Bodhi Tree Foundation

Bodhi Tree Foundation Bodhi Tree Skills trains, mentors and supports rural college graduates

Bodhi Tree Foundation is a non-profit organization with a mission to bridge the rural-urban divide by empowering rural graduates, enabling them to become role models who can take charge of their lives and constructively contribute to the development of

We are Hiring
29/03/2025

We are Hiring

22/03/2025

Empowering Rural Youth, One Wing at a Time!

We're thrilled to share a glimpse of our 'Project New Wings' initiative, a one-day orientation program designed specifically for single parent/orphan girl students from rural backgrounds.

At Bodhi Tree Foundation, we believe that every individual deserves the opportunity to soar. That's why we're dedicated to providing soft skills training and career guidance to rural youth.

Our 'Project New Wings' program aims to equip these talented young girls with the confidence, skills, and knowledge necessary to succeed in their chosen careers. From resume building and interview prep to career counseling and mentorship, we're committed to supporting their journey every step of the way.

We're grateful for the generous support of Nellai VIP Biriyani who sponsored this initiative and helped make it possible.

Join us in empowering rural youth and unlocking their full potential!

சமூகப் பணித் துறையில் சாதிக்க இருக்கும் துடிப்பான இளைஞர்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி...
10/10/2024

சமூகப் பணித் துறையில் சாதிக்க இருக்கும் துடிப்பான இளைஞர்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி...

"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் எ...
10/09/2024

"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார்.

தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.
அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபவத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.

Toyoto நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

யாருக்காகவும் அவன் காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார்.
மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய piston மாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.

மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.
எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா.

அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமெண்ட் தட்டுப்பாடு.

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சிமெண்ட் கூட கிடைக்கவில்லை.
ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர் நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமெண்ட் கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.
ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.
இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........

ஆனால், அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......

“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளி கூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார்.

அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.*

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன் தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.*

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.*

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.
இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

முயற்சியை மூலதனமாக கொண்டு, தன்னம்பிக்கையை மனதில் வைத்து வைராக்கியத்துடன் உழைக்கும் எவர்க்கும் வெற்றி கைகூடாமல் போனதில்லை நண்பர்களே..

இணையத்தில் கண்ணில் பட்டது...

12-ம் வகுப்பு முடித்து மிகப் பெரிய கனவுகளோடு கல்லூரிக்குள் வந்திருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களோடு பேச அழைத்திருந்தார்கள...
10/07/2024

12-ம் வகுப்பு முடித்து மிகப் பெரிய கனவுகளோடு கல்லூரிக்குள் வந்திருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களோடு பேச அழைத்திருந்தார்கள் ராணி அண்ணா கல்லூரி இதழியல் துறை சார்பில்.

துடிப்பான இளைஞர்களாக இருக்கிறார்கள்.

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தில் இருந்து பல தடைகளைத் தாண்டி படிக்க வந்திருக்கிறார்கள்.

"பொம்பளைப் பிள்ளைய எதுக்கு காலேஜ் படிக்க வைக்கிற" னு எங்க அப்பா அம்மா கிட்ட நிறைய பேர் சொன்னாங்க.
ஆனா நான் அடம்பிடிச்சி படிக்க வந்திருக்கேன்.

"அப்பா இறந்துட்டாங்க. காலேஜ் முடிச்சிட்டு போனதும், அம்மா, நான், தம்பி 3 பேரும் தினமும் 2 மணி நேரம் பீடி சொறுக போறோம், சம்பளம் 50 ரூபாய் கொடுப்பாங்க.
அத வச்சிதான் என்னையும் என் தம்பியையும் படிக்க வைக்குறாங்க.
ஊர்ல ஒவ்வொன்னா சொல்றாங்கனு, வேற ஊருக்கு வந்து வேலை செஞ்சி படிக்கிறோம்.
நான் என்ன வேலைக்குனாலும் போய் உன்னை படிக்க வைக்கிறேன் "நீ நல்ல படிச்சி போலீஸ் ஆகனும்"னு அம்மா சொன்னதுக்காக கனவோட படிக்க வந்திருக்காங்க ஒரு மாணவி.
எனக்கு College Uniform, தம்பிக்கு School Uniform எடுத்து தர முடியுமா அண்ணன்,னு கேட்ருக்காங்க.

