தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

  • Home
  • India
  • Tirupur
  • தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
(2)

27/05/2026
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சமா ?இன்று (27.05.2026) இரவு 7 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில்👇
27/05/2026

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சமா ?

இன்று (27.05.2026) இரவு 7 மணிக்கு சத்தியம் தொலைக்காட்சியில்👇

இஸ்லாமிய சமூக பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்💐
27/05/2026

இஸ்லாமிய சமூக பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்💐

வனப்பயிராக உள்ள சவுக்கை வேளாண், தோட்டக்கலைத்துறை பயிராக மாற்றம் செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.(பிற ப...
27/05/2026

வனப்பயிராக உள்ள சவுக்கை வேளாண், தோட்டக்கலைத்துறை பயிராக மாற்றம் செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.

(பிற பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, கடன், மானியம் இவை எதுவும் சவுக்கு பயிரிடும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் சவுக்கு வனப்பயிராக உள்ளதேயாகும்.)

விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி செய்யும்வரை போராடுவோம் !!தமிழக விவசாயிகள் பாதுக...
27/05/2026

விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடி செய்யும்வரை போராடுவோம் !!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

நன்றி - தினமலர், தினத்தந்தி, மாலைமலர், தினகரன், தினமணி (27.05.2026)

விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிபடி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் !!தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க...
26/05/2026

விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிபடி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் !!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்.

நன்றி - இந்து தமிழ் & தினகரன் (26.05.2026)

விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு !!தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிபடி கடன் தள்ளுபடி செய்ய வ...
26/05/2026

விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு !!

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிபடி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஜூன் 1ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்👇

25/05/2026

கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது | வழக்கறிஞர் ஈசன் முருகசாமி

Chief Minister of Tamil Nadu TVK Vijay

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - முதல்வர் விஜய் அவர்கள் வி...
25/05/2026

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - முதல்வர் விஜய் அவர்கள் விவசாயிகளுக்கு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி கடன் தள்ளுபடியை அறிவித்திட கோரிக்கை
--------------------------------------------
அன்புடையீர்,

தமிழ்நாடு முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களை நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இன்று (25.05.2026) ஒரு பெருத்த ஏமாற்றமான நாளாக அமைந்திருக்கிறது.

தொடர்ச்சியாக விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்துக்கொண்டிருந்தபோது, நான் ஆட்சிக்கு வந்தால் சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர் கடனை முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி செய்வேன் என முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்கள் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கொடுத்துவிட்டு, இது வாக்குறுதி அல்ல உத்தரவாதம் எனவும் தெரிவித்துவிட்டு, விவசாயிகளின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பின்பு தற்போது ஒரு மிகப்பெரிய ஏமாற்று திட்டத்தை விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ளார்.

ஒரு ஏக்கர் கரும்பிற்கு பயிர் கடனாக சராசரியாக ரூபாய் 60 ஆயிரமும், நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 36,000 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இரண்டு ஏக்கர் கரும்பிற்கு பயிர் கடன் பெற்று இருந்தால் விவசாயிகளுக்கு கிடைப்பது வெறும் ரூபாய் 5000 மட்டுமே, மூன்று ஏக்கர் நெல்லுக்கு பயிர் கடன் பெற்றிருந்தால் விவசாயிகளுக்கு கிடைப்பது வெறும் 5000 மட்டுமே, இதற்கு பெயர் பயிர் கடன் தள்ளுபடி அல்ல !!

கடந்த 2021இல் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்த பயிர் கடன் தொகை ரூபாய் 12,000 கோடி, அதற்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 7,000 கோடி, தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள கடனின் அளவு வெறும் 2,000 கோடி மட்டுமே. விஜய் ஆட்சிக்கு வருவார், மக்களுக்கு நல்லது செய்வார், விவசாயிகளை காப்பாற்றுவார் என பயிர் கடனை கட்ட முடியாமல் கடனிலிருந்த விவசாயிகள், பெரும் நம்பிக்கையோடு காத்திருந்து, தற்போது அபராத வட்டியையும் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டிய சூழ்நிலையால் தமிழ்நாட்டு விவசாயிகள் இன்று மிகப்பெரிய அதிர்ச்சியிலும், ஏமாற்றத்திலும், மன வேதனையிலும் உள்ளார்கள்.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை சிரமத்தில் இருப்பதாக சொல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, தமிழ்நாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு உட்பட்ட அளவிற்குதான் கடன் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெற்றுள்ள கடன் தொகை என்பது அனைவரும் அறிந்ததே, தற்போது ஒன்றும் புதியதாக தெரிய வருவது அல்ல. மேலும் மத்திய அரசு கடன் தள்ளுபடி திட்டத்திற்காக அறிவிக்கப்படும் தொகைகள் இரண்டு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்திருப்பது பொருத்தமானது அல்ல, மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசுகள் எடுக்கும் முடிவே பொருந்தும் என்பதை பலமுறை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்பும், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மத்திய அரசை காரணம் காட்டி இருப்பது தவறான முன் உதாரணமாகும்.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்கள் விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காத இந்த பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை ரத்து செய்து, விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதமான சிறு - குறு விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்பதையும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்பதையாவது குறைந்தபட்சம் அறிவித்து செயல்படுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வருகிற ஜூன் 1ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு

