Tirupur Life

Tirupur Life திருப்பூர் பகுதி செய்திகளை அரசியல்,சாதி,மத,இன வேறுபாடின்றி உள்ளது உள்ளபடி வெளியிடுவதே எங்கள் நோக்கம்

திருப்பூர் நலனில் அதிகம் அக்கறையுள்ள சமூகசேவை நண்பர்கள் இணைந்து நடத்தும் செய்திபக்கம் இது. அரசியல், ஜாதி, மதம் சார்பு எதுவும் இன்றி திருப்பூரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகள், செய்திகள் ஆகியவற்றை மக்களுக்கு தெரிவிப்பது, ஊரில் உள்ள குறைகள் மற்றும் மக்களின் குறைகளை, பிரச்சனைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்...இவையே எங்கள் நோக்கம்.
அதிகாரிகளை மட்டம்தட்டி குத்தி காட்டுவதல்ல எங்கள் நோ

க்கம்.... குறைகளை சுட்டி காட்டி அன்புடன் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து குறைகளை களைந்திட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
திருப்பூர் நகர் மற்றும் மாவட்ட நலனிற்கு தேவையான ஆக்கபூர்வ யோசனைகளை, கருத்துக்களை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் நாங்கள் என்றும் முன்னோடியாக இருப்போம்..
அரசுக்கு எதிரான சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை, பதிவுகளை, செயல்களை என்றும் இந்த பக்கத்தில் பதியமாட்டோம் .

House 🏠 for Rent
17/08/2026

House 🏠 for Rent

17/08/2026

House 🏠 for Rent. 13,000-
First Floor.
Near SCM, Suryan Nagar.
ABT road, Mangalam road, Tirupur.
Contact. 9994940220.
Date. 17-08-2026.

மாநகராட்சி பணியாளர்களை பாராட்டி சுதந்திர தின விழா விருதுகள் வழங்கப்பட்டன.
15/08/2026

மாநகராட்சி பணியாளர்களை பாராட்டி சுதந்திர தின விழா விருதுகள் வழங்கப்பட்டன.

14/08/2026

வளர்மதி பாலம், MGB அருகில் வளர்மதி பேருந்து நிறுத்தத்திலிருந்து அந்தப் பக்கம் செல்லவோ, இந்தப் பக்கத்திலிருந்து இந்த பக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு வரவோ முடியாத அளவுக்கு, இரண்டு பக்கமும் கடந்து செல்ல முடியாத அளவுக்கு உயரமான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

சாலையை கடப்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இது வைக்கப்பட்டிருந்தாலும் பேருந்தை நம்பி இருக்கும் சாதாரண ஏழை எளிய பொதுமக்களுக்கு இது மிகவும் இடையூறாக இருக்கும்.

வாகன வசதி உள்ளவர்கள் சுத்தி வந்து விடுவார்கள். ஆனால் இந்த சாலையில் மறுபக்கம் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டியவர்கள் வெகு தூரம் சுத்தி சுத்தி நடந்துவர வேண்டும். வாகன நெரிசலில் சாலையோரமாக நடந்து சென்று சாலையை கடக்க முயற்சிப்பார்கள் இது அதிக விபத்துக்களை தான் ஏற்படுத்திவிடும்.
எனவே இந்தத் தடுப்பை உடனே எடுத்து விட வேண்டும்.

இந்த பகுதியில் விபத்துக்கள் நடக்காமல் இருக்க சில போக்குவரத்து மாற்றங்கள் செய்ய வேண்டும்.

1. பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து வரும் கனரக வாகனங்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் அனைத்தும் மாநகராட்சி சாலை சந்திப்பில் வலது பக்கம் வளர்மதி பாலத்திற்கு திரும்ப அனுமதிக்க கூடாது.

அவை நேராக மங்கலம் சாலையில் டைமண்ட் தியேட்டர் - நடராஜர் தியேட்டர் வழியாக செல்ல வேண்டும்.

இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், சிறியரக சரக்கு வாகனங்கள் மட்டும் முனிசிபல் வீதி வழியாக வளர்மதி பாலம் வர அனுமதிக்க வேண்டும்.

2. வளர்மதி பால சுரங்கப் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனடியாக திறந்து விட வேண்டும்.

3. இது திறந்து விடப்பட்ட பின்பு எம்ஜிஆர் சிலை அருகில் இருக்கும் சிக்னலை எம்ஜிபி அருகில் கொண்டு வந்து விடலாம்.

4. வாலிபாளையம் மற்றும் ஈஸ்வரன் கோயில் பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் எம் ஜி பி அருகில் வலது பக்கம் திரும்பி கஜலட்சுமி தியேட்டர் வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும்.

யூனியன் மில் ரோடு வழியாக மாநகராட்சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் யுனிவர்சல் தியேட்டர் வழியாக சுரங்க பாலத்தை ஒட்டியுள்ள வழியில் வந்து வளர்மதி பாலத்திற்கு வந்துவிடலாம். MGR சிக்னல் அருகில் நேராக பார்க் ரோடு செல்ல குறுக்கே தடை இருக்க வேண்டும்.

5. MGB அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்கள் சாலையைக் கடக்க பாதுகாப்பான வசதியை உருவாக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் வாலிபாளையம், KPN காலனி பக்கம் செல்ல விரும்புபவர்கள் இந்த வழியாகவே சென்று விடுவார்கள்.

பார்க் ரோடு பக்கம், குமரன் சாலை பக்கம் போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறைந்துவிடும்.

சிக்னல் போடும் பொழுது பொதுமக்களும் வளர்மதி பாலம் அருகில் சாலையை பாதுகாப்பாக கடக்க முடியும்.

