01/05/2026
எஸ்டிடியூ தொழிற்சங்கம்
நெல்லை மாநகர மாவட்டம், பாளை பகுதி, டார்லிங் நகர் கிளை சார்பாக மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, வெப்பத்தை தணிக்கும் வகையில் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும், ஹைகிரவுண்ட் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வு கிளைத் தலைவர் அசன் கனி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிடியூ நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாளை அன்சாரி கலந்து கொண்டு தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். அதோடு கிளை துணைத் தலைவர் விஜய், கிளைச் செயலாளர் வெங்கடேஷ், கிளை பொருளாளர் ஜாபர் மற்றும் கிளை உறுப்பினர்கள் பிரவீன், கந்தன், சாமி, ஜமாலுதீன், ஷேக் முகமது, முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த சமூகப்பணிகளில் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பாராட்டுத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாளை பகுதிக்கு உட்பட்ட தொழிற்சங்க கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
பாளை அன்சாரி
மாவட்ட செயலாளர்
SDTU நெல்லை மாநகர் மாவட்டம்