வழக்கறிஞர் ஈசன் முருகசாமி

நிறுவனர்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

Chief Minister of Tamil Nadu TVK Vijay

 #இனாம்  #இயக்கத்தின் சார்பில் அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு ரமேஷ் அவர்களை சந்தித்து இனாம் நில பிரச்சனை குறித்து விர...
25/05/2026

#இனாம் #இயக்கத்தின் சார்பில் அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு ரமேஷ் அவர்களை சந்தித்து இனாம் நில பிரச்சனை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது*

அன்புடையீர்,

24.5.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில், திருச்சி அரசு விருந்தினர் மாளிகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு ரமேஷ் அவர்களை இனாம் இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 50 பேர் சந்தித்து, அறநிலையத்துறை அதிகாரிகளின் சட்ட விரோத நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. மேலும் இனாம் வகை நிலங்களில் வரி வாங்கும் உரிமையைத் தவிர கோவிலுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்பதற்கான 200 வருடம் பழமையான ஆவணங்கள், பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள், ஓலைச்சுவடி ஆவணங்கள், 1963 இனாமொழிப்பு சட்டம் மற்றும் அதில் உள்ள குறைபாடுகள், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இனாம் ஒழிப்பில் உள்ள குறைபாடுகள் சட்ட திருத்தத்தின் மூலம் சரி செய்யப்பட்டு மக்களுக்கு நில உரிமையை உறுதி செய்யப்பட்ட ஆவணங்கள், நில நிர்வாக ஆணையரின் மக்களுக்கு சாதகமான அறிக்கை, அரசு தலைமை கூடுதல் செயலரின் மக்களுக்கு சாதகமான நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை போன்ற பல்வேறு ஆவணங்கள் குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பொறுமையாக அனைத்து தகவல்களையும் கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், கரூர் வெண்ணை மலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள சீல் வைக்கும் நிகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக செய்வதாகவும், மேலும் இனாம் நிலங்களுக்கும் கோவில் நிலங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்து, இனாம் வகை நில உரிமையை மக்களுக்கு உறுதிப்படுத்தவும், கோவில் சொத்துக்களை கோவில்களுக்கு வருமானம் ஏற்படுத்தும் வகையில் உரிமையாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும், அதற்கு ஆவணங்களை ஆராய்ந்து சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் ஏற்படுத்த கால அவகாசம் தேவை எனவும் கூறினார்.

சட்டத் திருத்தத்தின் மூலம் இனாம் வகைப்பாட்டு நிலங்கள், மக்களுக்கு நில உரிமை உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதியை வழங்கிய மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களுக்கு இனாம் இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் திரு மதியழகன் அவர்களுக்கும், இனாம் இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கனம்,

இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு-மனை உரிமையாளர்கள் இயக்கம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

அவிநாசி சட்டமன்ற உறுப்பினர், கால்நடைத்துறை அமைச்சர், மாண்புமிகு கமலி அவர்களை இன்று (24.05.2026) அவிநாசியில் சந்தித்து தம...
24/05/2026

அவிநாசி சட்டமன்ற உறுப்பினர், கால்நடைத்துறை அமைச்சர்,
மாண்புமிகு கமலி அவர்களை இன்று (24.05.2026) அவிநாசியில் சந்தித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்

1. கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்சனையில் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஏற்படுத்த வேண்டும் என்றும்,

2. அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தை பழைய இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும்

கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இப்படிக்கு

கறிகோழி பண்ணை விவசாயிகள் அணி

சட்ட விழிப்புணர்வு அணி

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

Address

Palladam Road
Tirupur
641604

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்:

Share