எனக்கு RJ ஆகனும்னு ரொம்ப ஆசை, ஆனா இந்தப் படிப்புலாம் ஒரு படிப்பானு எங்க அம்மா திட்டிட்டே இருந்தாங்க. ஆனா எங்க அப்பா நீ படினு Support பண்ணாங்க. அதனால தான் இந்த குரூப் எடுத்து படிக்க வந்திருக்கேன்.

எனக்கு அப்பா இல்ல, அண்ணன் மட்டும்தான். அண்ணனுக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சது. எங்க அண்ணிக்கு என்னைய படிக்க வைக்கவோ, எனக்கும் அம்மாவுக்கும் செலவு பண்ணவோ விருப்பம் இல்ல.
ஆனா அண்ணனுக்கு என்னைய படிக்க வைக்குனும்னு ரொம்ப ஆசை.

தினமும் வீட்டுல ஒரே பிரச்சனை. அதனால இப்ப 12th முடிச்சதும், மாப்பிள்ளை பாத்து கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. நான் படிக்கனும்னு எங்க அண்ணன்கிட்ட சொன்னேன். கல்யாணத்தை நிப்பாட்டிட்டு காலேஜ்ல சேத்து விட்டுட்டான். ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணன்னு சொன்ன ஒரு மாணவி.

ஒவ்வொரு மாணவிகளின் கதைகளைக் கேக்குறதுக்கே வேதனையா இருக்கு.

இப்படி எத்தனையோ குடும்பக் கஷ்டங்களோடு முதலாம் ஆண்டு படிக்க வந்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி மாணவிகளுக்கு உதவி செய்ய விரும்பினால், தயவுசெய்து உதவி செய்யுங்கள். நல்ல துணி இல்லாத மாணவிகளுக்கு உடைகள் எடுத்துக் கொடுக்க உதவியாக இருக்கும்.
நேரில் வந்து நீங்களே கூட உடை எடுத்துக் கொடுக்கலாம்.

-வினாயக் பாபு
போதி ட்ரீ பவுண்டேசன்
9600971913

*மனநலம் பாதிக்கப்பட்டவரின் மகன் கல்லூரிப் படிக்க உதவி தேவை* இந்த மாணவன் 12-ம் வகுப்பில் Computer Accountancy பாடப்பிரிவி...
03/07/2024

*மனநலம் பாதிக்கப்பட்டவரின் மகன் கல்லூரிப் படிக்க உதவி தேவை*

இந்த மாணவன் 12-ம் வகுப்பில் Computer Accountancy பாடப்பிரிவில் 408 மதிப்பெண் எடுத்திருந்தார்.

இவரது தந்தை 10 வருடங்களுக்கு மேலாக மனநிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு சாலை ஓரங்களில் சுற்றி வருகிறார்.

இவரது அம்மா 2 பிள்ளைகளையும், தன் கணவரையும் காப்பாற்றுவதற்காக தஞ்சாவூரில் ஒரு வீட்டில், வீட்டு வேலை செய்கிறார். இந்த வருமானத்தில் இருந்துதான் பெண் குழந்தையைப் படிக்கவும், கணவரின் மருத்துவ செலவையும் பார்க்கிறார்.

கடந்த வருடம் ஐன்ஸ்டீன் கல்லூரி செயலாளர் திரு. எழிழ்வாணன் சாரிடம் இந்த மாணவனின் குடும்ப நிலைமையை சொன்னதும், கல்லூரிக் கட்டணம் மொத்தம் - ரூ. 25,000-ல் 10,000 ரூபாய் குறைத்து, 15,000 ரூ மட்டும் கட்டணம் நிர்ணயித்தார்கள்.
முதல் வருடத்திற்கான கட்டணத்தை நண்பர்கள் உதவியுடன், செலுத்தி விட்டோம்..

இப்போது 2-வது வருடம் 3-வது செமஸ்டருக்கான கட்டணம் ரூ. 7500 செலுத்த முடியாமல் இருக்கிறார்.

மிகவும் நன்றாக படித்துக் கொண்டிருக்கிறார். இந்த மாணவன் படித்து முடித்தால், இந்தக் குடும்பத்தின் வறுமையில் இருந்து மீண்டு வருவார்கள்.

இந்த மாணவனுக்கு உங்களால் முடிந்ததை உதவுங்கள்.

-போதி ட்ரீ பவுண்டேசன்
9600971913

VIP Wedding Biriyani-ன் 2-வது கிழையை திருநெல்வேலியில் தொடங்குகிறோம்.அனைவரும் வந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.-ப...
13/04/2024

VIP Wedding Biriyani-ன் 2-வது கிழையை திருநெல்வேலியில் தொடங்குகிறோம்.

