியாக இருக்கிறது.

சுற்றுசூழல் பற்றிய பிரக்ஞையை மக்களிடையே உருவாக்க, அதனை இப்புவிக்கு, பிற உயிரினங்களுக்கு செய்யும் சேவை மனப்பான்மையில் இருந்து நகர்த்தி அது மனிதர்களுக்கான, குறிப்பாக விளிம்புநிலை மனிதர்களுக்கான பிரச்சனையாக உரையாட வேண்டிய தேவை உள்ளது. அந்த அடிப்படை ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்கும் மாணவர்களிடத்தில், குறிப்பாக சமூகப்பணி மாணவர்களிடத்தில் இருந்து துவங்கவேண்டும்.

அதன் ஒரு பகுதியாக, சென்ற திங்கட்கிழமை (24.08.26) இந்துக் கல்லூரியின் சமூகப்பணி மாணவர்களுடன் "காலநிலை மாற்றம் - சமூகநீதி பார்வை" என்ற தலைப்பில் உரையாடினோம்.

27/08/2026
Tomorrow!
23/08/2026

Tomorrow!

"தகவல் அறியும் உரிமை சட்டம்" தொடர்பான எங்கள் வகுப்பின் தொடர்ச்சியாக பள்ளியிலேயே ஓர் "பொது தகவல் அதிகாரி" நியமிக்கப்பட்டு...
22/08/2026

"தகவல் அறியும் உரிமை சட்டம்" தொடர்பான எங்கள் வகுப்பின் தொடர்ச்சியாக பள்ளியிலேயே ஓர் "பொது தகவல் அதிகாரி" நியமிக்கப்பட்டு, குழந்தைகள் பயிற்சி மேற்கொள்ள - பள்ளி தொடர்பான கேள்விகளை மாணவர்களே எழுதி, வழக்கமான மனு வடிவில் அதை வடிவமைத்து இன்றைய பள்ளி காலைக் கூடுகை நேரத்தில் அனைத்து மாணவர்கள் முன்பும், பொது தகவல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள திரு.ஜான் தயாநிதி அவர்களிடம் மாணவர்களே ஒப்படைத்தார்கள். 11 மாணவர்களை கட்டாயம் 2 கேள்விகள் எழுத வேண்டும் என்று கேட்டோம். மொத்தமாக மாணவர்கள் 32 கேள்விகள் கேட்டுள்ளனர். 3-5 வேலை நாட்களில் பொது தகவல் அதிகாரி இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பார். இந்தப் பயிற்சியை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிற்கு மாணவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி கேள்வி மனு போடவிருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஜனநாயகத்தில் பங்குக் கொள்ளும் மாண்புடைய மாணவர்களை உருவாக்கி வருகிறோம்.

"உணவுச் சங்கிலி" பாடப்புத்தகத்தில் குழந்தைகளுக்கு பரிட்சயமான தலைப்பு தான். எங்களது இயற்கை நடை மற்றும் இயற்கை துப்பறிவு அ...
13/08/2026

"உணவுச் சங்கிலி" பாடப்புத்தகத்தில் குழந்தைகளுக்கு பரிட்சயமான தலைப்பு தான். எங்களது இயற்கை நடை மற்றும் இயற்கை துப்பறிவு அமர்வு ஆகிய அனுபவக் கல்விக்கு பிறகான இந்த தலைப்பிலான உரையாடல் இன்னும் ஆழமாக அதை உள்வாங்கிக் கொள்ள குழந்தைகளுக்கு உதவியது.

இனி விளையாட்டுக்கு கூட ஒரு இலையை பிடுங்கவோ, ஒரு பூச்சியை மிதித்து விளையாடவோ செய்துவிட மாட்டார்கள் என நம்புகிறோம். நம்மை சுற்றியிருக்கும் ஒவ்வொரு உயிரின் பங்கையும் உணர்ந்து, அறிந்துக் கொண்டார்கள்.

மேலும், பள்ளி சார்பான பொது தகவல் அதிகாரி நியமனம் செய்தாச்சு. குழந்தைகளின் கேள்விகளும் பெரும்பாலும் தயார். அடுத்த வாரம் தங்களது முதல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையிலான கடிதங்களை கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள போகும் தலைமுறையை சூழலியல் அறிவோடும், ஜனநாயக விழுமியங்களோடும் தயார் செய்து வருகிறோம்.