அந்த சாலையில் உள்ள கடைக்காரர்களுக்கும் வியாபார பாதிப்பு எதுவும் வராது.

இதைக் கருத்தில் கொண்டு உரிய மாற்றங்களை செய்திட வேண்டுமாய் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

14/08/2026

திருப்பூர் பிஎன் ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் முனியப்பன் கோயில் அருகில் ஏற்பட்ட குடிநீர் குழாய் சேதம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியது.

நேற்றுதான் பழுதுபார்ப்பு வேலை செய்து நிறுத்தி இருந்தார்கள்.... திரும்பவும் இன்று தண்ணீர் மொத்தமாக உடைத்து பெருக்கெடுத்து வெள்ளம் போல பள்ளமான சாலைகளில் சென்று வீணாகிறது.
- Sankar

,இரவோடு இரவாக அகற்றப்பட்டது விதிமீறிய சிக்னல் விளம்பர போர்டுகள்.*திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் போராட்டம் ...
13/08/2026

,இரவோடு இரவாக அகற்றப்பட்டது விதிமீறிய சிக்னல் விளம்பர போர்டுகள்.

*திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் போராட்டம் எதிரோலியாக அதிரடியில் இறங்கி அகற்றிய நெடுஞ்சாலைத்துறை*

*இரண்டு ஆண்டுகள் 60க்கும் மேற்பட்ட புகார்கள்*

*ஆட்சி மாறியது காட்சியும் மாறியது*

திருப்பூர் மாவட்டம், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள சாலைகளில் நீதிமன்ற உத்தரவை மீறி சாலை சிக்னல் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்ச்சியாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஈ.பி.அ.சரவணன் 60க்கும் மேற்பட்ட புகார் மனு அளித்தார்.

ஆனால் மாநகராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை துறை, உள்ளிட்ட துறைகள் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ள வில்லை.

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அன்று ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் விளம்பர பலகைகளை அகற்றாவிட்டால், 13-ம் தேதி முதல் நுகர்வோர் அமைப்பே களமிறங்கி அவற்றை அகற்றும் என போலீசாரிடம் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 12ம் தேதி கோட்ட செயற்பொறியாளர் மற்றும் உப கோட்ட செயற்பொறியாளர் ஆகியோர் விதிமீறிய விளம்பர பலகைகளை முழுமையாக அகற்றுவதாக உறுதியளித்தனர்.

அதிகாரப்பூர்வ உறுதியை ஏற்று, நுகர்வோர் அமைப்பினர் தங்களின் போராட்ட முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் 12ம் தேதி இரவு முழுவதும் திருப்பூர் பகுதிகளிலுள்ள ஊத்துக்குளி சாலை, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை சிக்னலில் வைக்கப்பட்டிருந்த அனுமதியில்லாத விதிமீறிய விளம்பர போர்டுகளை கிரைன் வாகனம் மூலமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஈ.பி.அ.சரவணன் கூறுகையில் "எங்களுடைய சங்கம் சார்பாக தொடர்ச்சியாக விதிமீறிய சாலை சிக்னலில் ஆபத்தை ஏற்படுத்தும் வகைகள் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகளை முழுமையாக அகற்ற வேண்டுமென புகார் மனு அளித்து வந்த நிலையி்ல் எங்களுடைய சங்கம் சார்பாக 12ம் தேதி முதல் சிக்னல் விளம்பர போர்டுகள் அகற்றும் போராட்டம் அறிவித்த நிலையில் இரவோடு இரவாக அதிரடியாக விளம்பர போர்டுகளை அகற்றி வருகின்ற நெடுஞ்சாலை துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்" இவ்வாறாக அவர் தெரிவித்தார்.
- நன்றி Saran Tneb.

மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் நல்ல மனிதர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனிக்கப்படாது இருக்கும் சிறு செடிகளுக்கும் தி...
13/08/2026

மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் நல்ல மனிதர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனிக்கப்படாது இருக்கும் சிறு செடிகளுக்கும் தினசரி தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறர்.

தேனியை சேர்ந்த ரமேஷ் எனும் இவர் TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகி வருகிறார் .

13/08/2026

Drive Against Drugs - (DAD)
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பாக எவ்வளவு விசாலமாக வசதியாக பழைய பேருந்து நிலையம் இருந்திருக்கிறது?இந்தப் படத்தில் இருப்பதை...
12/08/2026

ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பாக எவ்வளவு விசாலமாக வசதியாக பழைய பேருந்து நிலையம் இருந்திருக்கிறது?

இந்தப் படத்தில் இருப்பதை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக பரப்பளவு கொண்டது.

நடுவில் பயணிகள் தங்க பெரிய கூடாரம்.. காற்று மழை வெயில் என எது வந்தாலும் பயமில்லாமல் இருக்கலாம்.

தென்பக்க வரிசையில் கடைகளும் இருந்தது ... பேருந்துகளும் நிறுத்திக் கொள்ளலாம். மொத்தம் நான்கு வரிசைகளில் ஏராளமான பேருந்துகள் நிறுத்திக் கொள்ளலாம். இது போக மேற்கு புறம் மினி பஸ்கள் நிறுத்திக் கொள்ளலாம். அவ்வளவு வசதியாக இருந்தது.

தற்பொழுது ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் என்ற பெயரில் அநியாயமாக சுருக்கி விட்டார்கள். ஒரு அரசு பள்ளி அநியாயமாக இடிக்கப்பட்டதுதான் மிச்சம்.

Address

Tirupur
641601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tirupur Life:

Shortcuts

Share