அனைவரும் வந்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

-போதி ட்ரீ பவுண்டேசன் குடும்பம்
9600971913

12/04/2024

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு 50 ஏழைகளுக்கு சாப்பாடு கொடுக்கனும்னு நண்பன் Gireesan-ன் நண்பர் ஆர்த்தி சொல்லிருக்காங்க. அதனால நம்ம VIP Wedding Biriyani-ல பிரியாணி ஆர்டர் கொடுத்து, நீங்களே 50 ஏழைகளுக்கு சாப்பாடு கொடுத்துருங்கனு சொல்லிட்டாரு.

உடனே தருவைல இருந்து பாட்டில், பேப்பர் எடுத்து அதுல இருந்து கிடைக்குறப் பணத்த வச்சி படிக்க வச்சிட்ருக்குற குழந்தைங்களுக்கும், அந்த மக்களுக்கும், வீடு இல்லாம சாலையோரம் இருக்குற மக்களுக்கும் கொடுக்கலாம்னு முடிவு எடுத்தது போதி ட்ரீ பவுண்டேசன் டீம்.

நேத்து 50 பார்சல் பிரியாணி எடுத்துட்டுப் போய் அந்தக் குழந்தைகளுக்கும், மக்களுக்கும் கொடுத்தோம். அவங்க மனசுல அவ்வளோ சந்தோசம்.

எல்லாரும் நல்லா சாப்பிட்டு, எங்களுக்கு சாப்பாடு கொடுத்த ஆர்த்தி அக்காவுக்கு ரொம்ப Thanks சொல்லிருங்கனு குழந்தைங்களும், அந்த ஆர்த்தி பொண்ணு நல்லா இருக்கும்னு மனசார வாழ்த்தினாங்க அங்க உள்ள வயசானவங்க.

மிக்க நன்றி கிரிசன் & ஆர்த்தி Mam...

-வினாயக் பாபு
Bodhi Tree Foundation & VIP Wedding Biriyani
Tirunelveli

02/04/2024

வேலை தேடும் இளைஞர்களுக்கு (ஆண்கள்) என்னுடைய நண்பர் வேலைபார்க்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது.
இடம்: கோயம்புத்தூர்
போன் நம்பர்:
சூர்யா - 6369078127
(என்னுடைய பெயரை (வினாயக்) சொல்லி பேசுங்கள்.)

விபத்தில் தந்தையை இழந்த மாணவனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த உதவி தேவை....8 வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இந்த ம...
20/02/2024

விபத்தில் தந்தையை இழந்த மாணவனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த உதவி தேவை....

8 வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் இந்த மாணவனின் தந்தை இறந்து விட்டார். இந்த 8 வருடங்களும் இந்த மாணவன் பகுதி நேர வேலைக்கு சென்று படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த மாணவனின் நிலைமையை 2022-ம் ஆண்டு ஐன்ஸ்டீன் கல்லூரியில் செயலாளர் திரு. எழில்வாணன் சாரிடம் சொன்னதும், 30,000 ரூபாய் கல்விக் கட்டணத்தில் இருந்து 25,000 ரூபாய் குறைத்து, வெறும் 5000 ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று இந்த மாணவனுக்கு ஒரு சீட் கொடுத்தார்.

இந்த மாணவனுக்கு கடைசி 2 வருடமும் போதி ட்ரீ பவுண்டேசனில் இருந்து கட்டணம் செலுத்தி விட்டோம். இப்போது கடைசி வருடம் B.Com படித்துக் கொண்டிருக்கிறான்.

இந்த வருடத்திற்கு 3750 ரூபாய் கட்டணம் செலுத்த உதவி தேவைப்படுகிறது. கீழே உள்ள லிங்க் மூலம் நீங்களே கட்டணம் செலுத்தலாம்.

முடிந்தவர்கள் உதவுங்கள், இந்த தம்பி இந்த வருடம் படித்து முடித்து வேலைக்கு சென்று விடுவார்.

https://formbuilder.ccavenue.com/live/city-union-bank/einstein-college-of-arts-and-science/college-fees

Reg No:
20211331303204

-தொடர்புக்கு
9600971913

Address

48B/10, 1st Floor, Ambai Road, Veeramanickapuram, Tirunelveli-627005
Tirunelveli
627007

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm
Sunday 9am - 6pm

Telephone

+919600971913

Alerts

Be the first to know and let us send you an email when Bodhi Tree Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bodhi Tree Foundation:

Share

Our Story

Bodhi Tree Foundation mentors and supports rural college graduates