ஜனநாயகத்தில் பங்கேற்பது ! குழந்தைகள் ஜனநாயகம் / மக்களாட்சி பற்றி படிக்கிறார்கள், பங்கேற்கிறார்களா? பங்கேற்க வாய்ப்பிருக்...
08/08/2026

ஜனநாயகத்தில் பங்கேற்பது !

குழந்தைகள் ஜனநாயகம் / மக்களாட்சி பற்றி படிக்கிறார்கள், பங்கேற்கிறார்களா? பங்கேற்க வாய்ப்பிருக்கிறதா?

நம்மை சுற்றியிருக்கும் சூழலை குறித்து அறிந்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு அதை நமக்காக பாதுகாத்து உறுதி செய்ய வேண்டிய அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்து அதை உறுதி செய்துக் கொள்வதும் நம் கடமையாகும். அதன் ஒரு பகுதியாக இன்று "தகவல் அறியும் உரிமை சட்டம்" பற்றிய அறிமுகமும் கலந்துரையாடலும் நடந்தது.

வெறுமனே உரையாடலாக இல்லாமல், இதனை பயிற்சி செய்யவும் ஒரு யோசனையை முன்வைத்தோம். அதனை குழந்தைகளும், பள்ளி நிர்வாகமும் ஒப்புக் கொண்டது பெரும் மகிழ்ச்சி.

அரசு துறைகள் போலவே பள்ளியிலும் ஓர் பொது தகவல் அதிகாரி நியமிக்கப்படுவார். பள்ளி சார்ந்த தகவல்கள் மற்றும் கேள்விகளை குழந்தைகள் கடிதங்களாக அவருக்கு எழுதலாம். அதற்கு அந்தப் பொது தகவல் அதிகாரி பதில் எழுதுவார்.

இதை அடுத்த ஓரிரண்டு மாதங்கள் பயிற்சி செய்து கலந்துரையாடி, அதன் பிறகு குழந்தைகளை அரசு துறைகளுக்கு கடிதம் எழுத பயிற்றுவிக்க போகிறோம்.

ஜனநாயகத்தில் பங்கேற்பவர்கள் தான், அதனை பாதுகாக்கவும் செய்வார்கள். பங்கேற்கும் வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்துகிறோம், அவர்கள் நிச்சயம் பாதுகாப்பார்கள் என நம்புகிறோம்.

இயற்கை துப்பறிவாளர்கள் ! (Nature Detectives)காலநிலையை எதிர்கொள்ளும் தலைமுறையை உருவாக்க அடிப்படை தேவை - தங்களை சுற்றியிரு...
31/07/2026

இயற்கை துப்பறிவாளர்கள் ! (Nature Detectives)

காலநிலையை எதிர்கொள்ளும் தலைமுறையை உருவாக்க அடிப்படை தேவை - தங்களை சுற்றியிருக்கும் இயற்கை இயங்கும் அறிவியலை அறிந்துக் கொண்ட, புரிந்துக் கொண்ட தலைமுறையை உருவாக்குவது.

அதற்கு அவசியமான நிதானமும், அவதானிப்பும் அரிதாகி இருக்கும் இன்றைய முதலாளித்துவ நுகர்வு சமூகத்தில் - அதனை இந்தத் தலைமுறைக்கு பிடிக்கும் விதத்தில் கொண்டு சேர்க்கும் விதம் நம்முடைய கடமையாகிறது.

அந்த வகையில், பள்ளிக்கு அருகில் இருக்கும் பூங்காவில் ஓர் இயற்கை அவதானிப்பு வகுப்பு. மாணவர்களுக்கு பிடித்த வகையிலான செயல்பாடுகளுடன் சிறப்பாக நடத்தி முடித்தோம்.

நிகழ்வின் துவக்கத்திலும், முடிவிலும் உங்கள் உணர்வு என்னவென்று கேட்டோம். "அமைதி, நிம்மதி, உற்சாகம்" போன்ற உணர்வுகளை இந்த Gen Alpha குழந்தைகள் பெரும் ஏக்கத்துடன் சொன்னது போல இருந்தது. வாழ்வின் இன்றியமையாத இந்த உணர்வுகளை இயற்கை தான் தரமுடியும் என்பதை மாணவர்கள் நமக்கு உணர்த்தினார்கள்.

