16/06/2026
சைமா சங்கத்தின் சார்பில் கடந்த ஒரு மாத காலமாக அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா எதிரே உள்ள தேவாங்கபுரம் அரசு பள்ளி முன்பாக, கோடை வெயிலைச் சமாளிக்க பொதுமக்களுக்கு தினந்தோறும் நீர் மோர் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இந்த நற்பணிக்கு வந்த நன்கொடையில் மீதமிருந்த தொகையைக் கொண்டு, பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ₹40,000 மதிப்பிலான 50 சேர்கள் இன்று (16/06/2026, செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
சைமா சங்கத்தின் தலைவர் திரு. ESSDEE P. சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில், இந்த நாற்காலிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் செயலாளர் திரு. SEASON R. Dhamodharan Ramasamy , பொருளாளர் திரு. IDEAL R. சுரேஷ் குமார், இணை செயலாளர்கள் திரு. CIVIS M.K. பொன்னுசாமி, திரு. SHIVANJALI P. தனபால் மற்றும் செயற்குழு, ஆலோசனை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.