பறவை காணல் !பார்வை புலனை மட்டுமே அதிகம் பயன்படுத்தும் இன்றைய காலச் சூழலில், ஐம்புலனையும் செம்மையாக பயன்படுத்த ஏதுவான வாய...
23/07/2026

பறவை காணல் !

பார்வை புலனை மட்டுமே அதிகம் பயன்படுத்தும் இன்றைய காலச் சூழலில், ஐம்புலனையும் செம்மையாக பயன்படுத்த ஏதுவான வாய்ப்பு தான் "பறவை காணல்" போன்ற இயற்கை நடை.

பாக்கம் ஏரியில் சிறப்பானதொரு இயற்கை நடையை இன்று மேற்கொண்டோம். ஏரி, அதன் அமைப்பு, அவசியம் ஆகியவற்றை பற்றி உரையாடிய கையோடு பறவைகள், பட்டாம்பூச்சிகள், தட்டான்பூச்சிகள் என பல்லுயிர் பற்றியும் உரையாடினோம்.

ஒன்றரை மணி நேர இயற்கை நடை அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பல மாணவர்களும் சொன்ன ஒற்றை பதில் - "நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருந்துச்சு".

எங்களுக்கும் அதே மனநிறைவு தான்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இது போன்ற இயற்கை நடைகளை மாணவர்களுக்கு, பல்வேறு அமைப்புகளுக்கு வரும் நாட்களில் தொடர்ந்து நடத்த திட்டங்கள் இருக்கின்றன.

விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

2026-ஆம் ஆண்டிற்கான "சுற்றுச்சூழல் தரம்" குறித்தான ஆய்வில் கடைசியில் இருந்து இரண்டாவது இடமான 176-ஐ பிடித்திருக்கிறது இந்...
16/07/2026

2026-ஆம் ஆண்டிற்கான "சுற்றுச்சூழல் தரம்" குறித்தான ஆய்வில் கடைசியில் இருந்து இரண்டாவது இடமான 176-ஐ பிடித்திருக்கிறது இந்தியா.

சூழலியல் குறித்து அடுத்த தலைமுறையிடம் பேச வேண்டிய தேவையும், நெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதே சமயம் சூழலியலை தட்டையாக இல்லாமல் குறுக்குவெட்டாக சமூக நீதியுடன் பேச வேண்டிய அவசியமும் இருக்கிறது.

எனவே 2026-2027 கல்வியாண்டில் தயா பள்ளி மாணவர்களுடன் விசை அமைப்பும், சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவும் (CCAG) இணைந்து சூழலியல் குறித்து உரையாடி மாணவர்களை எதிர்கால சூழலியல் நெருக்கடிகளுக்கு தயார் செய்ய இருக்கிறோம்.

இரண்டாவது வகுப்பு இன்று சிறப்பாக நடந்து முடிந்தது.

அடுத்தடுத்த வாரங்களில், இன்னும் சிறப்பான உரையாடல்களும் அதைப் பற்றிய பதிவுகளும் !

மூன்று அமர்வுகளில் முதல் புத்தகத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம். 5-6 நபர்கள் தான் என்றாலும், முன்னமே சொன்னதை போல "இடைவிடா...
03/05/2026

மூன்று அமர்வுகளில் முதல் புத்தகத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

5-6 நபர்கள் தான் என்றாலும், முன்னமே சொன்னதை போல "இடைவிடாமல்" தொடர்வது தான் வெற்றி.

இந்த வாரம் இரண்டாவது புத்தகத்திற்குள் நுழையவிருக்கிறோம்.

வாய்ப்பிருக்கும், விருப்பம் இருக்கும் நண்பர்கள் கலந்துக் கொள்ளுங்கள்.

தொடர்பு : +91 7401050426

Address

224/1, 8th Cross Street, Prakash Nagar, Tirunindravur
Tiruvallur
602024

Alerts

Be the first to know and let us send you an email when Visai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Visai:

Shortcuts

Share